என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கர்பிணி"
- கருவைக் கலைக்க மும்பை அருகே உள்ள தானேவில் உள்ள மருத்துவமனைக்கு காதலனால் அழைத்துச்செல்லப்பட்டார்.
- அழுதுகொண்டிருத்த இரண்டு குழந்தைகளையும் அவர்கள் ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர்.
கருக்கலைப்பு செய்தபோது உயிரிழந்த கர்பிணி பெண்ணின் உடலை ஆற்றில் வீசி, அவரின் 2 குழந்தைகளையும் அதே ஆற்றில் காதலன் தள்ளிவிட்டுவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள புனே மாவட்டத்தில் கணவனைப் பிரிந்து காதலுடன் வாழும் 25 வயது பெண் கர்பமடைந்த நிலையில் கருவைக் கலைக்க மும்பை அருகே உள்ள தானேவில் உள்ள மருத்துவமனைக்கு காதலனால் அழைத்துச்செல்லப்பட்டார்.
கருக்கலைப்பின்போது துரதிஷ்டவசமாக பெண் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து பெண்ணின் உடல் அவரது காதலனிடம் ஒப்படைக்கப்பட்டது. கணவரை விட்டு பிரிந்து காதலனுடன் வாழும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு குழந்தையும் 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 9 ஆம் தேதி தனது நண்பனுடன் பெண்ணின் உடலை எடுத்துக்கொண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு புனே நோக்கி காதலன் வந்துள்ளான்.
வரும் வழியில் காதலன் தனது நண்பனுடன் சேர்ந்து இந்திரயாணி ஆற்றில் பெண்ணின் உடலை வீசியுள்ளான். அழுதுகொண்டிருத்த இரண்டு குழந்தைகளையும் அவர்கள் ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர். தனது பெண்ணை காணவில்லை என்று தாய் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆற்றில் இருந்து பெண்ணின் உடலை போலீசார் மீட்ட நிலையில் காணாமல் 2 குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.
- போர்வை வியாபாரியான தினேஷ் சிலாவத், மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
- . நிறைமாத கர்பிணியாக உள்ள இவரது மனைவி ரஜினிக்கு நேற்று மதியம் 2:30 மணியளவில், பிரசவ வலி ஏற்பட்டது.
ராஜஸ்தானை சேர்ந்த போர்வை வியாபாரியான தினேஷ் சிலாவத், மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். நிறைமாத கர்பிணியாக உள்ள இவரது மனைவி ரஜினிக்கு நேற்று மதியம் 2:30 மணியளவில், பிரசவ வலி ஏற்பட்டது. உடனே ஆட்டோ ரிக்க்ஷாவில் நீமுச் மாவட்ட மருத்துவமனைக்கு தனது மனைவியை தினேஷ் அழைத்துச்சென்றார்.
ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை அனுமதிக்க மறுத்து, உதய்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் தினேஷ் செய்வதறியாது தவித்த நிலையில் ரஜினிக்கு ஆட்டோ ரிக்க்ஷாவிலேயே குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறக்கும் சமயத்தில் அருகில் இருந்தவர்கள் ஆட்டோவை துணியால் மறைத்து உதவினர். தொடர்ந்து, தாயும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக உள்ளனர். முன்னதாக மருத்துவமனை ஊழியர்கள் கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்தது சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், மயக்க மருந்து நிபுணர் விடுமுறையில் இருப்பதால், சிசேரியன் பிரசவம் செய்ய சாத்தியமில்லை என்பதாலேயே கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்ததாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுகுறித்த விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
- உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் 4 ஆண்டுகள் கழித்து கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் பகுதியில் பன்னா லால்- அனிதா தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.அனிதா மீண்டும் கர்ப்பமான நிலையில் தனக்கு ஆண் குழைந்தையை பெற்றுத் தர வேண்டும் என்று பன்னா லால் அனிதாவுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.
ஆண் குழந்தை பிறக்காவிட்டால் அனிதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்து கொள்வேன்தொடர்ந்து மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அனிதாவுடன் இதுதொடர்பான வாக்குவாதம் முற்றிய நிலையில் அரிவாளால் அனிதாவின் வயிற்றை அறுத்து, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பரிசோதிப்பதாக மிரட்டி, தப்பியோட முயன்ற அனிதாவை பிடித்து அரிவாளால் வயிற்றை வெட்டினார்.
அனிதாவின் வயிற்றில் குடல்கள் வெளியே வரும் அளவுக்கு வெட்டு ஆழமாக இருந்துள்ளது. அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கடையில் வேலை செய்த அவளது சகோதரர் ஓடி வந்து அவளை காப்பாற்றினார். அவரை பார்த்ததும் பன்னா லால் அங்கிருந்து தப்பியோடினார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனிதா உயிர்பிழைத்த நிலையில் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. பன்னா லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் பன்னா லால், தன் பொய் வழக்குப் பதிவு செய்ய அனிதா தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்