search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதரவற்றோர்-நலிந்தோருக்கு உதவி செய்யவே அரசியலுக்கு வந்தேன்-  அமைச்சர்  பேச்சு
    X

    மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசிய போது எடுத்த படம். அருகில் கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் காலோன், மேயர் இந்திராணி பொன்வசந்த், வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் உள்ளனர்.

    ஆதரவற்றோர்-நலிந்தோருக்கு உதவி செய்யவே அரசியலுக்கு வந்தேன்- அமைச்சர் பேச்சு

    • ஆதரவற்றோர்-நலிந்தோருக்கு உதவி செய்யவே அரசியலுக்கு வந்தேன் என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
    • எனக்கு இந்த வாய்ப்பு அளித்த மக்களுக்கு என்றும் செய்நன்றி மறவாதவனாக இருப்பேன்.

    மதுரை

    மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியலுக்கு பலர் பல்வேறு காரண ங்களுக்காக வந்திருக்கலாம். ஆனால் நான் வெளிநாட்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். பின்பு அந்த வேலை வேண்டாம் என்று எண்ணி அரசியலுக்கு வந்தேன். இதற்கு ஒரே காரணம் ஆதரவற்றோர்,நலிந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என்பதே ஆகும்.

    நான் அமைச்சரான பின்பு தொகுதியில் இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி பலருக்கு உபகர ணங்களை வழங்கி இருக்கிறேன். தற்போது மாவட்டம் முழுவதும் ஒன்றிய அரசின் அலோன் கோ நிறுவனத்தின் உதவியுடன் இணைந்து தமிழக அரசு இதுபோன்று முகாம்களை நடத்துவதை எங்களுக்கு செய்கின்ற உதவியாக கருதுகிறேன்.

    இதுவரை எனக்கு வந்த தகவலின் படி 800 பேர் பதிவு செய்து அதில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 600 பேருக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

    நான் எந்த பொறுப்புக்கு போனாலும் இந்த தொகுதி மக்களை மறக்க மாட்டேன். என்னை முதன் முதலில் இதே இடத்தில் வாக்காளர்கள் வாக்களித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள். தற்போது மீண்டும் என்னை தேர்ந்தெடுத்து தமிழக முதல்வரின் ஆசியினால் தற்போது அமைச்சராக பணியாற்றி வருகிறேன்.

    எனக்கு இந்த வாய்ப்பு அளித்த மக்களுக்கு என்றும் செய்நன்றி மறவாதவனாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×