என் மலர்
நீங்கள் தேடியது "குற்றவாளி கைது"
- பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர்.
- குண்டுவெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி 27 ஆண்டுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்.14-ந்தேதி தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பா.ஜ.க. தலைவர் அத்வானியை கொலை செய்யும் முயற்சியாக அல் உம்மா பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர். இதில் 58 பேர் கொல்லப்பட்டனர், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சாதிக் என்ற டெய்லர் ராஜா 27 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சாதிக் தற்போது சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்படுகிறார்.
- நாடு முழுவதும் சுமார் ரூ.100 கோடி வரை பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏமாந்துள்ளனர்.
- வழக்கில் தொடர்புடைய 4 பேரை புதுவை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன். இவரை 2023-ம் ஆண்டு தொடர்பு கொண்ட மர்ம நபர் கிரிட்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி, ஆஷ்பே என்ற இணையதள பக்கத்தில் ரூ.92 லட்சம் முதலீடு செய்தார். அதன் மூலம் லாபத்தை சேர்த்து ரூ.2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி இருந்தது.
அதை விற்று பணமாக தனது வங்கி கணக்குக்கு மாற்ற அசோகன் முயற்சித்த போது, இணையதள பக்கம் முடக்கப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் அசோகன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கோவையில் தலைமை இடமாகக் கொண்டு சினிமா நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உட்பட பிரபலங்கள் மூலம் 2021-ம் ஆண்டு பிரமாண்ட தொடக்க விழா நடந்துள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குப் பிறகு மகாபலிபுரம் சொகுசு ஓட்டலில் ஆஷ்பேவில் முதலீடு செய்த 100 நபர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ஒரு கோடி வரவிலான கார்களின் முதலீடுகளுக்கு ஏற்ப பரிசாக வழங்கினர்.
அடுத்த சில நாட்களில் மும்பை கப்பல் ஒன்றில் மிகப்பெரிய விழா ஏற்பாடு நடத்தி அதில் ஆயிரகணக்கான மக்கள் பங்கேற்க செய்து ஆஷ்பேவின் முதலீடு செய்ய நிதி திரட்டி உள்ளனர். ஆஷ்பேவில் முதலீடு செய்யும் பணத்துக்கு கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் டி.சி. எக்ஸ் காயின் கொடுத்து முதலீடு பணத்தை தங்களின் வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளனர்.
ஆஷ்பே மூலம் பெற்ற டிசி எக்ஸ் காயின்களை விற்க முடியாமல் முதலீட்டாளர்கள் திணறிய போது ஆஷ்பே என்ற இணையதளம் பக்கம் திடீரென முடக்கப்பட்டது.
பின்பு தொடர் விசாரணையில் புதுச்சேரியை சேர்ந்த 10-க்கு மேற்பட்டோர் இந்த ஆஷ்பேவில் முதலீடு செய்து ரூ.3 1/2 கோடி வரை இழந்தது தெரிய வந்தது. இதுபோல் நாடு முழுவதும் சுமார் ரூ.100 கோடி வரை பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏமாந்துள்ளனர்.
இந்த வழக்கில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் தியாகராஜன் தலைமையிலான குழு கோயம்புத்தூர் சென்று அங்கு பதுங்கி இருந்த ஜெயின் மற்றும் அரவிந்த்குமார், கர்நாடகா மாநிலம் தும்கூரில் மறைந்திருந்த தாமோதரன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வழக்கில் மூளையாக செயல்பட்ட பாபு, நூர் முகமது, சந்தானம், நித்தியப்பன் உட்பட 5 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கிரிப்டோ கரன்சி நிர்வாக இயக்குனர் பாபு என்ற சையது உஸ்மானை கோவையில் புதுவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய 4 பேரை புதுவை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- 9-ந் தேதி நாட்டுத் துப்பாக்கியால் ரஞ்ஜித் சுட்டு கொலை செய்து விட்டு தப்பித்தார்.
- குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே கெம்மாரம்பாளையம் கண்டியூர் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இதே கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்ஜித்குமார்(33). இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறில் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி அய்யாசாமியை தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் ரஞ்ஜித் சுட்டு கொலை செய்து விட்டு தப்பித்தார். இதுதொடர்பாக அவரது உறவினர் காரமடை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் ரஞ்ஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து காரமடை போலீசார் இவர் மீது பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதகமாக செயல்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- துபாயில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது.
