search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complained"

    • ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • மகனை அடித்து கொலை செய்துவிட்டதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்த அழகுமலை மகன் சரவணன்(32). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கூலிவேலை பார்த்து வந்த சரவணனுக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் லட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

    சரவணன் மட்டும் பெருமாள்புரத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சரவணன் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருப்பூரில் உள்ள அவரது தாய் சுந்தரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தனது மகனை கொலை செய்துவிட்டனர் என தெரிவித்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். சரவணன் இறப்பில் மர்மம் இருப்பதால் முறையான விசாரணை நடத்த வேண்டும். அவரை அடித்து கொலை செய்துவிட்டனர் என தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுமுறை நாட்கள் என்பதால் சாலை ஓரம் குப்பைகள் சூழ்ந்தும் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியது.
    • இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நேரு எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை புதுப்பாளையம் வார்டு அய்யனார் நகர் பகுதியில் உள்ள சந்திரசேகர் வீதியில் கடந்த சில நாட்களாக விடுமுறை நாட்கள் என்பதால் சாலை ஓரம் குப்பைகள் சூழ்ந்தும் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நேரு எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து நேரு

    எம்.எல்.ஏ. அந்தபகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் புதுவை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.மேலும், அங்கு தேவையின்றி நிற்கும் வாகனங்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த அதிகாரி களை வலியுறுத்தினார்.

    • கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்திற்கு கணவன் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்று புகார் அளித்தார்.
    • மேலும் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னரே இறப்பு குறித்த சந்தேகம் விலகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அரச மரம் பஸ் நிறுத்தம் சென்னியப்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார் (50). லாரி டிரைவர். இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவி ராஜேஸ்வரி (45), ஒரு மகள் உள்ளார்.

    சூரியகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில் கடந்த 7 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரிவர உணவு ஏதும் சாப்பிடாமல் அடிக்கடி மது அருந்தி வந்த சூரியகுமார் சம்பவத்தன்று வீட்டில் இறந்து கிடந்தார். உடனே இறந்து கிடந்த சூரியகுமாரை அவரது உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக கோபி மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் உறவினர்களுடன் வந்த ராஜேஸ்வரி தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்திற்கு சூரியகுமார் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்று புகார் அளித்தார்.

    இதனையடுத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சூரியகுமார் உடலை பிரேதபரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ேமலும் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னரே இறப்பு குறித்த சந்தேகம் விலகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகார் அளித்துள்ளார். #ChandrababuNaidu
    புதுடெல்லி:

    ஆந்திராவில் கடந்த 11-ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டது. இதில், சுமார் 400 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. இதனால் சில பகுதிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நீடித்தது. இதேபோல் தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாகவும் சில பூத்களில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

    வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக, காலை 9.30 மணிவரை வாக்குப்பதிவு தொடங்காத இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார்.



    இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து, புகார் மனு கொடுத்தார். அதில், ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்காதது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தலின்போது பிரச்சினை செய்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். #ChandrababuNaidu
    வேலூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் மனைவி வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரத்தை நூதன முறையில் அபேஸ் செய்த மர்மநபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூரை அடுத்த காட்டுபுதூர் ஆவாரம்பாளையம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி சாரதா (வயது 64). இவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

    அதில், ‘‘எனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டதாக எனது செல்போனுக்கு கடந்த 6-ந் தேதி குறுந்தகவல் வந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ஆன்-லைன் மூலம் ரூ.12 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணத்தை எடுத்தவர்கள் குறித்த விபரம் தெரியவில்லை என்றும் கூறினார்கள்.

