என் மலர்
நீங்கள் தேடியது "protest arrest"
- அந்த வழியாக கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு நபர்கள் வேகமாக ஓட்டி வந்தனர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் நேற்று அரகண்டநல்லூர் கடைவீதி பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த வழியாக கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு நபர்கள் வேகமாக ஓட்டி வந்தனர். இதனைப் பார்த்த போலீசார் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து புகையி லை பொரு ட்களை கடத்தி வந்த நபர்களை கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல் குறிஞ்சிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை (வயது 47), அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் வழியாக கள்ள க்குறிச்சி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து புகையிலை பொருள்கள் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் இவர்களுக்கு புகையிலை பொருள்களை விற்பனை செய்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






