search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதரவற்றோர்"

    • ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • ரூ.18 ஆயிரத்து 700-ஐ ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பாக வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், செஸ் போன்ற விளையாட்டு உபகரணங்களும், இல்லத்திற்கு தேவையான உபயோக பொருட்களும் வழங்கப்பட்டது.

    இதில் துறை தலைவர் பெமினா, உதவி பேராசிரியர்கள் வைரமுத்து, மதுமதி மற்றும் 48 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தைகளுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆங்கித்துறை மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் ரூ.18 ஆயிரத்து 700-ஐ ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கினர்.

    • சேப்பாக்கம் மைதானம் அருகே உள்ள ஆதரவற்றோர் சிறுவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.
    • இரவில் பசியுடன் தூங்கச் செல்பவர்களின் பசியை போக்கும் விதத்திலேயே இதனை 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம்.

    சென்னை:

    சென்னையில் சாலை யோரம் வசிக்கும் ஆதர வற்றோர்களுக்கு பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விசேஷமான தினங்களில் சாப்பாடு வாங்கி கொடுக்கும் பழக்கத்தை பலர் வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் காலை உணவு மற்றும் மதிய உணவுகளையே வழங்குவார்கள். இரவு நேரங்களை கணக்கிட்டு பலரும் உணவு வழங்குவதில்லை.

    இந்நிலையில் சென்னையில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் பசியை போக்கும் வகையில் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து 'சென்னை ரொட்டி பேங்க்' என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி தினமும் இரவு உணவை வழங்கி வருகிறார்.

    2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் லத்திகாசரணுடன் சுஜாதா விஸ்வநாத், மகாதேவன், நிசாத் பசீர், ராஜீவ் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மெண்டல் ஹெல்த் (ஐ.எம்.எச்) மையத்தில் சேர்த்து சிகிச்சை பெறும் பெரும்பாலானோர் வறுமையில் வாடுபவர்களாகவே உள்ளனர். இதுபோன்ற நபர்களை சிகிச்சைக்காக அழைத்து வருபவர்கள் தங்களது கூலி வேலையை விட்டுவிட்டே அவர்களோடு வந்து தங்குகிறார்கள்.

    இப்படி ஐ.எம்.எச்.சில் இரவில் தங்குபவர்களுக்கு இரவு உணவை வழங்க வேண்டும் என்கிற நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட இந்த உணவு வழங்கும் திட்டத்தை பின்னர் படிப்படியாக விரிவுபடுத்த இருக்கிறோம் என்றார் முன்னாள் டி.ஜி.பி. லத்திகா சரண்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, ஐ.எம்.எச். மையத்தில் உணவு வழங்கி விட்டு சேத்பட்டில் 25 திருநங்கைகளுக்கு உணவு வழங்கப்படும். சேப்பாக்கம் மைதானம் அருகே உள்ள ஆதரவற்றோர் சிறுவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் என்றார்.

    மும்பையில் எனது 'பேட்ஜ்மேட்' ஆன சிவானந்தன் என்பவர் அங்கு 'ரொட்டி பேங்க்' என்ற பெயரில் மும்பை வாசிகளுக்கு இரவு உணவை ரொட்டியாக வழங்கி வருகிறார். அதுவே எங்களது இரவு சாப்பாடு வழங்கும் திட்டத்துக்கு முன்னோடியாகும்' என்று கூறிய லத்திகா சரண் தினமும் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் இரவில் பசியுடன் தூங்கச் செல்பவர்களின் பசியை போக்கும் விதத்திலேயே இதனை 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். தமிழக காவல் துறையில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்த லத்திகா சரண் பணி காலத்தில் பல்வேறு உதவிகளை பலருக்கும் செய்து உள்ளார். ஓய்வுக்கு பிறகும் அதுபோன்ற பணியை அவர் தொடர்ந்து பசியாற்றி வருவது பாராட்டுக்குரியது தான்.

    • ஆதரவற்றோர்களை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்.
    • அவர்க ளுக்கு போதிய வசதி ஏற்படுத்தி கொடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் பெரும்பாலும் பஸ் நிலையங்கள், கோவில், சுற்றுலா தலங்களுக்கு அருகே மனநிலை பாதிக்கப் பட்டவர்கள், ஆதவற்ற முதியோர்கள் என பலர் சுற்றித் திரிகின்றனர். இவற் றில் பெரும்பாலானோர் மனநிலை பாதிக்கப்பட்ட வர்கவே இருக்கிறார்கள். குறிப்பாக ராமேசுவரம், ஏர்வாடி, தேவிபட்டினம் பகுதிகளில் அதிகம் இவர் களை பார்க்க முடிகிறது.