    எனவே எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.12 ஆயிரத்தை நூதன முறையில் அபேஸ் செய்த மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணத்தை பெற்றுத்தர வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். #tamilnews
    அமைச்சர் ஜெயக்குமாருடன் தொடர்புபடுத்தப்பட்ட பெண் மீது சூப் கடைக்காரர் போலீசில் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார். #MinisterJayakumar #AudioIssue
    சென்னை:

    தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சிந்து என்ற பெண்ணை தொடர்புப்படுத்தி சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் தகவல் பரவியது. அந்த பெண்ணிடம் அமைச்சர் ஜெயக்குமார் செல்போனில் பேசுவது போன்ற உரையாடலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே ‘அது தன்னுடைய குரல் அல்ல. ‘மார்பிங்’ செய்யப்பட்டிருக்கிறது.’ என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.



    இந்தநிலையில் அமைச்சர் ஜெயக்குமாருடன் தொடர்புபடுத்தப்பட்ட பெண் சிந்து மீது சென்னை வியாசர்பாடி முல்லை காம்ப்ளக்ஸ் 19-வது பிளாக்கில் வசிக்கும் பி.சந்தோஷ்குமார்(வயது 26) என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் சென்னை எம்.கே.பி.நகர் போலீஸ்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் மண்ணடி புது தெருவில் ‘சூப்’ கடை நடத்தி வருகிறேன். என்னுடைய கடைக்கு பிராட்வே பிரபாத் குடியிருப்பில் வசித்தும் வரும் சிந்து என்ற பெண் தினமும் வருவார். 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அவருக்கும், எனக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.

    அவர் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நானும் சிந்துவும் நெருக்கமாக பழகி வந்தோம்.

    கடந்த நவம்பர் மாதம் ஒரு நாள் திடீரென்று சிந்து என் வீட்டுக்கு வந்தார். என்னிடம், ‘எனது அம்மாவுக்கு இதயக் கோளாறு இருக்கிறது. உடனே ஆபரேசன் செய்ய வேண்டும். அதற்கு ரூ.5 லட்சம் வரை செலவு ஆகும்’ என்று கூறி அழுதார்.

    நான் என் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.3.5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் தங்கநகைகளை கொடுத்தேன். அதன்பிறகு பலமுறை சிந்துவை அழைத்தபோது, எனது போனை எடுக்கவில்லை. இது தொடர்ச்சியாக நடந்ததால், நான் அவருடைய வீட்டுக்கு சென்ற போது, சிந்துவும், அவரது தாயார் சாந்தியும், மேலும் 2 பேர் இருந்தனர்.

    நான் சிந்துவை அழைத்த போது, ‘அவருடைய தாயார் என்னை அவமானப்படுத்தினார். சிந்துவை தவறான உறவுக்கு அழைத்தாய் என்று போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன்’ என்றும் மிரட்டினார்.

    என்னை ஆட்களை வைத்து மிரட்டிய சாந்தி மற்றும் அவரது மகள் சிந்து மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என்னிடம் இருந்து பறித்துக் கொண்ட ரூ.3.5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் தங்கநகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த புகார் மனுவை இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி பெற்றுக்கொண்டு, விசாரணை நடத்தி வருகிறார். #MinisterJayakumar #AudioIssue
    முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் முன்னாள் ஆண் நண்பர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். #PrithikaYashini
    பூந்தமல்லி:

    இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டவர் பிரித்திகா யாசினி. இவர் தற்போது சென்னை சூளைமேடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    அவரது முன்னாள் ஆண் நண்பர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவதாக அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் கூறியதாவது:-



    பிரித்திகா யாசினி புகாரின் அடிப்படையில் அவரது ஆண் நண்பர் ஜனார்த்தனன் என்பவரை நேரில் அழைத்து விசாரித்தோம். ‘பேஸ்புக்’ மூலம் நட்பு ஏற்பட்டு பிரித்திகா யாசினியுடன், ஜனார்த்தனன் கடந்த சில வருட காலமாக பழகிவந்தார். அதன்பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரித்திகா யாசினி பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜனார்த்தனன், பிரித்திகா யாசினிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இனிமேல் இதுபோன்ற தொல்லைகளை சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினிக்கு கொடுக்கமாட்டேன் என்ற உத்தரவாதத்தை அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்துள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்படும்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினி புகார் அளித்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #PrithikaYashini #tamilnews
    ×