என் மலர்
வழிபாடு
- 30-ந்தேதி மகாளய ஆரம்பம்.
- 27-ந்தேதி பிரதோஷம்
28-ந்தேதி (செவ்வாய்)
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் மாலை புஷ்ப யாகம் சாற்று முறை.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* கரூர் கல்யாண வேங்கடேசப்பெருமாள், கஜலட்சுமி வாகனத்தில் வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
27-ந்தேதி (புதன்)
* பிரதோஷம்.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தெப்ப உற்சவம்.
* திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் தீர்த்தவாரி.
* திருப்பதி ஏழுமலையான் சகசர கலசாபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
28-ந்தேதி (வியாழன்)
* கரூர் கல்யாண வேங்கடேசப் பல்லக்கிலும், இரவு வெள்ளி கருட வாகனத்திலும் பவனி,
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
29-ந்தேதி (வெள்ளி)
* பவுர்ணமி,
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* மதுரை மடப்புரம் பத்திரகாளி. அம்மன் சிறப்பு அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
30-ந்தேதி (சனி)
* மகாளய ஆரம்பம்.
* கரூர் கல்யாண வேங்கடேசப்பெருமாள் ஊஞ்சல் சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரத ராஜருக்கு திருமஞ்சனம்.
* திருவல்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
1-ந்தேதி (ஞாயிறு)
* கரூர் கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆளும் பல்லக்கில் பவனி,
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திரு மஞ்சனம்.
* திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. சமநோக்கு நாள்.
2-ந்தேதி (திங்கள்)
* சங்கடகர சதுர்த்தி
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருப்போரூர் முருகப்பெருமான்சிறப்பு அபிஷேகம்,
* கீழ்நோக்கு நாள்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் வெட்டிவேர் சப்பரத்தில் புறப்பாடு.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்ப் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 9 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவாதசி இரவு 11.30 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: திருவோணம் காலை 7.37 மணி வரை பிறகு அவிட்டம் விடியற்காலை 4.26 மணி வரை பிறகு சதயம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் வெட்டிவேர் சப்பரத்தில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்ப் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் கஜலட்சுமி வாகனம். மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் சப்தாவர்ணம் புஷ்ப சப்பரத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, சிறுவாபுரி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-கடமை
மிதுனம்-கண்ணியம்
கடகம்-நிறைவு
சிம்மம்-ஆதரவு
கன்னி-உழைப்பு
துலாம்- ஓய்வு
விருச்சிகம்-சுகம்
தனுசு- புகழ்
மகரம்-வெற்றி
கும்பம்-யோகம்
மீனம்-மேன்மை
- பாஞ்சாலியுடன் பாண்டவர்கள் வனவாசம் சென்றனர்.
- அரணிக்கட்டையை மீட்டுத்தர அந்தணர் பாண்டவர்களின் உதவியை நாடினார்.
பார்ப்போர் கண்களை கவர்ந்திழுக்கும் கொள்ளை அழகு கொண்டது குமரி மண். இங்குள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறு என்பது மண் சார்ந்தது மட்டுமல்ல, நமது பாரம்பரியம் சார்ந்தது என்பது அனைவரும் பெருமை கொள்ளும் விஷயம்.
அந்த வகையில் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையை கொண்ட ஊராக சொத்தவிளை விளங்கி வருகிறது. நாகர்கோவிலில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் அழகை காண விடுமுறை காலங்களில் உள்மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்ல தவறுவதில்லை.
இந்த சிறிய ஊருக்கு மகாபாரதத்துடன் தொடர்பு உள்ளது என்பது ஒரு அரிய தகவல் தான். மகாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனிடம் நாட்டை இழந்தவர்கள் பஞ்ச பாண்டவர்கள். இதனால் 12 ஆண்டுகள் வனவாசமும், ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் (தலைமறைவு வாழ்க்கையும்) செய்ய வேண்டிய நிலை பாண்டவர்களுக்கு ஏற்பட்டது.
