என் மலர்
ரஷ்யா
- இது அமெரிக்க டாலரில் 20 டெசில்லியன் எனக் கூறப்படுகிறது.
- உலகளாவிய தடையை யூடியூப் 2022 மார்ச் மாதம் அறிவித்ததில் இருந்து இந்த இந்த சிக்கல் உள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ரஷிய அரசு நடத்தும் ஊடக சேனல்களை யூடியூப் பிளாக் செய்தது. இதற்காக யூடியூப் சேனலுக்கு எதிராக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்குச் முன்னெப்போதும் இல்லாத அபராததத்தை ரஷியா விதித்துள்ளது. இந்த அபராத தொகையானது முழு உலகப் பொருளாதாரத்தையும் பல மடங்கு விஞ்சும்.
2 என்ற எண்ணிற்குப் பிறகு 34 இலக்க பூஜ்ஜியத்தை கொண்டுள்ளது. இது அமெரிக்க டாலரில் 20 டெசில்லியன் எனக் கூறப்படுகிறது.
யூடியூப்பில் ரஷிய அரசின் ஆதரவு ஊடகங்களில் இருந்து சேனல்களைத் தடுப்பதன் மூலம் கூகுள் தேசிய ஒளிபரப்பு விதிகளை மீறியதாக ரஷிய நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது. ஒன்பது மாத காலத்திற்குள் இந்த உத்தரவிற்கு இணங்க மறுத்தால் அபராத தொகை ஒவ்வொரு நாளுக்கும் இரட்டிப்பாகும் எனத் தெரிவிக்கப்படடுள்ளது.
RT மற்றும் ஸ்புட்னிக் உட்பட பல ரஷிய அரசால் இயக்கப்படும் சேனல்களுக்கு உலகளாவிய தடையை யூடியூப் 2022 மார்ச் மாதம் அறிவித்ததில் இருந்து இந்த இந்த சிக்கல் உள்ளது.
- இன்றைய தினம் நடக்கும் மாநாட்டுக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றியுள்ளார்.
- பிரச்சனைகளை தீர்வதற்கு பதிலாக இன்னும் அதிக சிக்கல் கொண்டவையாக மாறி வருகிறது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன. மேற்கு நாடுகளின் ஜி7 கூட்டமைப்புக்குப் பதிலாக மேற்கூறிய நாடுகளின் பொருளாதார உறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே இந்த பிரிக்ஸ் அமைப்பு.
அதன்படி 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று [அக்டோபர் 24] உடன் முடிவடைகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் பெசஸ்கியான், சீன அதிபர் ஜி ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி. இந்நிலையில் இன்றைய தினம் நடக்கும் மாநாட்டுக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றியுள்ளார்.

அப்போது பேசிய அவர், மாற்றத்திற்கான செயல்பாடுகள் மூலம் நாம் எவ்வளவுதான் முன்னேறி வந்தாலும் சில நெடுங்கால பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாத முரண்பாடான நிலை உள்ளது. அந்த பிரச்சனைகளை தீர்வதற்கு பதிலாக இன்னும் அதிக சிக்கல் கொண்டவையாக மாறி வருகிறது.
எனவே உலக நலனுக்காக நிறுவப்பட்ட அமைப்புகளிலும் அதன் செயல்பாடுகளிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரவேண்டியது அவசியமாகிறது. இது குறிப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாடுகள் சீரமைக்கப்பட வேண்டும். சர்வதேச பிரச்சனைகளில் ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாடுகள் மதிக்கப்பட வேண்டும்.
பலதர்ப்பு வளர்ச்சிக்காக நிறுவப்பட்ட சர்வதேச வங்கிகளின் செயல்முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். ஐநாவின் காலாவதியான சூழலைப் போல அவையும் பழையதாகிவிட்டன என்று தெரிவித்தார். மேலும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.
உலக வல்லரசுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை இதற்கு ஆதரவு தெரிவித்தன. என்று சுட்டிக்காட்டினார். முன்னதாக ஐநா கிழக்கிந்திய கம்பெனியைப் போல செயல்படாத ஒன்றாக மாறிவிட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.
- வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.
- தற்போதைய தாக்குதல் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல்.
இந்தியா, ரஷியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசானில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டை ஒட்டி, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான சைபர் தாக்கதலுக்கு ஆளாகி உள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் போர்ட்டலான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் உள்கட்டமைப்பு மீது வெளிநாட்டில் இருந்து ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், தற்போதைய தாக்குதல் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான தாக்குதல் என ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா சகரோவா தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- 5 ஆண்டுகளுக்கு பிறகு மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மாஸ்கோ:
இந்தியா, ரஷியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசானில் நேற்று தொடங்கியது.
இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று ரஷியா சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதினிடம், உக்ரைன்-ரஷியா போருக்கு தீர்வுகாண உதவுவதற்கு தயாராக இருப்பதாக மோடி தெரிவித்தார்.
