என் மலர்
கால்பந்து
- 2022 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணி 3-வது முறையாக கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது.
- குணா திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.
2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றார்.
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கால்பந்து உலக கோப்பையை வென்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, FIFA உலகக்கோப்பை இன்ஸ்டா பக்கத்தில் "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல" என்ற வரிகளோடு இளையராஜா பாடலை வெளியிட்டுள்ளனர்.
கமல் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அண்மையில் மலையாளத்தில் வெளியான 'மஞ்சுமேல் பாய்ஸ்' திரைப்படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியிருந்தனர். இதனையடுத்து இந்த பாடல் உலகம் முழுவதும் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- மொனாக்கோ அணியில் இடம் 180 மில்லியன் யூரோ கொடுத்து பிஎஸ்ஜி அணி வாங்கியது.
- பிஎஸ்ஜி அணிக்காக 178 போட்டிகளில் விளையாடி 162 கோல்கள் அடித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக கிலியன் எம்பாப்வே உள்ளார். தற்போது மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்குப் பிறகு உலக அளவில் சிறந்த வீரரான திகழ்ந்து வருகிறார்.
25 வயதாகும் எம்பாப்வே தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து போட்டியில் மொனாக்கோ அணிக்காக விளையாடி வந்தார். தனது 15 வயதில் மொனாக்கோ சீனியர் அணியில் அறிமுகம் ஆனார். 2015 முதல் 2018 வரை மொனாக்கோ அணிக்காக 41 போட்டிகளில் விளையாடி 16 கோல்கள் அடித்தார்.
2016-17 சீசனில் மொனாக்கோ லீக்-1 டைட்டிலை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக எம்பாப்பேயின் ஆட்டமாகும். இதனால் உலகின் மிகப்பெரிய பணக்கார கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எம்பாப்வேவை லோன் மூலம் வாங்கியது. 2017-18-ல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக 27 போட்டிகளில் விளையாடி 13 கோல் அடித்தார்.
அதன்பின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் 180 மில்லியன் யூரோ கொடுத்து மொனாக்கோ அணியில் இருந்து எம்பாப்பவே வாங்கியது. அப்போது எம்பாப்வேவுக்கு 18 வயது.
பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனதும் எம்பாப்வேயின் ஆட்டம் மெருகேறியது. சுமார் ஆறு ஆண்டுகள் (2018-2024) பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக விளையாடினார். 178 போட்டிகளில் விளையாடி 162 கோல்கள் அடித்தார்.
பிஎஸ்ஜி அணியில் நெய்மர், மெஸ்சி இணைந்தனர். மூன்று ஜாம்பவான்கள் சேர்ந்து விளையாடிய போதிலும் பிஎஸ்ஜி அணியால் ஐரோப்பிய சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முடியவில்லை.
பிஎஸ்ஜி அணியில் இருந்து முதலில் மெஸ்சி வெளியேறினார். அதன்பின் எம்பாப்வே வெளியேற முடிவு செய்தார். அவரை பல்வேறு அணிகள் வாங்க முன்வந்தன. ஆனால் எம்பாப்வே லா லிகா லீக்கில் விளையாடும் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்பினார்.
இதற்கிடையே பிஎஸ்ஜி- எம்பாப்வே இடையில் ஒப்பந்தம் 2024 சீசன் வரை இருந்தது. ஒப்பந்தம் முடிவடைய இருந்த நேரத்தில் எம்பாப்வே- பிஎஸ்ஜி இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி அவரை வாங்க முயற்சி மேற்கொண்டது.
எம்பாப்வே உடனான ஒப்பந்தம் முடிவடைவதற்குள் ஒப்பந்ததத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி தவறியது. இதனால் ரியல் மாட்ரிட் அணிக்கு ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் சென்றார். 5 வருட ஒப்பந்த கால அடிப்படையில் எம்பாப்பே ரியல் மாட்ரிட் சென்றுள்ளார்.
ஒரு அணியுடன் ஒப்பந்தம் இல்லை என்றால் மற்றொரு அணி எந்தவிதமான டிரான்ஸ்பர் பீஸ் இல்லாமல் அந்த வீரரை ஒப்பந்தம் செய்ய முடியும். அதேவேளையில் சம்பளம் அதிக அளவில் கொடுக்க நேரிடும். ரியல் மாட்ரிட் எம்பாப்பேவுக்கு வருடத்திற்கு சுமார் 305 கோடி ரூபாய் சம்பளம் வழங்குகிறது.