    துணிகளை மூட்டைக ளாக கட்டிக்கொண்டும், கால்களில் புண்களோடும், காயங்களோடும் நடக்க முடி யாமல் ரோட்டில் ஊர்ந்து சென்று கொண்டி ருக்கின்ற னர். சிலர் அவர்கள் மீது கற்களை எறிவது, வம்பிழுப் பது என அதிகம் தொந்தரவு செய்கின்றனர். இதனால் இவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பரிதாபப் பட்டு யாரேனும் இவர்க–ளுக்கு உணவு அளித்தால் தான் உண்டு. இல்லையேல் பட்டினிதான். அதை அவர்க–ளுக்கு சொல்லவும் தெரிய–வில்லை.

    இவர்களை அதிகாரிகள் கண்காணித்து முறையான மருத்துவம் அளித்து காப்ப–கங்களில் அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்களும் பொறுப் புணர்ந்து செயல்பட வேண் டும். இதுபோன்று இருப்ப வர்களை துன்புறுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதுபோல் சுற்றித்திரிவோர் அதிகம். மாவட்டம் தோறும் அரசு காப்பகங்கள் அதிகப்படுத்த வேண்டும். இதோடு அவர்களுக்கு போதிய வசதி ஏற்ப டுத்தி கொடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஆதரவற்றோர்-நலிந்தோருக்கு உதவி செய்யவே அரசியலுக்கு வந்தேன் என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
    • எனக்கு இந்த வாய்ப்பு அளித்த மக்களுக்கு என்றும் செய்நன்றி மறவாதவனாக இருப்பேன்.

    மதுரை

    மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியலுக்கு பலர் பல்வேறு காரண ங்களுக்காக வந்திருக்கலாம். ஆனால் நான் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். பின்பு அந்த வேலை வேண்டாம் என்று எண்ணி அரசியலுக்கு வந்தேன். இதற்கு ஒரே காரணம் ஆதரவற்றோர்,நலிந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்பதே ஆகும்.

    நான் அமைச்சரான பின்பு தொகுதியில் இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி பலருக்கு உபகர ணங்களை வழங்கி இருக்கிறேன். தற்போது மாவட்டம் முழுவதும் ஒன்றிய அரசின் அலோன் கோ நிறுவனத்தின் உதவியுடன் இணைந்து தமிழக அரசு இதுபோன்று முகாம்களை நடத்துவதை எங்களுக்கு செய்கின்ற உதவியாக கருதுகிறேன்.

    இதுவரை எனக்கு வந்த தகவலின் படி 800 பேர் பதிவு செய்து அதில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 600 பேருக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

    நான் எந்த பொறுப்புக்கு போனாலும் இந்த தொகுதி மக்களை மறக்க மாட்டேன். என்னை முதன் முதலில் இதே இடத்தில் வாக்காளர்கள் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள். தற்போது மீண்டும் என்னை தேர்ந்தெடுத்து தமிழக முதல்வரின் ஆசியினால் தற்போது அமைச்சராக பணியாற்றி வருகிறேன்.

    எனக்கு இந்த வாய்ப்பு அளித்த மக்களுக்கு என்றும் செய்நன்றி மறவாதவனாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னிமலை அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுவன் மாயமானார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பாரதியார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை சேர்ந்த நமச்சிவாயம் (52) செயலாளராக உள்ளார்.

    இந்த இல்லத்தில், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் பரத் (13), ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக் குழு மூலமாக சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று காலை குழந்தைகள் ஆஜர் பட்டியல் எடுத்தபோது சிறுவன் பரத் இல்லை.

    உடனிருந்த குழந்தைகளை விசாரித்தபோது அவன் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நலக்குழுவுக்கும் சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் உதவியுடன் ஈரோடு, பெருந்துறை, அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் பரத் கிடைக்கவில்லை. இதையடுத்து இல்லத்தின் செயலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1கோடி மதிப்பிலான கடனுதவியை இ-சேவை, வணிக வள மையம் தொடக்கங்கியது.
    • ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுயஉதவி கூட்டமைப்பு குழு சார்பில் இ-சேவை மையம், வட்டார வணிக வள மையம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு சார்பில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் உணவு தானிய பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டுசிறந்த சிறுதானிய உணவிற்கான பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த மையத்தின் மூலம் 8-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவிற்கு மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் குழு தலைவர் ஹெலன்கீதா தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் வெள்ளைபாண்டி, வட்டார மேலாளர் மகாலெட்சுமி, யூனியன் சேர்மன் பஞ்சு, மகளிர் குழு செயலாளர் மணிமேகலை, பொருளாளர் சகாயகில்டா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

    இதேபோன்று அலங்கா நல்லூர் யூனியன் அலுவ லகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தொழில் முனைவோர்கள் வாழ்வாதார மேம்பாடு அடையும் பொருட்டு, வட்டார வணிக வள மையம் தொடங்கப்பட்டு இந்த மையத்தின் மூலம் 100 தொழில் முனைவோர்களுக்கு மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன் ரூ.25 லட்சத்திற்கான கடன் தொகையை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேரூராட்சி பிரேமா, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசெல்வி, ராதிகா, கலாராணி, உமாதேவி, தேவி மற்றும் வட்டார இயக்க மேலாண்மை பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    ×