என் மலர்tooltip icon

    கால்பந்து

    • மெஸ்சி 8 முறை பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார்.
    • ரொனால்டோ 5 முறை பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார்.

    கால்பந்தில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். கால்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் உயரிய விருது பலோன் டி'ஆர் விருது. இந்த விருதை மெஸ்சி 8 முறை வென்றுள்ளார். ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார்.

    2024-ம் ஆண்டிக்கான பலோன் டி'ஆர் விருது அக்டோபர் 28-ந்தேதி வழங்கப்பட இருக்கிறது. அதற்கான 30 வீரர்கள் கொண்ட பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மெஸ்சி மற்றும் ரொனால்டோ பெயர் இடம் பெறவில்லை.

    2003-ம் ஆண்டில் இருந்து தற்போதுதான் பரிந்துரை பட்டியலில் இருவருடைய பெயரும் இடம் பெறாதது இதுதான் முதன் முறையாகும்.

    மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றார். பின்னர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு சென்றார்.

    மெஸ்சி முதன்முறையாக 2006-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 2009-ல் முதல் விருதை வென்றார். ரொனால்டோ 2004-ம் ஆண்டு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்டார். 2008-ல் இருந்து இருவரிடையே கடும் போட்டி நிலவியது. 13 முறை இவர்கள்தான் வென்றுள்னர்.

    ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவென்டஸ் அணிக்கு சென்றார். தற்போது சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    • பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடிய நிலையில் ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார்.
    • இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

    பிரான்ஸ் கால்பந்து அணி கேப்டன் எம்பாப்பே. இவர் உலகின் தலைசிறந்த வீரரான திகழ்ந்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வந்த எம்பாப்பே, ப்ரீடிரான்ஸ்ஃபர் மூலமாக உலகின் முன்னணி கால்பந்து அணியான ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக UEFA சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் அட்லாண்டா அணிக்கெதிராக களம் இறங்கினார். இதுதான் ரியல் மாட்ரிட் அணிக்காக எம்பாப்பே களம் இறங்கிய முதல் போட்டியாகும். இந்த போட்டியில் எம்பாப்பே ஒரு கோல் அடித்து அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

    தற்போது லா லிகா கால்பந்து லீக் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு ரியல் மாட்ரிட் ரியல் பெட்டிஸ் அணியை எதிர்கொண்டது.

    இதற்கு முன்னதாக மூன்று போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக எம்பாப்பே களம் இறங்கி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் அவருக்கு எதிராக விமர்சனம் எழும்பியது.

    இந்த நிலையில் ரியல் பெட்டிஸ் அணிக்கெதிராக எம்பாப்பே லா லீகாவில் முதல் கோலை பதிவு செய்தார். 67-வது நிமிடத்தில் எம்பாப்பே கோல் அடித்தார். அத்துடன் 75-வது நிமிடத்தில் பொனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. இதையும் சரியான பயன்படுததி கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது.

    லா லிகா புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது. ரியல் மாட்ரிட் 2 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் டிராவுடன் 8 புள்ளிகள் பெற்று 2-வது இடம் வகிக்கிறது.

    • கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.
    • ரொனால்டோ 'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

    உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். 39 வயதான ரொனால்டோ கால்பந்து வாழ்க்கையில் தனது கடைசி கட்டத்தை எட்டியுள்ளார்.

    கால்பந்து வீரர் ரொனால்டோ தற்போது யூட்யூபராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

    'யுஆர் கிறிஸ்டியானோ' என்ற புதிய யூடியூப் சேனலை அவர் தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளேன். அதை அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்" என்று காமெடியாக பேசியுள்ளார்.

    ரொனால்டோவின் யூட்யூப் சேனலை 1 மணிநேரத்திற்குள் 1 மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இதுவரை இந்த சேனலில் 18 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • 44-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்து அல்- நாசர் அணியை முன்னிலை பெற செய்தார்.
    • அதன் பின் அல் நாசர் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

    ரியாத்:

    சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பாக நடந்த போட்டியின் 44-வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ அல்- நாசர் அணியை முன்னிலை பெற செய்தார்.

    ஆனால் அதன் பின் அல் நாசர் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. மாறாக அல் - ஹிலால் அடுத்தடுத்து கோல்களை போட்டு தாக்கியது. முடிவில் அல் - ஹிலால் 4-1 என்ற கோல் கணக்கில் ரொனால்டோவின் அல் - நாசர் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது.

    அல் - ஹிலால் தரப்பில் அலெக்சாண்டர் மித்ரோவிக் 2 கோல்களும், செர்ஜி மிலின்கோவிக் மற்றும் மால்கம் தலா 1 கோல் அடித்து அணி வெற்றி பெற உதவினர்.

    • இறுதிப்போட்டியில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை செய்தது.
    • தோல்வியடைந்த விரக்தியில் ரொனால்டோ செய்த கையசைவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியானது நேற்று நடைபெற்ற நிலையில் ரொனால்டோவின் அல் - நாசர் அணி அல்- ஹிலால் அணியுடன் பலப்பரீட்சை செய்தது. விறுவிறுப்பாக நடந்த போட்டியின் 44 வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ அல்- நாசர் அணியின் ஆட்டதை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றார்.

    ஆனால் அதைதொடர்நது மைதானம் அல்- ஹிலால் வசம் சென்றது. ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் அல்- ஹிலால் அணி வீரர் செர்ஜி மிலின்கோவிக் கோல் ஒன்றை விளாசி புள்ளிப் பட்டியலை சமன் செய்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 63 மற்றும் 69 வது நிமிடத்தில் அல் ஹிலால் வீரர் அலெக்சாண்டர் மித்ரோவிசிக் 2 அடுத்தடுத்து கோல்களை விளாசினார்.

    இறுதியாக ஆட்டத்தின் 72 வது நிமிடத்தில் அல்- ஹிலால் வீரர் மால்கம் ஒரு கோல் ஸ்கோர் செய்தார். இதன் மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் அல்- ஹிலால் அணி ரொனால்டோவின் அல்- நாசர் அணியை தோற்கடித்து கோப்பையைத் தட்டிச் சென்றது.

    உலகக்கோப்பை வென்ற மெஸ்ஸி ஸ்டைலில் அல்-ஹிலால் அணி கேப்டன் சலீம் அல் - தாஸ்ரி  [Salem Al-டவ்சரி] கோப்பையை பெற்றுகொள்ள கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதற்கிடையில் தோல்வியடைந்த விரக்தியில் எல்லாரும் தூங்கிறார்கள், எல்லாம் முடிந்தது என்ற தோரணையில் மைதானத்தில் ரொனால்டோ செய்த கையசைவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • இந்த சீசனில எத்தனை கோல் என்ற எல்லை கிடையாது.
    • முக்கியமான விசயம் வெற்றி பெற்று அணியை முன்னேற்ற வெண்டும் என்பதுதான்.

    பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்வே. இவர் பாரீஸ் சூப்பர் ஜெய்ன்ட் அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணியில் இருந்து ப்ரீ டிரான்ஸ்பராக ரியல் மாட்ரிட் அணிக்கு வந்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் அணியுடன் ஐந்து வருடத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். முதல்முறையாக சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக அட்லாண்டா அணியை எதிர்த்து விளையாடினார்.

    இந்த போட்டியில் 2-0 என ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 2-வது கோலை எம்பாப்வே அடித்தார். இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்காக அடித்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் எம்பாப்பே "நாங்கள் ரியல் மாட்ரிட். எங்களுக்கு எல்லை கிடையாது. எனக்கும் இந்த சீசனில எத்தனை கோல் என்ற எல்லை கிடையாது. என்னால் 50 கோல்கள் அடிக்க முடியும் என்றால், அது 50 ஆக இருக்கும். ஆனால், முக்கியமான விசயம் வெற்றி பெற்று அணியை முன்னேற்ற வெண்டும் என்பதுதான். ஏனென்றால் நாங்கள் ஒரு அணியாக வெற்றிக்கு சென்று கொண்டிருக்கிறோம்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய இந்த இரவு (நேற்றிரவு இறுதிப்போட்டி) சிறந்த இரவாக அமைந்தது. ரியல் மாட்ரிட்டி ஜெர்சி அணிந்து விளையாடுவதற்காக நீண்ட காலம் காத்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு சிறந்த தருணம்" என்றார்.

    • பார்க்கிங் இடத்தில் வைத்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.
    • மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவரை தேடிவருகின்றனர்.

    17 வயதான இளம் கால்பந்து வீரர் லாமின் யமல். ஸ்பெயின் அணிக்காக யூரோ-2024 தொடரில் களம் இறங்கி அசத்தினார். பிரான்ஸ் அணிக்கெதிரான அரையிறுதியில் கோல் அடித்து வெற்றிக்கு உதவினார். அத்துடன் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 2-1 என இங்கிலாந்தை வீழ்த்தியது. இதில் ஒரு கோல் அடிக்க உதவியாக இருந்தார். தற்போது கால்பந்து பயிற்சியில் தீவிரமாக உள்ளார்.

