என் மலர்
நீங்கள் தேடியது "பஸ்"
- மதுரையில் பஸ்சுக்காக பயணிகள் நீண்டநேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.
- தனியார் டவுன் பஸ்களை இயக்க கோரி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை
மதுரையில் அரசு போக்குவரத்துக்கழக டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. பிற நகரங்கள் போல் தனியார் டவுன் பஸ்கள் இயக்க மதுரையில் அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் மதுரை சுற்றுவட்டார மக்களும், மதுரை நகர மக்களும், மதுரைக்கு வரும் மக்களும் அரசு டவுன் பஸ்களையே நம்பி உள்ளனர்.
அரசு டவுன் பஸ்களில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள்.
குறிப்பாக பரவை, வாடிப்பட்டி, அண்ணா பஸ் நிலையம், பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
ஒரே வழித்தடத்தில் குறைந்த அளவு பயணிகளுடன் இருக்கைகள் காலியாக அதிக அளவில் தொடந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
எனவே பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் மதுரையில் தனியார் டவுன் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராஜின் என்பவர் பஸ்சை போக விடாமல் தடுத்து நிறுத்தி ஆபாசமாக பேசி உள்ளார்.
- அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்தனர்
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே தேங்காய்பட்டணம் - மார்த்தாண்டம் சாலையில் அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. உதச்சிக் கோட்டை சந்திப்பு பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு, பஸ் திரும்பும் போது, அதே பகுதி அப்பட்டுவிளை என்ற இடத்தை சேர்ந்த ராஜு மகன் ராஜின் (வயது 25) என்பவர் பஸ்சை போக விடாமல் தடுத்து நிறுத்தி ஆபாசமாக பேசி உள்ளார்.
மேலும் பஸ் மீது கல் வீசி தாக்கியதில் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இது தொடர்பாக பஸ் டிரைவர் நிக்சன் (49) என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.
புதுக்கடை போலீசார் விசாரித்து, அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்தனர்.
- பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்தது.
- தற்பொழுது பஸ்கள் பரிசாத்த முறையில் இயக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிரதான சாலைகளான கோட்டார் சாலையில் தற்பொழுது பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.
சவேரியார் ஆலயம் முதல் செட்டிகுளம் வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றதையடுத்து அந்த வழியாக சென்ற பஸ்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது.
இதனால் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து குளச்சல், களியக்காவிளை, பார்வதிபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் சவேரியார் ஆலயத்தில் இருந்து ஈத்தாமொழி சந்திப்பு, பீச் ரோடு சந்திப்பு வழியாக மீண்டும் செட்டிகுளத்திற்கு வந்து சென்று வந்தது.
கடந்த சில நாட்களாக செட்டிக்குளம்-சவேரியார் ஆலய சாலையில் ஓரளவு வேலைகள் முடிந்ததையடுத்து இரு சக்கர வாகனங்கள் அந்த வழியாக சென்று வந்தது.
தற்பொழுது இந்த சாைலயில் பணிகள் நிறைவடைந்து உள்ளது. சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் மட்டும் பணிகள் முடிக்க வேண்டியது உள்ளது. இருப்பினும் இன்று பரிசாத்த முறையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து குளச்சல், களியக்காவிளை, பார்வதிபுரத்திற்கு சென்ற பஸ்கள் அனைத்தும் சவேரியார் ஆலய சந்திப்பிலிருந்து நேராக செட்டிகுளத்திற்கு இயக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், சவேரியார் ஆலய முதல் செட்டிகுளம் வரை உள்ள சாலையில் பணிகள் கிட்டத்தட்ட முடிக்கப்பட்டு விட்டது. சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் மட்டும் சில வேலைகள் முடிக்க வேண்டியது உள்ளது.
தற்பொழுது பஸ்கள் பரிசாத்த முறையில் இயக்கப்பட்டு வருகிறது. சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படும் போது மீண்டும் பஸ்கள் மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- பெண் பயணி ஒருவர் கழுத்தில் கிடந்த நகையை பெண்ணொருவர் பறிக்க முயன்றார்
- பெண்ணை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
நாகர்கோவில் :
ராஜாக்கமங்கலத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. வேப்பமூடு பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது பெண் பயணி ஒருவர் கழுத்தில் கிடந்த நகையை பெண்ணொருவர் பறிக்க முயன்றார். இதனால் உஷாரான பெண் கூச்சலிட்டார். இதையடுத்து டிரைவர் பஸ்சை நடுவழியில் நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகள் நகையை பறிக்க முயன்ற பெண்ணை மடக்கி பிடித்தனர்.
