என் மலர்tooltip icon

    கால்பந்து

    • போட்டியின்போது நடுவர் சர்ச்சைக்குரிய முடிவு வழங்கியதால் ரசிகர்கள் கடுங்கோபம்.
    • கோபம் அடைந்த ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 100-க்கும் மேற்பட்டோர் பலி.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 100-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கொல்லப்பட்டனர்.

    கினியாவின் 2-வது மிகப்பெரிய நகர் N'Zerekore. இங்கு சுமார் 2 லட்சம் மக்கள் வசித்தி வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது இரண்டு அணி ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்தினர். நடுவர் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியதால் கோபம் அடைந்த ரசிர்கள் மைதானத்தை முற்றுகைியட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.

    கினியாவின் ஜுன்டா தலைவர் மமாதி தவும்பௌயா ஏற்பாடு செய்திருந்த கால்பந்து தொடரின் ஒரு பகுதியான இந்த போட்டி நடத்தப்படடுள்ளது. கினியாவில் இது போன்று கால்பந்து தொடர் நடத்தப்படுவது வழக்கம்.

    • முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • பின்னர் 52 மற்றும் 76-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிக் கோல் அடித்தது.

    UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டம் லிவர்பூல் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இந்த போட்டியில் லிவர்பூல்- ரியல் மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    பலம் வாய்ந்த ஸ்பெயின் கிளப் அணியான ரியல் மாட்ரிட்டால் சொந்த மைதானத்தில் விளையாடிய லிவர்பூல் அணிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை என்றாலும், 2-வது பாதி நேரத்தில் லிவர்பூல் அணி ஆதிக்கம் செலுத்தியது.

    அந்த அணியின் அலேக்சிஸ் மெக் அலிஸ்டர் 52-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். பின்னர் 76-வது நிமிடத்தில் கோடி கக்போ கோல் அடிக்க லிவர்பூல் 2-0 என முன்னிலை பெற்றது.

    ரியல் மாட்ரிட் பதில் கோல் அடிக்க எவ்வளவு போராடியும் பலன் அளிக்கவில்லை. இறுதியாக லிவர்பூல் 2-0 என வெற்றி பெற்றது.

    லிவர்பூல் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி ஐந்திலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 24-வது இடத்தை பிடித்துள்ளது.

    36 அணிகளை கொண்ட இந்த தொடரில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 9 முதல் 24 இடங்களை பிடித்த அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் விளையாடும்.

    • போட்டிக்கான அனைத்து நிதி உதவிகளும் மாநில வணிகர்களால் வழங்கப்படும்.
    • கொள்ளும் சர்வதேச போட்டியை நடத்தும் திறன் கேரளாவிற்கு உள்ளது- மாநில மந்திரி

    கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் மெஸ்சியுடன் கூடிய அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடும் என அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.

    மாநில அரசின் மேற்பார்வையில் இந்த போட்டி நடத்தப்படும். இந்த உயர்தர போட்டிக்கான அனைத்து நிதி உதவிகளும் மாநில வணிகர்களால் வழங்கப்படும். மெஸ்சி கலந்து கொள்ளும் சர்வதேச போட்டியை நடத்தும் திறன் கேரளாவிற்கு உள்ளது என மந்திரி நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

    • ஏசி மிலன் அணி 3-1 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.
    • நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் 2024-25 போட்டியின் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன் அணிகள் மோதின. இந்த போட்டி ஸ்பெயினின் மாட்ரிட்டில் உள்ள சாண்டியாகோ பெர்னாபியூவில் நடைபெற்றது.

    பரபரப்பான இந்த போட்டியில் ஏசி மிலன் அணி 12-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணி 23-வது நிமிடத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தது.

    இதனையடுத்து 39-வது நிமிடத்திலும் 73-வது நிமிடத்திலும் மிலன் அணி கோல் அடித்து அசத்தியது. இறுதியில் ஏசி மிலன் அணி 3-1 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.

    இதன் மூலம் மாட்ரிட் அணி நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 17-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    • மின்னல் தாக்கியதில், ஜோஸ் ஹியுகா டி லா குரூஸ் மிஜா என்ற வீரர் கடுமையாக பாதிக்கப்பட்டு கீழே விழுந்துள்ளார்.
    • கடந்த பிப்ரவரியில் இந்தோனேசிய கால்பந்து வீரர் செப்டன் ரஹஜா என்பவர் மின்னல் தாக்கியதில் பலியானார்.