பாஞ்சாலியுடன் பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். 12 ஆண்டுகால வனவாசம் ஒருசில தினங்களில் முடிவுறவேண்டிய நிலையில் அந்தணர் ஒருவர், பஞ்ச பாண்டவர்களிடம் உதவி கேட்டு வந்தார். அவர் நடத்த இருந்த வேள்விக்கு தீ மூட்ட பயன்படும் அரணிக்கட்டை ஒரு மானின் கொம்புகளில் மாட்டிக் கொண்டது. அந்த மானை கண்டுபிடித்து அரணிக்கட்டையை மீட்டுத்தர அந்தணர் பாண்டவர்களின் உதவியை நாடினார். அந்த மானைபிடிக்க ஓடினர் பாண்டவர்கள். இதனால் தளர்ந்துபோன அவர்கள் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தனர்.
காடு, மேடு பாராமல் ஓடிய அவர்களுக்கு கடும் தாகம் ஏற்பட்டது. எனவே எங்கேயாவது தண்ணீர் இருக்கிறதா? என்று பார்த்து தண்ணீர் கொண்டுவரும்படி நகுலனிடம், தருமர் கூறினார். தண்ணீரை தேடிச்சென்ற நகுலன் வனத்தின் ஒரு பகுதியில் தூய்மையான தண்ணீருடன்கூடிய தடாகத்தை பார்த்தான். உடனே அந்த பொய்கையில் இறங்கி தண்ணீரை பருக நகுலன் முயன்றபோது ஒரு அசரீரி ஒலித்தது. இந்த தடாகம் எனக்கு சொந்தமானது, அதனால் முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். அதன்பிறகு நீ நீர் பருகலாம் என்றது அந்த அசரீரி.
அதை கண்டுகொள்ளாத நகுலன், குளத்துக்குள் இருந்த தண்ணீரை பருகினான். உடனேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான். 2-வதாக சகாதேவன், 3-வதாக அர்ஜூனன், 4-வதாக பீமன் ஆகியோரும் வந்து பொய்கையில் இறங்கி தண்ணீர் குடிக்க முயலும் போதும் நகுலனுக்கு ஒலித்த அசரீரி ஒலித்தது. ஆனால் அவர்கள் யாரும் அசரீரியை பொருட்படுத்தவில்லை. அந்த குரலை மீறி தண்ணீர் பருகியதால் நகுலனுக்கு பிறகு வந்த 3 பேரும் மாண்டனர்.
தண்ணீர் கொண்டுவர சென்ற தம்பிகள் 4 பேரும் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீரைத் தேடி தருமனும் நடக்கலானார். தடாகம் அருகே வந்தவர். தனது நான்கு சகோதரர்களும் மாண்டு கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார். இங்கு போர் எதுவும் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே என எண்ணியவர், உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் தாகத்தை தணித்துக் கொள்வோம் என பொய்கையில் இறங்கி தண்ணீர் குடிக்க முயன்றார்.
அப்போதும் அசரீரி ஒலித்தது. என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால்தான் உன் உடன்பிறந்த சகோதரர்கள் 4 பேரும் மாண்டு போனார்கள். முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால் உன் தம்பிகள் நிலைதான் உனக்கும் ஏற்படும் என்று குரல் ஒலித்தது.
அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் பருகாமல் கரையேறிய தர்மர், "இந்த பொய்கை உனக்கு சொந்தம் என கூறுகிறாய். உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை. நீ கேள்விகளைக் கேள் முடிந்த அளவு பதில் கூறுகிறேன் என்றார். உடனே அசரீரி எதை இழப்பதால் இன்பம் ஓங்குகிறது என்ற கேள்விக்கு, தர்மர் உடனே சினத்தை இழப்பதால் என பதில் சொன்னார். இதுபோன்று அசரீரியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, சளைக்காமல் தர்மர் பதில் சொன்னார்.
தர்மரின் பதில்களால் அசரீரி மகிழ்ந்து தண்ணீர் பருக அனுமதித்தது. இறுதியில் அந்த அசரீரி இறந்த நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன், யாருக்கு உயிர் கொடுக்க வேண்டும் எனக்கேட்டது. நகுலனை எனக்கு திருப்பிக் கொடுங்கள் என்று தருமர் வேண்டினார். இதனால் ஆச்சரியமடைந்த அசரீரி யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான அர்ஜுனன், பீமன் ஆகியோரில் ஒருவரைக் கேட்காமல் இரண்டாம்தர வீரனாக இருக்கிறவனை எதற்கு தேர்ந்தெடுக்கிறாய் என அசரீரி கேட்டது.
