search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிரடி கைது"

    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள 54 ரவுடிகளை கைது செய்தனர்.
    • குற்ற செயல்களின்படி 43 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்க ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கைது செய்ய உத்தரவிட்டனர்.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முத்தமிழ் செல்வன் தலைமையில் ரவுடிகளை கைது செய்யும் பணி தொடங்கியது.

    இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் தற்போது வரை 54 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

    அவர்களில் குற்ற செயல்களின்படி 43 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    11 பேர் மீது நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த அதிரடி நடவ டிக்கை தீபாவளி வரை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • சுந்தர் சீனு ஐ.டி.ஐ. முடித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார்.
    • காதலிப்ப தாகவும், தன்காதலை ஏற்றுக் கொள்ளும்படியும் வற்புறுத்தி வந்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் எஸ்.எரிப்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் சுந்தர் சீனு (வயது 23). இவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார். இவர் பண்ருட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வரும் மாணவியிடம் சென்று, அவரை காதலிப்ப தாகவும், தன்காதலை ஏற்றுக் கொள்ளும்படியும் வற்புறுத்தி வந்துள்ளார். தனக்கு படிப்பில்தான் விருப்பம் இருப்பதாகவும், காதலிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறி காதலை ஏற்க அந்த மாணவி மறுத்துள்ளார்.

    ஆனாலும் சுந்தர் சீனு தொடர்ந்து அந்த மாண வியை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து  வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவி, பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தர்சீனுவை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • செக் மோசடி வழக்குகளில் சிக்கியும் தலை மறைவாக இருப்பவர்களை கைது செய்ய கோவை சரக ஐ.ஜி உத்தரவிட்டார்.
    • பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் கோர்ட் பிடி வாரண்டு பிறப்பித்தும், செக் மோசடி வழக்குகளில் சிக்கியும் தலை மறைவாக இருப்பவர்களை கைது செய்ய கோவை சரக ஐ.ஜி உத்தரவிட்டார்.

    இதை அடுத்து நாமக்கல் நகர போலீசார் டிஎஸ்பி சுரேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார், பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நாமக்கல் நகர பகுதி யில் மட்டும் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தும் தலைமறைவாக இருந்த வர்கள் மற்றும் செக் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த வர்கள் என 15 நாட்களில் 32 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மேலும் தலை மறைவாக உள்ள நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் நாமக்கல் புறநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • போலீசார் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அரசு மதுபான பாட்டி களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கைது செய்யபட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ் உத்தரவின்படி பொங்கல் பண்டி கையை யொட்டி போலீசார் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பண்டி கை நாட்களில் சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க 7 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தும், 6 மதுவிலக்கு சிறப்பு போலீசார் தனிப்படை அமைத்தும் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கட்டுப்பாட்டில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமை யில் தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நைனார்பாளையம் டாஸ்மாக் கடை எதிரே செம்பாக் குறிச்சி கிரா மத்தைச் சேர்ந்த மணி கண்டன் (வயது 25). என்பவர் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டி களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கைது செய்யபட்டார். 

    அவரிடமிருந்து சுமார் 1032 அரசு மதுபான பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட வினை தீர்த்தா புரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிட மிருந்து 70 அரசு மதுபான பாட்டில்கள் கைப்பற்ற பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் அதிகாலை முதல் தீவிர மதுவிலக்கு சோத னையில் ஈடுபட்டு வரும் நிலையில், கரியா லூர் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட அரண்மனை புதூர் தெற்கு ஓடையில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 200 லிட்டர் பிடிக்ககூடிய 3 பிளாஸ்டிக் பேரல்களில் இருந்த 600 லிட்டர் கள்ளச்சாரய ஊரலை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே அழித்தனர். ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 27 பேர் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், 1679 மதுபான பாட்டில்க ளும், 600 லிட்டர் கள்ளச்சா ராய ஊரலும் கைப்பற்றப் பட்டுள்ளது.

    • கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் காதலியுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள உள்ளாவூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜேசிடம் தெரிவித்தார். ஆனால் அவர் நமக்கு ஜாதகம் சரி இல்லை என்று கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்தார். மேலும் இளம் பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்தார். இதற்கிடையே இளம்பெண்ணை பெற்றோர் சமாதானபடுத்தி அவருக்கு வெறொரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் காதலியுடன் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் திருமணம்செய்ய மறுத்த காதலனான கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மீது சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

    காதலியை திருமணம் செய்ய மறுத்த கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.
    • கஞ்சாபொட்ட லங்களை பறிமுதல் செய்து அவரைபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார்,பண்ருட்டி,புதுப்பேட்டை சப்.இன்ஸ்பெக்டர் கள்,பயிற்சி சப்-இன்ஸ்பெக்ட ர்மற்றும்போலீசார் நேற்று தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புதுப்பேட்டை பகுதியில் நடுசாத்திப்பட்டு நங்கை அம்மன் கோயில் தெரு ரகு(18)ஆ.நத்தம் பெருமாள் கோவில் தெருஅப்பு ( 20 ) கஞ்சாவிற்பனையில் ஈடுபட்டதுதெரியவந்தது இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஏராளமான கஞ்சாபொட்ட லங்களை பறிமுதல் செய்து அவரைபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வடலூரில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சந்தேகப்படும் படி நின்றுக் கொண்டிருந்த, கலைவாணணை வளைத்துபிடித்தனர்.

    கடலூர்:

    நெய்வேலி பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 41)சேராக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (26). வடலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (60). இவர்களது மோட்டார் சைக்கிள்கள் வெவ்வேறு இடங்களில் திருட்டு போனது. இதுகுறித்து புகாரி ன்பேரில் வடலூர் போலிசார் வழக்குபதிவு செய்து தீவிர புலன்விசாரணை மேற்கொண்டுவந்தனர். வடலூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் தீவிர ரோந்துபணியில் வடலூர் அய்யன்ஏரி அருகே ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படி நின்றுக் கொண்டிருந்த, கலைவாணணை வளைத்துபிடித்தனர்,

    கலைவாணன் கொடுத்த தகவலின்பே ரில்மற்றவர்களை பிடித்துவிசாரித்தபோது பெரியாக்குறிச்சி புதுநகர் கலைவாணன் (21)சிதம்பரம் மணலூர் விகேஆர் நகர் சிரஞ்சீவி(20),கிளியனூர்பிரகாஷ்ஆகியோர் என தெரிய வந்தது. இவர்கள் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் ஆவர். இவர்களில் கலைவாணன், சிரஞ்சீவி ஆகிய 2 பேர் கைதுசெய்து வழக்குபதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய கிளியனூர் பிரகாசை போலீசார்தேடி வருகின்றனர். 

    • ஸ்ரீ நாதா கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.
    • ஒருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் உட்கோட்ட பகுதிகளில் கஞ்சா, போதை ஊசி புழக்கம் அதிகமாக இருந்து வருவதால், கல்லூரி பள்ளி மாணவர்கள் அதிகமாக பயன்படுத்துவதாக தொடர்பு புகார் வந்தது. இதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் திண்டிவனம் தனிப்படை போலீசார் நேற்று திண்டிவனம் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் திண்டிவனம் பெலா குப்பம் ரோடு வசந்தபுரம் பகுதியில் ஏஎஸ்பி தனிப்படை போலீசார் சோதனை நடத்தினார்.