பின்னர் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியானை சந்தித்து பேசினார். மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர். மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலமும் தூதரக ரீதியிலும் அணுக மோடி அழைப்பு விடுத்தார்.
அப்போது மத்திய கிழக்கு பதற்றத்தை தணிக்க இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ஈரான் அதிபர் மசூத் தெரிவித்தார்.
பின்னர் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார். இதில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது.
இரு தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் எல்லை விவகாரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
5 ஆண்டுகளுக்கு பிறகு மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கடந்த 2019-ம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்தார். அப்போது சென்னை மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்தது.
2022-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார்.
ஆனால் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருவரும் பங்கேற்றனர். அப்போதும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இதற்கிடையே எல்லையில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் சீனாவும் தனது ரோந்து பணிகளை மீண்டும் தொடங்க உள்ள நிலையில். மோடி-ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தார்.
- அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்பதே எங்களின் நிலைப்பாடு
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் நேற்று தொடங்கியது.
இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து ரஷியாவின் காசான் நகர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தார். இருவரும் கைகுலுக்கி, ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
பின்னர் புதினிடம் பேசிய மோடி, "ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையில் நாங்கள் இரு தரப்பினருடனும் தொடர்பில் இருக்கிறோம். அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்பதே எங்களின் நிலைப்பாடு. மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அனைத்து வகையிலும் உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.
- பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றார்.
- விமான நிலையத்தில், மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டு சென்றார்.
விமான நிலையத்தில், மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி ரஷிய அதிபர் புடினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
இதனிடையே 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் சீனாவும் எல்லை பகுதிகளில் ஒன்றாக ரோந்து பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஒரு உடன்பாட்டை தற்போது எட்டியுள்ளன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நாளை இருதரப்பு சந்திப்பு நடைபெறும்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
- பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷியா சென்றார்.
- ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாஸ்கோ:
பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் கருப்பொருள் 'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' ஆகும்.
இந்த மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஜி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சனைகள் குறித்து தலைவா்கள் கலந்துரையாட உள்ளனா்.
இதற்கிடையே, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ரஷியாவின் கசானுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மந்திரிகளும், உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், ரஷிய அதிபருடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி பேசியதாவது:
உக்ரைன்-ரஷியா மோதல் விவகாரத்திற்கு அமைதியான முறையில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்தியா அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும். மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளித்தே நமது அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 3 மாதங்களில் தனது 2-வது ரஷிய பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஆழமான நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறது என தெரிவித்தார்.
- ரஷியாவில் உள்ள காசான் நகரில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது.
- இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியாவின் காசான் நகர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
ரஷியா சென்றுள்ள பிரதமர் மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தார். இருவரும் கைகுலுக்கி, ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
- பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் நடைபெறுகிறது.
- இதில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார்.
மாஸ்கோ:
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பு. இது கடந்த 2009-ம் ஆண்டில் உருவான ஒரு அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.
கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஷியாவில் உள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து ரஷியா புறப்பட்டார்.
மாநாட்டிற்கு இடையே பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகள் தலைவர்களுடன் இருநாட்டு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி ரஷியாவின் காசான் நகர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடி வந்தபோது, அங்கு குவிந்திருந்த ரஷியர்களில் சிலர் கிருஷ்ண பஜனை பாடல்களைப் பாடி அசத்தினர்.
- தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது.
- இந்த வீடியோவை உக்ரைன் உளவுப் பிரிவு உறுதி செய்துள்ளது.
தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு அச்சறுத்தலாக விளங்கும் அணு ஆயுத நாடு வட கொரியா. தற்போது ரஷியாவுடன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நெருக்கம் காட்டி வருவது நிலைமையை இன்னும் மோசமாகியுள்ளது.
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் பொருளாதார பாதிப்பை சந்தித்து இருக்கும் வடகொரியாவுக்கு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் ரஷியா , சீனா ஆகிய நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. இதற்கிடையே சமீபத்தில் தென் கொரியாவை எதிரி நாடாக அதிகாரபூர்வமாக அறிவித்த வட கொரியா அமெரிக்காவுக்கு அணுஆயுத மிரட்டல் விடுத்திருந்தது.

இந்நிலையில் மேற்கு நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் எதிராக மறைமுகமாக கடந்த 2 வருடங்களாக நடத்துவரும் உக்ரைன் போரில் வட கொரியா பங்கேற்றுள்ளதாக தகவல்கள் மட்டுமின்றி அதற்கான ஆதாரங்களும் கிடைத்து வருகின்றன. அதாவது, உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு உதவும் விதமாக தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது.