அதற்கு தருமன், எனது தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என 2 மனைவிகள் உண்டு. நான், பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம். மற்றொரு தாயான மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். என் தாயாருக்கு பக்திபூர்வமாக சேவை செய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்து விட்டாள். அவளுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும் என்பதால் நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன். போர்புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல என்றான் தருமன்.
இந்த பதிலைக்கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த தர்மதேவன் (எமதர்மன்) அங்கு தோன்றினார். தர்மா நான் உனக்கு தெய்வீகத் தந்தையாவேன்.அந்தணரின் அரணிக்கட்டையை மான் உருவில் எடுத்து வந்தது நான்தான். உனது தர்ம சிந்தனையால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். உனது 4 சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுவார்கள் என்று வரம் வழங்கிவிட்டு மறைந்தார்
தர்மதேவன். அதைத்தொடர்ந்து 4 சகோதரர்களும் தூங்கி எழுவதுபோன்று கண்விழித்தார்கள். அரணிக்கட்டையும் கிடைத்தது. அந்தணருக்கு அந்த அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருட அஞ்ஞாதவாசத்துக்கு தயாரானார்கள்.
மகாபாரத காவியத்தில் நகுலன், சகாதேவன், அர்ஜூனன், பீமன் ஆகிய 4 பேரும் நீர் பருகி செத்துப்போன நஞ்சுப் பொய்கைதான் சொத்தவிளை கடற்கரையை ஒட்டி மகாவிஷ்ணு கோவிலுடன் இணைந்திருக்கிறது என்கிறார்கள். இப்பகுதி மக்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு நஞ்சுப் பொய்கையில் இருந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள். இந்த தீர்த்தத்தால் உடலில் ஏற்படும் ஆறாத புண்ணும் ஆறிவிடுவதாக கூறுகிறார்கள்.
எவ்வளவு கோடையாக இருந்தாலும் இந்த பொய்கை வறண்டு போகாது. சொத்தவிளை கடற்கரையை ஒட்டி பஞ்ச பாண்டவர்களில் 4 பேர் தண்ணீர் அருந்தி இறந்துபோன நஞ்சுப் பொய்கையும், மகாவிஷ்ணு கோவிலும் அமைந்திருக்கிறது. பஞ்ச பாண்டவர்களில் 4 பேர் தண்ணீர் குடித்து செத்துப்போனதால் இந்த பகுதிக்கு செத்தவிளை என்றுதான் பெயர் இருந்திருக்கிறது. நாளடைவில் அது மருவி சொத்தவிளை என மாறியிருக்கிறது. இதுதான் சொத்தவிளை ஊரின் வரலாறு.
- கும்மி என்பது கொம்மை கொட்டுதல் என இலக்கியம் கூறுகிறது.
- கொம்மைதான் கும்மியாக திரிந்திருக்கலாம்.
கொங்கு நாட்டின் மிகவும் தனித்தன்மையாக காணப்படுவது வள்ளிக்கும்மி. கும்மி என்பது கொம்மை கொட்டுதல் என இலக்கியம் கூறுகிறது. கொம்மைதான் கும்மியாக திரிந்திருக்கலாம்.
வள்ளிக்கும்மி ஆண்கள் தான் ஆடுவார்கள். பெண்கள் ஆடு்ம் கும்மியில் சலங்கை மற்றும் இசைக்கருவி இல்லை. இப்போது பெண்கள் மிகுதியாக கலந்துகொள்ளும் கலையாக கொங்கு நாட்டின் வள்ளிக்கும்மி திகழ்கிறது. கும்மிப்பாடலை ஒருவரே பலமணி நேரம் பாடுவார். ஆண்கள் மட்டுமே வள்ளி கும்மியை ஆடினார்கள் என்று சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
வள்ளிக்கும்மி என்பது முருகன், வள்ளி, பிறப்பு முதல் திருமணம் வரை உள்ள செய்திகளை பாடுவதாக வள்ளிக் கும்மி அமைகிறது. கொங்கு நாட்டின் நாகரிகம், பண்பாட்டை எடுத்துச்சொல்லும் வகையில் வள்ளி கும்மி உள்ளது.
