என் மலர்
உள்ளூர் செய்திகள்

மிதிவண்டி தின பேரணி
- உலக சுற்றுச்சூழல் தின பேரணி கும்பகோணம் காந்தி பூங்காவில் தொடங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தடைந்தது.
- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
சுவாமிமலை:
இந்திய அரசு நேருயுவகேந்திரா தஞ்சாவூர் மற்றும் விவேகானந்தா கலாம் யூத் கிளப் ஒருங்கிணைப்பில் உலக மிதிவண்டி தினம் மற்றும் உலக சுற்றுச்சூழல் தின பேரணி கும்பகோணம் காந்தி பூங்காவில் தொடங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தடைந்தது.
இந்த பேரணியை அன்பழகன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடக்கி வைத்தார். கும்பகோணம் விவேகானந்தா கலாம் பவுண்டேஷன் தலைவர் கணேசன் ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்தார். விழாவிற்கு வி.ஏ. ரோசரியோ செஞ்சிலுவை சங்க துணை தலைவர் தலைமை தாங்கினார்.
கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவில் விஜயபாலன், ரெட்கிராஸ் உறுப்பினர்கள் சிவக்குமார், பெஞ்சமின் கலந்து கொண்டனர். மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
Next Story






