என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம்- இன்றைய போட்டியில் விளையாடும் ரிஷப்பண்ட்?
    X

    5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம்- இன்றைய போட்டியில் விளையாடும் ரிஷப்பண்ட்?

    • இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கியுள்ளது.
    • இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 669 ரன் குவித்தது. இது இந்தியாவின் ஸ்கோரை விட 311 ரன் கூடுதலாகும். ஜோ ரூட் (150 ரன்), பென் ஸ்டோக்ஸ் ( 141 ரன்) சதம் அடித்தனர். ஜடேஜா 4 விக்கெட்டும், பும்ரா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், கம்போஜ், சிராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து இருந்தது. கே.எல்.ராகுல் 87 ரன்னு டனும், கேப்டன் சுப்மன் கில் 74 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கியுள்ளது. கைவசம் 8 விக்கெட் இருக்கிறது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

    இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. தோல்வியை தவிர்க்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் பரபரப்பு இருக்கும். புதிய பந்து எடுக்கும்போது இந்தியாவுக்கு கடும் சவால் இருக்கும். 80 ஓவருக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்படும். இதனால் முதல் செசன் (மதிய உணவு, இடைவேளை வரை) மிகவும் முக்கியமானது.

    இன்றைய 5-வது நாள் ஆட்டத்தில் காயத்துடன் இருக்கும் ரிஷப்பண்ட் ஆடுவார் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர் பாக அவர் கூறியதாவது:-

    2-வது இன்னிங்சிலும் ரிஷப்பண்ட் விளையாடுவார். முதல் ஓவரில் 2 விக்கெட் இழந்த பிறகு கேப்டன் சுப்மன் கில்லும், ராகுலும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருவரும் மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் விளையாடினார்கள். பந்து வீச்சுத் தன்மையை பொறுத்து பேட்டிங்கை இருவரும் வெளிப்படுத்தினார்கள். 3-வது வரிசை குறித்து அணி பெரிதாக கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    வலதுகாலில் எலும்பு முறிவு இருந்தபோதிலும் ரிஷப்பண்ட் 2-வது நாளில் பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். முதல் நாளில் பேட்டிங்கின்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் வெளியேறினார்.

    Next Story
    ×