என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேஸ்புக் மூலம் 3 மாத காதல்: காதலியை தேடி பீகார் சென்ற ஓட்டல் தொழிலாளி- கோவையில் மாயமானவர் பற்றி சுவாரசிய தகவல்
    X

    பேஸ்புக் மூலம் 3 மாத காதல்: காதலியை தேடி பீகார் சென்ற ஓட்டல் தொழிலாளி- கோவையில் மாயமானவர் பற்றி சுவாரசிய தகவல்

    • கடந்த 19-ந் தேதி சம்பளத்தை வாங்கிக்கொண்டு வாலிபர் கடையை விட்டு வெளியேறினார்.
    • வாலிபரின் தாயாருக்கு தொடர்பு கொண்ட போது, தனது மகன் இங்கு வரவில்லை என்று பதில் வந்தது.

    குனியமுத்தூர்:

    கோவை பாலக்காடு சாலை குனியமுத்தூரில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனுஜ் யாதவ்(18) என்ற வாலிபர் 3 மாதத்திற்கு முன்பு ஒரு பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தார்.

    கடையில் அந்த வாலிபருக்கு சமோசா போடும் வேலை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 19-ந் தேதி சம்பளத்தை வாங்கிக்கொண்டு, உத்தரப் பிரதேசம் சென்று அம்மாவை பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, அந்த வாலிபர் கடையை விட்டு வெளியேறினார்.

    கடையின் மானேஜர் ராஜ்குமார் என்பவர் இரண்டு நாட்கள் கழித்து அந்த வாலிபரை செல்போனில் பேசுவதற்கு முயன்றார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனே அந்த வாலிபரின் தாயாருக்கு தொடர்பு கொண்ட போது, தனது மகன் இங்கு வரவில்லை என்று பதில் வந்தது. உடனே சந்தேகம் அடைந்த பேக்கரி மேனேஜர் ராஜ்குமார் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் அனுஜ் யாதவை தேட தொடங்கினர்.

    அந்த சமயம் பீகாரில் இருந்து குனியமுத்தூர் போலீசாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பீகாரில் இருந்து மஞ்சு கர்சியா என்ற இளம் பெண் போலீசாரிடம் பேசினாள். தான் பீகாரில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை பார்ப்பதாகவும், கடந்த 3 மாதமாக அனுஜ் யாதவும், நானும் பேஸ்புக் மூலமாக காதலித்து வருகிறோம். அதனால் அவர் என்னை தேடி என்னிடம் வந்து சேர்ந்துவிட்டார். அவரை யாரும் தேட வேண்டாம் என்று தகவல் தெரிவித்தார்.

    இந்த தகவலை கேட்ட குனியமுத்தூர் போலீசார் பேக்கரி மேனேஜர் ராஜ்குமாரிடம் நடந்த விவரங்களை கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

    Next Story
    ×