என் மலர்
அமெரிக்கா
- மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
- சோதனையை சில மாதங்களில் நியூராலிங்க் நிறுவனம் தொடங்க உள்ளது.
வாஷிங்டன்:
உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் "சிப்" பொருத்தி கணினியுடன் இணைத்து, நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உதவிகளை வழங்க ஆய்வு நடத்தி வருகிறது.
நரம்பியல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களும், பக்கவாதம், பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஸ்மார்ட்போன் கணினி போன்ற ஸ்மார்ட் டிவைஸ்களை எளிதாக பயன்படுத்தும் நோக்கத்துடன் அவர்களது மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன் மூலம் கண் பார்வை, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது.
இதில் பல கட்ட சோதனையில் குரங்குகளின் மூளையில் 'சிப்'பை பொருத்தி நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன.
இது தொர்பான ஆய்வறிக்கைகைளை அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் நியூராலிங்க் நிறுவனம் சமர்ப்பித்து அடுத்த கட்டமாக மனிதர்களிடம் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஒப்புதலுக்கு அமெரிக்க அரசிடம் நியூராலிங்க் நிறுவனம் பலமுறை விண்ணப்பித்து இருந்தது. ஆனால் அவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது அனுமதி வழங்கி உள்ளது.
இது தொடர்பாக நியூராலிங்க் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, "ஒருநாள் எங்கள் தொழில்நுட்பம் ஏராளமானோருக்கு உதவி செய்ய போவதன் முக்கிய முதல்படிதான் இது.
நியூராலிங்க் குழுவினர் மேற்கொண்ட மிகவும் இன்றியமையாத பணிகளின் காரணமாக அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் இந்த அனுமதியை அளித்திருக்கிறது" என்று கூறியுள்ளது.
மேலும் மூளையில் உள்ள தகவல்களை ப்ளுடூத் மூலம் மின் பொருட்களுக்கு அனுப்புவது குறித்து மேற்கொள்ளப்படும் சோதனையில் பங்கேற்பவர்களை பதிவு செய்யும் பணிகள் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சோதனையை சில மாதங்களில் நியூராலிங்க் நிறுவனம் தொடங்க உள்ளது.
- புதிய கட்டுமானத்தில் இருந்த வீடு ஒன்று திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமானது.
- மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கான்ரோவில் நேற்று கடும் சூறாவளி புயல் தாக்கியது. மேலும், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால், நகரின் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தண்ணீரால் நகரம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. அப்போது, புதிய கட்டுமானத்தில் இருந்த வீடு ஒன்று திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமானது. கட்டுமானப் பணியில் இருந்தவர்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் விபத்தில் சிக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுட்ன மீட்கப்பட்ட 7 பேரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- வியாழன் கிரகத்தில் மாறி வரும் கோடுக்கான காரணம் குறித்து தீவிர ஆராய்ச்சிகள் நடந்தன.
- கோடுகளின் நிறங்கள் மாறலாம் அல்லது சில நேரங்களில் முழு வானிலை முறையும் சிறிது சிறிதாக மாறுகிறது.
வாஷிங்டன்:
சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக வியாழன் உள்ளது. பூமியை போல் 1300 மடங்கு பெரியதாகும். வியாழன் ஒரு வாயுக்கோள் ஆகும். இதன் வளிமண்டலம் பெறும்பாலும் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் ஆனது. இதைச்சுற்றி தூசித் துகள்களால் ஆன வளையங்கள் உள்ளன.
வியாழன் கிரகத்தில் நிறங்கள் அடிக்கடி மாறி வருகின்றன. நகரும் மற்றும் மாறக்கூடிய வண்ணங்களின் பட்டைகளை விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
வியாழன் கிரகத்தில் மாறி வரும் கோடுக்கான காரணம் குறித்து தீவிர ஆராய்ச்சிகள் நடந்தன.
