என் மலர்

  நீங்கள் தேடியது "ரெயில்வே நிர்வாகம்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2016-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டார்.
  • இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.

  சென்னை :

  சென்னை நுங்கம்பாக்கம், ரெயில் நிலையத்தில் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர் சுவாதி. இவரது பெற்றோர் சந்தானகோபாலகிருஷ்ணன், ரெங்கநாயகி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

  என் மகள் சுவாதி, பரனூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்தார். தினமும் நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூருக்கு ரெயிலில் சென்று வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி காலையில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தபோது, அவர் கொலை செய்யப்பட்டார்

  இந்த கொலை சம்பவம் தொடர்பான விவரங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், சுவாதிக்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். அந்த ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவும் இல்லை. டிக்கெட் பரிசோதகரும் இல்லை.

  அதனால் 24 வயதே ஆன மகளை இழந்த எங்களுக்கு ரெயில்வே நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கிழக்கு ரெயில்வே ஊழியரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

  இதேபோல, விபத்தில் பலியானவர், சிறையில் கொலை செய்யப்பட்டவர் என்று பல சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இந்த ஐகோர்ட்டு வட்டியுடன் இழப்பீடு வழங்கவேண்டும் என்று பல தீர்ப்புகளை அளித்துள்ளது.

  இதன்படி, என் மகள் படுகொலை செய்யப்பட்டதற்கு தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் ஒரு காரணம் என்பதால், எங்களுக்கு ரூ.3 கோடி இழப்பீடு வழங்க ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

  இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாதியின் கொலை திட்டமிட்டு நடந்தது. ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது என்று ரெயில்வே நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது.

  இதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரர் இழப்பீடு கேட்டு உரிய நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சில பயணிகளுக்கு ரெயில் பயணம் என்றால் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது.
  • இரவில், இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும்.

  சென்னை :

  வெகுதூரங்களுக்கு இரவில் பயணம் செய்ய பெரும்பாலானோர் ரெயில் பயணங்களையே விரும்புகின்றனர். அமைதியான பயணம், கழைப்பின்மை, தூக்கம் தடைபடாதது, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களே இதற்கு காரணம். ஆனால் சமீப காலமாக ஒரு சில பயணிகளுக்கு ரெயில் பயணம் என்றால் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது.

  இரவு நேரங்களில் ஒரு சில பயணிகள் இரவு வெகுநேரம் மின்விளக்குகளை எரியவிட்டு, சத்தமாக பேசி, சிரித்து அரட்டை அடிப்பது. செல்போனில் சத்தமாக பாடல்களை கேட்பது உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை சக பயணிகளுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

  ரோந்து பணியின்போது ரெயில்வேயின் 'காட்' அல்லது பராமரிப்பு ஊழியர்கள் பயணிகளிடம் வெறுப்பாக பேசுவது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தன. இதுகுறித்து பயணிகளும் ரெயில் பயணத்தின்போது தங்களுடைய இரவு தூக்கம் கலைகிறது என்று ரெயில்வே அமைச்சகத்திற்கு புகார் அளித்து வருகின்றனர்.

  இதனால் இந்திய ரெயில்வே நிர்வாகம் இரவு பயண விதிகளில் மாற்றம் செய்து உள்ளது.

  அதன்படி புதிய விதிகளை அனைத்து பயணிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முழுமையான தகவல்களை ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. புதிய விதிகளின்படி, இரவு 10 மணிக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு பயணத்தின்போது எந்த ரெயில் பயணிகளும் செல்போனில் சத்தமாக பேசவோ, உரத்த குரலில் பாடல்களை கேட்கவோ கூடாது. இரவில், இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். இதனால் சக பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கும். மீறி செயல்பட்டால் பயணிகளிடம் இருந்து பெறப்படும் புகார்களின் பேரில், ரெயில்வே நிர்வாகம் அத்தகைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

  ரெயில்களில் உள்ள சோதனை ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.), மின்சார சாதனங்கள் பராமரிப்பவர்கள் (எலக்ட்ரீஷியன்), உணவு பரிமாறும் பிரிவு ஊழியர்கள் (கேட்டரிங்) மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் இரவில் அமைதியாக வேலை செய்வார்கள். குறிப்பாக, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒற்றை பெண்களுக்கு ரெயில்வே ஊழியர்கள் உடனடி உதவி வழங்குவார்கள்.

  புதிய விதிகளின்படி, ரெயில் பயணிகளிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு தீர்வு காணப்படா விட்டால், ரெயில்வே ஊழியர்களின் பொறுப்புணர்வை சரி செய்யலாம் என்ற விதிமுறையும் உள்ளது. அனைத்து மண்டலங்களுக்கும் இந்த விதிகளை உடனடியாக அமல்படுத்துவதுடன், வரும் காலங்களில் பயணிகள் பாதிக்கப்பட்டால் ரெயில்வே ஊழியர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

  பயணிகள் நலன் கருதி, ரெயில்வே நிர்வாகம் அவ்வப்போது மாற்றங்கள் செய்வது வழக்கம். அந்தவகையில் தற்போது பயணிகளின் இரவு தூக்கம் தடைபடாமல் இருப்பதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சியில் வீட்டை காலி செய்யுமாறு கூறியதால் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்
  • பல வருட காலமாக இங்கு குடியிருக்கும் நாங்கள் மின்சாரம், சாலை வசதியை தமிழக அரசு செய்து தந்துள்ளது

  திருச்சி:

  திருச்சி முடுக்குப்பட்டி பகுதியில் சுமார் 120 குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் பல வருடங்காலமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென்று திருச்சி ரெயில்வே நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் நோட்டீஸ் ஒன்றை ஒட்டியுள்ளது.