இதனால் ரியல் மாட்ரிட் எம்பாப்வே டிரான்ஸ்பருக்கான ஒரு பைசா கூட கொடுக்காமல் ஒப்பந்தம் செய்தது. ரியல் மாட்ரிட் அணிக்காக தற்போது 15 போட்டிகளில் விளையாடி 9 கோல்கள் அடித்துள்ளார்.
2021-ல் ரியல் மாட்ரிட் 180 மில்லியன் யூரோ கொடுக்க தயாராக இருந்தது. ஆனால் பிஎஸ்ஜி மறுத்துவிட்டது. தற்போது ப்ரீ டிரான்ஸ்பராக சென்றுள்ளார்.
18 வயதில் சாதனை
பிஎஸ்ஜி அணியில் இணைந்த போது எம்பாப்வே 2017-ல் தனது 18 வயதில் பிரான்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். 2018 உலகக் கோப்பையில் கோல் அடித்து, இளம் வயதில் உலகக் கோப்பையில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் உலக அளவில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பட்டியலில் பீலேவுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார். பிஃபா உலகக் கோப்பை சிறந்த இளம் வீரர், பிரான்சின் சிறந்த வீரர் ஆகிய விருதுகளை வென்றார்.
2021-ல் பிரான்ஸ் யுஇஎஃப்ஏ (UEFA) தேசிய லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் அதிக கோல்கள் அடித்த வீரருக்கான விருதை வென்றார்.

2022 உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். தங்க ஷூ (Golden Boot), வெள்ளி பந்து (Silver Ball) ஆகியவற்றை வென்றார்.
அடுத்தடுத்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் இதுவரை பலோன் டி'ஆர் விருதை மற்றும் பெறவில்லை. 2023-ல் 3-வது இடம் பிடித்தார்.
- 2034-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான உரிமத்துக்கு வளைகுடா நாடான சவுதிஅரேபியா மட்டுமே விண்ணப்பித்து இருந்தது.
- சவுதிஅரேபியா உலகக் கோப்பை போட்டியை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.
சூரிச்:
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 2026-ம் ஆண்டில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் 2030 மற்றும் 2034-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை எந்த நாட்டுக்கு வழங்குவது என்பது குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைமையகத்தில் நேற்று 'பிபா' நிர்வாக கமிட்டியினர் கியானி இன்பான்டினோ தலைமையில் ஆலோசித்தனர். இதில் 'பிபா'வின் 211 நாட்டு உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர்.
இதன் முடிவில் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு ஸ்பெயின், போர்ச்சுக்கல், மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டது. உலகக் கோப்பை தொடங்கி 100 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், 2030-ம் ஆண்டு உலகக்கோப்பையில் 3 ஆட்டங்கள் மட்டும் அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்க நாடான உருகுவேயில் தான் முதலாவது உலகக்கோப்பை போட்டி 1930-ம் ஆண்டு நடந்தது நினைவு கூரத்தக்கது.
2034-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான உரிமத்துக்கு வளைகுடா நாடான சவுதிஅரேபியா மட்டுமே விண்ணப்பித்து இருந்தது. பிபா உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அந்த நாட்டுக்கு 2034-ம் ஆண்டு போட்டியை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சவுதிஅரேபியா உலகக் கோப்பை போட்டியை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனை சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 4-2 என பெங்களூரு எப்.சி அணி வென்றது.
- பெங்களூரு எப்.சி. அணியின் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார்.
பெங்களூரு:
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் பெங்களூருவில் நேற்று நடந்த லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, பெங்களூரு எப்.சி அணியுடன் மோதியது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், பெங்களூரு எப்.சி. அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி ஐ.எஸ்.எல். தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்த வயதான வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
இதன்மூலம் ஐதராபாத் எப்.சி. அணிக்காக 38 வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த நைஜீரிய வீரர் பார்தோலோமிவ் ஓக்பெச்சேவின் சாதனையை சுனில் சேத்ரி முறியடித்துள்ளார்.