இந்த நிலையில் இங்கிலாந்தின் சீட்ஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த வானியலாளர்கள் கூறும்போது, வியாழன் கிரகத்தின் காந்த புலத்தில் அதன் உட்புறத்தில் ஆழமாக உற்பத்தி செய்யப்படும் அலைகளால் நிறங்கள் மாறுபாடு ஏற்படலாம். இது கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் கீழே நிகழ்கிறது. ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் நிறங்கள் மாறுகின்றன. கோடுகளின் நிறங்கள் மாறலாம் அல்லது சில நேரங்களில் முழு வானிலை முறையும் சிறிது சிறிதாக மாறுகிறது. அது ஏன் ஒளி நிகழ்கிறது என்பது மர்மமாக உள்ளது.
பூமிக்கு நிலஅதிர்வியல் மற்றும் சூரியனுக்கும் ஹீரியோ சிஸ்மலாஹி செய்வது போல், வியாழனில் மறைந்திருக்கும் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்ய முடியும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விபத்து பகுதியில் இருந்து நாஜிக்களின் கொடி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
- விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகை அருகே நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் லாரி ஒன்று தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, லபாயெட் சதுக்க பகுதியில் உள்ள சாலை மற்றும் நடைபாதையை அதிகாரிகள் மூடினர். மேலும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை அமெரிக்க உளவு துறை அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்காவுக்கான உளவு துறையின் தலைமை தகவல் தொடர்பு தலைவர் அந்தோணி குக்லியெம்லி கூறினார்.
பாதுகாப்பு குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனை அமெரிக்காவுக்கான உளவு துறையின் தலைமை தகவல் தொடர்பு தலைவர் அந்தோணி குக்லியெல்மி கூறியுள்ளார்.
மேலும், விபத்து பகுதியில் இருந்து நாஜிக்களின் கொடி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதுபற்றியும், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் இந்திய வம்சாவளியான மிசோரி, செஸ்டர்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் மீது ஆபத்தான ஆயுதத்தால் தாக்குதல், மோட்டார் வாகனத்தை பொறுப்பற்ற முறையில் இயக்குதல், ஜனாதிபதி, துணைத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர் மீது கொலை மிரட்டல் அல்லது கடத்தல் அல்லது தீங்கு விளைவித்தல், கூட்டாட்சி சொத்துகளை அழித்தல் மற்றும் அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் இத்தாலியில் காலமானார்.
- இந்தப் படத்தில் வரும் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேயர் கேரக்டரில் நடித்தவர்.
வாஷிங்டன்:
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் (58), இத்தாலியில் காலமானார். இந்தப் படத்தில் வரும் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேயர் கேரக்டரில் நடித்தவர். ஸ்டீவன்சன் ஆர்ஆர்ஆர் படத்தில் ஏற்று நடித்திருந்த எதிர்மறையான பாத்திரமும், அவரின் நடிப்பும் வரவேற்பைப் பெற்றது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆர்ஆர்ஆர் படக்குழு, அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி! ரே ஸ்டீவன்சன், நிம்மதியாக ஓய்வெடுங்கள். நீங்கள் எங்கள் இதயங்களில் சர் ஸ்காட் ஆக என்றென்றும் இருப்பீர்கள் என பதிவிட்டுள்ளது.
- தொழில் அதிபர் ஜான் ஷோப்னர் பணம் செலுத்தி விண்வெளி பயணத்தை மேற்கொண்டார்.
- சவுதி அரேபிய அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
கேப்கனவெரல்:
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ்சின் தனியார் ராக்கெட் புறப்பட்டு சென்றது.
இந்த ராக்கெட் அமெரிக்காவின் கேப்கனவெரலில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட்டது.
சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை ரய்யானா பர்னாவி, விமானப்படை பைலட் அலி அல்கர்னி மற்றும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்திவிட்சன், தொழில் அதிபர் ஜான்ஷோப்னர் என 4 பேர் விண்வெளிக்கு சென்றனர்.
அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ்பால்கென்-9 விண்கலத்தில் பயணம் செய்தனர். இதில் தொழில் அதிபர் ஜான் ஷோப்னர் பணம் செலுத்தி விண்வெளி பயணத்தை மேற்கொண்டார்.