    இவரது தந்தை மௌனிர் நஸ்ராயுய். இவர் நேற்று பார்சிலோனா அருகே கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளார். மட்டாரோ நகர் அருகே இரவு நேரத்தில் பார்க்கிங் இடத்தில் சிலர் இவரை கைத்தியால் குத்தியுள்ளனர். கேன் ருட்டியில் உள்ள படாலோனாவின் புஜோல் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    கத்துக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போலீஸ் காவலில் உள்ளனர். சந்தேகத்திற்குரிய நான்காவது நபரை போலீசார் தேடு வருகின்றனர். 

    • ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து தொடர் லா லிகா
    • தமிழ் பாடலை ஒளிபரப்ப வேண்டும் என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.

    உலக அளவில் அதிக பேர் விரும்பி பார்க்கும் விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். பல்வேறு நாடுகளில் கால்பந்து விளையாட்டிற்கு லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஸ்பெயின் நாட்டின் பிரபல கால்பந்து தொடரான லா லிகாவின் இன்ஸ்டா பக்கத்தில் தமிழ் ரசிகர் ஒருவர் பின்னணி பாடலாக தமிழ் பாடலை ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டிருந்தார்.

    அவரது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக லா லிகாவின் இன்ஸ்டா பக்கத்தில், லியோ படத்தின் 'Badass' பாடலுடன் எடிட் செய்யப்பட்ட வீடியோ பதிவிடப்பட்டதால் தமிழ் கால்பந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • பெண்கள் பிரிவு ஆட்டம் இன்று தொடங்குகிறது.
    • அர்ஜென்டினா-மொராக்கா அணிகள் மோதின.

    பாரீஸ்:

    ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெறுகிறது. ஆனால் கால்பந்து, ரக்பிசெவன்ஸ் போட்டிகள் நேற்று தொடங்கின.

    கால்பந்து போட்டியில்'ஏ' பிரிவில் நடந்த ஆட்டம் ஒனறில் பிரான்ஸ்-அமெரிக்கா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் சீனியர் அணியை தோற் கடித்தது.

    'டி' பிரிவில் ஜப்பான் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. இஸ்ரேல்-மாலி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

    'பி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா-மொராக்கா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டி னா 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டம் ஈராக் 2-1 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. பெண்கள் பிரிவு ஆட்டம் இன்று தொடங்குகிறது.

    ரக்பி செவன்ஸ் போட்டி யில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிஜி, அயர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து அணிகள் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றன. வில் வித்தை, ஹேண்ட்பால் போட்டிகள் இன்று தொடங்கியது.

    வில்வித்தை போட்டியின் ரேங்கிங் சுற்றில் இந்தியா சார்பில் தீபக், தருண்தீப்ராய், பிரவீன் ஜாதவ் மற்றும் வீராங்கனை பஜன்கவுர், தீபிகா குமாரி, அங்கீதா பகத் ஆகியோர் பங்கேற்கிறார்கள். 

    • அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    • கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.

    அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதன்மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.

    நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சிகாகோ பயர் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர் மியாமி க்ளப் வெற்றி பெற்றது.

    இப்போட்டி நடைபெறுவதற்கு முன்பு கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற ஜாம்பவான் மெஸ்ஸியை இன்டர் மியாமி க்ளப் கௌரவித்தது.

    ஆண்டு வாரியாக வென்ற 45 கோப்பைகளின் படங்களை கைகளில் ஏந்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்தது.
    • இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்து 3-வது சுற்றுக்கு வரத் தவறியது. கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்காக 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

    இந்நிலையில், இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த மனோலோ மார்கிசை நியமனம் செய்தது அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு.

    மனோலோ மார்கிஸ் தற்போது எப்.சி கோவா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடலூரைச் சேர்ந்த இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார்.
    • தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கவுரவமிக்க இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.

    அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்றிரவு நடந்தது. இதில் 2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை மிசோரத்தை சேர்ந்த லாலியன்ஜூலா சாங்தே பெற்றார்.

    2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த இந்துமதி கதிரேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா எப்.சி. வெற்றி பெறுவதில் முக்கிய பங்காற்றிய இந்துமதி 5 கோல் அடித்தார்.

    கடலூரைச் சேர்ந்த இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கவுரவமிக்க இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.

    ×