ஆயற்கலை 64 கலைகளில் முதன்மையானது வள்ளிக் கும்மி. முறையாக பயிற்சி பெற்றே இதனை அரங்கேற்றம் செய்கிறார்கள். 40 நாட்கள் அல்லது 30 நாட்கள் முறையாக பயிற்சி பெற்று அதற்கு முறையாக பூஜை செய்து சலங்கை அணிந்து அரங்கேற்றம் செய்வார்கள். அரங்கேற் றம் என்பது தனக்கு கற்று தந்த ஆசிரியர்களை கவுரவிக் கும் வகையில் அமையும்.
வள்ளி கும்மி ஆடுவதற்கு முன்னர் முதலில் காப்பு பாடல்களை பாடி துவங்குவார் கள். தண்டபானி, பரிவார தெய்வங்கள், அம்மனை அழைத்து, மன்னர்களை போற்றி என்ன செய்வோம் கன்னிமாரே என்று கிழங்கு எடுக்க போய் அங்கு குழந்தை கிடைக்கும் மகாதேவன் தன்னருளால் வள்ளி குழியிலே கிடக்க நீராட்டி 12 வரிகளிலேயே பெரிய பெண்ணாகி விடுவாள் என்று பாடல்கள் தொடங்கும்.
குறவர் இனங்களில் பெண்கள் தான் காவல் செய்ய வேண்டும். கிளி விரட்டி விடும் வள்ளி முருகனுக்கு ஏற்ற பெண் என்று வரைந்து கொடுக்கிறார். விநாயகர் பெருமானை அனுப்பி சம்மதம் கேட்டு வள்ளி முருகன் திருமணம் நடக்கிறது. இவ்வாறு கதையில் அமையும். திருமணத்திற்கு மேல் உள்ள கதைகளை பாடிச் செல்ல 2 மாதங்கள் ஆகும் என்று வள்ளி கும்மி ஆடுபவர் கள் மற்றும் பாடுபவர்கள் சொல்கிறார்கள்.
வள்ளி கும்மி என்பது தமிழர்கள் பண்பாட்டிற்கு பெருமை சேர்ப்பது மட்டுமில் லாமல் உடல் நலமும் நன்றாக இருக்கிறது. மூச்சிப்பயிற்சி போன்றும் இது அமையும். வள்ளி கும்மி ஆடுவதன் மூலம் உடலும் உள்ளமும் சேர்ந்தே பயணிக்கிறது. பாடல், நடனம் என்று இருப்பதால் மனதும் சுத்தமாகிறது. கர்ப்பிணி பெண்களும் இதனை கற்று ஆடுகிறார்கள். அவர்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
இந்த வள்ளி கும்மியை ஆடுவதால் உச்சி முதல் உள்ளாங்கால் வரை ஆரோக்கியமாக இருப்பதாக கூறி வருகிறார் கள். வள்ளி கும்மியாட்டம் பாரம்பரியமான கலைகளில் ஒன்றாகும். 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே போற்றப்பட் டது. 2 மணி நேரம் சளைக்காமல் ஆண்களும், பெண்களும் வளைந்து நெளிந்து குனிந்து கைகளை உயர்த்தி தாழ்த்தி ஆடுகிறார்கள்.
இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அழிவின் விழிம்பு வரை பெற்ற இந்த கலை என்றும் போற்றத்தக்கதாக விளங்கி வருகிறது.
- மாட வீதிகளில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
- பிரம்மோற்சவ நிறைவு நாளான நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ 7-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8-வது நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
மாட வீதிகளில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்டனர். இன்று இரவு அஸ்வ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.
பிரம்மோற்சவ நிறைவு நாளான நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
தீர்த்தவாரி நடைபெறுவதையொட்டி கோவில் அருகே உள்ள புஷ்கரணியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு புதியதாக தண்ணீர் நிரப்பப்பட்டது. மேலும் புஷ்கரணி முழுவதும் தேவஸ்தான ஊழியர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
திருப்பதியில் நேற்று 66,598 பேர் தரிசனம் செய்தனர். 25,103 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது.
இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
- திவ்ய பிரபந்தங்களை பாராயணம் செய்தனர்.
- பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள் பல்வேறு பாசுரங்களை பாடினர்.
திருப்பதி:
பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மதியம் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீேதவி, பூதேவி, மலையப்பசாமிக்கு விஸ்வக்சேனாராதனம், புண்யாஹவாசனம், தூப தீப நெய்வேத்தியம், ராஜோபசாரம் நடந்தது.
