என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை விமான நிலையம்"
- சார்ஜாவுக்கு செல்ல வந்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.
- வாலிபரிடமிருந்து ரூ.34 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வௌிநாட்டுக்கு விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சார்ஜாவுக்கு செல்ல வந்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த ஆடைகளுக்குள் கட்டுக்கட்டாக சவுதி ரியால்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.34 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக வாலிபரை கைது செய்து, பிடிபட்டது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.
- சந்திரன் ஏமன் நாட்டிற்கு சென்றிருந்ததால், குடியுரிமை அதிகாரிகள் அவரின் பயணத்தை ரத்து செய்தனர்.
- குடியுரிமை அதிகாரிகள், சந்திரனை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் செல்லும், விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது வேலூரைச் சேர்ந்த சந்திரன் (50) என்பவரின் பாஸ்போர்ட், ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவர் ஏற்கனவே 2017-ம் ஆண்டில், இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்த ஏமன் நாட்டுக்கு சென்று, 6 மாதங்கள் அங்கு தங்கி இருந்தது தெரிய வந்தது.
இந்திய அரசு ஏமன், லிபியா ஆகிய நாடுகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் யாரும் செல்லக்கூடாது என்ற தடையை, கடந்த 2014-ம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது. அந்த தடையை மீறி செல்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அதையும் மீறி சந்திரன் ஏமன் நாட்டிற்கு சென்றிருந்ததால், குடியுரிமை அதிகாரிகள் சந்திரனின் பயணத்தை ரத்து செய்தனர்.
அவரிடம் மேலும் கியூ பிராஞ்ச் போலீசாரும், மத்திய உளவு பிரிவினரும் தீவிர விசாரணை நடத்தினர். தற்போதும் இவர் ஓமன் நாட்டிற்கு சென்று விட்டு, அங்கிருந்து தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு செல்வதற்காக திட்டம் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், சந்திரனை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து, தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்றது தொடர்பாக பாஸ்போா்ட் விதிகளின்படி வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரண்டு பயணிகளிடம் சுங்கத்துறையினர் தீவிர சோதனை.
- உடல் மற்றும் உடைமைகளில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்
சார்ஜாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த, யூசுப் அலி சையது மற்றும் திருச்சியைச் சேர்ந்த சதாம் உசேன் ஆகியோர், கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, இரண்டு பயணிகளையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் வழிமறித்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது அவர்களது உடல் மற்றும் உடைமைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.1.43 கோடி மதிப்புள்ள தங்கம், மின்னணு சாதனங்கள் மற்றும் குங்குமப்பூ பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இந்த பயணிகள் இருவரும் கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை கூடுதல் ஆணையர் வி. பழனியாண்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- விமானத்தில் பயணம் செய்த 11 பேர் கொண்ட குழு ஆகிய 13 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், மலேசியாவில் இருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அனிபா (வயது 32), தாய்லாந்தில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆசிக் (35), இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 11 பேர் கொண்ட குழு ஆகிய 13 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது 13 பேரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 265 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த தமிழகத்தை சேர்ந்த யாசர்(30) என்பவரை சோதித்ததில் அவரிடமிருந்து ரூ.50 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 90 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். ரூ.1 கோடியே 54 லட்சம் தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் 14 பேரையும் கைது செய்து தங்க கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்தபோது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் சிங்(47) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
- உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் விமானம் இன்று அதிகாலை புறப்படத் தயாராக இருந்தது. விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்தபோது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் சிங்(47) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
விமான நிலைய மருத்துவ குழுவினர் அவருக்கு முதல் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தினர். இதையடுத்து அவரை விமானத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திலீப் குமார் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
- இலங்கையை சேர்ந்த பெண்ணை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.
- ரூ.10 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த பெண்ணை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், ஆடைகளுக்குள் கட்டுக்கட்டாக சவுதி ரியால்கள் மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அது ஹவாலா பணமா? என இலங்கை பெண்ணிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
- பெண் பயணி ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் தனியாக விசாரணை நடத்தி சோதனையிட்டனர்.
