என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரெயில்களில் சக பயணிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை: ரெயில்வே நிர்வாகம் புதிய உத்தரவு
  X

  ரெயில்களில் சக பயணிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை: ரெயில்வே நிர்வாகம் புதிய உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சில பயணிகளுக்கு ரெயில் பயணம் என்றால் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது.
  • இரவில், இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும்.

  சென்னை :

  வெகுதூரங்களுக்கு இரவில் பயணம் செய்ய பெரும்பாலானோர் ரெயில் பயணங்களையே விரும்புகின்றனர். அமைதியான பயணம், கழைப்பின்மை, தூக்கம் தடைபடாதது, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களே இதற்கு காரணம். ஆனால் சமீப காலமாக ஒரு சில பயணிகளுக்கு ரெயில் பயணம் என்றால் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது.

  இரவு நேரங்களில் ஒரு சில பயணிகள் இரவு வெகுநேரம் மின்விளக்குகளை எரியவிட்டு, சத்தமாக பேசி, சிரித்து அரட்டை அடிப்பது. செல்போனில் சத்தமாக பாடல்களை கேட்பது உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை சக பயணிகளுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

  ரோந்து பணியின்போது ரெயில்வேயின் 'காட்' அல்லது பராமரிப்பு ஊழியர்கள் பயணிகளிடம் வெறுப்பாக பேசுவது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தன. இதுகுறித்து பயணிகளும் ரெயில் பயணத்தின்போது தங்களுடைய இரவு தூக்கம் கலைகிறது என்று ரெயில்வே அமைச்சகத்திற்கு புகார் அளித்து வருகின்றனர்.

  இதனால் இந்திய ரெயில்வே நிர்வாகம் இரவு பயண விதிகளில் மாற்றம் செய்து உள்ளது.

  அதன்படி புதிய விதிகளை அனைத்து பயணிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முழுமையான தகவல்களை ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. புதிய விதிகளின்படி, இரவு 10 மணிக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு பயணத்தின்போது எந்த ரெயில் பயணிகளும் செல்போனில் சத்தமாக பேசவோ, உரத்த குரலில் பாடல்களை கேட்கவோ கூடாது. இரவில், இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். இதனால் சக பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கும். மீறி செயல்பட்டால் பயணிகளிடம் இருந்து பெறப்படும் புகார்களின் பேரில், ரெயில்வே நிர்வாகம் அத்தகைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

  ரெயில்களில் உள்ள சோதனை ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.), மின்சார சாதனங்கள் பராமரிப்பவர்கள் (எலக்ட்ரீஷியன்), உணவு பரிமாறும் பிரிவு ஊழியர்கள் (கேட்டரிங்) மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் இரவில் அமைதியாக வேலை செய்வார்கள். குறிப்பாக, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒற்றை பெண்களுக்கு ரெயில்வே ஊழியர்கள் உடனடி உதவி வழங்குவார்கள்.

  புதிய விதிகளின்படி, ரெயில் பயணிகளிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு தீர்வு காணப்படா விட்டால், ரெயில்வே ஊழியர்களின் பொறுப்புணர்வை சரி செய்யலாம் என்ற விதிமுறையும் உள்ளது. அனைத்து மண்டலங்களுக்கும் இந்த விதிகளை உடனடியாக அமல்படுத்துவதுடன், வரும் காலங்களில் பயணிகள் பாதிக்கப்பட்டால் ரெயில்வே ஊழியர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

  பயணிகள் நலன் கருதி, ரெயில்வே நிர்வாகம் அவ்வப்போது மாற்றங்கள் செய்வது வழக்கம். அந்தவகையில் தற்போது பயணிகளின் இரவு தூக்கம் தடைபடாமல் இருப்பதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

  Next Story
  ×