என் மலர்

  நீங்கள் தேடியது "Facebook love"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருணமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த அடிமாலி பகுதியை சேர்ந்தவர் ஷீபா (வயது 35).

  ஷீபாவுக்கும் திருவனந்தபுரத்தை அடுத்த பூஜப்புரா பகுதியை சேர்ந்த வாலிபர் அருண்குமார் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

  பலமாதங்களாக பேஸ்புக்கில் பேசிவந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். அதன்பின்பு அடிக்கடி காதலர்கள் தனிமையில் சந்தித்து பேசிவந்தனர்.

  இந்த நிலையில் ஷீபா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அருண்குமாரை வற்புறுத்தினார். அப்போதுதான் ஷீபா, திருமணம் ஆனவர் என்பதும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் அருண்குமாருக்கு தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஷீபாவை சந்திப்பதை தவிர்த்தார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த ஷீபா, அருண்குமாரை சமரசம் பேச வருமாறு அடிமாலிக்கு அழைத்தார்.அவரும் நண்பர்களுடன் நேற்று அடிமாலி சென்றார்.

  அடிமாலி சென்றதும் அங்குள்ள இரும்பு பாலம் அருகே அருண்குமாரும், ஷீபாவும் தனியாக சந்தித்து பேசினர். சிறிதுநேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

  இதில் ஆத்திரம் அடைந்த ஷீபா, திடீரென மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அருண்குமார் மீது வீசினார். இதில் அருண் குமாரின் முகத்தில் ஆசிட் பட்டு எரிந்தது. அவர் அலறிதுடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், அவரது நண்பர்களும் ஓடிவந்தனர். அவர்கள் அருண்குமாரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

  இச்சம்பவம் பற்றி அடிமாலி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அருண்குமாரிடம் விசாரணை நடத்தினர். அருண்குமார் போலீசாரிடம் கூறும்போது, ஷீபாவுடனான தொடர்பு மற்றும் திருமணத்திற்கு மறுத்ததால் அவர் பணம் கேட்டு மிரட்டியதும், பணம் கொடுக்க மறுத்ததால் தன் மீது ஆசிட் வீசியதாகவும் கூறினார்.

  பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்

  இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.பின்னர் ஷீபா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூ.20 லட்சம் கேட்டு மாணவியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியுடுவதாக மிரட்டிய பழ வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FacebookLove
  ஸ்ரீகாளஹஸ்தி:

  திருப்பதி ஆட்டோ நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர், திருப்பதி ரெயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், ஆந்திர மாநிலம் மேற்குக் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பேஸ்புக் மூலமாக தகவல்களை பரிமாறி கொண்டனர்.

  காதலன் நாகராஜை சந்திப்பதற்காக இளம்பெண், சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மண்டலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தங்கி கல்லூரியில் படித்து வந்த மாணவி, அடிக்கடி நாகராஜை நேரில் சந்தித்து, தனது காதலை வளர்த்து வந்தார்.

  மாணவி அணிந்திருந்த நகைகளை, நாகராஜ் கேட்டு வாங்கி கொண்டார். 3 மாதங்களுக்கு முன்பு மாணவியை திருப்பதிக்கு அழைத்துச் சென்ற நாகராஜ், அங்கு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினார். விடுதி அறையில் தங்கியிருந்தபோது, மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை செல்போன் மூலமாக பல கோணங்களில் நிர்வாணப் படங்களை எடுத்துள்ளார்.

  அந்தப் படங்களை மாணவியிடம் காண்பித்து, ‘‘எனக்கு உன் பெற்றோரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை வாங்கி தர வேண்டும். இல்லையெனில், நான் உன்னுடைய நிர்வாணப் படங்களை பேஸ்புக்கில் வெளியிடுவேன்’’ எனக்கூறி மாணவியை மிரட்டி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு ஏற்படும் போதெல்லாம், மாணவியை அவர் பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது.

  இந்தத் தகவலை மாணவி, தன்னுடைய உறவினர் ஒருவரின் மூலமாக பெற்றோர் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனடியாக பெற்றோர், மேற்குக் கோதாவரி மாவட்ட போலீசில் நாகராஜ் மீது புகார் செய்தனர். அவர் மீது அங்கு வழக்குப்பதிவு செய்ததை, அந்த மாவட்ட போலீசார், சந்திரகிரி போலீசுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் சந்திரகிரி போலீசார், நாகராஜை கைது செய்தனர். அவரை, திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  நாகராஜ் கைதான தகவலை கேள்விப்பட்ட அவருடைய தாயார் நவநீதம்மாள் இரவு திருப்பதி போலீஸ் நிலையம் எதிரே வந்து, மகனை விடுவிக்கக்கோரி தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #FacebookLove
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெள்ளகோவில் அருகே பேஸ்புக் மூலம் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Facebooklove
  வெள்ளகோவில்:

  ஈரோடு சூரம்பட்டிவலசு நேதாஜி நகரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் நந்தகுமார் (வயது 19). பிளஸ்-2 முடித்துள்ளார். இவர் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தி வந்தார். இவருக்கு கும்பகோணம் புளியம்பேட்டையை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரது மகள் சத்யபிரியா (21) என்பவர் அறிமுகம் ஆனார். சத்யபிரியா பி.ஏ. ஆங்கில இலக்கியம் முடித்தவர்.