    அப்போது வசந்தபுரம் பகுதியை சேர்ந்த சதாம்(31) என்பவர் அவரது வீட்டில் போதை ஊசி பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் போதை ஊசி தயாரிக்க பதுக்கி வைத்திருந்த 7 குளுக்கோஸ் பாட்டில், 160 போதை மாத்திரை, 10 ஊசியுடன் கூடிய சிரிஞ்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சதாமை காவல் நிலையம் அழைத்துச் சென்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா விசாரணை நடத்தினர். விசாரணையில் சதாம் அளித்த தகவலின் பேரில் திண்டிவனம் பங்களா தெருவை சேர்ந்த சூர்யா(22), கிடங்கல் 2, எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ஷாம் (19), திண்டிவனம் செஞ்சி மெயின் ரோடு மதர் சாய் தெருவை சேர்ந்த சிவா (26) ஆகியோருக்கு போதை ஊசி தொடர்ந்து சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போதை ஊசி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போதை ஊசிக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை சதாம் என்பவருக்கு விற்பனை செய்த மேலும் ஒருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதில் போதை ஊசி தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போவதால் மேலும் இதில் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போதை ஊசி பயன்படுத்து வோரின் விற்பனை செய்போரின் கைது நடவடிக்கை தொடரும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதே போல் திண்டிவனம் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே 50 கிராம் கஞ்சா வைத்திருந்த செஞ்சி சாலையை சேர்ந்த கௌதம்(23) மற்றும் திண்டிவனம் என்ஜிஓ காலனி பகுதியை யுவராஜ்(22), என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரோசணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வட ஆலப்பாக்கம் ஏரிக்கரை அருகே 60 கிராம் கஞ்சா, 10 லிட்டர் சாராயம் விற்ற நத்தமேடு பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (22), மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கனூர் குளக்கரை அருகே கஞ்சா விற்ற மருதமலை(24), என்பவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

    • அந்த வழியாக கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு நபர்கள் வேகமாக ஓட்டி வந்தனர்.
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் நேற்று அரகண்டநல்லூர் கடைவீதி பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த வழியாக கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு நபர்கள் வேகமாக ஓட்டி வந்தனர். இதனைப் பார்த்த போலீசார் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து புகையி லை பொரு ட்களை கடத்தி வந்த நபர்களை கைது செய்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல் குறிஞ்சிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை (வயது 47), அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் வழியாக கள்ள க்குறிச்சி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து புகையிலை பொருள்கள் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் இவர்களுக்கு புகையிலை பொருள்களை விற்பனை செய்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடகாவிலிருந்து வந்த ஹூண்டாய் காரை சோதனை செய்தனர்.
    • திண்டிவனம் செஞ்சி போன்ற பல்வேறு கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்ய எடுத்து வந்தார்களா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தாவுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் இன்று காலை ரோசனை இன்ஸ்பெக்டர் பிரு ந்தா,தலைமை காவலர் வெற்றிவேல்,காவலர்கள் அறிவுமணி,தர்மா, போலீசார், வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கர்நாட காவிலிருந்து வந்த ஹூண்டாய் காரை சோதனை செய்தனர். அந்த காரில் 40 மூட்டையில் குட்கா பொருட்கள் இருந்தன. காரில் வந்த 3 பேரை பிடிப்பதற்கு முன்பு அவர்கள் தப்பி ஓடினர்.

    போலீசரும் அவர்களைபின் தொடர்ந்து சேற்றில் இறங்கி மடக்கிப் பிடித்து போலீசாரும் குட்கா கொள்ளையர்களும் சேற்றில் புரண்டு ஓடியதை பார்த்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் இங்கு சினிமா சூட்டிங் நடக்கிறதோ அல்லது வேறுஏதேனும் சண்டையோ எனபொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். அவர்களைப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவர்கள் பெங்களூரை சேர்ந்த கிஷோர்,(வயது 29),சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கைலாஷ், ,செஞ்சி காந்தி நகரைச் சேர்ந்த சங்கரான ராம்,என்பதும், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, திண்டிவனம்,செஞ்சி,பகுதிகளில்குட்காவை கடத்தி செல்வதும் தெரிந்தது. திண்டிவனம் செஞ்சி போன்ற பல்வேறு கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்ய எடுத்து வந்தார்களா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் மேலும் 3 பேரையும் கைது செய்த போலீசார், 3 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் 25 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ேமாட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது..குட்கா கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம்

    பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணர் பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளக்கிணர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் சென்னை வடபழனியைச் சேர்ந்த பாண்டியன் (58) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×