என் மலர்
நீங்கள் தேடியது "dry fruits"
- பழங்களை எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் அவை உடலுக்கு ஆரோக்கியம்தான்.
- உலர்ந்த பழங்கள், பிரஷ் பழங்கள் இவற்றில் எது சிறந்தது என்பது குறித்து பார்ப்போம்.
பழங்கள், உலர் பழங்கள் இவற்றில் எதை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. பழங்களை எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும் அவை உடலுக்கு ஆரோக்கியம்தான். 'பிரஷ்ஷாக' கிடைக்கும் பழங்களில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதோடு அவை ஊட்டச்சத்துக்களாலும் நிரப்பப்பட்டிருக்கும். இருப்பினும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எவற்றில் அதிகமாக இருக்கிறதோ அதை சாப்பிடுவது சிறந்தது. உலர்ந்த பழங்கள், பிரஷ் பழங்கள் இவற்றில் எது சிறந்தது என்பது குறித்து பார்ப்போம்.
வைட்டமின்கள்: பிரஷ் பழங்களில் ஏ, பி மற்றும் சி நிறைந்திருப்பதோடு அவை உடலில் நீரிழப்பை தடுக்கும் தன்மை கொண்டவை. உலர்ந்த பழங்களில் நீர்ச்சத்து இருக்காது. சில நேரங்களில் வெப்ப உணர்திறன் காரணமாக அவற்றில் இருந்து வைட்டமின்களும் அகற்றப்பட்டிருக்கும். ஆதலால் வைட்டமின்களை உள்ளடக்கி இருப்பதில் உலர் பழங்களை விட பிரஷ் பழங்கள் சிறந்தவை.
சர்க்கரை: பிரஷ் பழங்களுடன் ஒப்பிடும்போது உலர் பழங்களில் அதிக சர்க்கரை உள்ளடங்கி இருக்கும். பெரும்பாலும் உலர்ந்த பழங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதனால் உடலில் சர்க்கரை அளவை குறைக்க விரும்புபவர்கள் உலர் பழங்கள் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
ஊட்டச்சத்து அடர்த்தி:உலர் பழங் களை விட பிரஷ் பழங்களில் ஊட்டச்சத்து மதிப்பு அதிகமாக இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களும் அப்படியே இருப்பதால் பிரஷ் பழங்கள் சதைப்பற்றுடன் காணப்படும். உலர்ந்த பழங்களை பொறுத்தவரை, நீர்ச்சத்து பிரித்தெடுக்கப்பட்டு வெப்பநிலையில் உலரவைக்கப்படுகின்றன. அதனால் சில சமயங்களில் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குறையக்கூடும்.
உலர் பழங்களுடன் ஒப்பிடும்போது பிரஷ் பழங்களே சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை. அதற்காக உலர்ந்த பழங்கள் மோசமானவை அல்ல. நீர்ச்சத்து இல்லாவிட்டாலும் ஆயுளை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை. எனினும் அன்றாடம் உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை நிவர்த்தி செய்வதில் பிரஷ் பழங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தினமும் உலர் பழங்கள் சாப்பிட்டாலும் கட்டாயம் பிரஷ் பழங்களையும் சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். சில இடங்களில் பழ சாகுபடி குறைவாக இருக்கும். குறிப்பிட்ட சீசனில் மட்டும்தான் பழங்கள் விளையும். அதனால் அங்குள்ள மக்களால் பிரஷ்ஷாக பழங்களை சாப்பிட முடியாது. அப்படிப்பட்ட சமயங்களில் உலர் பழங்களை சாப்பிடலாம். பழங்களை எந்த வடிவில் உட்கொண்டாலும் அவை உடலுக்கு நன்மை அளிக்கும்.
- அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
- தினசரி 2 பழங்களைச்சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
அத்திப்பழம் அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். அத்திப்பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6,8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும்.
சீமை அத்தி , நாட்டு அத்தி . அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.
உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப்பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
தினசரி 2 பழங்களைச்சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக்காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனை தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம். சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப்பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக்குணப்படுத்த மருந்தாகக்கொடுப்பார்கள். இலைகளை உலர வைத்துப்பவுடராக்கிக்கொள்ளுங்கள். இதைத்தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன. உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக்குணமாக்க இலைகளைத்தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
- உலர் திராட்சையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- குழந்தைகளுக்கு திராட்சை மிகவும் பிடிக்கும்.
