என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா"

    • ஜாவா மாகாணத்தின் சிசருவா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • நிலச்சரிவில் 80 பேர் மாயமானதாக கூறப்படுகிறது

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சிசருவா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அப்பகுதியில் கடும் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும், நிலச்சரிவில் 80 பேர் மாயமானதாக கூறப்படுவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது 

    • மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
    • தொடர் தேடுதலுக்கு பிறகு விமானம் புலுசராங் மலையில் மோதி விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு கண்காணிப்பு பணிக்காக கடந்த சனிக்கிழமை சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 10 பேர் பயணம் செய்தனர்.

    தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டது.

    இந்நிலையில், தொடர் தேடுதலுக்கு பிறகு விமானம் புலுசராங் மலையில் மோதி விபத்தில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதன்பின் விமானத்தில் இருந்த 10 பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து, விமான விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

    • மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
    • மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு நேற்று மதியம் சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 11 பேர் பயணம் செய்தனர்.

    இந்நிலையில், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கி இருக்கலாம் எனவும், அதில் பயணித்த அனைவரும் உயி இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • Grok AI செயலியை முழுமையாகத் தடை செய்த முதல் நாடு.
    • ஏஐ செயல்கள் மனித உரிமை மீறல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.

    எலோன் மஸ்க்கின் Grok AI ChatBot இந்தோனேசியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.இந்தச் செயலி மூலம் ஆபாசமான மற்றும் தவறான (Deepfake) புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, இந்தோனேசியாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Grok AI மூலம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாகச் சித்திரிக்க முடியும் என்ற புகார்கள் சமீபகாலமாக உலகளவில் அதிகரித்தன.

    இதுதொடர்பாக, இந்தோனேசியாவின் தகவல் மற்றும் டிஜிட்டல் விவகாரங்கள் துறை அமைச்சர் மியுத்யா ஹபீத் (Meutya Hafid), "இந்த வகையான செயல்கள் மனித உரிமை மீறல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்" என்று கூறி இந்தத் தடையை அறிவித்தார்.

    Grok AI செயலியை முழுமையாகத் தடை செய்த முதல் நாடு இந்தோனேசியா என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல முதியவர்கள் தப்பிக்க முடியாமல் தங்கள் அறைகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
    • தலைநகர் ஜகார்டாவில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகினர்.

    இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    அங்கு, வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோ நகரில் 'வெர்தா தாமய்' என்ற முதியோர் இல்லம் இயங்கி வந்தது.

    நேற்று இரவு சுமார் 8:30 மணியளவில் முதியோர் இல்லத்தில் திடீரென தீப்பிடித்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான முதியவர்கள் தங்கள் அறைகளில் உறங்கிக் கொண்டிருந்ததால், தீ பரவியதை அவர்களால் உணர முடியவில்லை. பல முதியவர்கள் தப்பிக்க முடியாமல் தங்கள் அறைகளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கிருந்த சுமார் 30 பேரில் 12 முதல் 15 பேர் வரை பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் 16 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அங்கிருந்து மீட்கப்பட்டவர்கள் தற்போது அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கடந்த டிசம்பர் 9 அன்று தலைநகர் ஜகார்டாவில் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியான நிலையில், தற்போது இந்த முதியோர் இல்ல விபத்து இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • கம்போடியா அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பிரியந்தனா ஒரு ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    பாலி:

    இந்தோனேசியா, கம்போடியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பாலி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற கம்போடியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தோனேசிய அணி 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கம்போடியா அணி 15 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

    16 வது ஓவரை கெடே பிரியந்தனா வீசினார். அந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். 4 வது பந்தில் விக்கெட் வீழ்த்தவில்லை. 5வது மற்றும் 6வது பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தோனேசியா அணியை வெற்றி பெற செய்தார்.

    கெடே பிரியந்தனா ஒரு ஓவரில் ஒரு ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை கெடே பிரியந்தனா படைத்தார்.

    ஏற்கனவே, நட்சத்திர பந்துவீச்சாளர்களான மலிங்கா , ரஷீத் கான் ஆகியோர் ஒரு ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தியிருந்த நிலையில், கெடே பிரியந்தனா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    • ஜகார்த்தாவில் 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இதில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில் 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இன்று அந்த அலுவலக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    7 மாடி கட்டிடத்தில் தீ மளமளவென பரவியதால் வானத்தில் அடர்ந்த கரும்புகை எழுந்தது. இந்த கரும்புகை எழும்பியதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் சென்யார் புயல் உருவானது
    • 410 பேர் மயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவான சென்யார் புயல் தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் கரையை கடந்து காணாமலையை கொடுத்தது.

    இந்தோனேசியாவில் 'சென்யார்' புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. மேலும்,410 பேர் மயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    கடந்த வாரத்தில் இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் முழுவதும் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளில் 1,790 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின.
    • சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவானது. 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஆச்சே மாகாணத்தில் மையம் கொண்டிருந்தது.

    நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    • தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் பிரபல மசூதி அமைந்துள்ளது.
    • மசூதியிலும் அருகே செயல்பட்டு கொண்டிருந்த பள்ளியிலும் எதிரொலித்தது.

    இந்தோனேசியாவில் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 மாணவர்கள் உள்பட 54 பேர் காயம் அடைந்தனர்.

    இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள பிரபல மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர்.

     மதியம் அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் திடீரென அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன. இதன் பாதிப்பு மசூதியிலும் பள்ளியிலும் எதிரொலித்தது.

    தகவலறிந்து போலீசார், மீட்புப்படையினர் உடனடியாக சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர்.

    இந்த சம்பவத்தில் 20 மாணவர்கள் உள்பட மொத்தம் 54 பேர் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    முதல்கட்ட விசாரணையில் பள்ளிவாசலின் ஒலிபெருக்கி அருகில் இருந்து தான் குண்டுகள் வெடித்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்து சில பொம்பை துப்பாக்கிகளை கைப்பற்றி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோர்ஜோ நகரில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ம் தேதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    இதில் 99 மாணவர்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 14 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் மேலும் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், பள்ளி இடிந்த விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன என தெரிவித்தனர்.

    • இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோர்ஜோ நகரில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த 29-ந்தேதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    இதில் 99 மாணவர்களை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 65 மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 14 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். சிலர் உயிருடன் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் மேலும் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 26 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இன்று காலை நிலவரப்படி 37 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 104 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர் என்றனர்.

    ×