  இருவரும் தங்கள் கருத்துக்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். போன் மூலம் பேசியபோது காதல் ஏற்பட்டது. மணிகணக்கில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

  இந்நிலையில் இருவரும் நேரில் சந்திக்க விரும்பினர். அதன்படி நாள் குறிக்கப்பட்டு சந்தித்தனர். ஒரே சந்திப்பில் இருவருக்கும் ஈர்ப்பு ஏற்பட்டது.

  இதனையடுத்து உடனே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. மயிலாடுதுறை டவுண் போலீஸ் நிலையத்திற்கு சத்யபிரியாவை வரவழைத்தனர்.

  அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் சத்யபிரியா தனது பெற்றோருடன் செல்வதாக எழுதி கொடுத்தார். அதன்படி பெற்றோருடன் சென்றார்.

  கணவரை பிரிந்து 4 நாட்கள் கூட இருக்க முடியாமல் தவித்தார். 4-வது நாளில் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் கணவருடன் சேர்ந்தார். பின்னர் அவர்கள் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்புபாளையம் ரோடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

  நந்தகுமார் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். காதல் தம்பதியின் வாழ்க்கை இனிமையாக தொடங்கியது.

  தீபாவளிவரை நந்தகுமார் அதே ஓட்டலில் வேலை செய்தார். தீபாவளி முடிந்த பின்னர் நந்தகுமார் வேலைக்கு செல்லவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நந்தகுமார் மற்றொரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார்.

  நேற்று காலை அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ஓட்டல் உரிமையாளர் இரவு நந்தகுமாரின் வீட்டுக்கு வந்தார். அப்போது நந்தகுமார் தூக்கில் பிணமாக தொங்கினார். அருகில் அவரது மனைவி சத்யபிரியா வி‌ஷம் குடித்து இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஓட்டல் உரிமையாளர் இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டை சோதனை செய்தபோது ஒரு கடிதம் சிக்கியது. அதில் எங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. நாங்கள் சந்தோ‌ஷமாகவே உலகை விட்டு பிரிகிறோம். உறவினர்கள்- நண்பர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். அஞ்சலி மட்டும் செலுத்தினால்போதும் என்று எழுதப்பட்டு இருவரும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

  போலீசார் கடிதத்தை கைப்பற்றினர். தற்கொலை செய்து கொண்ட தம்பதி குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது இருவரும் மகிழ்ச்சியாவே இருந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றனர்.

  வெள்ளகோவில் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து புதுமணத்தம்பதி தற்கொலை செய்ய என்ன காரணம் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். #Facebooklove
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேஸ்புக் மூலம் அறிமுகமாகி பெண் டாக்டரின் கற்பை சூறையாடி திருமணத்திற்கு மறுத்த என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #facebooklove
  சேலம்:

  மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 23 வயது பெண் டாக்டர் ஒருவர் சேலத்தை சேர்ந்த 22 வயது என்ஜினீயருடன் பேஸ்புக் மூலம் அறிமுகமானார். வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

  இதனை அறிந்த 2 பேரும் பேஸ்புக் மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் வாட்ஸ் அப்பில் மெசேஜ் மற்றும் படங்கள் அனுப்பியும், பேஸ்புக் மூலம் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

  எத்தனை நாளுக்கு தான் தூரத்தில் இருந்து பேசுவது என்று நினைத்த இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்தனர். அதனை என்ஜினீயர், பெண் டாக்டரிடம் தெரிவித்தார். உடனே அதற்கு சம்மதித்த பெண் டாக்டர் சேலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு பயிற்சிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு புறப்பட்டார்.

  அங்கிருந்து சேலத்திற்கு வந்த பெண் டாக்டரை காரில் சென்று வரவேற்ற என்ஜினீயர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்க வைத்தார். அந்த ஓட்டல் கணவன்-மனைவி போல 10 நாட்கள் தங்கியிருந்த ஜோடியினர் உல்லாசமாக பொழுதை கழித்தனர்.

  இந்த நிலையில் நேற்றிரவு சாப்பிடுவதற்காக அந்த ஓட்டலின் ரெஸ்டராண்டுக்கு அந்த ஜோடி வந்தது. அப்போது திடீரென அந்த பெண் டாக்டர் மயங்கி விழுந்தார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜினீயர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.அப்போது தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாகவும், வி‌ஷம் குடித்ததாகவும் மாறி, மாறி கூறினார்.