சுனில் சேத்ரியின் சமீபத்திய ஹாட்ரிக் ஐஎஸ்எல்லில் அவரது மூன்றாவது ஹாட்ரிக் ஆகும். இதற்கு முன் 2015ல் மும்பை சிட்டி எப்.சி.க்காகவும், 2018ல் பெங்களூரு எப்.சி.க்காகவும் ஹாட்ரிக் அடித்துள்ளார்.
- முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது.
- சென்னை அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை.
சென்னை:
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் சென்னையின் எப்.சி., ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈஸ்ட் பெங்கால் அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தியது.
சென்னை அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணி அசத்தல் வெற்றி பெற்றது.
- போட்டியின்போது நடுவர் சர்ச்சைக்குரிய முடிவு வழங்கியதால் ரசிகர்கள் கடுங்கோபம்.
- கோபம் அடைந்த ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 100-க்கும் மேற்பட்டோர் பலி.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 100-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கொல்லப்பட்டனர்.
கினியாவின் 2-வது மிகப்பெரிய நகர் N'Zerekore. இங்கு சுமார் 2 லட்சம் மக்கள் வசித்தி வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது இரண்டு அணி ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்தினர். நடுவர் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியதால் கோபம் அடைந்த ரசிர்கள் மைதானத்தை முற்றுகைியட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.
கினியாவின் ஜுன்டா தலைவர் மமாதி தவும்பௌயா ஏற்பாடு செய்திருந்த கால்பந்து தொடரின் ஒரு பகுதியான இந்த போட்டி நடத்தப்படடுள்ளது. கினியாவில் இது போன்று கால்பந்து தொடர் நடத்தப்படுவது வழக்கம்.
- முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- பின்னர் 52 மற்றும் 76-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிக் கோல் அடித்தது.
UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டம் லிவர்பூல் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியில் லிவர்பூல்- ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பலம் வாய்ந்த ஸ்பெயின் கிளப் அணியான ரியல் மாட்ரிட்டால் சொந்த மைதானத்தில் விளையாடிய லிவர்பூல் அணிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை என்றாலும், 2-வது பாதி நேரத்தில் லிவர்பூல் அணி ஆதிக்கம் செலுத்தியது.
அந்த அணியின் அலேக்சிஸ் மெக் அலிஸ்டர் 52-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். பின்னர் 76-வது நிமிடத்தில் கோடி கக்போ கோல் அடிக்க லிவர்பூல் 2-0 என முன்னிலை பெற்றது.
ரியல் மாட்ரிட் பதில் கோல் அடிக்க எவ்வளவு போராடியும் பலன் அளிக்கவில்லை. இறுதியாக லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்றது.
லிவர்பூல் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி ஐந்திலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 24-வது இடத்தை பிடித்துள்ளது.
36 அணிகளை கொண்ட இந்த தொடரில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 9 முதல் 24 இடங்களை பிடித்த அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் விளையாடும்.
- போட்டிக்கான அனைத்து நிதி உதவிகளும் மாநில வணிகர்களால் வழங்கப்படும்.
- கொள்ளும் சர்வதேச போட்டியை நடத்தும் திறன் கேரளாவிற்கு உள்ளது- மாநில மந்திரி
கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் மெஸ்சியுடன் கூடிய அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடும் என அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் மேற்பார்வையில் இந்த போட்டி நடத்தப்படும். இந்த உயர்தர போட்டிக்கான அனைத்து நிதி உதவிகளும் மாநில வணிகர்களால் வழங்கப்படும். மெஸ்சி கலந்து கொள்ளும் சர்வதேச போட்டியை நடத்தும் திறன் கேரளாவிற்கு உள்ளது என மந்திரி நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
- ஏசி மிலன் அணி 3-1 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.
- நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் 2024-25 போட்டியின் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன் அணிகள் மோதின. இந்த போட்டி ஸ்பெயினின் மாட்ரிட்டில் உள்ள சாண்டியாகோ பெர்னாபியூவில் நடைபெற்றது.
பரபரப்பான இந்த போட்டியில் ஏசி மிலன் அணி 12-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணி 23-வது நிமிடத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தது.
