பெரியகுளத்தில் மகனை அடித்து கொன்றுவிட்டதாக தாய் பரபரப்பு புகார்

ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மகனை அடித்து கொலை செய்துவிட்டதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகில் உள்ள கீழவடகரை ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்த அழகுமலை மகன் சரவணன்(32). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கூலிவேலை பார்த்து வந்த சரவணனுக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் லட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

சரவணன் மட்டும் பெருமாள்புரத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சரவணன் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருப்பூரில் உள்ள அவரது தாய் சுந்தரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தனது மகனை கொலை செய்துவிட்டனர் என தெரிவித்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். சரவணன் இறப்பில் மர்மம் இருப்பதால் முறையான விசாரணை நடத்த வேண்டும். அவரை அடித்து கொலை செய்துவிட்டனர் என தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com