search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா இங்கிலாந்து"

    • தர்மசாலாவில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் ஐந்தாவது ஆட்டம் பேர்ஸ்டோவின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.
    • என்னுடைய 100வது டெஸ்ட் கேப்-ஐ எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். வலிமைக்கு ஒரு உருவம் இருந்தால் அது அவர்தான்.

    இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தர்மசாலாவில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் ஐந்தாவது ஆட்டம் இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.

    இந்நிலையில், ஜானி பேர்ஸ்டோ தனது 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேர்ஸ்டோ,"100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகவும் பெரிய விஷயம். என்னுடைய 100வது டெஸ்ட் கேப்-ஐ எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். வலிமைக்கு ஒரு உருவம் இருந்தால் அது அவர்தான். எனது தந்தை இறக்கும்போது 10 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு 3 இடங்களில் பணிபுரிந்து எங்களை வளர்த்தார். அவர் இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அப்போதும் எனது அம்மா வலிமையாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

    தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கும் 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 5 டெஸ்ட் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரை இந்தியா ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது 

    • முதல் டெஸ்ட் போட்டிக்குப்பின் கே.எல். ராகுல் விளையாடவில்லை.
    • பும்ராவுக்கு 4-வது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டது.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல்.ராகுல். இங்கிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அவர்தான் அதிகபட்சமாக 86 ரன் எடுத்தார். ஆனால் அந்த டெஸ்டில் இந்தியா தோற்றது.

    அதைத்தொடர்ந்து நடைபெற்ற 2-வது, 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளில் ராகுல் விளையாடவில்லை. தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகினார்.

    இந்த நிலையில் மார்ச் 7-ந்தேதி தரம்சாலாவில் தொடங்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் ராகுல் விளையாடமாட்டார். காயம் முழுமையாக குணம் அடையாததால் இது தொடர்பாக டாக்டர்களின் ஆலோசனையை பெறுவதற்காக அவர் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஐ.பி.எல். மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு முழு உடல் தகுதி பெற்றுவிட வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக உள்ளார். இதன் காரணமாக அவர் இங்கிலாந்து சென்றுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 24-ந்தேதி சந்திக்கிறது. இதில் லக்னோ கேப்டனான ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    4-வது டெஸ்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அணிக்கு திரும்புகிறார். 5-வது டெஸ்டில் அவர் விளையாட இருக்கிறார். அவர் 3 டெஸ்டில் 17 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

    • கிராலியை க்ளீன் போல்டாக்கினார். ஆனால், நோ-பால் என்பதால் தப்பினார்.
    • பின்னர் கிராலியை இன்-ஸ்விங் மூலம் மீண்டும் க்ளீன் போல்டாக்கி அசத்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் இன்று ராஞ்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3 போட்டிகளில் விளையாடிய பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் பும்ராவிற்குப் பதிலாக முகேஷ் குமார் களம் இறங்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

    ஆனால் 27 வயதான ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். பும்ராவிற்கு பதிலாக அறிமுக வீரரா? என கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும் வியப்படைந்தனர்.

    ஆனால், பும்ரா அணிக்கு எவ்வாறு பங்களிப்பாரோ, அதேபோல் தானும் பங்களிப்பேன் என்ற உறுதியுடன் ஆகாஷ் தீப் களம் இறங்கினார்.

    முதல் ஓவரை சிராஜ் வீச, 2-வது ஓவரை ஆகாஷ் தீப் வீசினார். சுமார் 135 கி.மீ. முதல் 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசினார். இதனால் தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது.

    தனது 2-வது ஓவரிலேயே கிராலியை க்ளீன் போல்டாக்கினார். ஆனால் இந்த சந்தோசம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால், அது நோ-பாலாக அமைந்தது.

    இருந்தாலும் மனம் தளராமல் உத்வேகத்துடன் பந்து வீசினார். இதற்கு அவரின் 5-வது ஓவரில் பலன் கிடைத்தது. இந்த ஓவரின் 2-வது பந்தில் டக்கெட்டை (11) வெளியேற்றினார்.