ஆக்சியம் ஸ்பேஸ் ஏஎக்ஸ்-2 திட்டத்தில் அவர்கள் அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருப்பார்கள். சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் முதல் முறையாக விண்வெளிக்கு சென்றுள்ளனர்.
சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளரான ரய்யானா பர்னாவி, சவுதி விமானப் படையின் விமானி அலி அல்-கர்னி அனுப்பப்பட்டுள்ளார்.
ரய்யானா பர்னாவி, விண்வெளிக்கு சென்ற முதல் சவுதி அரேபிய பெண் என்ற பெருமையை பெற்றார். சவுதி அரேபிய அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் சவுதி அரேபியாவை சேர்ந்த வீரர், வீராங்கனையை தனியார் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.
- அமெரிக்காவின் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது.
- துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அமெரிக்காவின் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பலியானவர்கள் அனைவரும் வயதானவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
- அமெரிக்க பல்கலைக்கழகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தொடர்பாக அறிக்கை வெளியிட்டது.
- பணிநீக்க கடிதம் தற்போது பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் உள்ள ஹொட்டன் பல்கலைக்கழகத்தில் ரெசிடென்ஸ் ஹால் இயக்குநர்கள் ரெய்கன் ஜெலயா மற்றும் ஷுவா வில்மோட் ஆகியோர் தங்கள் மின்னஞ்சல் கையொப்பங்களில் "அவள்" மற்றும் "அவன்" போன்ற பிரதி பெயர்களைப் பயன்படுத்தியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், உங்கள் மின்னஞ்சல் கையொப்பத்தில் உள்ள பிரதிபெயர்களை நீக்க இருவரும் மறுத்ததை அடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த, பணிநீக்க கடிதம் தற்போது பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக கடந்த மாதம் வீடியோ ஒன்றை முன்னாள் இயக்குனர்கள் வெளியிட்டு விளக்கி இருந்தனர். அந்த வீடியோவில், மின்னஞ்சல் அனுப்பும்போது பெறுநர்கள் பலர் தங்கள் முதல் பெயரிலிருந்து ஒருவரின் பாலினத்தை அடையாளம் காண முடியாமல் போகிறது என்றும், இதன் அடையாளமாக மின்னஞ்சல்களில் பிரதிபெயர்களைச் சேர்க்க முடிவு செய்தோம் னெ்று விளக்கமளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விமானி, தம்பதியர் என 3 பேரின் உடல்களை கைப்பற்றினர்.
- குழந்தைகளை தேடும் பணியில் 100 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான் வனப்பகுதியில் இருந்து தம்பதி தனது 11 மாத கைக்குழந்தை உள்பட 4 குழந்தைகளுடன் ஹெலிகாப்டரில் சன் ஜொஷி டி கவ்ரி நகருக்கு கடந்த மாதம் 1ம் தேதி சென்றுள்ளனர்.
அமேசான் அடவனப்பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, தம்பதி என 3 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக 11 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் இந்த விபத்தில் உயிர் பிழைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்தனர்.
அங்கு விமானி, தம்பதியர் என 3 பேரின் உடல்களை கைப்பற்றினர். இதையடுத்து, குழந்தைகளை தேடும் பணியில் 100 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
இந்நிலையில், 17 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை உள்பட 4 குழந்தைகளை உயிருடன் மீட்கப்பட்டனர்.
- உலகின் மிக பழமையான பைபிள் கையெழுத்து பிரதிகளில் ஒன்றாகும்.
- 4 நிமிட ஏலத்துக்கு பிறகு ஹீப்ரு பைபிளை சோதே பிஸ் நிறுவனம் 38.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.313 கோடி) ஏலத்தில் எடுத்தது.
நியூயார்க்:
1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட பைபிள், 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டது.
இது உலகின் மிக பழமையான பைபிள் கையெழுத்து பிரதிகளில் ஒன்றாகும். இந்த பைபிளை ருமேனியாவிற்கான அமெரிக்க முன்னாள் தூதர் ஆல்பிரட் மோசஸ், வாங்கி இருந்தார்.
