search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VOC"

    • வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், கவிதாதேவி, அன்பழகன், வக்கீல் குபேர் இளம்பரிதி, மரியதாஸ், வக்கீல் அசோக், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாவட்ட துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், அந்தோணி கண்ணன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர், விஜயராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், கீதா செல்வமாரியப்பன், கங்கா ராஜேஷ், முத்துராஜா, பொன்ராஜ், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், இசக்கிராஜா, ஜெயசீலி, தெய்வேந்திரன், அந்தோணி, பிரகாஷ், மார்ஷல், ஜான்சிராணி, ராமுத்தம்மாள், கந்தசாமி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா மற்றும் கருணா, பிரபாகர், ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு அரசியல் கட்சியினரும் இன்று வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பா.ஜனதா சார்பில் பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வ.உ.சிதம்பரனார் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அமைப்புச்செயலாளர்கள் சுதா பரமசிவன், ஏ.கே. சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர் பள்ளமடை பாலமுருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி,

    டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பகுதி செயலாளர்கள்  காந்தி வெங்கடாசலம், சின்னதுரை, கவுன்சிலர் சந்திரசேகர், வக்கீல்கள் ஜெயபாலன், அன்பு அங்கப்பன், வட்ட செயலாளர் நத்தம் வெள்ளப்பாண்டி, ஜோதி பரமசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா-அ.ம.மு.க.

    நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் பொதுச்செயலாளர் வேல் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.ம.மு.க. சார்பில் நிர்வாகிகள் குமரேசன், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ஆவின் அண்ணசாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் சண்முகராஜ், பொதுக்குழு உறுப்பினர் மணிமூர்த்தீஸ்வரம் ஆறுமுகம், துவரை பேச்சிமுத்து பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி வ.உ.சி. யின் புகழை போற்றுவோம் என வாழ்த்தி பேசினர்.

    கோவில்பட்டி:

    வ.உ.சி.யின் 152- வது பிறந்தநாள் விழா கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. ம.தி.மு.க. மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மாரிமுத்து ஏற்பாட்டில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலாளர் சரவணன், கேசவன், நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி ம.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் கலந்து கொண்டு வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி வ.உ.சி. யின் புகழை போற்றுவோம் என வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் மந்தித்தோப்பு பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி, ம.தி.மு.க. செயற்குழு உறுப்பினர் எல்.எஸ்.கணேசன், ராமமூர்த்தி, சீனிவாசன், பொறியாளர் அணி ராம்குமார், வெங்கடேஷ், மாடசாமி அயோத்தி ராமசாமி, ஜீவா, சுந்தரம், பால்குமார் மற்றும் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வ.உ.சி.க்கு திருவுருவச்சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • சிலை தயாரிக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகிறது

    கோவை,

    கப்பலோட்டிய தமிழன் என அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் நாட்டுக்கும், மக்களுக்கும் ஆற்றிய சேவைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக வ.உ.சி.க்கு திருவுருவச்சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து கோவை வ.உ.சி மைதானத்தில் அவருக்கு சிலை அமைக்க 50 அடி நீளம், 45 அடி அகலம் கொண்ட 5 சென்ட் இடம் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

    இங்கு பொதுப்பணித்துறை சார்பில் வ.உ.சி.க்கு சிலை நிறுவிட பீடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ரா.செல்வராஜ், கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை வ.உ.சி மைதானத்தில் ரூ.40 லட்சத்தில் பீடம் அமைத்து அதில் வ.உ. சிதம்பரனாருக்கு 7 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான சிலை தயாரிக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகிறது. மைதானத்தில் பீடம் அமைக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி அடுத்த மாதத்துக்குள் நிறைவுறும். அதன் பிறகு வ.உ.சி சிலை நிறுவப்படும். சிலை அருகே அவரின் வரலாற்று தகவலும் இடம் பெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • நெல்லை மாநகரப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 965 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.
    • ரூ. 15 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாளை வ.உ.சி. மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை நெல்லையில் நடைபெறும் விழாவில் திறந்து வைக்க உள்ளாார்.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 965 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.

    புதிய பஸ்நிலையம்

    இதில் 32 திட்டப்பணிகள் ரூ. 319.02 கோடி மதிப்பீட்டில் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன. 52 திட்டப்பணிகள் ரூ. 642.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

    அந்தவகையில் கூடுதல் நடைமேடைகளுடன் கட்டப்பட்ட நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையம், முழுவதும் இடித்து புதிதாக அமைக்கப்பட்ட பாளை பஸ் நிலையம், நவீன பஸ்நிறுத்தங்கள் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

    ரூ. 79 கோடி

    ரூ. 79 கோடியில் கட்டப்பட்டு வரும் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தின் ஒருபகுதி வேலை முடிந்த நிலையில் மற்றொரு பகுதியின் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதுபோல டவுன், பாளை மார்க்கெட்டுகள் புதுப்பிக்கும் பணி, பொருட்காட்சி மைதானத்தில் வணிக வளாகம் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    வ.உ.சி. மைதானம்

    இந்நிலையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பாளை வ.உ.சி. மைதானத்தில் பல்வேறு வசதியுடன் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து பாளை வ.உ.சி. மைதானத்தில் ஏற்கனவே இருந்த கேலரிகள், பார்வையாளர்கள் கூடம், விளையாட்டு வீரர்கள் அறைகள் ஆகியவை இடித்து அகற்றப்பட்டது.