    இதே ஓவரின் 3-வது பந்தில் ஒல்லி போப்பை ரன்ஏதும் எடுக்க விடாமல் டக்அவுட்டில் எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேற்றினார். இரண்டு முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணிக்கு உத்வேகம் அளித்தார். அதோடு நிற்காமல் நோ-பால் மூலம் தப்பிய கிராலியை (42) அடுத்த ஓவரின் ஐந்தாவது பந்தில் க்ளீ்ன் போல்டு மூலம் வெளியேற்றினார். 6 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    27 வயதாகும் ஆகாஷ் தீப் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். 30 முதல்தர போட்டிகளில் விளையாடி 104 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒரு அரைசதத்துடன் 423 ரன்கள் எடுத்துள்ளார்.

    • இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
    • வுட், ரேஹன் ஆகியோருக்குப் பதிலாக ராபின்சன், பஷிர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற இரண்டு போட்டிகளையும் இந்தியா அடுத்தடுத்து வென்று தொடரில் 2-1 முன்னிலை வகிக்கிறது.

    இந்திய அணியில் பும்ரா இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை.

    ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.

    இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்தார். 

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    5 நாள் வரை போட்டி நடைபெறும் என்றுதான் நினைத்தேன். 150 ஓவர்கள் இருந்தால் இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கிவிடலாம் என்பதுதான் எனது கணக்காக இருந்தது.

    இவ்வளவு சீக்கிரம் போட்டி முடிவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 25 டெஸ்டில் 72 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 28.54 ஆகும். 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும்.
    • 41 ஒருநாள் போட்டிகளில் 68 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 22.79 ஆகும். 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக முகமது சிராஜ் திகழ்கிறார். இவரது பந்து வீச்சு எடுபட்டால் அந்த குறிப்பிட்ட போட்டியில் அதிகப்படியான விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்.

    அந்த வகையில்தான் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 84 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். இவருடைய முக்கியமான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்னில் சுருண்டது. இந்தியா 126 ரன்கள் முன்னணி பெற முக்கிய காரணமாக அமைந்தது.

    முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச அரங்கில் 76 போட்டிகளில் 152 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    25 டெஸ்டில் 72 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 28.54 ஆகும். 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும்.

    41 ஒருநாள் போட்டிகளில் 68 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 22.79 ஆகும். 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும்.

    10 டி20 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 27.83 ஆகும். 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாகும்.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா மற்றும் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு வெற்றித் தேடிக் கொடுக்கம் வகையில் அட்டகாசமான ஸ்பெல் வீசி அசத்தியுள்ளார் என்றால் மிகையாகாது.

    • முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன் குவிப்பு, இங்கிலாந்து 319 ரன்னில் ஆல்அவுட்.
    • நேற்றைய ஆட்டத்தின்போது அஸ்வின் 500 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 15-ந்தேதி (நேற்றுமுன்தினம்) தொடங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

    இன்றைய ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இந்திய வீரர்கள் ஏன் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போதுதான் கடந்த 13-ந்தேதி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிகவும் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக வாழ்ந்தவருமான தத்தாஜிராவ் கெய்க்வாட் தனது 95 வயதில் காலமானார்.

    அதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவதாக பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    நேற்று இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 500 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தார். சாதனையை கொண்டாடுவதற்குள் மருத்துவ எமர்ஜென்சி காரணமாக இந்த டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

    தலைசிறந்த வீரருக்கான இந்திய வீரர்கள் முதல்நாள் ஆட்டத்தின்போது இதை செய்திருக்க வேண்டும். இது மிகவும் காலதாமதம் என தனது அதிருப்தியை முன்னாள் இந்திய அணி கேப்டன் கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

    • அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஜூரேல் 46 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். அறிமுக போட்டியில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்தார். இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா மேலும் இரண்டு ரன் எடுத்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார்.

    8-வது விக்கெட்டுக்கு ஜுரேல் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் ஸ்கோர் 408 ரன்னாக இருக்கும்போது அஸ்வின் 37 ரன்னில் வெளியேறினார்.

    ஜுரேல்

    அடுத்து பும்ரா களம் இறங்கினார். அறிமுக வீரர் ஜுரேல் அரைசதம் நோக்கி சென்றார். ஆனால் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரேஹன் பந்தில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அப்போது இந்திய 415 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி விக்கெட்டுக்கு பும்ரா உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். பும்ரா கிடைத்தது வரை லாபம் என்ற வகையில் அதிரடியாக விளையாடினார். இன்று பந்து நன்றாக அவரது பேட்டில் பட ரன்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இதனால் இந்தியா 450 ரன்களை நோக்கி சென்றது. ஆனால் 26 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. சிராஜ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டும், ரேஹன் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஜடேஜா 112 ரன்னில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் அவுட்.
    • அறிமுக வீரர் ஜுரேல் 31 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோரின் சதங்கள், சர்பராஸ் கான் அரைசதத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 112 ரன்னில் ஆட்டம் இழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னில் வெளியேறினார்.