இந்த ஹீப்ரு மொழி பைபிள், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் 2 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
4 நிமிட ஏலத்துக்கு பிறகு ஹீப்ரு பைபிளை சோதே பிஸ் நிறுவனம் 38.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.313 கோடி) ஏலத்தில் எடுத்தது. இந்த பைபிள், இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள யூத மக்களின் அருங்காட்சியகத்துக்கு பரிசாக வழங்கப்படும் என்று சோதேபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க முன்னாள் தூதர் மோசஸ் கூறும்போது, 'ஹீப்ரு பைபிள் வரலாற்றில் மிகவும் செல்வாக்குமிக்கது. மேற்கத்திய நாகரீகத்தின் அடித்தளமாக உள்ளது. இது யூத மக்களுக்கு சொந்தமானது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
1994-ம் ஆண்டு லியொனார்டோ டாவின்சியின் கோடெக்ஸ் லீசெஸ்டர் கையெழுத்து பிரதி 30.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. அதை ஹீப்ரு பைபிள் முறியடித்தது.
இதன்மூலம் ஏலத்தில் விற்கப்பட்ட மிக மதிப்பு மிக்க கையெழுத்து பிரதி என்ற சாதனையை படைத்தது.
- டேவிட் ஹெட்லிக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பது ராணாவுக்கு தெரியும்.
- ராணாவை நாடு கடத்துவதற்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
வாஷிங்டன்:
மும்பையின் பல்வேறு இடங்களில் 2008ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது நண்பரும், தாக்குதல் திட்டத்திற்கு உதவியவருமான கனடாவில் வசித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தஹவூர் ராணா (வயது 62) 2020ம் ஆண்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
தாக்குதல் வழக்கில், இவரது பங்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நாடு கடத்தக் கோரி அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, ராணாவின் நண்பரான டேவிட் ஹெட்லிக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பதும், ஹெட்லிக்கு உதவுவதன் மூலமும், அவனது நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளித்து, பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதும் ராணாவுக்குத் தெரியும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஹெட்லி யார் யாரையெல்லாம் சந்தித்தார்? என்ன பேசப்பட்டது? தாக்குதலுக்கு திடட்மிடப்பட்ட சில இலக்குகள் உட்பட தாக்குதல்களின் திட்டமிடல் ஆகியவற்றை ராணா அறிந்திருந்தார் என்றும் தெரிவித்தனர். ராணாவை நாடு கடத்துவதற்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்சின் மத்திய மாவட்ட நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் மே 16ல் உத்தரவு பிறப்பித்தார். அதில், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம் என்றார்.
- அமெரிக்காவை சேர்ந்த நிக் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
- ராஜ நாகத்தை ஆற்றங்கரையில் இருந்து எடுத்து அதன் நெற்றியில் முத்தமிடுவது போன்று உள்ளது.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும். ஆனால் வனத்துறையினரும், பாம்பை பிடிப்பவர்களும் லாவகமாக பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவதை பார்த்திருக்கிறோம். அதே நேரத்தில் ராஜ நாகம் ஒன்றை லாவகமாக பிடித்த வாலிபர் அதற்கு நெற்றியில் முத்தம் கொடுப்பது போன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த நிக் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 12 அடி ராஜநாக பாம்புக்கு முத்தம் கொடுப்பீர்களா? என்ற கேள்வியுடன் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் நிக், எந்த பதட்டமும் இல்லாமல் 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை ஆற்றங்கரையில் இருந்து எடுத்து அதன் நெற்றியில் முத்தமிடுவது போன்று வீடியோ உள்ளது.
இதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த ஒளிப்பதிவாளரை ராஜநாகம் தாக்க முயன்றுள்ளது. ஆனால் நிக்கின் கையில் அந்த பாம்பு அசையாமல் நிற்கிறது. பார்ப்பவர்களை பதற வைக்கும் இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.






