என் மலர்
வழிபாடு
- கிண்டல் செய்யும் விதமாக இந்தப் பழமொழி கையாளப்பட்டு வருகிறது.
- கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனைப் பெறுவர்.
சோறு கண்டால் சொர்க்கம் உண்டு என்பார்கள் முன்னோர்களும், சான்றோர்களும் சொல்லி வைத்த பழமொழிகளும், சொல் வழக்குகளும், இன்று அபத்தமான அர்த்தங்களைத் தரும் வகையில் திரிந்து நிற்பதை நாம் உணர முடியும்.
அவற்றில் ஒன்றுதான் 'சோறு கண்ட இடம் சொர்க்கம். சோறு எங்க கிடைக்கிறதோ, அங்கேயே தங்களின் புகலிடமாக மாற்றிக்கொள்பவர்களை, கிண்டல் செய்யும் விதமாக இந்தப் பழமொழி கையாளப்பட்டு வருகிறது.

உண்மையில் 'சோறு கண்டால் சொர்க்கம் என்பதே பழமொழியின் சரியான வாக்கியம். அதாவது ஐப்பசி பவுர்ணமியன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அதில் உள்ள ஒவ்வொரு பருக்கை அன்னமும், ஒவ்வொரு சிவலிங்கமாக கருதப்படும்.
எனவே அன்றயை தினம் சிவலிங்க தரிசனம் செய்பவர்கள் கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனைப் பெறுவர். மேலும் அன்னாபிஷேக தரிசனத்தை காண்பவர்களுக்கு மோட்சம் (பிறப்பில்லாத நிலை) கிடைக்கும் என்பது ஐதீகம். இதனைத் தான் `சோறு கண்டால் சொர்க்கம் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தனர்.
- சிவபெருமான் அபிஷேகப் பிரியர்.
- வறுமையில் இருந்து விடுபட்டு பசியில்லாத வாழ்வைப் பெறுவார்கள்.
உலக உயிர்கள் அனைத்திற்கும் படியளப்பவர் சிவபெருமான். அந்த இறைவனுக்கு பக்தர்கள் அனைவரும் உணவை படைத்து வழிபடும் சிறப்புமிக்க நாளே, ஐப்பசி பவுர்ணமியில் வரும் ` அன்னாபிஷேகம்' திருநாள் ஆகும்.

தட்சனுக்கு 50 பெண் பிள்ளைகள். அவர்களில் அஸ்வினி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திர பெண்களை, சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். சந்திரனோ. தன்னுடைய மனைவியர்களில் கார்த்திகை, ரோகிணி ஆகியோருடன் மட்டும் அதிக அன்பு காட்டினான். அதிலும் ரோகிணியுடன் அதீத அன்பு செலுத்தினான்.
இதனால் மற்ற பெண்கள் அனைவரும் தன்னுடைய தந்தையிடம் இதுபற்றி கூறினர். தன் மகள்கள் அனைவரையும் ஒன்றுபோல் பார்க்காததால், சந்திரனின் மீது கோபம் கொண்ட தட்சன். "ஒளி பொருந்திய கலைகளைப் பெற்றிருப்பதால்தான் நீ இப்படி நடந்து கொண்டாய். உன்னுடைய கலைகள் ஒவ்வொன்றாய் தேய்ந்து போகட்டும்" என்று சாபமிட்டார்.
அதன்படியே தினம் ஒரு கலையாக, சந்திரனின் கலைகள் தேய்ந்து வந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த சந்திரன், தன் சாபம் நீங்க வழிதேடி அலைந்தான். இறுதியில் சிவபெருமானே கதி என்று அவரை சரணடைந்தான்.
அப்போது சந்திரன், கலைகள் பலவும் தேய்ந்து மூன்றாம் பிறையாக உருமாறி நின்றான். அவனுக்கு அடைக்கலம் தந்த சிவ பெருமான், மூன்றாம் பிறை சந்திரனை தன்னுடைய தலை மீது சூடிக்கொண்டார்.
பின் சந்திரனை நோக்கி, "நீ உன் தவறை உணர்வதற்காக இன்று முதல் உன் கலைகள் ஒவ்வொன்றாக தேயவும், பின் வளரவும் அருள்புரிகிறோம். இருப்பினும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் மட்டும் உன்னுடைய 16 கலைகளுடனும் நீ மிளிர்வாய்" என்றார்.
அதன் காரணமாகத்தான் சந்திரன், ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் மட்டும் மிகுந்த ஒளியுடன் காட்சி தருகிறான். (அறிவியல் ரீதியாக ஐப்பசி தினத்தன்று. பூமிக்கு அருகாமையில் சந்திரன் வருவதால், இந்த அதிக ஒளிர்வு இருப்பதாக சொல்லப்படுகிறது.)
இத்தகைய சிறப்புமிக்க ஐப்பசி பவுர்ணமி நாளில் தான். சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