    8-வது விக்கெட்டுக்கு ஜுரேல் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். ஜுரேல் முதலில் திணறினார். அதன்பின் சுதாரித்துக்கொண்டு சிறப்பாக விளையாட தொடங்கினார். அஸ்வின் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்த ஜோடி அரைசதம் ரன்களை கடந்தது.

    மேலும், இன்றைய 2-வது நாள் உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இந்தியா தற்போது 7 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்கள் எடுத்துள்ளது. ஜுரேல் 31 ரன்னுடனும், அஸ்வின் 25 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

    • 79 சிக்ஸ் உடன் டோனியை 3-வது இடத்திற்கு தள்ளியுள்ளார்.
    • இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் கண்ட தொடக்க வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன் என்ற நிலையில் ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஜடேஜா 68 ரன்களுடனும், ரோகித் சர்மா 97 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ரேஹன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலும், 3-வது பந்திலும் தலா இரண்டு ரன்கள் எடுத்து சதம் அடித்தார். அவர் 157 பந்தில் சதத்தை எட்டினார். சொந்த மண்ணில் அவரது 9-வது சதம் இதுவாகும்.

    மேலும், இந்த ஆட்டத்தில் இதுவரை இரண்டு சிக்சர்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

     சேவாக் 90 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளார். டோனி 78 சிக்ஸ் உடன் 2-வது இடத்தில் இருந்தார். தற்போது ரோகித் சர்மா 79 சிக்ஸ் உடன் டோனியை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மேலும், இங்கிலாந்துக்கு எதிராக தொடக்க வீரராக களம் இறங்கி 3 சதங்கள் அடித்துள்ளார். முரளி விஜய், கேஎல் ராகுல், விஜய் மெர்சன்ட் ஆகியோரும் 3 சதங்கள் அடித்துள்ளனர். கவாஸ்கர் 4 சதங்கள் அடித்துள்ளார்.

    • ஜெய்ஸ்வால், கில், ரஜத் படிதார் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஜடேஜா களம் இறங்கினார்.
    • ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 125 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. 33 ரன்கள் எடுப்பதற்குள் ஜெய்ஸ்வால் (10), கில் (0), படிதார் (5) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சை வலது கை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள திணறி வரும் நிலையில், அடுத்து இரண்டு அறிமுக வீரர்கள் இருப்பதால் ஜடேஜாவை முன்னதாக களம் இறக்கினார் ரோகித் சர்மா.

    ரோகித் சர்மாவின் கணக்கை ஜடேஜா வீணடிக்கவில்லை. சிறப்பாக விளையாடி இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொண்டார். ரோகித் சர்மா உடன் சரியான முறையில் ஜோடி அமைத்தார்.

    ஜடேஜா 97 பந்தில் ஐந்து பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். அத்துடன் ரோகித் சர்மா உடன் இணைந்து இந்திய அணிக்கு (158/3) 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்துள்ளார்.

    • சுப்மன் கில் 9 பந்தில் ரன்ஏதும் சேர்க்காமல் டக்அவுட்.
    • ஜெய்வால் 10 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சர்பராஸ் கான், த்ருவ் ஜுரெல் ஆகியோர் அறிமுகம் ஆகினர். முகமது சிராஜ் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டார்.

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். கடந்த போட்டியில் அறிமுகம் ஆன ரஜத் படிதார் 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    இதனால் இந்தியா 33 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. வலது கை பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்த நிலையில், ஜடேஜாவை களம் இறக்கினார் ரோகித் சர்மா.

    டக்அவுட் ஆகி சோகமாக வெளியேறும் சுப்மன் கில்

    ரோகித் சர்மாவின் திட்டம் கைக்கொடுத்தது. ரோகித் சர்மா ஒரு பக்கம் நிலையாக நின்று அரைசதம் அடித்தார். மறுபக்கம் ஜடேஜா ஆதரவாக விளையாடி வந்தார். இதனால் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

    இந்தியா முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி 25 ஓவர்கள் வீசியுள்ளது. மார்க் வுட் 2 விக்கெட்டும், ஹார்ட்லி 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    ரோகித் சர்மா 52 ரன்களுடனும், ஜடேஜா 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    ×