- அவருடைய சூட்கேஸ் மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பெண் பயணி ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் தனியாக விசாரணை நடத்தி சோதனையிட்டனர்.
அவருடைய சூட்கேஸ் மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.1 கோடி 59 லட்சம் மதிப்புடைய 3.42 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவரிடம் தங்க கட்டிகளை கொடுத்தது யார்? அதனை சென்னை விமான நிலையத்தில் வாங்க வந்தவர் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் இருந்து டெல்லி மும்பை, பெங்களூரு, மதுரை போன்ற நகரங்களுக்கு வழக்கமாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதை தவிர்த்து ரெயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
- விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிபொருள் விலை 16.3 சதவீதம் மீண்டும் உயர்ந்து இருக்கிறது.
ஆலந்தூர்:
கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து 2 வருடங்களுக்கு பின்பு சென்னை விமான நிலையத்தில் மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக உள்நாடு மற்றும் உள் மாவட்ட பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டணம் தற்போது உயர்ந்து உள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
சென்னையில் இருந்து மதுரை செல்ல விமான கட்டணம் ரூ. 5,500-ல் இருந்து 7,500 ஆக உயர்ந்து உள்ளது. அதேபோல் டெல்லிக்கு ரூ.9,500- ரூ.10,000, திருச்சிக்கு ரூ.3,500- ரூ.5000, கோவைக்கு ரூ.5,500- ரூ.6000, ஐதராபாத்துக்கு ரூ.6000-ரூ.6500, மும்பைக்கு ரூ.8600-ரூ.9000, பெங்களூருக்கு ரூ.5500-ரூ.6000 ஆக கட்டணம் அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து விமான டிக்கெட் ஏஜெண்ட்டுகள் கூறும்போது, இந்த அளவுக்கு விமான கட்டணம் உயர்வுக்கு விமானத்தின் எரிபொருள் விலை உயர்ந்தது தான் காரணம். இதனால் நடுத்தர மக்கள் விமான பயணத்தை தவிர்ப்பது அதிகமாகி வருகிறது.
நடுத்தர வர்த்தக பயணிகள் விமான பயண கட்டணத்தை பற்றி இப்போது பயப்படுகிறார்கள். அத்தியாவசியமற்ற பயணங்களை அவர்கள் குறைத்து கொள்கிறார்கள்.
அதுமட்டுமின்றி பயணத்தை மிச்சப்படுத்த பயணம் செய்வதற்கு 4 முதல் 5 வாரங்களுக்கு முன்பாகவே விமான டிக்கெட்டை புக் செய்கிறார்கள. அவசரமாக விமான பயணத்தை மேற்கொள்வோர்களுக்கு விமான கட்டணம் அதிகரித்து வருகிறது.
சென்னையில் இருந்து டெல்லி மும்பை, பெங்களூரு, மதுரை போன்ற நகரங்களுக்கு வழக்கமாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதை தவிர்த்து ரெயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக விமான டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிபொருள் விலை 16.3 சதவீதம் மீண்டும் உயர்ந்து இருக்கிறது என்றனர்.
கோவையில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 35 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் காணப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சூட்கேஸை பரிசோதனை செய்தபோது அதில் 14 தங்க கட்டிகள் இருந்தன. அதன் எடை 1.6 கிலோ ஆகும். அதன் மதிப்பு சுமார் ரூ.52.5 லட்சம்.
விமானத்தின் கழிவறையில் கவரில் தங்க கட்டிகள் இருந்ததாகவும் அதை தனது சூட்கேசில் வைத்து எடுத்து வந்ததாகவும் அந்த பயணி தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
திருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்கு அனைத்து விமான நிலைய ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து இன்று இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் சென்னை விமான நிலையத்திலும் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்கள் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் 1-வது வருகை நுழைவு வாயில் அருகே தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். வருகிற புதன்கிழமை வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
விமான நிலைய ஊழியர்களின் போராட்டத்தால் விமான சேவை மற்றும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பணிகள் பாதிக்காத வகையில் ஊழியர்கள் பகுதியாக வந்துபோராட்டத்தை தொடர்ந்து உள்ளனர். #chennaiAirport