நவ கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே தனக்கு சாப விமோசனம் அளித்த சிவபெருமானுக்கு தன்னுடைய தானியத்தால் சந்திரன் அபிஷேகிப்பதாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அவருக்கு 70 வகையான மங்கலப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். அதில் முக்கியமான ஒன்றுதான், அன்னம்.
ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால், உலகம் முழுவதும் சுபிட்சம் பெறும் என்று சிவாகமம் கூறுகிறது.

ஐப்பசி பவுர்ணமி நாள் அன்று, காலையிலேயே சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறும்.
பின்னர் சாயரட்சை பூஜை நேரமான, மாலை வேளையில், புதிய நெல் கொண்டு அன்னம் படைத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.
அப்போது சிவலிங்கம் மறையும் அளவிற்கு அன்னத்தை சிவலிங்க திருமேனி முழுவதும் சாற்றுவார்கள்.
இந்த அன்னாபிஷேக அலங்காரமானது, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை அப்படியே இருக்கும். இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசனம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். இரவு 8.30 மணிக்கு மேல் அன்னாபிஷேக அலங்காரம் பிரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
மேலும் அன்னத்தை திருக்குளம் அல்லது நீர்நிலைகளில் கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
சிவபெருமானுக்கு செய்யப்பட்ட அன்னாபிஷேக அலங்காரத்தை காணும் பக்தர்கள், வறுமையில் இருந்து விடுபட்டு பசியில்லாத வாழ்வைப் பெறுவார்கள்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருமாலிஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ரக்ஷா பந்தனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-25 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: தசமி பிற்பகல் 3.03 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: சதயம் காலை 6.33 மணி வரை பிறகு பூரட்டாதி மறுநாள் விடியற்காலை 4.46 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருமாலிஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ரக்ஷா பந்தனம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசியம்மன் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்கசுவாமி கோவில்களில் காலை சோமவார அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் ஸ்ரீ காந்திமதியம்மன் கொலுதர்பார் காட்சி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-நற்செயல்
மிதுனம்-நம்பிக்கை
கடகம்-சாதனை
சிம்மம்-சிரத்தை
கன்னி-வெற்றி
துலாம்- மகிழ்ச்சி
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- பயிற்சி
மகரம்-நிறைவு
கும்பம்-ஆதாயம்
மீனம்-புகழ்
- கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.
- பட்டு வஸ்திர அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் நடந்தது. பிரம்மோற்சவ விழா தோஷ நிவர்த்திக்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தில் சாமிக்கு புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம்.
அதன்படி கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரமான நேற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திர அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
தமிழகத்திலிருந்து 5 டன் மலர்களும், கர்நாடகாவில் இருந்து 2 டன் மலர்களும், திருப்பதி தேவஸ்தான புஷ்பவனத்தில் இருந்து 2 டன் மலர்களும் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து மதியம் 1 மணிக்கு சாமந்தி, சம்பங்கி, தாமரை துளசி, மருவம், தவனம்,வில்வம் உள்ளிட்ட 17 வகையான மலர்கள் 6 வகையான இலைகள் கொண்டு மாலை 5 மணி வரை 9 டன் மலர்கள் கொண்டு புஷ்ப யாகம் நடந்தது.
அப்போது வேத பண்டிதர்கள் ரிக் வேதம், யஜூர் வேதம், கிருஷ்ணயஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், பாராயணம் உள்ளிட்ட வேத மந்திரங்களை ஓதினர்.
திருப்பதியில் நேற்று 73,558 பேர் தரிசனம் செய்தனர். 32,675 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி னர். ரூ.3.79 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 8 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
- பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 16-ந் தேதி (சனிக்கிழமை) காலை 3.33 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் 15-ந்தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- நெற்றியிலும் உடலிலும் காப்பாக அணிந்ததால் திருநீற்று காப்பு எனப்பட்டது.
- உடலெங்கும் பூசியதால் சிவ கவசம் எனப்பட்டது.
சைவர்கள் பெருஞ்செல்வமாக போற்றும் திருநீறு பிறந்த வரலாற்றினை சில நூல்கள் விளக்குகின்றன..
ஒருசமயம் யுகங்கள் முடிந்து புதிதாய் படைப்பு தொழில் தொடங்கும் வேளையில் சிவபெருமான் உமாதேவிக்கு தமது அக்னி கோலத்தின் பெருமைகளை விளக்கியதுடன் அது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருந்தும் தனித்தன்மையுடன் விளங்குவதையும் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றில் மறைந்து நின்று செயல்படுவதையும் விளக்கி கூறினார்.

