சென்னை விமான நிலையத்தில் பாலியல் குற்றவாளி கைது

சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் பாலியல் குற்றவாளி கைது
Published on

ஆலந்தூர்:

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார்(32). இவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீசில், பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்கு கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அவர் போலீசிடம் சிக்காமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லவும் முயன்று வந்தார்.

இதையடுத்து தினேஷ் குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். இதுபற்றி அனைத்து சர்வதேச விமானநிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பாலியல் குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த தினேஷ் குமார் இலங்கைக்கு செல்வதற்காக விமானத்தில் பயணிக்க வந்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் தினேஷ்குமாரின் பயணத்தை ரத்து செய்து கைது செய்தனர். இதுபற்றி பஞ்சாப் மாநில போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com