பின்னர் இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் பிடியில் இருந்த பெண்ணை மீட்டனர்.மீட்கப்பட்ட பெண்ணை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்ட பெண் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிடிப்பட்ட பெண்ணுடன் வேறு நபர்கள் யாராவது வந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஓடும் பஸ்ஸில் பட்டப்பகலில் நகை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டிரைவர் கிரீசன் தம்பி தலைமறைவு
- போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் கிரீசன் தம்பியை சஸ்பெண்ட்
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே தாழக்குடியில் இருந்து நாகர்கோவில் வழியாக தேரூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 26-ந்தேதி மாலை 3 மணிக்கு தாழக்குடியிலிருந்து தேரூருக்கு பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கிரீசன் தம்பி என்பவர் ஓட்டினார். கண்டக்டராக தாழக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் இருந்தார்.
புத்தேரி மேம்பாலம் அருகே வந்து கொண்டி ருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் இருந்த 35 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து டிரைவர் கிரீசன் தம்பி தலைமறைவானார்.
விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பஸ் டிரைவர் கிரீசன் தம்பி மீது அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பஸ்சை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பஸ் விபத்தில் சிக்கியதையடுத்து டிரைவர் கிரீசன் தம்பி மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் கிரீசன் தம்பியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்
- சுப முகூர்த்த தினம் என்பதால் அனைத்து பஸ்களிலும் கூட்டம்
- ஒரு முதியவர், முன் இருக்கையில் இருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது .
இன்று காலையில் பஸ் நிலையத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. சுப முகூர்த்த தினம் என்பதால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து கொல்லங்கோடு செல்வத ற்காக அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.பஸ்ஸில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.அதில் ஒரு முதியவர், முன் இருக்கையில் இருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
பஸ் செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பொறுமை இழந்த பெண் ஆத்திரத்தில் தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி முதியவரை சரமாரியாக தாக்கினார்.
இதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பஸ் கண்டக்டர் அந்த முதியவரை எச்சரித்தார்.பின்னர் முதியவர் பஸ்சின் பின் இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார்.
பஸ்சில் எதுவும் நடக்கா தது போல் முதியவர் பின் இருக்கையில் சென்று அமர்ந்து இருந்ததைப் பார்த்த சக பயணிகள் அவரை வசை பாடினார்கள்.
- பஸ்ஸில் இருந்த 35 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்
- ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஸ் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
நாகர்கோவில் :
பூதப்பாண்டி அருகே தாழக்குடியிலிருந்து இறச்ச குளம், புத்தேரி, நாகர்கோவில் வழியாக தேரூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.
நேற்று மதியம் 3 மணியளவில் தாழக்குடியில் இருந்து தேரூருக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை மார்த்தாண்டத்தை சேர்ந்த கீரிசன்தம்பி ஓட்டினார்.
கண்டக்டராக தாழக்குடியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (வயது43) என்பவர் இருந்தார். பஸ்சில் சுமார் 45 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் புத்தேரியை கடந்து ரயில்வே மேம்பாலத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
திடீரென ரோட்டோரத்தில் இருந்த சுமார் 25 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. அப்போது இரண்டு குட்டி காரணம் அடித்து பஸ் கவிழ்ந்ததால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். ஒருவர்மீது ஒருவர் மோதிக்கொண்டனர்.
பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. இதையடுத்து பஸ்ஸில் இருந்த 35 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.இதைப் பார்த்த பொதுமக்கள் ஏராளமா னோர் அந்த பகுதியில் திரண்டனர். பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அங்கு வந்தனர். எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோரும் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா ர்கள். விபத்து குறித்து புத்தேரி ருக்குமணி நகரைச் சேர்ந்த வீரலெட்சுமி (45) என்பவர் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவர் கீரிசன்தம்பி மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிவேகமாகவும் அஜாக்கி ரதையாகவும் ஓட்டி வந்த தாக வழக்கு பதிவு செய்ய ப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கீரிசன்தம்பி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
விபத்தில் சிக்கிய பஸ்சை நேற்று இரவு கிரேன் மூலமாக மீட்கும் பணி நடந்தது. இதையடுத்து அந்த வழியாகச் சென்ற பஸ்கள் அனைத்தும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டிருந்தது.
அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்களும் திரண்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஸ் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
கன்னியாகுமரி :
குளச்சலில் இருந்து திருவட்டாறு வழியாக பேச்சுபாறைக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது இந்த பஸ்சில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் பொதுமக்கள் பலர் இருந்தனர்.
இந்த பஸ் திருவட்டார் அடுத்த புத்தன்கடை சந்திப்பில் பயணிகளை இறக்கி கொண்டிருந்தனர். அப்போது பஸ்சின் பின்னால் திருவட்டரில் இருந்து குலசேகரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
இதன் பின்னால் அதிக பாரத்துடன் டாரஸ் லாரி வந்து கொண்டிருந்தது அரசு பஸ்சை இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரும் டாரஸ் லாரியும் ஒரே நேரத்தில் முந்திச் செல்ல முயன்றனர். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பஸ் மற்றும் டாரஸ் லாரிக்கு இடையில் சிக்கிக் கொண்டார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்தில் அவரு டைய இருசக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஓடி வந்து அந்த வாலிபரை மீட்டு குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவரை விசாரித்தபோது அவர் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஸ்டீபன் (வயது 40) என்பது தெரிய வந்தது. உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
காலை மாலை வேளைகளில் இதே மாதிரி அதிக பாரத்துடன் டாரஸ் லாரிகளை அனும திக்கக்கூடாது என்று அந்த பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
- அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பஸ் முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பக நகர் சேர்ந்தவர் ரமேஷ் (48).
இவர் திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் அரசு பஸ் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கப்படை கிராமத்திற்கு அரசு பஸ்சை ஓட்டிவந்தார்.
அப்போது பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் திரும்பும்போது செங்கப்படையை சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் அன்புச்செல்வன்(25) பஸ் முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அன்புச்செல்வன் தன்னை தாக்கியதாக டிரைவர் ரமேஷ் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் அன்புச்செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு முறையான பணி வழங்கப்படவில்லை என்று புகார்
- ஒரு வார காலத்திற்குள் பிரச்சினைக்கு சுமுக முடிவு எடுக்கப்படும் என்று உறுதி
நாகர்கோவில்:
நாகர்கோவில் ராணி தோட்டத்தில் 3 டொப்போக்கள் உள்ளது. இங்கு இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ராணி தோட்டம் டொப்போ-3ல் இருந்து இயக்கப்படும் பஸ்களில் சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு முறையான பணி வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக தொழிற்சங்கத்தின் அதிகாரிகளை சந்தித்து தெரிவித்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் இன்று காலை ராணி தோட்டம் டொப்போ-3ல் இருந்து வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்ற பஸ்சை தடுத்து நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு முறையான பணி வழங்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து டொப்போ அதிகாரிகளும் தொ.மு.ச நிர்வாகிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இன்னும் ஒரு வார காலத்திற்குள் பிரச்சினைக்கு சுமுக முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் ராணி தோட்டம் டொப்போ முன்பு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அரசு சிறப்பு பஸ்களை இயக்கினால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
- தினமும் நூற்றுக்கணக்கானோர் தரிசனம் செய்யச் சொல்கின்றனர் .
உடுமலை :
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவுக்கு உட்பட்ட கணக்கம்பட்டி கிராமத்தில் அழுக்கு மூட்டை சித்தர் சமாதி உள்ளது. இங்கு அவரது பக்தர்கள் ஆலயம் அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் .இந்த ஆலயத்திற்கு உடுமலை பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகி குப்புசாமி திருப்பூர் மாவட்ட அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கணக்கம்பட்டி மூட்டை சுவாமி ஜீவசமாதி அடைந்த இடத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் தரிசனம் செய்யச் சொல்கின்றனர் .போதிய பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் கூடுதல் தொகையை செலவிட நேர்கிறது.
மேலும் செஞ்சேரி புத்தூர், குடிமங்கலம் ,தளி, மூங்கில்தொழுவு, முக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் உடுமலை வந்து பஸ் மூலம் பழனிக்கு செல்கின்றனர் .பின்னர் அங்கிருந்து மற்றொரு பஸ் மூலம் செல்ல வேண்டியுள்ளது .அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பஸ் கிடைக்கும். இந்தக் கோயிலுக்குவிசேஷ நாட்களில் அரசு சிறப்பு பஸ்களை இயக்கினால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அதில் கூறியுள்ளார்.