    பெரு நாட்டின் சில்கா மாவட்டத்திற்கு உட்பட்ட ஹுவான்கேயோ பகுதியில் பெல்லாவிஸ்டா மற்றும் சோக்கா ஆகிய இரு உள்ளூர் அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி ஒன்று நடந்தது. 22 நிமிடங்கள் போட்டி நடந்ததில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பெல்லாவிஸ்டா முன்னிலையில் இருந்தது.

    இந்நிலையில், திடீரென மின்னல் தாக்கியதில், ஜோஸ் ஹியுகா டி லா குரூஸ் மிஜா (வயது 39) என்ற வீரர் கடுமையாக பாதிக்கப்பட்டு உடனடியாக கீழே விழுந்துள்ளார். அவர் தவிர, கோல்கீப்பர் ஜுவான் சோக்கா லேக்டா (வயது 40) என்பவருக்கும் தீவிர காயம் ஏற்பட்டது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. குறைந்தது 8 பேர் மின்னல் தாக்கியதும் மைதானத்தில் சரிந்து விழுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.

    குரூஸ் மிஜா மீது தீப்பற்றுவது போன்ற காட்சியும் அதில் காணப்பட்டது. இதில், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, முன்பே உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. இதனால், போட்டியும் கைவிடப்பட்டது.

    கையில் உலோக பிரேஸ்லெட் ஒன்றை அணிந்திருந்துள்ளார் என்றும் அதனால், மின்னல் அவரை தாக்கியிருக்க கூடும் என தகவல் கூறுகிறது. கடந்த பிப்ரவரியில், இந்தோனேசிய கால்பந்து வீரர் செப்டன் ரஹஜா (வயது 30) என்பவர் மின்னல் தாக்கியதில் பலியானார். இதேபோன்று, காங்கோவில் 25 ஆண்டுகளுக்கு முன் மின்னல் தாக்கியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.



    • காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல் நாசர் -அல் தாவூன் அணிகள் மோதின.
    • பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டார்.

    ரியாத்:

    கிங் கோப்பை சாம்பியன்ஸ் கால்பந்து,தொடரில் நேற்று நடைபெற்ற காலுறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் அல்-நாசர் - அல் தாவூன் அணிகள் மோதின. ரியாத்தில் நடந்த இந்த போட்டியில் அல் தாவூன் அணியின் வலீத் அகமது 71-வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது .

    பின்னர் அல்-நாசர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதில் கோல் அடிக்கும் வாய்ப்பை ரொனால்டோ தவற விட்டார். இதனால் அல் தாவூன் அணி ஆட்ட நேர முடிவில் 1-0 என வெற்றி பெற்றது. ரொனால்டோவின் அணி தொடரிலிருந்து வெளியேறியது.

    • மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றார்.
    • பாலோன் டி’ ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு தான் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

    கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதுகளில் ஒன்று பலோன் டி'ஆர் விருது. மெஸ்சி பார்சிலோனாவுக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிய காலத்தில் இருவரும்தான் இந்த விருதை மாறிமாறி வாங்கியிருப்பார்கள்.

    தற்போது மெஸ்சி அமெரிக்கா லீக்கில் விளையாடுகிறார். ரொனால்டோ சவுதி லீக்கில் விளையாடுகிறார். இந்த வருட விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இவர்களுடைய பெயரும் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார்.

    பாலோன் டி' ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்கும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் வினிசியஸ்க்கு விருது இல்லை என தெரிய வந்தது ஆச்சரியத்தை எதிர்படுத்தியது. விருது அவருக்கு கிடைக்காததால் ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம், விழாவைப் புறக்கணித்தது.

    • மான்செஸ்டர் சிட்டி 4 முறை தொடர்ந்து பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணம்.
    • யூரோ கோப்பையில் ஸ்பெயின் இங்கிலாந்தை 2-1 என வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்.

    கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதுகளில் ஒன்று பலோன் டி'ஆர் விருது. மெஸ்சி பார்சிலோனாவுக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிய காலத்தில் இருவரும்தான் இந்த விருதை மாறிமாறி வாங்கியிருப்பார்கள்.