முதலில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தேன், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
திருமஞ்சனத்தின் போது வேத பண்டிதர்கள் வேதபாராயணங்கள், உபநிடதங்கள், தச சாந்தி மந்திரங்கள், புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நிலசூக்தம், விஷ்ணுசூக்தம் எனப் பஞ்சசூக்த மந்திரங்களை ஓதினர். மேலும் திவ்யப் பிரபந்தங்களை பாராயணம் செய்தனர். பெரியஜீயர், சின்னஜீயர் சுவாமிகள் பல்வேறு பாசுரங்களை பாடினர்.
உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பல வண்ணக் கற்களால் தயார் செய்யப்பட்ட கண்ணாடி மாலைகள், ஆப்பிரிக்கட்டு மாலைகள், வெட்டி வேர் மாலைகள், குருவெறு மாலைகள், வண்ணமயமான ரோஜா மாலைகள், மஞ்சள் ரோஜா மாலைகள், பலவகையான உலர் பழங்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள், வெண்முத்து மாலைகள், கிரீடங்கள், துளசி மாலைகள் ஆகியவற்றை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
தேவஸ்தான தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் அனைத்து அலங்காரமும் செய்யப்பட்டது. அலங்காரத்துக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து மாலைகளை தமிழகத்தில் திருப்பூரை சேர்ந்த ராஜேந்தர் காணிக்கையாக வழங்கினார். மேலும் திருமஞ்சனம் நடத்தப்பட்ட ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பிரத்தியேக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த மண்டபல அலங்காரத்துக்காக சம்பிரதாய பாரம்பரிய மலர்கள், அலங்கார கொய் மலர்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த அலங்கார கணிக்கையை ஐதராபாத்தை சேர்ந்த பக்தர்களான ஸ்ரீஹரி, ஸ்ரீதர், சீனிவாஸ் ஆகியோர் ஏற்றனர்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் காலை பல்லக்கு உற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 8 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி நள்ளிரவு 1.53 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: உத்திராடம் காலை 9.12 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி திருவோண விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் காலை பல்லக்கு உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரருக்கு சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-சிறப்பு
கடகம்-அன்பு
சிம்மம்-வரவு
கன்னி-லாபம்
துலாம்- செலவு
விருச்சிகம்-இரக்கம்
தனுசு- இன்பம்
மகரம்-கவனம்
கும்பம்-யோகம்
மீனம்-நிறைவு
- விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.
- புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
1. புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.
2. புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன.
3. திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் புரட்டாசி மாதம் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.
4. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
5. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
6. விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.
7. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்.
8. காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.
9. புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும்.
10. புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் சிலர் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வர வேண்டும்.
11. புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.
12. புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு "தளியல்" போடுவது வழக்கம். முடியாதவர்கள் 1&வது, 5&வது சனிக்கிழமையில் போடுவார்கள். பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.
13. புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும்.
14. புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.
15. புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர். அவர் கடலூர் மாவட்டம் மருதூரில் ராமைய்யா-சின்னம்மை தம்பதிக்கு 1823&-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21-&ந்தேதி மகனாகப் பிறந்தார்.
16. புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
17. தென்மேற்கு திசை கன்னி மூலை என்று கூறப்படுவதால் கோயிலில் இந்தக் கன்னி மூலையில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் மிகவும் போற்றப்படுகிறார். புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மூலையில் அமைந்திருப்பதால் இம்மாதத்தில் செய்யப்படும் விநாயகர் வழி பாடு கூடுதல் பலன்களைத் தரும்.
18. புரட்டாசி மாதத்தில் சுக்கிலபட்ச சதுர்த்திசியில் சிவாலயங்களில் ஸ்ரீநடராஜர் பெருமானுக்கு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறு வதைக் தரிசிக்கலாம். மேலும் புரட்டாசி மாத சுக்லபட்ச திரிதியை பலராமர் அவதார தினமாகவும், சுக்லபட்ச துவாதசி அன்று வாமன ஜெயந்தி தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
19. புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும்.
20. புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கையில் இருந்து வேல் எடுத்து கங்கைக்கு எடுத்து செல்லும் விழா நடந்து வருகிறது.
