என் மலர்
நீங்கள் தேடியது "slug 282226"
- சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ்.
- 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை வழங்கப்படும்.
தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
- வீட்டிற்கு காலையில் சென்று பார்க்கும் போது பின்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே அவர்கள் வசித்து வந்த வீடு தற்சமயம் பழுது அடைந்திருப்பதால் வீட்டை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து அவர்கள் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியிருந்து பழுது பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு காலையில் சென்று பார்க்கும் போது பின்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் 300 கிராம் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமையாபானு வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
- மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
மதுரை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டது.
அப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டு உள்ள ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்,
அமைச்சுப் பணியாளர் ஊதிய முரண்பாடுகளைக் களையும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கும் ரூ.7000 போனஸ் வழங்க வேண்டும்,
தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி-நகராட்சி பகுதியில் ஈட்டுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பில் பாரபட்ச நடவடிக்கையை கைவிட வேண்டும்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் உள்ள பணியாளர்களை பணிநிரந்திரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர், தூய்மைக் காவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் மாரியப்பன், நடராஜன், ஜெயராஜராஜேஸ்வரன், 'டான்சாக்' மனோகரன், பரஞ்ஜோதி, மணிகன்டன், சின்னபொன்னு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தோ்தலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்தனா்.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எதிா்பாா்ப்பில் இருந்த ஊழியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தாராபுரம் :
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தாராபுரத்தில் அரசு ஊழியா்கள் சங்கங்களின் கூட்டியக்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.தாராபுரம் அண்ணாசிலை முன்பாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சிபிஎஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் எஸ்.நவீன் தலைமை வகித்தாா்.
இதில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் லட்சுமி நாராயணன் பேசியதாவது:- இந்தியாவில் ராஜஸ்தான், சட்டீஸ்கா் பிகாா், ஜாா்கண்ட் மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தமிழகத்தில் மட்டும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மௌனம் காக்கிறாா்.திமுக கட்சிஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்ததால்தான் கடந்த தோ்தலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்தனா்.இந்நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்த ஊழியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஆகவே, தோ்தல் வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றாா்.இந்த போராட்டத்தில் பல்வேறு அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
- அரசு ஊழியர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்குவது வழக்கம்.
- நிதி நெருக்கடி இருந்ததால் ஆம் ஆத்மி அரசு குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு கடந்த 6-ந்தேதி மாலை தான் சம்பளம் வழங்கியது.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் 6 நாள் தாமதமாக வழங்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்குவது வழக்கம். நிதி நெருக்கடி இருந்ததால் ஆம் ஆத்மி அரசு குரூப் சி மற்றும் டி ஊழியர்களுக்கு கடந்த 6-ந்தேதி மாலை தான் சம்பளம் வழங்கியது. மற்றவர்களுக்கும் நேற்று தான் ஊதியம் அளிக்கப்பட்டது.
- சரவணன் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகே சென்று கொண்டு இருந்தார்.
- அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது இடிக்காமல் இருப்பதற்காக சரவணன் திடீரென பிரேக் பிடித்தார்.
அம்பத்தூர்:
கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையை சேர்ந்தவர் சரவணன்(வயது38). இவர் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை அவர் மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது இடிக்காமல் இருப்பதற்காக சரவணன் திடீரென பிரேக் பிடித்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 27-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடி அப்ப ல்லோ மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமினை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட முகாமில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அவர் சார்ந்த குடும்பத்தினர் அனைவரும் இலவச மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- சுதந்திர தின உரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படை உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிதம்பரம் அருகே அரசு ஊழியர் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்.
- செயற்கைக் கால் பொருத்திய மாற்று திறனாளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோழன் (வயது 45). இவர் காட்டுமன்னார்கோவில் சார்நிலை கருவூலத்தில் பணியாற்றி வந்தார். மேலும் செயற்கைக் கால் பொருத்திய மாற்று திறனாளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குமராட்சியில் உள்ள ராஜன் வாய்க்காலுக்கு தனியாக குளிக்க சென்றார். பின்னர் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரின் வேகம் அதிகரித்து எதிர்பாராத விதமாக சோழன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
குளிக்கச் சென்ற சோழன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் வீட்டில் உள்ளவர்கள் ராஜன் வாய்க்கா லுக்கு சென்று அவரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நீரில் அடித்துச் செல்லப்பட்டு புதரில் மாட்டி இருந்த சோழனின் உடலை போராடி மீட்டனர். பின்னர் சோழ னின் உடலை குமராட்சி போலீஸ் நிலையத்திடம் ஒப்ப டைத்தனர். குமராட்சி போலீசார் சோழனின் உடலை பிரேத பரிசோ தனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- கிராம நிர்வாக பதவி உயர்வை 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.
- பதவி உயர்வு வருகின்றபோது வயதை கணக்கிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க 2-வது வட்ட மாநாடு சிவக்குமார் வட்டத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இதில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், பழைய முறையிலான ஓய்வூதியம், கிராம நிர்வாக பதவி உயர்வை 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.
20 சதவீத விழுக்காடு என்பதை 30 சதவீத விழுக்காடாக உயர்த்த வேண்டும். கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் தேர்வு ஆணையம் மூலம் நிரப்ப வேண்டும். ஓட்டுநர் பதிவு உயர்வு வழங்க வேண்டும்.
1.6.1995 முன்பு பணி பார்த்த காலத்தில் பணிக்காலமாக கருதி ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு வருகின்றபோது வயதை கணக்கிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
கிராம உதவியாளர்களை கிராம பணியை தவிர இதர பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வட்டச் செயலாளர் கோபிநாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேணுகோபால், செல்வகுமார், மாநில துணைத்தலைவர் சிவசங்கர், மாவட்ட துணை தலைவர் வடிவேல், சிறப்புரை பசுவராஜ், ரங்கன் மற்றும் அன்பழகன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
- மேல்மலையனூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் பலியானார்.
- கடந்த 3-ந் தேதி அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 57) மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம நல அலுவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3-ந் தேதி அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக சாலை ஓரத்திலிருந்த சிமெண்ட் கட்டை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜாமணி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேலும் ஆகஸ்ட் 13 தேதியன்று கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாடு நடைபெறும்.
- அரசு அலுவலக நேரத்தில் காலை, மாலை இரண்டு நேரமும் அரசு பேருந்து இயக்கபட வேண்டும்.
தருமபுரி,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட மகளிர் மாநாடு தருமபுரி நரசிம்ம ஆச்சாரி தெருவில் உள்ள அச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் பி.எஸ்.இளவேணில் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலதுணைத்தலைவரும் மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினருமான கோ.பழனியம்மாள் சிறப்புறையாற்றினார். மாவட்ட மகளிர் துனணக்குழு உறுப்பினர்கள் அனுசுயா ,ஜான்சி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி மற்றும் மாவட்ட துணைத்தலைவர் சி.காவேரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தருமபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் அரசு ஊழியர்க ளுக்கென தனி கழிப்பறை, ஓய்வறை, ஏற்படுத்தவேண்டும். குழந்தைகள் காப்பக அறை ஏற்படுத்தவேண்டும். அரசு அலுவலகங்களிலும், களப்பணிகளிலும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த ேவண்டும். மேலும் அரசு அலுவலக நேரத்தில் காலை, மாலை இரண்டு நேரமும் அரசு பேருந்து இயக்கபட வேண்டும். இந்த தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
மேலும் ஆகஸ்ட் 13 தேதியன்று கிருஷ்ணகிரியில் நடைபெறும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாட்டில் தருமபுரி மாவட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.






