என் மலர்
நீங்கள் தேடியது "mercenary"
- மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றதால் வாழைப்பழத்தில் விஷ மாத்திரை வைத்து தின்று கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோபி அடுத்துள்ள குருமந்தூர், பூசாரியூரை சேர்ந்தவர் குமார் (42). இவரது மனைவி சித்ரா. மனைவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கணவர் குமார் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்றும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை குமார் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
தனியாக இருந்த கணவர் குமார் மனமுடைந்து வாழைப்பழத்தில் விஷமாத்திரையை வைத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
பின்னர் குமாரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
- கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ,பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுசீலா. இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சுசிலா வேலை பார்த்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவன் கோபாலுக்கு தெரிந்ததால் அவரை கொலை செய்ய மனைவி சுசீலாவும் கள்ளக்காதலன் மாரீஸ்வரனும் முடிவு செய்தனர்.
அதன்படி இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கோபாலை கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கோபாலின் மனைவி சுசீலா ,கள்ளக்காதலன் மாரீஸ்வரன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மதன் குமார், மணிகண்டன், வினோத், லோகேஸ்வரன், விஜய் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .அந்த உத்தரவையடுத்து கோவை சிறையில் உள்ள 7 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை வழங்கினர்.
- திருவெண்ணைநல்லூர் அருகே கூலித்தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 பவுன் நகை 12,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தி. கொடல வாடி பகுதியைச் சேர்ந்த வர் முத்து (வயது 60) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு ஏரி வேலைக்கு சென்றார். மீண்டும் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 பவுன் நகை 12,000 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசாருதீன் வழப்பதிவு செய்து கூலித் தொழிலாளி வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- மோகனூர் தாலுகா லத்துவாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி பலி.
- நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையை கடக்க முயன்றவர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா லத்துவாடி ஊராட்சி நல்லையகவுண்டன்புதூர் காலனியை சேர்ந்தவர் ராஜ் (வயது 55) . இவரது மனைவி பாவாயி (வயது 50) . நேற்று முன்தினம் இரவு பாவாயி மாரியம்மன் கோவில் அருகில் கழிப்பிடம் சென்றுவிட்டு நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது நாமக்கல்லில் இருந்து மோகனூர் நோக்கி சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திகுளம் அருந்ததியர் தெருவை சேர்ந்த சுரேஷ் குமார் (வயது 26) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பாவாயி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள், மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே பாவாயி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சுரேஷ்குமார் காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாவாயி கணவர் ராஜ் மோகனூர் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளையை சேர்ந்தவர் கணபதி பாண்டியனின் மகன் சந்தோஷ் ராஜா (வயது 32). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நண்பருடன் சேர்ந்து குளிர்பான ஏஜெண்டு எடுத்து நடத்தி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி கவிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
இந்நிலையில் 1-ந் தேதி இரவு சந்தோஷ் ராஜாவின் வீட்டிற்கு ஒரு காரில் 5 பேர் கும்பல் வந்தது. அப்போது வீட்டில் சந்தோஷ் ராஜா மட்டும் இருந்தார். உடனே அந்த கும்பல் அவரை வலுக்கட்டாயமாக தூக்கி காரில் ஏற்றி சாத்தான்குளம் நோக்கி கடத்திச்சென்றது. வழியிலேயே அவரை 5 பேரும் சரமாரியாக தாக்கினர். பின்னர் படுகாயத்துடன் அவரை சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு தப்பி சென்று விட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் ராஜா உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக கணபதி பாண்டியன் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகநேரியை சேர்ந்த சிவராமன், தூத்துக்குடியை சேர்ந்த விக்னேஷ், சங்கரமூர்த்தி, பூவேஸ், பாலா ஆகிய 5 பேரை பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரத்தில் சந்தோஷ் ராஜா கொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட சந்தோஷ் ராஜாவின் அத்தை வீடு ஆறுமுகநேரியில் உள்ளது. இதனால் அவர் ஆறுமுகநேரிக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான ராதாகிருஷ்ணன் என்பவரின் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் சந்தோஷ் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுடன் முகநூலிலும் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் ராதாகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. உடனே அவர் சந்தோஷ் ராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு பலமுறை எச்சரித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் ராஜா, ராதாகிருஷ்ணன் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் சேர்ந்து சந்தோஷ் ராஜாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
இதற்கு ஏதுவாக சந்தோஷ் ராஜாவின் பெற்றோர் நெல்லையில் உள்ள இளைய மகனின் வீட்டில் தங்கியிருந்தது அவர்களுக்கு தெரியவந்தது. எனவே வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ் ராஜாவை கூலிப்படையை ஏவி காரில் கடத்திச்சென்று கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திசெல்வி மற்றும் போலீசார் கூலிப்படையைச் சேர்ந்த சிவராமன் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரை பிடிக்க இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ரியல் எஸ்டேட் அதிபரான ராதாகிருஷ்ணன் மற்றும் இதில் தொடர்புடைய சிலரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த ராதாகிருஷ்ணனை இன்று காலையில் போலீசார் கைது செய்தனர். அவரை உவரி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தோஷ் ராஜா கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews






