என் மலர்
வழிபாடு
- சீதை, தனக்கு நேரும் துன்பத்திற்கு எல்லாம், தான் செய்த முன்வினைப் பயன்தான் என்று நம்பினார்.
- நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.
ஒருவர் நமக்கு துன்பம் விளைவித்தால், அவர்களை நாம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு நாம் செய்த முன்வினைப் பயனும் கூட காரணமாக இருக்கலாம். ஆகையால் நமக்கு வந்த துன்பத்தில் இருந்து விடுபடுவதற்குத்தான் நாம் முயற்சிக்க வேண்டுமே தவிர, நமக்கு துன்பம் விளைவித்தவர்களின் மீது கோபம் கொண்டு அவர்களை பழி வாங்க நினைக்கக்கூடாது.
ராமாயண இதிகாசத்தில், அனுமனிடம் இதுபற்றி சீதைபிராட்டி சொன்ன விஷயத்தை இங்கே பார்க்கலாம்..
ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதை, அசோகவனத்தில் பலம் பொருந்திய பல அரக்கிகளின் நடுவே கடும் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்த அரக்கிகள், ராவணனின் விருப்பத்திற்கு அடிபணியும்படி சீதையை தினமும் துன்புறுத்தி வந்தனர். ஆனால் அதற்காக சீதை, அந்த அரக்கிகள் மீது கோபம் கொள்ளவில்லை. தனக்கு நேரும் துன்பத்திற்கு எல்லாம், தான் செய்த முன்வினைப் பயன்தான் என்று நம்பினார்.
சீதையை திருப்பி அனுப்பும்படி, ராமபிரான் பல முறை ராவணனுக்கு தூது அனுப்பியும் அவன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் வேறு வழியின்றி யுத்தம் தொடங்கியது. அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். அந்தச் செய்தியை, அசோகவனத்தில் இருந்த சீதையிடம் வந்து கூறினார், அனுமன்.
அதைக்கேட்டு மகிழ்ச்சியுற்ற சீதை, "நான் முன்பு ஒரு முறை உயிர் துறக்க நினைத்தபோது, நீதான் வந்து என்னைக் காப்பாற்றி, ராமர் விரைவில் என்னை மீட்பார் என்று கூறினாய். அப்போது உனக்கு சிரஞ்சீவியாக இருக்கும் வரம் அளித்தேன். இப்போது ராமரின் வெற்றிச் செய்தியை கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று கூறினார்.
அதற்கு அனுமன், "தாயே எனக்கு வரம் எதுவும் தேவையில்லை. கடந்த பல மாதங்களாக உங்களை துன்புறுத்திய இந்த அரக்கிகளை தீயிட்டு கொளுத்துவதற்கு மட்டும் எனக்கு அனுமதி தாருங்கள்" என்று வேண்டினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த சீதை "இந்த அரக்கிகள் என்னை துன்புறுத்தினாலும், அவர்களை தண்டிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில் இந்த துன்பங்களுக்கு நான் செய்த முன்வினை பாவமே காரணம். பொன்மான் என்று நினைத்து மாயமானுக்கு ஆசைபட்டேன். அதை கொண்டு வர என் கணவரை அனுப்பினேன். அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததாலும், 'லட்சுமணா, லட்சுமணா' என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை சென்று பார்த்து வரும்படி கூறினேன். அவர், என் கணவருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்திருக்காது என்று மறுத்து கூறியும், அதை ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்தேன். ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களை கண்ணிமை போல காத்து வந்த லட்சுமணனை மனம் நோகச் செய்ததுதான், நான் அனுபவித்த துன்பத்திற்குக் காரணம். எனவே நீ அரக்கிகளை எதுவும் செய்துவிடாதே" என்றார்.
நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.
- அரியக்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு.