21. புரட்டாசி மாதம் அதிக வழிபாடுகள் நடத்த வேண்டிய மாதமாகும். புரட்டாசியில் வீடு கட்டும் பணியை தொடங்கினால் உடல் நலம் பாதிக்கும் என்று வாஸ்து குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22. புரட்டாசி மாத அமாவாசை தினத்தன்று பிறந்தவர்கள் ஆராய்ச்சிகள் செய்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
23. புரட்டாசி மாதம் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். அன்றைய வழிபாடுகள் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடையச் செய்யும்.
24. கல்வித் தடை, திருமணத் தடை, நோய், பணப் பிரச்சினை உள்ளவர்கள் புரட்டாசி திருவோணம் தினத்தன்று பெருமாளை வழிபட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்.
25. சென்னையில் இருந்து திருப்பதி -திருமலைக்கு புனித பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது.
- பூஜையின் போது நெய்விளக்கு ஏற்றுவது சிறப்பு.
- அம்பிகை உமாதேவி கடைப்பிடித்து பரமேஸ்வரனின் இடப்பாகத்தை பெற்றார்.
பரமேஸ்வரனை விட்டுப்பிரியாமல் இருக்க வேண்டும். அவர் இடப் பாகத்தில் ஐக்கியம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அம்பிகை உமாதேவி தவம் செய்வதற்காக திருக்கேதாரம் என்ற திருத்தலத்தை அடைந்தார். அங்கு, கவுதம முனிவரை சந்தித்து தன் எண்ணத்தை சொல்ல, அவர் அப்போது அம்பிகை உமாதேவிக்கு சொல்லும் முகமாக நமக்கு உபதேசித்ததே கேதார கௌரி விரதம்.
புரட்டாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் அஷ்டமி திதி முதலாக தொடங்கி, அமாவாசை வரும் வரையிலும் இந்த விரதத்தை கடைபிடிப்பது முறை. நன்றாக இழைத்து தயார் செய்யப்பட்ட 21 இழைகள் கொண்ட சரடை (நூலை) சங்கல்பத்தோடு (வேண்டுதல் நிறைவேற வேண்டும்) இடக்கையில் கட்டி கொள்ள வேண்டும். புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து சிவன் கோவில் சென்று வழிபட வேண்டும்.
சூரியன் மறைந்தபின் இரவில் மட்டும் ஒரு வேளை உண்ண வேண்டும். இரவில் படுக்கையில் படுக்காமல் தரையில் தூங்க வேண்டும். தூங்கும் போது கூட அவசிந்தனை இல்லாமல் சிவ சிந்தனையோடு தூங்க வேண்டும். இப்படி விரதம் இருந்து
தேய்பிறை சதுர்தசி அன்று கோவில் சென்று பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். கோவிலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மரக்கால் அளவு செந்நெல்லை சதுரமாகப் பரப்பி, அதன் நடுவே மந்திர பூர்வமாகப் பிரணவ எழுத்தை எழுதி, அதன் நடுவில் பூர்ண கும்பம் வைக்க வேண்டும். கும்பத்தில் தர்ப்பையை முறைப்படி சார்த்தி கும்பத்தில் சிவபெருமானை ஆவாகனம் செய்ய வேண்டும். பிறகு முறையாக பூஜை செய்து துதிப்பாடல்களை பாடி வணங்க வேண்டும். பூஜையின் போது நெய்விளக்கு ஏற்றுவது சிறப்பு.
இப்படி அன்றைய தினம் (சதுர்த்திசியில்) பூஜை முடிந்த பிறகு, மறுநாள், முன்னால் கையில் கட்டிக்கொண்ட சரடை அவிழ்த்து விட்டு பரமேஸ்வரனை வணங்க வேண்டும்.
கவுதம முனிவர் உபதேசித்த இந்த கேதாரகவுரி விரதத்தை அம்பிகை உமாதேவி கடைப்பிடித்து பரமேஸ்வரனின் இடப்பாகத்தை பெற்றார். அத்துடன் தான் கடைபிடித்த இந்த கேதாரகௌரி விரதத்தை யார் கடைபிடித்தாலும், அவர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் தந்து, முடிவில் சிவன் திருவடிப்பேற்றையும் அடையும் பாக்கியத்தை செய்ய வேண்டும் என்று பரமேஸ்வரனிடம் நமக்காக வேண்டிக் கொண்டார் அம்பிகை.
