என் மலர்tooltip icon

    கனடா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கடந்த 2019-ம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 காரட் செவெலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    உலகின் 2-வது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கனடா நிறுவனமான லுகாரா டைமண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 1905-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் கல்லினன் வைரத்திற்கு பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும். போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    கடந்த 2019-ம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 காரட் செவெலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரம் பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் லூயிஸ் உய்ட்டன் வாங்கியது. அதன் விலையை வெளியிடவில்லை.

    2016-ம் ஆண்டு இதே சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்பட்ட 1,109 காரட் வைரத்தை, 2017-ம் ஆண்டு கிராஃப் டைமண்ட்ஸின் தலைவரான லண்டன் நகைக்கடை வியாபாரி லாரன்ஸ் கிராஃப் $53 மில்லியனுக்கு வாங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த பட்டதை வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் மிலி பெற்றுள்ளார்
    • அடுத்ததாகச் சர்வதேச அழகிப் போட்டியிலும் மிலி பங்கேற்க உள்ளார்.

    கனடா நாட்டின் மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த பெண் பட்டம் வென்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிஸஸ் கனடா எர்த் 2024 ஆம் ஆண்டுக்கான அழகிப்போட்டியின் இறுதிக்கட்டம் கடந்த மாத இறுதியில் நடைபெற்றது.

    'இளைய தலைமுறைக்கான ஆரோக்கியம் நிறைந்த உடல் மற்றும் மன நலன் மிக்க வாழ்க்கைக்கு யோகாவின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் இந்த வருட அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த மிலி என்ற பெண் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துள்ளார்.

    இந்த பட்டதை வெல்லும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் மிலி பெற்றுள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கனடா மலையாளி பெண்களின் அழகிப் போட்டியிலும் இவர் முதலிடம் பெற்றிருந்தார். அடுத்ததாகச் சர்வதேச அழகிப் போட்டியிலும் மிலி பங்கேற்க உள்ளார்.

     

     

    பொறியாளரான மிலி தனது கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வசித்து வருகிறார். 52 போட்டியாளர்களுடன் இந்த அழகிப் போட்டியில் கலந்துகொண்ட மிலி, இளைஞர்களின் தற்கொலை எண்ணங்களை மட்டுப்படுத்த யோகாவின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். 

    • கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    டொரண்டோ:

    கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 6-3, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ரூப்லெவ், இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டை சந்திக்கிறார்.

    • கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    டொரண்டோ:

    கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிஸ்மோவா உடன் மோதினார்.

    இதில் அனிஸ்மோவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் அனிஸ்மோவா, சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை சந்திக்கிறார்.

    நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ரஷிய வீராங்கனை டயானா ஸ்னெய்டர், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொள்கிறார்.

    • சுமார் 50 மீன்கள் வரை கூட்டமாக நெளிந்து கொண்டிருந்தது பாம்புக்கூட்டத்தை நினைவூட்டின.
    • வீடியோ காட்சிகள், எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

    விமானத்தின் சரக்கு பெட்டகம் உடைந்து வெளியேறிய விலாங்கு மீன்கள், பாம்புகள் போல நெளியும் காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகிறது.

    கனடாவின் டொராண்டோ நகரில் இருந்து வான்கூவர் சர்வதேச விமானநிலையத்திற்கு விமானத்தில் அனுப்பப்பட்டது அந்த சரக்குப்பெட்டி. அதை ஒரு கப்பலில் ஏற்றும்போது எப்படியோ பெட்டகத்தில் உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்த விலாங்கு மீன்கள் கொட்டின. அவை அரை மீட்டர் நீளமுள்ள பெரிய விலாங்கு மீன்கள் என்பதால் அவை நெளிவது பாம்புகளின் தோற்றத்தை வெளிப்படுத்தின.

    சுமார் 50 மீன்கள் வரை கூட்டமாக நெளிந்து கொண்டிருந்தது பாம்புக்கூட்டத்தை நினைவூட்டின. அவற்றை மீண்டும் பிடித்துபெட்டகத்தில் அடைத்து பாதுகாப்பாக கப்பலேற்றி அனுப்பினர்.

    இதுபற்றிய வீடியோ காட்சிகள், எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.


    • கனடா ஓபனில் பிரியன்ஷு ரஜாவத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • இவர் அரையிறுதியில் பிரான்ஸ் வீரரிடம் தோல்வி அடைந்தார்.

    ஒட்டாவா:

    கனடா ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று நேற்று நடந்தது. இதில், உலக தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ரஜாவத், பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியரை எதிர்கொண்டார்.

    இதில் ரஜாவத் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் தோற்று அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    • மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.
    • ஆஸ்கார் விழாவில், ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது.

    WWE மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. இவரின் பெயரை கேட்டாலே, 90-ஸ் கிட்ஸ் மனங்களில் மகிழ்ச்சி ஏற்படும் என்றே கூறலாம். அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும்.

    16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜான் சீனா WWE போட்டிகளால் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கனடா நாட்டின் டொரோண்டோவில் நடைபெற்ற 'மணி இன் தி பேங்க்' (Money in the Bank) போட்டியில் திடீரென தோன்றிய ஜான் சீனா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அவர் ஓய்வு பெறவுள்ளார்.

    47 வயதாகும் ஜான் சீனா ஓய்வு அறிவிப்பை தெரிவிக்கும்போது சுற்றியிருந்த கூட்டத்தினர் ஓய்வு பெறவேண்டாம் என்று கூச்சலிட்டனர்.

    2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெஸில்மேனியா 41 இல் தான் போட்டியிட போவதாகவும் இந்த போட்டிகளோடு WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன் என்று ஜான் சீனா அறிவித்தார்.

    மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார்.

    அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடை ஏறியது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

    • கனடா ஓபனில் பிரியன்ஷு ரஜாவத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
    • இவர் காலிறுதியில் டென்மார்க் வீரரை வீழ்த்தினார்.

    ஒட்டாவா:

    இந்தியாவின் வளர்ந்து வரும் பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத் கனடா ஓபனில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    கனடா ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று நேற்று நடந்தது. இதில், உலக தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ரஜாவத், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சனை எதிர்கொண்டார்.

    இதில் ரஜாவத் 21-11, 17-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்றது.

    ரஜாவத் அரையிறுதியில் பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியரை எதிர்கொள்கிறார்.

    • கனடா வரலாற்றில் ராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார்.
    • ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக ராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார்.

    ஒட்டவா:

    கனடாவின் ராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். இதன் மூலம் கனடா வரலாற்றில் ராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார். தற்போது ஆயுத படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசாரத்தின் தலைவராக உள்ள ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக ராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார்.

    2008-ம் ஆண்டில், கனடா ஆயுத படைகளின் வரலாற்றில் ஒரு போர் படை பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.

    அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் கனடா படைகளை வழிநடத்திய ஜென்னி கரிக்னன், 2019 முதல் 2020-ம் ஆண்டு வரை, 'நேட்டோ மிஷன் ஈராக்'கை வழிநடத்தினார்.

    • எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒரே நாளில் 6½ லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது.
    • பலரும் பறக்கும் தட்டுகள் பற்றிய கருத்துகளை பதிவிட்டனர்.

    கனடாவின் மானிடோபா மாகாணத்தில் கார் பயணம் செய்து கொண்டிருந்த ஜஸ்டின் ஸ்டீவன்சன்(49) அவரது மனைவி டேனியல் (32), வானில் திடீர் வெளிச்சத்தை கண்டு வியப்படைந்தனர். உடனே அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இரட்டை கோளங்களாக அருகருகே நெருப்பு பிழம்பு போல பிரகாசமாக ஒளிர்ந்தது. அவை வின்னிபெக் ஆற்றின் மீது வட்டமிடுவதுபோன்று நகர்ந்தன.

    அதை படம் பிடித்துக்கொண்டே பேசிய ஸ்டீவன்சன், "யே..கோவ்... நாங்கள் நிஜமாகவே சில வேற்றுக்கிரக வாசிகளை பார்க்கிறோம் என்று நினைக்கிறேன்" என்று பேசுகிறார். அப்போதே சற்று அருகில் அதேபோன்று மேலும் 2 இரட்டை கோள உருண்டைகள் ஒளிர ஆரம்பித்தன. மொத்தம் 4 சூரியன்கள் ஒளிர்வது போல இந்த காட்சிகள் தெரிந்தன.

    எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ ஒரே நாளில் 6½ லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது. பலரும் பறக்கும் தட்டுகள் பற்றிய கருத்துகளை பதிவிட்டனர்.

    • உள்ளூர் மக்களும் இங்கே என்ன நடக்கிறது என்று ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.
    • பல இடங்களில் வேலைவாய்ப்புக்காக சென்றதாகவும், எங்கு வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை என நிஷாத் கூறினார்.

    அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் படித்தால் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இதனால் மேற்படிப்புக்காக ஆண்டு தோறும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் தாய் நாட்டை விட்டு மேல்நாட்டிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். படிப்பிற்காக பல லட்சங்களும் செலவு செய்யப்படுகிறது. படிப்பு நேரம் போக மீதி நேரத்தில் வேலை பார்ப்பதில் வரும் சம்பளத்தில் மாணவர்கள் தங்களது இதர செலவுகளை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள வீடியோ பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    நிஷாத் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், கனடாவில் பிரபல உணவகமான டிம் ஹார்டனில் வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நிற்கின்றனர். நிஷாத்தும் வேலைக்காக அங்கு சென்ற போது நூற்றுக்கணக்கானவர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். உள்ளூர் மக்களும் இங்கே என்ன நடக்கிறது என்று ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.

    பல மணி நேரம் வரிசையில் நிற்பவர்களிடம் உணவக ஊழியர்கள், அவர்களது விண்ணப்பங்களை வாங்கிக்கொண்டு பிறகு அழைப்பதாக கூறி அனுப்பி விடுகின்றனர். நிஷாத் பல இடங்களில் வேலைவாய்ப்புக்காக சென்றதாகவும், எங்கு வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை, இது எனது போராட்டம் நிறைந்த நாள் என்று கூறினார்.

    • யுவராஜூக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை எதற்கு நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது
    • இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்று தெரியவந்துள்ளது.

    கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானவை சேர்ந்த 28 வயதாகும் யுவராஜ் கோயல் கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காகக் கனடா சென்றார். படிப்பு முடிந்து அங்கேயே சேல்ஸ் எக்சிகியூடிவ் வேலையில் சேர்ந்த அவர் சமீபத்தில்தான் குடியுரிமை பெற்று கனடாவிலேயே செட்டில் ஆனார்.

    இந்நிலையில் கடந்த ஜூன் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    நேற்று முன் தினம் [ஜூன் 8] 3 இந்தியர்கள் மற்றும் ஒரு கனேடியர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. யுவராஜூக்கு எந்த ஒரு குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை எதற்கு நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. போலீசார் நடத்தி வரும் விசாரணையில் இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்று தெரியவந்துள்ளது.

     

    ஏற்கனவே இந்தியா மற்றும் கனடாவுக்கிடையில் பஞ்சாபில் தனி நாடு கோரும் காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களை முன்வைத்து பிரச்சனை நிலவி வருகிறது. சமீபத்தில் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர் கொல்லப்பட்டதில் இந்திய அரசுக்குத் தொடர்புள்ளது என்று கனடா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×