- கரூர் தான்தோன்றி மலைஸ்ரீகல்யாண வெங்கடரமணசுவாமிக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-30 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை பிற்பகல் 3.26 வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : பூராடம் இரவு 11.46 வரை பிறகு உத்திராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை
அரியக்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி மதுரை ஸ்ரீ கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல் லித்தாயார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் காலை அபிஷேகம் அலங்காரம். கரூர் தான்தோன்றி மலைஸ்ரீகல்யாண வெங்கடரமணசுவாமிக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவ நல்லூர் ஸ்ரீ மரக தாம்பிகை தலங்களில் அபிஷேகம் அலங்காரம். லால்குடி ஸ்ரீ பிரவிருத்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-நலம்
மிதுனம்-கவனம்
கடகம்-சலனம்
சிம்மம்-கடமை
கன்னி-விருத்தி
துலாம்- தாமதம்
விருச்சிகம்-ஓய்வு
தனுசு- உழைப்பு
மகரம்-உறுதி
கும்பம்-யோகம்
மீனம்-திடம்
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-29 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை பிற்பகல் 2.56 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : மூலம் இரவு 10.33 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
பழனி ஸ்ரீ ஆண்டவர் மயில் வாகன புறப்பாடு, திருவல்லிக்கேணி ராகவேந்திரருக்கு திருமஞ்சன சேவை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் சப்தாவர்ணம், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்பாணர், ஸ்ரீ முருக நாயனார் குரு பூஜை. பழனி ஸ்ரீ ஆண்டவர் மயில் வாகன புறப்பாடு. சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் யானை வாகனத்தில் வீதியுலா. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. மதுரை ஸ்ரீ கூடலழகர் குதிரை வாகனத்தில் இரவு தசாவதாரக்காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்ர ரத வல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம், குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-பாராட்டு
மிதுனம்-ஆக்கம்
கடகம்-வெற்றி
சிம்மம்-சாந்தம்
கன்னி-நிம்மதி
துலாம்- ஈகை
விருச்சிகம்-கவனம்
தனுசு- தெளிவு
மகரம்-இன்பம்
கும்பம்-ஆசை
மீனம்-ஆர்வம்
- சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் பூக்குழி விழா.
- திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-28 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி நண்பகல் 1.53 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : கேட்டை இரவு 8.59 மணி வரை பிறகு மூலம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம், பெருமாள் புறப்பாடு
சோழவந்தான் ஸ்ரீ ஜனகை மாரியம்மன் பூக்குழி விழா. பழனி ஆண்டவர் தங்கக்குதிரை வாகனத்தில் திருவீதி உலா. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் ரதோற்சவம். மதுரை ஸ்ரீ கூடலழகப் பெருமாள் எடுப்புச் சப்பரத்தில் சப்தாவரணம், உபயநாச்சியார்களுடன் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு.
திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-சுகம்
மிதுனம்-புகழ்
கடகம்-ஓய்வு
சிம்மம்-உதவி
கன்னி-வாழ்வு
துலாம்- உறுதி
விருச்சிகம்-தாமதம்
தனுசு- உறுதி
மகரம்-நிறைவு
கும்பம்-யோகம்
மீனம்-மாற்றம்
- பழனி ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் பவனி.
- திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இந்த வார விசேஷங்கள்
10-ந் தேதி (செவ்வாய்)
* பவுர்ணமி.
* காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகப் பெருமான் திருக்கல்யாணம்.
* திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் வெண்ணெய்த் தாழி சேவை, இரவு திருக்கல்யாணம்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.
* சமநோக்கு நாள்.
11-ந் தேதி (புதன்)
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழி விழா.
* பழனி ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
12-ந் தேதி (வியாழன்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கணபதி உற்சவம் ஆரம்பம்.
* மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் இரவு தசாவதாரக் காட்சி.
* பழனி ஆண்டவர் மயில் வாகனத்தில் புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (வெள்ளி)
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி.
* மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் புறப்பாடு.
* சங்கரன் கோவில் கோமதிஅம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (சனி)
* சங்கடகர சதுர்த்தி.
* மதுரை கூடலழகர் பெருமாள் விடையாற்று உற்சவம்.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருட்சப வாகனத்தில் பவனி.
* திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
15-ந் தேதி (ஞாயிறு)
* சிரவண விரதம்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
16-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* திருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
+2
- வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
- கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய விழாவான வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று கோவிலில் குவிந்தனர்.

அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விசாகத்தை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது.மாலை 4 மணிக்கு சாயரட்ச தீபாராதனையும் தொடர்ந்து கோவில் சண்முக விலாசம் மண்டபத்தில் முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவமும் நடக்கிறது.
வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராஜபாளையம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், பால் குடம் எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.
அந்த வகையில் இன்று வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். அவர்களின் அரோகரா கோஷம் விண் அதிர செய்தது.
சாமி தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பொது சுகாதார கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்புக்காக பைபர் படகுகளுடன் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.
பாதயாத்திரையாக தூத்துக்குடி மார்க்கமாக நேற்று காலை 8 மணியில் இருந்து நாளை மாலை 6 மணி வரை வரும் பக்தர்களுக்கு ஆறுமுகநேரி டி.சி.ட.பிள்யூ பஸ் நிறுத்தம் அருகில் கையில் அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது. இந்த அடையாள பட்டை அணிவிக்கப்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் கோவிலுக்கு வந்து அவர்கள் தனியாக ஒதுக்கப்பட்ட தனி வரிசையில் சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான தனி வரிசை ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க அவர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் நேற்று காலை 6 மணியில் இருந்து நாளை மாலை 6 மணி வரை மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகத்தில் மூத்த குடிமக்களுக்கு கை பட்டை வழங்கப்படுகிறது.
கைப்பட்டை அணிந்த மூத்த குடிமக்கள் மட்டும் முதியோர்களுக்கான தனி வரிசையில் எளிதாக விரைவாக சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- மதுரை ஸ்ரீ கூடலழகப் பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-26 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி காலை 10.40 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: விசாகம் மாலை 4.40 மணி வரை
பிறகு அனுஷம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம், வைகாசி விசாகம்
இன்று வைகாசி விசாகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பால் அபிஷேகம். பழனி ஸ்ரீ ஆண்டவர், திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் ரதோற்சவம். மதுரை ஸ்ரீ கூடலழகப் பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி. திருவாய்மொழி பிள்ளை ஸ்ரீ நம்மாழ்வார் திருநட்சத்திர வைபவம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-வரவு
கடகம்-உழைப்பு
சிம்மம்-கவனம்
கன்னி-உதவி
துலாம்- நற்செயல்
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- புகழ்
மகரம்-பாசம்
கும்பம்-கீர்த்தி
மீனம்-பணிவு
- கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பல நூறு ஆண்டு பழமையான வடிவேல் சுப்பிரமணிய சாமி கோவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.
வேலூர்:
வேலூர், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாபுரம் அடுத்த புது வசூர் தீர்த்தகிரி மலையில் பல நூறு ஆண்டு பழமையான வடிவேல் சுப்பிரமணிய சாமி கோவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு முன்பாக 92 அடி உயரத்தில் மிகப்பிரமாண்டமான முருகன் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதி இந்த சிலையையும் வடிவமைத்துள்ளார். தென் வடக்கு திசையை பார்த்தவாறு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த முருகன் சிலை மலை உச்சியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
தற்போது திருப்பணிகள் முடிந்து கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலில் இன்று இரவு வான வேடிக்கை மகா அபிஷேகம் அலங்கார தரிசனம் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் குழுவினரின மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு சாமி வீதி உலா நடைபெறுகிறது.
பிரமாண்ட முருகன் சிலையின் முன்பு குடும்பத்துடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- மந்திரங்களும், பதிகங்களும் தெரியவில்லையே என்று மனம் வருந்த வேண்டாம்.
- அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை.
இறை வழிபாடு என்பது நம் மனதை ஒருநிலைப்படுத்தும். நம் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நம்மை மீட்டெடுக்கும். இதை உணர்ந்தவர்கள் இறை வழிபாட்டையும் விரத நாட்களையும் எப்போதும் தவறவிடுவதில்லை. அதிலும் முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் என்றால் சொல்லவா வேண்டும்.
இந்த ஆண்டு வைகாசி விசாகம் நாளை வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க வைகாசி விசாகம் நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழா தான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்! விரும்பியது நடக்கும்! அதனால் தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் உள்ள முருகனின் திருத்தலங்களில் வைகாசி விசாக விழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

நினைத்தது நடக்க வேண்டும், நம்முடைய வேண்டுதல்களும், வழிபாடுகளும் இரு மடங்கு பலனை அள்ளி தர வேண்டும் என்றால் வைகாசி விசாக நாளில் விரதமிருந்து, முருகப் பெருமானை மனம் உருக வழிபட வேண்டும். அவருக்குரிய மந்திரங்கள், பதிகங்கள் முதலானவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.