இதனையடுத்து 39-வது நிமிடத்திலும் 73-வது நிமிடத்திலும் மிலன் அணி கோல் அடித்து அசத்தியது. இறுதியில் ஏசி மிலன் அணி 3-1 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் மாட்ரிட் அணி நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
- மின்னல் தாக்கியதில், ஜோஸ் ஹியுகா டி லா குரூஸ் மிஜா என்ற வீரர் கடுமையாக பாதிக்கப்பட்டு கீழே விழுந்துள்ளார்.
- கடந்த பிப்ரவரியில் இந்தோனேசிய கால்பந்து வீரர் செப்டன் ரஹஜா என்பவர் மின்னல் தாக்கியதில் பலியானார்.
பெரு நாட்டின் சில்கா மாவட்டத்திற்கு உட்பட்ட ஹுவான்கேயோ பகுதியில் பெல்லாவிஸ்டா மற்றும் சோக்கா ஆகிய இரு உள்ளூர் அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி ஒன்று நடந்தது. 22 நிமிடங்கள் போட்டி நடந்ததில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பெல்லாவிஸ்டா முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், திடீரென மின்னல் தாக்கியதில், ஜோஸ் ஹியுகா டி லா குரூஸ் மிஜா (வயது 39) என்ற வீரர் கடுமையாக பாதிக்கப்பட்டு உடனடியாக கீழே விழுந்துள்ளார். அவர் தவிர, கோல்கீப்பர் ஜுவான் சோக்கா லேக்டா (வயது 40) என்பவருக்கும் தீவிர காயம் ஏற்பட்டது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. குறைந்தது 8 பேர் மின்னல் தாக்கியதும் மைதானத்தில் சரிந்து விழுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.
குரூஸ் மிஜா மீது தீப்பற்றுவது போன்ற காட்சியும் அதில் காணப்பட்டது. இதில், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, முன்பே உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. இதனால், போட்டியும் கைவிடப்பட்டது.
கையில் உலோக பிரேஸ்லெட் ஒன்றை அணிந்திருந்துள்ளார் என்றும் அதனால், மின்னல் அவரை தாக்கியிருக்க கூடும் என தகவல் கூறுகிறது. கடந்த பிப்ரவரியில், இந்தோனேசிய கால்பந்து வீரர் செப்டன் ரஹஜா (வயது 30) என்பவர் மின்னல் தாக்கியதில் பலியானார். இதேபோன்று, காங்கோவில் 25 ஆண்டுகளுக்கு முன் மின்னல் தாக்கியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
- காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல் நாசர் -அல் தாவூன் அணிகள் மோதின.
- பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டார்.
ரியாத்:
கிங் கோப்பை சாம்பியன்ஸ் கால்பந்து,தொடரில் நேற்று நடைபெற்ற காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல்-நாசர் - அல் தாவூன் அணிகள் மோதின. ரியாத்தில் நடந்த இந்த போட்டியில் அல் தாவூன் அணியின் வலீத் அகமது 71-வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது .
பின்னர் அல்-நாசர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதில் கோல் அடிக்கும் வாய்ப்பை ரொனால்டோ தவற விட்டார். இதனால் அல் தாவூன் அணி ஆட்ட நேர முடிவில் 1-0 என வெற்றி பெற்றது. ரொனால்டோவின் அணி தொடரிலிருந்து வெளியேறியது.
- மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றார்.
- பாலோன் டி’ ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு தான் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதுகளில் ஒன்று பலோன் டி'ஆர் விருது. மெஸ்சி பார்சிலோனாவுக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிய காலத்தில் இருவரும்தான் இந்த விருதை மாறிமாறி வாங்கியிருப்பார்கள்.
தற்போது மெஸ்சி அமெரிக்கா லீக்கில் விளையாடுகிறார். ரொனால்டோ சவுதி லீக்கில் விளையாடுகிறார். இந்த வருட விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இவர்களுடைய பெயரும் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார்.
பாலோன் டி' ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்கும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் வினிசியஸ்க்கு விருது இல்லை என தெரிய வந்தது ஆச்சரியத்தை எதிர்படுத்தியது. விருது அவருக்கு கிடைக்காததால் ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம், விழாவைப் புறக்கணித்தது.