இது குறித்து வட கொரியாவும் ரஷியாவும் எதுவும் பேசாத நிலையில் டஜன் கணக்கான வட கொரிய வீரர்கள் ரஷிய ராணுவ தலத்தில் பயிற்சி எடுத்து சோர்ந்து ஓய்வு எடுப்பது, ரஷிய ராணுவ உபகரணங்களை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை உக்ரைன் உளவுப் பிரிவும் கண்டறிந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
எனவே உக்ரைன் ரஷியா போர் அடுத்த மேலும் தீவிரமடையும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா மீது 100 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது உக்ரைன். மேலும் ரஷியாவின் 2 ஆயுத தயாரிப்பு மையங்களும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- ரஷிய ராணுவம் உலகின் மிகவும் போர்த்திறன் வாய்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பப் படைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
- பிரிக்ஸ் ஒருபோதும் யாருக்கும் எதிரானது கிடையாது.
ரஷியாவில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் தனது அதிகாரப்பூர்வ இல்லமான நோவோ-ஓகாரியோவோவில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய பிரதமர் மோடி எனது நண்பர். அவருடன் சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் போது ரஷியா-உக்ரைன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். மோடியின் இந்த அக்கறைக்கு ரஷியா நன்றியுடன் இருக்கிறது. மோடியை சந்திக்கும் போது இந்திய திரைப்படங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பது குறித்து விவாதிக்கலாம்.
உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடுவை அமைப்பது கடினமாக இருக்கும். ரஷியாவை போரில் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு தள்ளியது. ரஷிய ராணுவம் உலகின் மிகவும் போர்த்திறன் வாய்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பப் படைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
எங்களுக்கு எதிராக இந்தப் போரை நடத்துவதில் நேட்டோ சோர்வடையும். போரில் எங்களது கை ஓங்கி இருக்கிறது. நாங்கள் வெற்றி பெறுவோம். உக்ரைன் ராணுவம், துல்லியமான ஆயுத விநியோக அமைப்புகளை சொந்தமாக கையாள முடியாது. சமாதான பேச்சுவார்த்தையை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அந்த முயற்சிகளில் இருந்து உக்ரைன் பின் வாங்குகிறது.
பிரிக்ஸ் ஒருபோதும் யாருக்கும் எதிரானது கிடையாது. இதை பிரதமர் மோடி சரியாக தெரிவித்து உள்ளார். பிரிக்ஸ் அமைப்பு மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல. ரஷியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு காரணம் அமெரிக்கா தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமக்கும் நமது நேச நாடுகளுக்கும் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- 1,572 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு முக்கிய இடங்களில் எந்நேரமும் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளன
2022 ஆம் ஆண்டு தொடங்கிய ரஷிய உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்த நீடித்து வருகிறது. மேற்கு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சித்ததால் தங்களுக்கு ஆபத்து என்று கூறி ரஷியா இந்த போரை துவங்கியது. ரஷியா பக்கம் வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன. போரில் உக்ரைனுக்கு பக்க பலமாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத மற்றும் பொருளாதார ரீதியாக உக்ரைனுக்கு உதவி வருகிறது. உக்ரைனுக்கு பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ என்ற அதிநவீன ஏவுகணைகளை வழங்கியுள்ளது. இதை ரஷியா மீது உக்ரைன் பய்னபடுத்தும்பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு புதின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில்தான் இந்த ஒட்டுமொத்த போரானது எந்நேரமும் மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்லும் என்று நிலவி வரும் அச்சத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ரஷிய அதிபர் புதின் முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று தொலைக்காட்சி வாயிலாக பேசிய புதின், அதிகரித்து வரும் சர்வதேச பாதுகாப்பு அச்சறுத்தல் காரணமாக ரஷியாவின் அணு ஆயுதங்கள் பயன்பாடு [பயன்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட கொள்கைகளில்] திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது.
சர்வதேச ராணுவ மற்றும் அரசியல் சூழல் தொடர்ச்சியாக மாறி வருகிறது, அதற்கு ஏற்ற முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும். நமக்கும் நமது நேச நாடுகளுக்கும் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஷிய ராணுவ தளபதிகளுடனான கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருவதால் உக்ரைன் ரஷியாவை எதிர்ப்பது என்பது உக்ரைன் வழியாக அதற்கு உதவும் அணு ஆயுத நேரடியாக ரஷியாவை எதிர்ப்பதாகக் கருதப்படும். எனவே தாங்களும் தங்களின் அணு ஆயுதங்களை உபயோகிக்கும் நிர்பந்தம் ஏற்படலாம் என்ற வகையில் புதின் பேசியுள்ளது மேற்கத்திய நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில், 8-0 சதவீதம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன. ரஷியாவிடம் மட்டுமே 6,732 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில், 1,572 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு முக்கிய இடங்களில் எந்நேரமும் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.