மகா அக்னியாக விளங்கும் தாமே வானத்தில் இடி மின்னலாகவும் பூமிக்குள் எரிமலை குழம்பாகவும், கடலுக்குள் வடவாமுகாக்னியாகவும் இருப்பதை விளக்கினார், பின் அந்த அக்னிவடிவமாக இரண்டு முகங்களுடன் ஏழு கைகளும் ஏழு நாக்குகளும், மூன்று கால்களும், தலையில் நான்கு கொம்புகளுடன் காட்சியளித்தார். அந்த பேருருவை கண்டு பயந்த உமாதேவி அவரை வணங்கி தமக்கு காப்பாக இருக்கும் ஒரு பொருளை அருளுக என்றாள்.
செம்பொன் மேனியில் வெண்ணிறமாய் பூத்திருந்த வெண்பொடியை வழித்து இதனை காப்பாக கொண்டு இவ்வுலகினை வழி நடத்துவாய் என்றார். அதனால் அதற்கு சிவவீர்யம் எனப்பட்டது, தேவி அதனை நெற்றியிலும் உடலிலும் காப்பாக அணிந்ததால் திருநீற்று காப்பு எனப்பட்டது. உடலெங்கும் பூசியதால் சிவ கவசம் எனப்பட்டது.
எஞ்சிய விபூதியை அவர் ரிஷப தேவரிடம் தர அவர் அதனை உட்கொண்டார், அதனால் அவர்க்கு அளப்பரிய சக்தியை கொடுத்தது, இதனை அவர் மூலம் கோ உலகத்தில் உள்ள ஐந்து பசுக்களான சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை, நந்தை ஆகிய பசுக்களிடம் சேர்த்து பின்னர் பூலோக பசுக்களிடம் வந்து சேர்ந்தது.
அதனாலேயே நாம் கோ ஜலம், கோ சாணம் ஆகியவற்றினை கலந்து உருண்டைகளாக பிடித்து நெருப்பிலிட்டு தயாரிக்கிறோம்.

திருநீற்றினை வாங்கி இட்டுக்கொள்வதுடன் சிறிது வாயிலும் போட்டுக்கொண்டால் அநேக வியாதிகளை தீர்க்கும்.
முறையாக மந்திரிக்கப்பட்ட விபூதி வாதத்தினால் உண்டாகும் எண்பத்தொரு வியாதிகளையும் பித்தத்தால் உண்டாகும் அறுபத்து நான்கு வியாதிகளையும், கபத்தினால் உண்டாகும் இருநூற்று பதினைந்து வியாதிகளையும் தீர்க்கும்.
- சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் விடையாற்றி உற்சவம்.
- ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-24 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: நவமி மாலை 4.59 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: அவிட்டம் காலை 7.53 மணி வரை பிறகு சதயம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் கருட வாகனத்தில் புறப்பாடு. மாயவரம் ஸ்ரீ கவுரி மாயூரநாதர் பூத வாகனத்தில் பவனி. சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் விடையாற்றி உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடே சப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பயணம்
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-அன்பு
கடகம்-சுகம்
சிம்மம்-உயர்வு
கன்னி-நட்பு
துலாம்- அமைதி
விருச்சிகம்-மேன்மை
தனுசு- ஆதரவு
மகரம்-நிறைவு
கும்பம்-திறமை
மீனம்-முயற்சி
- வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டதாகவும் கருதி பிடித்து செல்கின்றனர்.
- புனித நீராக வழங்கப்பட்டுsam வரும் நிலையில் நோய் தீர்க்கும் மருந்தாக இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்காம்பட்டியில் ஸ்ரீவாஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. அதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 20 அடி ஆழத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சிவலிங்கத்திற்கு அடியில் நீரூற்று தோன்றி சிவலிங்கம் வழியாக வழிய தொடங்கியது. அந்த நீரானது பாதாள சிவலிங்கத்தை சுற்றி சுமார் 1 அடியிலிருந்து 2 அடி வரை நீரூற்றிலிருந்து வெளியேறி தண்ணீர் அறை முழுவதும் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்கு ஊற்று பெருக்கெடுக்க தொடங்கியது.
இதனைக் கண்ட பக்தர்கள் அந்த தண்ணீரை புனித நீராக கருதி பிடித்து செல்கின்றனர். இந்த தண்ணீர் கும்பாபிஷேகத்திற்கு புனித நீராகவும், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளை போக்குவதாகவும், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டதாகவும் கருதி பிடித்து செல்கின்றனர்.