    நவீன இருக்கைகள்

    பின்னர் நவீன இருக்கைகள் மற்றும் மேற்கூரைகளுடன் கூடிய கேலரிகள் புதிதாக அமைக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட கேலரிகளில் அதிகபட்சமாக 1,750 பேர் அமர்ந்து போட்டிகளை பார்க்க முடியும். 24 வி.ஐ.பி.க்கான இருக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

    320 சதுர அடியில் பிரமாண்ட மேடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வி.ஐ.பி.க்கள், விளையாட்டு வீரர்களுக்கு 2 தனித்தனி அறைகள் கட்டப்பட்டுள்ளது.

    தனித்தனியாக கழிவறை

    மேலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் மின் உற்பத்தி விளக்கு, விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க முதலுதவி அறைகள் உள்ளது.

    வ.உ.சி. மைதானத்தில் 6 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இரவிலும் விளையாட்டு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.

    நடைப்பயிற்சி

    பொதுமக்கள் நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி மேற்கொள்ள தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வாகனம் நிறுத்தும் இடம், பார்வையாளர்களுக்கு சிறப்பு நுழைவுப்பாதை, முக்கிய நபர்கள் வருவதற்கு தனி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் சி.சி.டி.வி. காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாளை திறப்பு

    மேடையின் மேற்பகுதியில் சோலார் மின்உற்பத்தி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த அரங்கிற்கு தேவையான மின்சாரத்தை இதில் இருந்தே உற்பத்தி செய்ய முடியும்.

    மேலும் விளையாட்டு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தும் வண்ணம் பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பாளை வ.உ.சி. மைதானம் முழுவதும் புதுப் பிக்கப்பட்டு புதுப்பொலி வுடன் காட்சி அளிக்கிறது. இதனால் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    ரூ. 15 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாளை வ.உ.சி. மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை நெல்லையில் நடைபெறும் விழாவில் திறந்து வைக்க உள்ளாார். 

    • பாளை வ.உ.சி மைதானம் பின்புறம் அமைந்துள்ள சாலையில் இரவு நேரத்தில் ஏராளமான துரித உணவக கடைகள் அமைக்கப்படும்.
    • இங்கு வரும் இளம் பெண்களை கவரும் வகையில் வாலிபர்கள் சிலர் தினமும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் என்ற பெயரில் ஆபத்தான வகையில் இருசக்கர வாகனம் ஓட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    நெல்லை:

    பாளை வ.உ.சி மைதானம் பின்புறம் அமைந்துள்ள சாலையில் இரவு நேரத்தில் ஏராளமான துரித உணவக கடைகள் அமைக்கப்படும்.

    ஆபத்தான சாகசம்

    இரவில் வேலைக்கு சென்று வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த கடைகளில் உணவருந்தி வருகின்றனர். குறிப்பாக வேலைக்கு சென்று வரும் இளம் பெண்கள் பலர் இந்த கடைகளுக்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் இங்கு வரும் இளம் பெண்களை கவரும் வகையில் வாலிபர்கள் சிலர் தினமும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் என்ற பெயரில் ஆபத்தான வகையில் இருசக்கர வாகனம் ஓட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    விபத்து அபாயம்

    நேற்று இரவும் வாலிபர் ஒருவர் சினிமா பாணியில் மோட்டார் சைக்கிளின் முன்புற சக்கரத்தை மேலே அந்தரத்தில் தூக்கி விட்டு பின்பக்க சக்கரத்தை மட்டும் தரையில் தொடும்படி ரேஸ் செய்து கொண்டே சென்றுள்ளார்.

    இதனால் அந்த சாலையில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாகசம் செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    நடவடிக்கை பாய்கிறது

    இது குறித்து போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கூறுகையில், சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் பதிவெண் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    முதலில் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் பின்னர் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.
    • இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து 10 டன் தக்காளி மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தினமும் 15 டன் தக்காளி லோடு விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் சமீபகாலமாக தக்காளி விலை கூடுவதும் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது. நேற்று வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனையானது. நேற்று 15 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.

    இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திராவில் இருந்து 10 டன் தக்காளி மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. நேற்றைவிட இன்று வரத்து குறைந்ததால் தக்காளி விலையும் அதிகரித்தது. இன்று சுமாரான தக்காளி ஒரு கிலோ ரூ.45-க்கும், நல்ல தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது.

    ×