மந்திரங்களும், பதிகங்களும் தெரியவில்லையே என்று மனம் வருந்த வேண்டாம். எளிமையாக 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையோ அல்லது முருகனுக்குரிய 'ஓம் சரவண பவ' என்ற ஆறெழுத்து மந்திரத்தையோ உச்சரித்தால் போதும். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். அனைத்து பலன்களும் உங்களை வந்து சேரும்.
விசாகத் திருநாளில் முருகனின் சன்னதிக்கு சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும். திருத்தலத்திற்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டு பூஜையறையில் முருகப்பெருமானின் படத்தை வைத்து அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியமாக செய்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், ஏழை, எளிய மக்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்குங்கள். குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு ஆபத்துக்கள் அகலும். அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை.
கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்தும் வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்தும் நம்மை விடுவித்து அருளும் முருகனை
வைகாசி விசாக நட்சத்திர நாளில் வணங்கி வளம் பெறுவோம்.
- இன்று பிரதோஷம். சுபமுகூர்த்த தினம்.
- நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி வெள்ளி ரதத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-25 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி காலை 8.44 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : சுவாதி பிற்பகல் 2.09 மணி வரை பிறகு விசாகம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
இன்று பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. மாயவரம், திருவாடானை, நயினார்கோவில், திருப்பத்தூர், திருப்புகழூர், உத்தமர் கோவில், காளையார் கோவில்களில் ரதோற்சவம். அரியக்குடி ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம். திருவாதவூர், திருமறைநாதர், திருநள்ளாறு கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம். நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி வெள்ளி ரதத்தில் பவனி.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்லமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி, பழனி ஸ்ரீ பாலதண்டயுதபாணி சுவாமி கோவில்களில் பவனி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-முயற்சி
கடகம்-கீர்த்தி
சிம்மம்-நன்மை
கன்னி-பெருமை
துலாம்- புகழ்
விருச்சிகம்-உயர்வு
தனுசு- லாபம்
மகரம்-பரிவு
கும்பம்-விவேகம்
மீனம்-மேன்மை
- தஞ்சை பெரிய கோவிலில் இருந்து யானை மீது தீர்த்தக்குடம் வைத்து மகா மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு நடந்தது.
- பக்தர்கள் தீர்த்தக்குடத்தை தலையில் சுமந்தவாறு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி வடகரையில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.
விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், புண்யாக வாஜனம், பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து, தஞ்சை பெரிய கோவிலில் இருந்து யானை மீது தீர்த்தக்குடம் வைத்து மகா மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடத்தை தலையில் சுமந்தவாறு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாலை முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நடைபெற உள்ளது. முறையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு ஆகி கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்திற்கு கும்பாபிஷேகமும் தொடர்ந்து, கற்பக விநாயகர், மகா மாரியம்மன், முனீஸ்வரர், நவக்கிரக பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட உள்ளது.
முடிவில் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி தெருவாசிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- பூந்தேர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராயபுரம்:
பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான மிதுன லக்னத்தில் பூந்தேர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு காளிதாஸ் சிவாச்சாரியார் சாமிக்கு அபிஷேக, அலங்காரம் செய்து இருந்தார். அதை தொடர்ந்து காலை 7.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. விழாவில் அறங்காவலர் குழு தலைவர் இ.எம்.எஸ்.மோகன், அறங்காவலர்கள் எஸ்.சர்வேஸ்வரன், வி.சீனிவாசன், இரா.இராஜேந்திர குமார், ஜெ.ரமேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக காளிகாம்பாள் கோவிலில் இருந்து 5 வண்ண குடைகளுடன் புறப்பட்ட தேர், 108 கைலாய வாத்தியம், தாரை தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க, 4 மாட வீதிகளை சுற்றி வந்தது.
பின்னர், மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து நாளை (ஞாயிற்று கிழமை) மாலை 7 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க கின் =னித்தேர் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.