  அந்த நோட்டீஸில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பதால் அதனை காலி செய்யுமாறு குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் நோட்டீஸ் ஒட்ட வந்த ெரயில்வே நிர்வாகத்திடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  இதையடுத்து ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து இன்று முடுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறும் பொழுது கடந்த 1999-ம் ஆண்டு முடுக்கு பட்டியில் சுமார் 750 குடும்பங்கள் வசித்து வந்தன.

  அப்பொழுது இந்த இடம் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று கூறி இங்கு உள்ளவர்களை காலி செய்ய வைத்து மணிகண்டன் நாகமங்கலத்தில் வீடு ஒதுக்கி கொடுத்தனர். அதன்பிறகு கடந்த பல வருட காலமாக பொதுமக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

  இந்த நிலையில் மீண்டும் ரெயில்வே நிர்வாகம் அந்த வீடுகளை காலி செய்யுமாறு கூறி வந்தனர். இதற்கிடையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் உரிமை சட்டத்தில் இந்த இடம் யாருடையது என்று கேட்டபோது இது தமிழக அரசு இடம் என்று கூறியிருந்தனர். இதிலிருந்து இந்த இடம் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது கிடையாது என்று தெளிவாகிறது.

  இதையடுத்து நாங்கள் தொடர்ந்து இங்கேயே வசித்து வருகிறோம். இந்த நிலையில் திடீரென்று ரெயில்வே நிர்வாகத்தினர் வீட்டை காலி செய்யும் படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். பல வருட காலமாக இங்கு குடியிருக்கும் நாங்கள் மின்சாரம், சாலை வசதியை தமிழக அரசு செய்து தந்துள்ளது.

  இந்த விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து எங்களுக்கு இந்த இடத்தில் தொடர்ந்து வசிக்க பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டாலும், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ரெயில்கள் நிற்பதில்லை.
  • உழவன் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் மகால் சூப்பர் பாஸ்ட் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக சிதம்பரம் ரெயில் நிலையத்தில் தான் நிற்கிறது.

  கடலூர்:

  போக்குவரத்தில் மிகவும் இன்றியமையாததாக இருப்பது ரெயில் போக்குவரத்து. ரெயில் பயணத்தின் போதே பொதுமக்கள், தாங்கள் பாதுகாப்பாக செல்வதை உணருகின்றனர். நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள் ரெயிலில் செல்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால் தான் ரெயில்களில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.

  அந்த வகையில் கொரோனா ஊரடங்குக்கு முன்பு கடலூர் வழியாக இயக்கப்பட்ட 11 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட அனைத்து ரெயில்களிலும் அதிகளவில் பொதுமக்கள் கூட்டம் இருந்தது. இதனால் கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பயன் அடைந்து வந்தனர்.

  இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டாலும், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ரெயில்கள் நிற்பதில்லை. குறிப்பாக தினசரி இயக்கப்படும் காரைக்கால் எக்ஸ்பிரஸ் கடலூர் மாவட்டத்தில் உள்ள எந்தவொரு ரெயில் நிலையத்திலும் நிற்பதில்லை. விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரெயில் கடலூர் மாவட்டத்தை கடந்து 122 கி.மீட்டர் தூரம் சென்று மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் தான் நிற்கிறது. இதனால் வேளாங்கண்ணி, காரைக்கால், நாகப்பட்டிணம் செல்லக்கூடிய கடலூர் மாவட்ட மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

  மேலும் உழவன் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் மகால் சூப்பர் பாஸ்ட் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக சிதம்பரம் ரெயில் நிலையத்தில் தான் நிற்கிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் கடலூர் துறைமுகம் ரெயில் நிலையங்களில் நிற்பதில்லை. இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து கடலூர் வழியாக புதுச்சேரிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நிற்பதில்லை.

  மாவட்டத்தின் தலைநகரிலேயே பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்காமல் செல்வதால், பொதுமக்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் வேறு வழியின்றி அதிக செலவு செய்து பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

  இதுகுறித்து கடலூர் மக்கள் கூறுகையில், மாவட்ட தலைநகரான கடலூரில் 2 ரெயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் இந்த ரெயில் நிலையங்களில் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்பதில்லை. கடலூரை ரெயில்வே நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. இதனால் ரெயில் பயணங்களை மேற்கொள்ளும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே அனைத்து ரெயில்களும் கடலூரில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

  ×