என் மலர்
நீங்கள் தேடியது "வினிசியஸ் ஜூனியர்"
- மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றார்.
- பாலோன் டி’ ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு தான் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதுகளில் ஒன்று பலோன் டி'ஆர் விருது. மெஸ்சி பார்சிலோனாவுக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிய காலத்தில் இருவரும்தான் இந்த விருதை மாறிமாறி வாங்கியிருப்பார்கள்.
தற்போது மெஸ்சி அமெரிக்கா லீக்கில் விளையாடுகிறார். ரொனால்டோ சவுதி லீக்கில் விளையாடுகிறார். இந்த வருட விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இவர்களுடைய பெயரும் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார்.
பாலோன் டி' ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்கும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் வினிசியஸ்க்கு விருது இல்லை என தெரிய வந்தது ஆச்சரியத்தை எதிர்படுத்தியது. விருது அவருக்கு கிடைக்காததால் ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம், விழாவைப் புறக்கணித்தது.
- சர்வதேச கால்பந்து சங்கம் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
- இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கத்தார் தலைநகர் தோகாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தோகா:
சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. பிபா வெளியிடும் இறுதிப்பட்டியலில் இருந்து சிறந்த வீரர், வீராங்கனை தேசிய அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், கால்பந்து பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கத்தார் தலைநகர் தோகாவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற 11 வீரர்களில் பிரேசில் வீரரும், ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுபவருமான வினிசியஸ் ஜூனியர் சிறந்த கால்பந்து வீரராக அறிவிக்கப்பட்டார்.
2016-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதை பெற்ற முதல் பிரேசில் வீரர் என்ற பெருமையை 24 வயது வினிசியஸ் ஜூனியர் பெற்றார். வாக்குகள் அடிப்படையில் அவருக்கு 48 புள்ளி கிடைத்தது. ஸ்பெயின் வீரர் ரோட்ரி 43 புள்ளிகளுடன் 2-வது இடமும், இங்கிலாந்து வீரர் ஜூட் பெலிங்ஹாம் 37 புள்ளிகளுடன் 3-வது இடமும் பெற்றனர்.
சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் வீராங்கனை போன்மதி தொடர்ந்து 2-வது முறையாக தட்டிச் சென்றார்.






