பல்லடம் அருகே வடமாநில வாலிபரை கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். வழக்கில் தொடர்புடைய 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் மண்டல் என்பவரை கடந்த 20-ந் தேதி ஒரு கும்பல் கடத்தி அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த சுசிதரன் என்பவரது மகன் டாட்டூ தினேஷ் (வயது 28) என்பவரை போலீசார் சின்னக்கரை அருகே வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com