குழந்தைக்காக தாய் பத்தியம் இருப்பது போல, நமக்காக அம்பிகை செய்து வழி காட்டிய விரதம் இது. இந்த விரதத்தை கடைபிடித்து தம்பதிகள் ஒற்றுமையாக இருந்து சகல செல்வங்களையும் பெறலாம்.
நோன்பு கதை
பூவுலகில் ஒரு அரசனுக்கு புண்ணியவதி, பாக்கியவதி என்ற இரண்டு பெண்கள் இருந்தனர். அவ்வரசன் தன்நாடு நகரமெல்லாம் இழந்தான். அப்பெண்கள் ஒரு முறை கங்கை கரையில் கேதாரேஸ்வரர் விரதம் இருக்கும் தேவ கன்னியரிடமிருந்து நோன்பு கயிற்றை வாங்கி கையில் கட்டிக்கொண்டனர். அதனால் அவர்களுக்கு தொலைந்து போன ஐஸ்வர்யம் மீண்டும் கிடைத்தது.
பாக்கியவதி அந்த நோன்பு கயிற்றை அவிழ்த்து அதை அவரைப் பந்தலின் மேல் போட்டு விட்டாள். அதனால் அவள் இல்லத்தில் வறுமை சூழ்ந்தது. அவள் தன் மகனை தன் சகோதரி இல்லத்துக்கு சென்று சிறிது பொருள் வாங்கி வருமாறு அனுப்பினாள். அவனும் சென்று வாங்கி வந்தான். ஆனால், அப்பொருளை வழியிலேயே பறி கொடுத்தான். இது போல் முன்று முறை நடந்தது. இறுதியில் அவனது பெரிய தாயார் அவனது தாய் கேதாரேவரன் விரதம் அனுஷ்டிக்கிறாளா? என்று கேட்ட போது அவன் இல்லை என்றான்.
அதன் காரணமாகவே பொருளை இழக்க நேர்ந்தது என்றும் இனி தொடர்ந்து அவ்விரதத்தை அனுஷ்டிக்க சொல் என்று சொல்லி அவனை அனுப்பினாள். இப்போது அவன் வரும் வழியில் தொலைந்த பொருட்களெல்லாம் மீண்டும் கிடைத்தன.
வீட்டிற்கு வந்து தன் தாயிடம் நடந்ததை கூறினான். அவளும் தன் தவறுக்கு வருந்தி மீண்டும் அவ்விரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்தாள். இழந்த எல்லா ஐஸ்வர்யங்களும் பெற்றாள். அதனால் இப்பூவுலகில் கேதாரி விரதத்தை மனப்பூர்வமாக செய்பவர்களுக்கு பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் வழங்குவார் என்பது ஐதிகம்.
- திருப்பதி என்றாலே ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்தான் நினைவுக்கு வரும்.
- இறைவனை துயிலெழுப்பும் நிகழ்ச்சியே திருப்பள்ளி எழுச்சி தத்துவம் ஆகும்.
திருப்பதி என்றாலே ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்தான் நினைவுக்கு வரும். பிறவிக் குருடனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும், திருவேங்கட மலைக்குப் போய் சேவித்து நின்று பார்வையையும், செல்வத்தையும் சேர்த்து பெறலாம் என்கிறது ரிக் வேதம்.
வேதங்கள் போற்றும் மகிமைகள் கொண்ட திருவேங்கடத்தின் சிறப்பையும் திருமாலின் புகழையும் ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதம் பாடுவதாகவே அமைகிறது. இறைவனின் பாத மலர்களின் புகழைப்பாடிக் கொண்டிருந்தாலே போதும்! உய்வடையலாம் என்ற மையக் கருத்துடன் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாத பாடல்கள் முழுவதும் அமைந்துள்ளன. அதிகாலைப் பொழுதில் பள்ளி எழுந்தருள்வாயே என்று இறைவனை துயிலெழுப்பும் நிகழ்ச்சியே திருப்பள்ளி எழுச்சி தத்துவம் ஆகும்.
எங்கள் உள்ளங்களில் ஆன்மீக விழிப்புணர்வை தந்தருள்க என்று இறைவனை வேண்டுவதாகவே சுப்ரபாதம் அமைகிறது. இப்படி இறைவனுக்கு திருப்பள்ளி எழுச்சிபாடுவது நாம் அஞ்ஞானத்திலிருந்து விழித்துக் கொள்வதற்கு உதவும் பள்ளி கொண்ட பரந்தாமனை முதன் முதலில் எழுப்பியது மகரிஷி விசுவாமித்திரர்தான்.