    அவர்கள் இருவருக்கிடையே கடும் போட்டி நிலவும். தற்போது மெஸ்சி அமெரிக்கா லீக்கில் விளையாடுகிறார். ரொனால்டோ சவுதி லீக்கில் விளையாடுகிறார். இந்த வருட விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இருவருடைய பெயரும் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார். 2023-24 சீசனில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார். தொடர்ந்து நான்காவது முறையாக மான்செஸ்டர் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

    2024 யூரோ கோப்பையில் தனது நாடான ஸ்பெயின் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 2-1 என ஸ்பெயின் வீழ்த்தியது. தொடரின் நாயகன் விருதையும் வென்றார். இந்த காலக்கட்டத்தில் 14 கோல்கள் அடிப்பதற்கு உதவி புரிந்துள்ளார். அதேவேளையில் 10 கோல்களும் அடித்துள்ளார்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ 2008-ல் மான்செஸ்ட் யுனைடெட் அணிக்காக பலோன் டி'ஆர் விருதை வென்ற பிறகு இங்கிலீஷ் பிரீமியரில் விளையாடும் ஒரு வீரர் பலோன் டி'ஆர் விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    • கிட்டத்தட்ட 6 மாதங்கள் 20 நாட்களில் இந்த பயணத்தை காங் முடித்துள்ளார்.
    • ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்துள்ளார்.

    உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கால்பந்து ஆட்டத்தில் சிறந்த வீரராக வலம் வரும் இவரை நேரில் பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். அந்த வகையில் சீன ரசிகர் ஒருவர் ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ரொனால்டோ, கடந்த பிப்ரவரி மாதம் சீனா செல்வதாக இருந்தது. ஆனால் அந்த பயணம் எதிர்பாராதவிதமாக ரத்து செய்யப்பட்டது. அவரை பார்க்க ஆவலாக இருந்த சீன ரசிகர் காங் இதனால் மிகவும் வருத்தமடைந்தார். இதனையடுத்து அவரை நேரில் பார்க்க சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டார்.

    அதன்படி சீனாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சைக்கிளில் வந்து ரொனால்டோவை சந்தித்துள்ளார். இந்த பயணத்தை கடந்த மார்ச் 18-ந் தேதி சீனாவில் தொடங்கிய அவர் 7 நாடுகளை கடந்து அக்டோபர் 20-ந் தேதி சவுதி அரேபியாவை வந்தடைந்தார். கிட்டத்தட்ட 6 மாதங்கள் 20 நாட்களில் இந்த பயணத்தை காங் முடித்துள்ளார்.

    இறுதியாக ரொனால்டோவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் ரொனால்டோ ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியையும் காங் பரிசாக பெற்றுக் கொண்டார்.


    • மாட்ரிட் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்ரிட் வீரர் வினிசியஸ் கூறினார்.
    • இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாகவும் வினிசியஸ் கூறினார்.

    பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனா அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த போட்டியில் 77-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் இளம் வீரர் லமின் யமால் ஒரு கோல் அடித்தார். கோல் அடித்த உற்சாகத்தில் அதனை கொண்டாடும் விதமாக ஜெர்சியில் இருக்கும் அவரது பெயரை சுட்டிக் காட்டி கொண்டாடினார். உடனே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவர் மீது இனவெறி முழக்கங்களை எழுப்பினர். 17-வது வயதான வீரருக்கு எதிராக ரசிகர்கள் இனவெறி முழுக்கம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் பார்சிலோனா அணி வீரர் லமின் யமால் மீது இனவெறி முழக்கங்கள் எழுப்பிய மாட்ரிட் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார். 



    • ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதா ஒரு கோல் அடித்தார்.
    • ஆட்டத்தின் 141-வது நிமிடத்தில் நேபாளத்தின் சபித்ரா ஒரு கோல் அடித்தார்.

    காத்மண்டு:

    நேபாளத்தில் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடைபெறுகிறது.

    காத்மண்டுவில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதா ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 141-வது நிமிடத்தில் நேபாளத்தின் சபித்ரா ஒரு கோல் அடித்தார். இறுதியில், போட்டி 1-1 என சமனில் இருந்தது.

    இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நேபாளம் 4-2 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணி தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறியது.

    • இந்தியாவுக்காக 50 கோல்களை அடித்ததில் பெருமைப்படுகிறேன்.
    • இந்த சாதனையை என அப்பாவிற்கு அர்ப்பணிக்கிறேன்.

    சர்வதேச கால்பந்தில் 50 கோல்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மணிப்பூரைச் சேர்ந்த இங்கோகம் பாலா தேவி பெற்றுள்ளார்.

    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

    இந்த மைல்கல்லை எட்டியது குறித்து பேசிய பால தேவி, "இந்தியாவுக்காக 50 கோல்களை அடித்ததில் பெருமைப்படுகிறேன். இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். இந்த சாதனையை என் அப்பாவிற்கு அர்ப்பணிக்கிறேன். எனக்கு கால்பந்து விளையாட்டை சொல்லி கொடுத்தது என் அப்பா தான். நான் இன்று இங்கு இருப்பதற்கு காரணமும் என் அப்பா தான்" என்று தெரிவித்தார்.


    ×