என் மலர்
உலகம்

இமெயிலில் பிரதிபெயர்களைப் பயன்படுத்தியதற்காக ஊழியர்கள் பணிநீக்கம்- அமெரிக்க பல்கலைக்கழகம் நடவடிக்கை
- அமெரிக்க பல்கலைக்கழகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தொடர்பாக அறிக்கை வெளியிட்டது.
- பணிநீக்க கடிதம் தற்போது பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் உள்ள ஹொட்டன் பல்கலைக்கழகத்தில் ரெசிடென்ஸ் ஹால் இயக்குநர்கள் ரெய்கன் ஜெலயா மற்றும் ஷுவா வில்மோட் ஆகியோர் தங்கள் மின்னஞ்சல் கையொப்பங்களில் "அவள்" மற்றும் "அவன்" போன்ற பிரதி பெயர்களைப் பயன்படுத்தியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், உங்கள் மின்னஞ்சல் கையொப்பத்தில் உள்ள பிரதிபெயர்களை நீக்க இருவரும் மறுத்ததை அடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த, பணிநீக்க கடிதம் தற்போது பரவலாக பரப்பப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக கடந்த மாதம் வீடியோ ஒன்றை முன்னாள் இயக்குனர்கள் வெளியிட்டு விளக்கி இருந்தனர். அந்த வீடியோவில், மின்னஞ்சல் அனுப்பும்போது பெறுநர்கள் பலர் தங்கள் முதல் பெயரிலிருந்து ஒருவரின் பாலினத்தை அடையாளம் காண முடியாமல் போகிறது என்றும், இதன் அடையாளமாக மின்னஞ்சல்களில் பிரதிபெயர்களைச் சேர்க்க முடிவு செய்தோம் னெ்று விளக்கமளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