இந்த தகவல் பரவியதும் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து பாதாள சிவலிங்கத்தை வழிபட்டு புனித நீர் பெற்றுச் செல்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 20 அடி ஆழத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும்போது 2 அடி ஆழத்திற்கு கான்கிரீட் போடப்பட்டு பின்னர் அதன் மேல் டைல்ஸ் கல் பதிக்கப்பட்டு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆறு போல் ஊற்று பெருக்கெடுத்து வருவது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாகவும் தற்போது புனித நீராக வழங்கப்பட்டு வரும் நிலையில் நோய் தீர்க்கும் மருந்தாக இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சுக்காம் பட்டி சித்தர்ஸ்ரீலஸ்ரீ துரை ஆதித்தன் சுவாமிகள் அருளாசி வழங்கி புனித நீர் மற்றும் காணிக்கை பூக்களை பிரசாதமாக அளித்து வருகிறார்.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-23 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி இரவு 6.50 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: திருவோணம் காலை 8.55 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மாயவரம் ஸ்ரீகவுரி மாயூரநாதர் கற்பக விருட்ச காமதேனு வாகனத்தில் திருவீதியுலா. சிக்கல் ஸ்ரீ சிங்கார வேலவர் வள்ளிதேவியை மணந்து இந்திர விமானத்தில் பவனி. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ வரத ராஜ மூலவருக்கும் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அனுகூலம்
ரிஷபம்-சுகம்
மிதுனம்-வரவு
கடகம்-செலவு
சிம்மம்-முயற்சி
கன்னி-பாராட்டு
துலாம்- சாந்தம்
விருச்சிகம்-பயிற்சி
தனுசு- தெளிவு
மகரம்-பக்தி
கும்பம்-உழைப்பு
மீனம்-தாமதம்
- கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கரியாக்குடல் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை கைலாசநாதர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
பூஜை நடந்து கொண்டிருந்த போது சிவலிங்கத்தில் திடீரென ஒற்றைக் கண் தோன்றியது.
இதை பார்த்த பக்தர்கள் சிவலிங்கம் நெற்றிக்கண் திறந்து விட்டதாக பரவசம் அடைந்தனர். மேலும் ஓம் நம சிவாய என கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
இந்த தகவல், சுற்று வட்டார பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த நிகழ்வை பக்தர்கள் சிலர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த அரிய காட்சியை கண்டு பக்தர்கள் பரவசத்தில் மூழ்கினர்.
பின்னர் சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
- மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சண்முகார்ச்சனைகள் நடைபெற்றன.

விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக கடந்த 6-ந்தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழை யையும் பொருட்படுத்தாமல் சூரசம்கார லீலையை கண்டு களித்தனர். தொடர்ந்து கோவிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
இதையடுத்து பூ சப்பரத்தில் எழுந்தருளி சுப்ரமணிய சுவாமி தெய்வானை உடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் நிறைவு நாளான இன்று காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சிறிய சட்டத்தேரில் எழுந்தருளினார். காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து கிரிவலப் பாதை வழியாக இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனமும் அதனைத் தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவச அலங்காரமும் நடைபெறுகிறது.
காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அதிகாலையில் மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்கா வலர் குழு தலைவர் சத்திய பிரியா பாலாஜி, அறங்கா வலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- சிவபெருமான், பிரம்மாவுக்கு ஞான உபதேசம் செய்த தலம்.
- பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை.
பிரம்மா சிவனிடம் ஞான உபதேசம் பெற விரும்பி கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட வில்வ மரம் ஒரு நாழிகைக்குள் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞான உபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, இத்தலம் வந்து சிவனை வணங்கினார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து, ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆதி வில்வ வனநாதராக தனிச்சன்னிதியில் அருள்கிறார்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்திற்கு அமிர்தகடம் வந்தது முதல் ஈசன் அமிர்தகடேசுவரர் என்றும் பெயர் பெற்றார்.
திருக்கடையூர் கோவிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர்.
இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை.
புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னிதி இருக்கிறது. இச்சன்னிதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும்.

சிறப்பு தகவல்கள்
* மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, மயிலாடுதுறையில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்.
* கடவூர், திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில் வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாப விமோசன புண்ணிய வர்த்தம், பிஞ்சிலாரண்யம் உள்பட திருக்கடையூருக்கு பல பெயர்கள் உண்டு.
* மார்க்கண்டேயருக்காக இத்தலத்து ஈசன், எமனை உதைத்து தள்ளியதால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

* பிரம்மதேவன், இத்தலத்தில் சிவபெருமானிடம் இருந்து உபதேசம் பெற்றுள்ளார்.
* ஆதியில் இத்தலத்தின் தல விருட்சமாக வில்வம் இருந்தது. தற்போது மார்க்கண்டேயரால் நடப்பட்ட பிஞ்சில மரம் (சாதி மல்லிப் பூ மரம்) தல விருட்சமாக உள்ளது.
* இத்தலத்தில் அமிர்த தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
* திருமால், பிரம்மன், மார்க்கண்டேயர், அகத்தியர், எமன், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, ஏழு கன்னிகள் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
* திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.
* குங்கிலிய கலய நாயனார், காரி நாயனார் இருவரும் இத்தலத்தில் வாழ்ந்து பல அற்புதங்கள், சேவைகள், திருப்பணிகள் செய்தனர்.

* அப்பர், சுந்தரர் இருவரும் ஒரு சேர இவ்வாலயம் எழுந்தருளி, இறைவனை தொழுது, குங்கிலிய நாயனாரின் திருமடத்தில் தங்கி இருந்ததாக கல்வெட்டு குறிப்புகள் உள்ளன.
* மார்க்கண்டேயர் இறையருள் பெற்ற 108 தலங்களில் இது 108-வது தலமாகும். அமிர்த கடேசுவரரை கண்ட பிறகு அவர் வேறு எங்கும் செல்லவில்லை.
* பூமாதேவி இத்தலத்தில்தான் முழுமையான அனுக்கிரகம் பெற்று திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
* சதாபிஷேகம், கனகாபிஷேகம், ஆயுள் ஹோமம், ம்ருத்யுஞ்ச ஹோமம், உக்ரக சாந்தி, பீமரத சாந்தி ஆகியவை செய்ய, தமிழ்நாட்டில் 100 சதவீதம் ஏற்புடைய தலமாக இது உள்ளது.

* இத்தலத்தில் நடக்கும் பெரிய விழாக்களில், கார்த்திகை மாதம் நடக்கும் சோமவார விழா மிகவும் சிறப்பானது. சோமவாரத்தில் 1008 சங்காபிஷேகம் நடப்பதை காண கண் கோடி வேண்டும்.
* திருக்கடையூர் தலத்தையும், ஊரையும் சோழ, பாண்டிய மற்றும் விஜய நகர மன்னர்கள் செப்பனிட்டு சீரமைத்து ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர். அது பற்றிய குறிப்புகள் ஆலயம் முழுவதும் உள்ள 54 கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது.
* சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி வீடு திருக்கடையூரில் தேரோடும் வீதியில் அமைந்திருந்ததாக பாடல்கள் உள்ளன. ஆனால் இப்போது மாதவி வாழ்ந்த வீடு என்று எந்த ஒரு வீட்டையும் சுட்டிக்காட்ட இயலவில்லை.
* திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் ஆலயம் திராவிட கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.
* தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இந்த தலம் 47-வது தலமாக போற்றப்படுகிறது.
* திருக்கடையூர் ஆலயம் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.