  உடனே ஓட்டல் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பெண் டாக்டரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த தகவலை பெண் டாக்டர், என்ஜினீயரின் உறவினர்களுக்கும் தெரிவித்தார். அதனால் அவர்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். தொடர்ந்து டாக்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது: அதன் விவரம் வருமாறு:-

  ஓட்டல் அறையில் மயங்கி விழுந்த பெண் டாக்டர் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தையும் டாக்டர். சேலத்தில் காதலனுடன் ஓட்டல் அறையில் 10 நாட்கள் உல்லாசம் அனுபவித்ததால் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் டாக்டர் வற்புறுத்தினார்.

  இதற்கு என்ஜினீயர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ரூ.25 லட்சத்தை பெண்டாக்டரிடம் இருந்து செலவுக்கு என்ஜினீயர் வாங்கியுள்ளார். ஓட்டலில் தங்கியதற்கான பணத்தையும் அந்த பெண் டாக்டரே வழங்கினார்.

  இதனால் மனம் உடைந்த பெண் டாக்டர் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மகராஷ்டிராவில் உள்ள அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அலறியடித்த படி சேலத்திற்கு விரைந்துள்ளனர்.

  திருமணத்திற்கு என்ஜினீயர் மறுத்தால் அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பேஸ்புக் மூலம் அறிமுகமாகி பெண் டாக்டரின் கற்பை சூறையாடி திருமணத்திற்கு மறுத்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#facebooklove
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேஸ்புக் மூலம் காதலிப்பதாக கூறி பட்டதாரி பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வள்ளியூர்:

  சமூக வலைதளங்களால் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவுக்கு தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலமாக பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் சில இளைஞர்கள் அவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்றுவிடுகிறார்கள். இதனால் அந்த பெண்களின் வாழ்க்கை திசைமாறி சீரழிந்துவிடுகிறது.

  இவ்வாறு பேஸ்புக் மூலம் மலர்ந்த நட்பினால் ஒரு பட்டதாரி பெண் நண்பர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும், நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் நம்பி மகன் சுரேஷ் (வயது 22) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்களை பற்றிய விவரங்களை பகிர்ந்துகொண்டார்கள்.

  நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. உன்னை தனிமையில் சந்திக்கவேண்டும் என்று சுரேஷ் தனது ஆசையை அந்தபெண்ணிடம் வெளிப்படுத்தினான். அவளும் காதலன் அழைத்ததால் மறுக்காமல் நேரில் சந்தித்தாள். இருவரும் பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தனர்.

  ஒரு சந்தர்ப்பத்தில் சுரேஷ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவல்கிணற்றில் உள்ள ஒரு விடுதியில் சுரேஷ் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வேளையில் சுரேஷ் காதலியை பல கோணங்களில் படம் எடுத்தார். இருவரும் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார்கள். சுரேஷ் எப்படியும் நம்மை திருமணம் செய்வான் என எண்ணி அந்த பெண் முழுமையாக நம்பி போட்டோக்கள் எடுத்துக்கொண்டாள்.

  இந்த நிலையில் சுரேசுக்கு விபரீத எண்ணம் உண்டானது. ஊருக்கு சென்று நடந்த விவரத்தை தனது நண்பன் அரிகரசுதனிடம் கூறினான். காதலியோடு எடுத்த போட்டோக்களையும் காண்பித்தான். உடனே அரிகரசுதனுக்கு சுரேசின் காதலியை சந்திக்க விரும்பினான். காதலியின் நண்பன் தானே என்று அந்த பெண், அரிகரசுதனிடமும் அன்பாக பழகினாள். ஒரு சந்தர்ப்பத்தில் சுரேசும், அரிகரசுதனும் சேர்ந்து அந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுக்க தொடங்கினர்.

  மேலும் சுரேஷ், அரிக‌ரசுதன் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணிடம் தங்களுக்கு ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அந்த பட்டதாரி பெண் பணகுடி போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் சுரேசையும், அரிகரசுதனையும் மடக்கி பிடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து அந்த பெண் மூலமாக அவர்களை காவல்கிணறு சந்திப்புக்கு வர செய்தனர். பணம் பெறுதற்காக சுரேஷ், அரிகரசுதன் ஆகியோர் வந்தனர். அவர்கள் இருவரையும் அங்கு நின்ற பணகுடி போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

  இந்த‌ சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை சுரேசும், அரிகரசுதனும் வேறு நண்பர்களுக்கும் கொடுத்துள்ளனர். அவர்களும் அந்த பெண்ணுக்கு போனில் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்கள். இதையடுத்து அவர்களையும் போலீசார் மடக்கி பிடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

  இதற்காக அந்த பெண்ணின் செல்போனில் பதிவான எண்களையும், சுரேஷ் போனில் இருந்த போட்டோக்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுரேஷ் இதுபோல வேறு பெண்களுடன் பழகியுள்ளாரா? சுரேசால் வேறு யாரும் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
  ×