உலர் பழங்களில் அனைவருக்கும் பிடித்தமானது உலர் திராட்சை. இவை குழந்தைகளுக்கு செய்யும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
உணவுகளிலிருந்து பெற முடியாத அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உலர்திராட்சை மூலம் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும். குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
உலர் திராட்சையில் அதிக அளவு கலோரி, குளுக்கொஸ் மற்றும் பிரக்டோஸ் கொண்டுள்ளது. இது எடையை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
குழந்தைக்கு உலர் திராட்சை கொடுப்பதால் நினைவாற்றல் மேம்படும். மூளைக்கு ஊட்டமளிக்கும். செரிமானத்தை ஊக்குவிக்கும்.
காய்ச்சலின் போது உலர்ந்த திராட்சை ஊறவைத்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.
உலர் திராட்சையை குழந்தைகளுக்கு எப்போது கொடுக்கலாம்?
குழந்தைகள் உணவை மெல்ல தொடங்கும் போது அல்லது 8 மாத காலத்துக்கு பிறகு உலர் திராட்சையை சாப்பிட கொடுக்கலாம். சிறிய குழந்தைக்கு கொடுக்கும் போது உலர் திராட்சையை ஊறவைத்து கூழ் போல் மசித்து கொடுக்கலாம்.
நாள் ஒன்றுக்கு 1 டீஸ்பூன் அளவு சாறு கொடுக்கலாம். குழந்தைக்கு உலர் திராட்சை கொடுக்கும் போது ஒவ்வாமை உண்டாகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
- உலர் பழங்களை குறைவாக உட்கொள்வதுதான் உடலுக்கும், குடலுக்கும் பாதுகாப்பானது.
- உலர் பழங்களை சாப்பிடுவதால் என்ன ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் என்று பார்ப்போம்.
உலர் பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானவைதான் என்றாலும் அதிகமாக உட்கொண்டால் ஆபத்தை ஏற்படுத்திவிடும். உலர் பழங்களை அதிகம் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் என்பது குறித்து பார்ப்போம்.
குடல் பிரச்சினை:
சாப்பிடும் உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்க வேண்டும். அதற்கேற்ப உலர் பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. குடலின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் நார்ச்சத்தின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் நார்ச்சத்து அதிகமானால் குடலுக்கு பாதிப்பு உண்டாகும். குறிப்பாக உலர்ந்த பழங்களை அதிகமாக உட்கொள்வது வாயு, வீக்கம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உலர் பழங்களை குறைவாக உட்கொள்வதுதான் உடலுக்கும், குடலுக்கும் பாதுகாப்பானது.
எடை அதிகரிப்பு:
தினமும் 250 கலோரி அளவு உலர் பழங்கள் உட்கொள்வது ஒரு மாதத்தில் ஒரு கிலோ உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுத்துவிடும். மூன்று பேரீச்சம் பழம், இரண்டு டேபிள்ஸ்பூன் புளூபெர்ரி, இரண்டு அத்திப்பழம் சாப்பிடுவது சுமார் 60 கலோரிகளை வழங்கும். அதனால் சாப்பிடும் உலர் பழங்களின் கலோரி அளவை கருத்தில் கொள்ள வேண்டும்.
பற் சிதைவு:
உலர் பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இயற்கையான சர்க்கரை இருக்கிறது. உலர்ந்த பழங்களை அதிகம் சாப்பிடும்போது சர்க்கரையும் அதிகரித்து பற்சிதைவை ஏற்படுத்திவிடும். சில உலர்பழங்கள் பல் இடுக்குகளுக்குள் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை.
அவற்றை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் பல் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். உலர்பழங்களை சாப்பிட்டதும் தண்ணீர் பருகுவது பற் சிதைவு அபாயத்தை குறைக்க உதவும். உலர்பழங்கள் போன்ற இனிப்பு வகைகளை சாப்பிட்டதும் பல் துலக்குவது அல்லது வாய் கொப்பளிப்பது பற்களில் படிந்திருக்கும் சர்க்கரையை அகற்ற உதவும்.
உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து, இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.
சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி, ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்பட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையை பின்பற்றலாம்.
இவை தவிர நம் பெருங்குடல் பகுதிகளில் உள்ள கசடுகளை வெளியேற்றுவதிலும் உலர் திராட்சை முக்கிய பங்கு வகிக்கின்றது.