எல்லோராலும் தற்போது உச்சரிக்கப்படும். `கவுசல்யா ஸூப்ரஜா, ராமா...!' என்று தொடங்கும் சுலோகம் மகரிஷி வால்மீகியின் வாக்கை வைத்தே புகழ் பெற்ற சுப்ரபாதம் பிறந்தது எனலாம்.
சுமார் 675 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்தவர் அண்ணாமாச்சார்யா சுவாமிகள், வைணவ ஆச்சாரியார்களில் மேன்மை பெற்ற வேதாந்த தேசிக சுவாமிகளின் மைந்தர் வரதாச்சாரியார் சுவாமி சீடரே அண்ணன் சுவாமிகள். தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள திருநாங்கூரில் பிறந்து பகவானுக்கு தொண்டு செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திய அண்ணன் சுவாமிகள் மகிமை மிக்க இந்த ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தை நான்கு பகுதிகளாக முதன் முதலில் பாடினார்.
சுப்ரபாதத்தின் முதல் பகுதியான திருப்பதி ஏழுமலையானை துயிலெழுப்புவதாக உள்ள இந்த துயிலெழுப்பும் பாடல்கள் நம் மனதிலும் ஆன்மீக விழிப்புணர்வை எழுப்பும். `கமலாகுச' எனத் தொடங்கும் முதல் பகுதி வெங்கடேசனைப் புகழ்ந்து பாடும்.
இரண்டாவது பகுதி ஸ்தோத்திரம் எனப்படுகிறது. மூன்றாவது பகுதியாக சரணாகதி பாடப்படுகிறது. இப்பகுதி பாடல்களைப் பாடுவதன் மூலம் பகவானிடம் சரணடைந்து பேறு பெறலாம். அதிகாலையில் நம் இல்லங்களில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஒலித்தால் வீட்டில் மங்களம் நிறையும். புரட்டாசி மாதம் முழுவதும் வீடுகளில் அதிகாலையில் சுப்ரபாதம் ஒலித்தால் திருமகள் கடாட்சமும் பெருகும். திருவெங்கட முடையோனின் சன்னதியில் தினந்தோறும் காலை வேலைகளில் நடைபெறுகின்ற வைபவங்களை அழகுறக் கண்முன் நிறுத்துகின்ற ஆனந்த வலிமையும் சுப்ரபாதத்திற்கு உண்டு.
கலியுக தெய்வமாகிய ஸ்ரீ வெங்கடநாதனை துதிப்போர் திருமகள் அருள்பெற்று வளமான வாழ்வுதனைப் பெறலாம் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. ஓம் நமமோ நாராயணாயா...!
- பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
- ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்கத் தேரில் 4 மாட வீதிகளில் உலா.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 6-வது நாளான நேற்று மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இரவு 7 மணிக்கு ஏழுமலையான் கஜ வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார். அப்போது ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த 250 கலைஞர்கள் 4 மாட வீதிகளில் கலை நிகழ்ச்சிகளை செய்து காட்டி பக்தர்களை பரவசப்படுத்தினர்.
பாண்டிச்சேரி லலிதாம்பிகை கலைக்குழுவை சேர்ந்த 25 கலைஞர்கள் பிரம்மா லட்சுமி நாராயணா பகிரதன் போன்று வேடமணிந்து கலை நிகழ்ச்சி செய்தனர்.
இதேபோல் கேரளா கலைஞர்கள் பாரம்பரிய உடை அணிந்து கரகாட்டம் ஆடினர். பிரம்மோற்சவ விழா 7-வது நாளான இன்று காலை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.
மதியம் 1 மணி முதல் 3 வரை வரை ஏழுமலையானுக்கு ஸ்நான திருமஞ்சனம் நடந்தது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஏழுமலையான் சந்திரபிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்தார்.
நேற்று ஏழுமலையானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பி வழிந்தது.
கிருஷ்ண தேஜா தங்கும் விடுதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர். திருப்பதியில் நேற்று 74,884 பேர் தரிசனம் செய்தனர். 32,213 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.70 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
- இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமிதரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 29-ந் தேதி புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப் பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.






