54 ரவுடிகள் அதிரடி கைது

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 54 ரவுடிகளை கைது செய்தனர். குற்ற செயல்களின்படி 43 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
54 ரவுடிகள் அதிரடி கைது
Published on

தஞ்சாவூர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்க ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கைது செய்ய உத்தரவிட்டனர்.

அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முத்தமிழ் செல்வன் தலைமையில் ரவுடிகளை கைது செய்யும் பணி தொடங்கியது.

இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் தற்போது வரை 54 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

அவர்களில் குற்ற செயல்களின்படி 43 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

11 பேர் மீது நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த அதிரடி நடவ டிக்கை தீபாவளி வரை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com