- பஞ்சாப் மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
- விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஆலந்தூர்:
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார்(32). இவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீசில், பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்கு கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அவர் போலீசிடம் சிக்காமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லவும் முயன்று வந்தார்.
இதையடுத்து தினேஷ் குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். இதுபற்றி அனைத்து சர்வதேச விமானநிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பாலியல் குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த தினேஷ் குமார் இலங்கைக்கு செல்வதற்காக விமானத்தில் பயணிக்க வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் தினேஷ்குமாரின் பயணத்தை ரத்து செய்து கைது செய்தனர். இதுபற்றி பஞ்சாப் மாநில போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
- கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை ஜெயப்பிரகாஷ் தாக்கிவிட்டு தப்ப முயன்றார்.
- ஜெயப்பிரகாஷ் காலில் சுடப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி:
கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில், கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார்.
போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஜெயப்பிரகாஷை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ஜெயப்பிரகாஷ் காலில் சுடப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் காவலர் சுடலைமணிக்கு இடது கையில் வெட்டு பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- வழக்கில் தொடர்புடைய 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
பல்லடம் :
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் மண்டல் என்பவரை கடந்த 20-ந் தேதி ஒரு கும்பல் கடத்தி அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த சுசிதரன் என்பவரது மகன் டாட்டூ தினேஷ் (வயது 28) என்பவரை போலீசார் சின்னக்கரை அருகே வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.
- மோசடியில் முக்கிய குற்றவாளியான சிவக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சொத்து பத்திரத்தின் மூலம் கடன் பெற்று டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என பலரிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
இதற்கு சம்மதித்த பொதுமக்களிடம் சொத்து பத்திரங்களை வாங்கி வங்கியில் அடமானம் வைத்து சுமார் ரூ.100 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரவீனா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியான சிவக்குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நேற்று இரவு பல்லடத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர்.
- மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா அதிபர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருந்தார்.
சென்னை:
சென்னை அமைந்தகரையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆரூத்ரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா அதிபர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார்.
துபாயில் பதுங்கி இருக்கும் அவரை பிடிக்க போலீஸ் வியூகம் வகுத்திருந்தது. கடந்த 3 வருடமாக தேடப்பட்டு வந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
- பின்னணியில் உள்ள சீன மோசடிக் கும்பலை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
சென்னை:
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களை சைபர் அடிமைகளாக மாற்றும் சம்பவங்களை தடுப்பதற்கு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
சென்னையை சேர்ந்த அப்துல்காதர், சையது ஆகியோரது மூலமாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த சங்கர் சர்கார் என்பவர் 9 பேரை லாவோஸ் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
இதுபோன்று வேலைக்கு சேர்ந்தவர்கள் அங்கு சைபர் அடிமைகளாக மாற்றப்பட்டு தவித்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் சேலம் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அப்துல் காதர், சையது ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சங்கர் சர்காரை பிடிக்க போலீசார் வலை விரித்தனர்.
இது தொடர்பாக விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு லுக் அவுட் நோட்டீசும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து சங்கர் சர்கார் கைது செய்யப்பட்டார்.
அவரை போலீசார் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி அழைத்து வந்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவரது பின்னணியில் உள்ள சீன மோசடிக் கும்பலை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை.
- ஞானசேகரன் வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரணை.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் புகார் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க நான்கு சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞானசேகரன் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஞானசேகரன் வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும் அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS- ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை/ செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. புலன்விசாரணையின் போது, அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சத்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெருநகர சென்னை காவல்துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்கில் காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவை சேர்ந்த ஷேக் காதர் என்பவர் சிக்கினார்.
- மாவட்ட கலெக்டர், சரித்திர பதிவேடு குற்றவாளியான ஷேக் காதரை ஓராண்டு தடுப்புக்காவலில வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்பட பல்வேறு வழக்கில் காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவை சேர்ந்த ஷேக் காதர் (36) என்பவர் சிக்கினார்.
இந்த நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதைத்தொடர்ந்து, அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, சரித்திர பதிவேடு குற்றவாளியான ஷேக் காதரை ஓராண்டு தடுப்புக்காவலில வைக்க உத்தரவு பிறப்பித்தார்.






