என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    • முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
    • 5 முறை சாம்பியனான சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக மோசமான நிலையில் இருக்கிறது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்து விட்ட அந்த அணி முந்தைய ஆட்டத்தில் லக்னோவிடம் 33 ரன் வித்தியாத்தில் தோல்வி கண்டது. அந்த சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பி அடுத்த சுற்றில் உத்வேகத்துடன் களம் இறங்கும் முனைப்புடன் உள்ள குஜராத் அணி டாப்-2 இடங்களுக்குள் நீடிக்க தீவிரம் காட்டும்.

    5 முறை சாம்பியனான சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக மோசமான நிலையில் இருக்கிறது. 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (மும்பை, லக்னோ, கொல்கத்தாவுக்கு எதிராக) 10 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். வரலாற்றில் அந்த அணி கடைசி இடம் பெற்றது கிடையாது. பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே கடைசி இடத்தை தவிர்க்கலாம். 43 வயதான டோனிக்கு இது கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய வெற்றியோடு நிறைவு செய்து கடைசி இடத்தை தவிர்க்க சென்னை அணி போராடும். ஆனால் வலுவான பேட்டிங் மற்றும் பந்து வீச்சை கொண்ட குஜராத் அணியின் சவாலை சமாளிப்பது எளிதானது கிடையாது என்பதில் சந்தேகமில்லை.

    • இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது.
    • இந்த அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    அடுத்த மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில், டெஸ்ட் அணியில் இடம்பிடித்தது தொடர்பாக கருண் நாயர் கூறியதாவது:

    மீண்டும் வந்ததற்கு நன்றி. மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் அறிந்தது போலவே நானும் இதை அறிந்தேன். அழைப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன். நெருங்கியவர்களிடமிருந்து நிறைய செய்திகள் வந்தன.

    உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. கடந்த 12-16 மாதங்களாக நான் நன்றாக பேட்டிங் செய்து வருகிறேன். இது எனது செயல்முறைகளை அப்படியே வைத்திருப்பது மற்றும் எனக்கு வேலை செய்த அதே விஷயங்களைச் செய்வது பற்றியது என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 206 ரன்கள் எடுத்தது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரின் 66-வது லீக் போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் அய்யர் அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் இறங்கிய ஸ்டோய்னிஸ் 16 பந்தில்44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கே.எல்.ராகுல் 35 ரன்னும், டூ பிளசிஸ் 23 ரன்னும் எடுத்தனர். கருண் நாயர் 27 பந்தில் 44 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

    சமீர் ரிஸ்வி 22 பந்தில் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், டெல்லி அணி 19.3 ஓவரில் 208 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சமீர் ரிஸ்வி 58 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார்.
    • மார்கஸ் ஸ்டோய்னிஸ் 16 பந்தில் 44 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரியான்ஷ் ஆர்யா 9 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் 12 பந்தில் 32 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 34 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 16 பந்தில் 44 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்க 206 ரன்கள் குவித்துள்ளது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் டாப்-2 இடம் யாருக்கு என்பதை முடிவு செய்யும். முதல் இரு இடங்களுக்குள் வரும் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

    • 65-வது லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் நேற்று மோதின.
    • இந்த போட்டியில் ஐதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    லக்னோ:

    ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மெதுவாக பந்து வீசியதாக ஐதராபாத் அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் இது முதல் முறையாக விதியை மீறியதால் ரூ. 12 லட்சம் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது. ஆர்சிபி கேப்டனுக்கு இது 2-வது முறை என்பதால் அவருக்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆர்சிபி அணி வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் எது குறைந்த கட்டணமாக பார்க்கப்படுகிறதோ அதை அபராதமாக வசூக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பட்லர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • இது குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    VIDEOஇந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் பட்லர் தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது குஜராத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், சமகாலத்தில் மிகவும் கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தான் என்று ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

    சமீபத்திய நேர்காணலில் கடந்த சில ஆண்டுகளில் உங்களை மிகவும் கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்? என்று ஜாஸ் பட்லரிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த பட்லர், "அது ரோகித் ஷர்மாதான். சிறப்பாக விளையாடி இந்திய அணியை நேர்த்தியாக வழி நடத்தினார். நான் ரோகித்தின் மிகப்பெரிய ரசிகன்" என்று தெரிவித்தார். 

    • 'நீ சிங்கம்தான்' பாடலை விரும்பிக் கேட்பதாக விராட் கோலி தெரிவித்தார்.
    • "நீ சிங்கம் தான்" என்று விராட் கோலிக்கு சிம்பு புகழாரம் சூட்டினார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் ஆர்.சி.பி. அணி டாப் 4-க்குள் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில், "சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் இடம்பெற்ற 'நீ சிங்கம்தான்' பாடலை விரும்பிக் கேட்கிறேன்" என்று விராட் கோலி தெரிவித்தார்.

    அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசிய விராட் கோலி,"தற்போது எனக்கு மிகவும் பிடித்த பாடல், இதை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள், நீ சிங்கம் தான் பாடலை விரும்பிக் கேட்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை ஆர்.சி.பி. அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இதனையடுத்து இந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சிம்பு, "நீ சிங்கம் தான்" என்று விராட் கோலிக்கு புகழாரம் சூட்டினார்.

    இந்நிலையில் முதல்முறையாக கோலியை சந்தித்தது குறித்து சிம்பு பேசியுள்ளார். 'தக் லைப்' படத்தின் புரமோசனின்போது பேசிய சிம்பு, "கோலி தான் அடுத்த சச்சின் என நான் முன்பே கணித்தேன். அதுபோலவே அவர் பெரிய ஆளாக வந்தார். ஒருநாள் நேரில் சந்தித்தபோது அவரிடம் Hi சொன்னேன். நீங்கள் யார் என என்னிடம் அவர் கேட்டார். சிம்பு என்றேன். தெரியாது என்றார். அப்போது 'ஒருநாள் என்னை யார்னு தெரியவரும். அப்போ பாத்துக்கிறேனு' நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் கோலிக்கு 'நீ சிங்கம் தான்' பாடல் பிடிக்கும் என்றார். அதில் தான் நடித்திருப்பது அவருக்கு தெரியுமா? என்று சொல்ல முடியாது. ஆனால் அதுவே எனக்கு வெற்றி தான்'' என்று தெரிவித்தார்.

    • ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
    • புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பெங்களூரு அணி சரிந்துள்ளது.

    ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

    சின்னசாமி மைதானம் அல்லாத மற்ற மைதானங்களில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பெங்களூரு அணியை முதல்முறையாக ஐதராபாத் அணி தோற்கடித்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பெங்களூரு அணி சரிந்துள்ளது

    இப்போட்டியில் விராட் கோலி 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி படைத்தார்.

    • டெல்லி அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
    • புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வர பஞ்சாப் அணி முனைப்பு காட்டுகிறது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் டாப்-2 இடம் யாருக்கு என்பதை முடிவு செய்யும். முதல் இரு இடங்களுக்குள் வரும் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 17 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 190 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி கண்டுள்ளது. பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் (458 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (435), பிரியான்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா, ஷசாங் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிராரும் கலக்குகிறார்கள்.

    டெல்லி அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. தனது முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வென்று வீறுநடை போட்ட டெல்லி அடுத்த 7 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று சறுக்கியதுடன், பிளே-ஆப் வாய்ப்பையும் பறிகொடுத்தது.

    டெல்லி அணியில் லோகேஷ் ராகுல் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 504 ரன்) தவிர்த்து மற்றவர்களின் பேட்டிங் சீராக இல்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒருசேர சிறப்பாக ஆடாதது பலவீனமாக உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக முந்தைய ஆட்டத்தில் ஆடாத கேப்டன் அக்ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என்பது உறுதியாகவில்லை. அவர் உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் பாப் டு பிளிஸ்சிஸ் அணியை வழிநடத்துவார்.

    இவ்விரு அணிகள் கடந்த 8-ந்தேதி தர்மசாலாவில் சந்தித்த போது, இந்தியா -பாகிஸ்தான் சண்டை காரணமாக எல்லையில் தாக்குதல் தீவிரமானதால் ஸ்டேடியத்தில் மின்கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. அந்த ஆட்டம் தான் தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது.

    தோல்வியால் துவண்டு போயுள்ள டெல்லி அணி, பஞ்சாப்பை பதம் பார்த்து இந்த சீசனை வெற்றியோடு நிறைவு செய்யும் வேட்கையுடன் ஆயத்தமாகிறது. அதே சமயம் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வர பஞ்சாப் அணி முனைப்பு காட்டுகிறது. இதில் யாருடைய கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், நேஹல் வதேரா, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஷசாங் சிங், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், மார்கோ யான்சென், கைல் ஜாமிசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரித் பிரார்.

    டெல்லி: லோகேஷ் ராகுல், பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், சமீர் ரிஸ்வி, விப்ராஜ் நிகம், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அஷூதோஷ் ஷர்மா, அக்ஷர் பட்டேல் (கேப்டன்) அல்லது மாதவ் திவாரி, துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முஸ்தாபிஜூர் ரகுமான், முகேஷ் குமார்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.

    லக்னோ:

    ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, எஸ்ஆர்ஹெச் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.

    இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 94 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அபிஷேக் சர்மா 34 ரன்னும், அனிகேட் வர்மா 26 ரன்னும், கிளாசன் 24 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் அரை சதம் கடந்து 62 ரன்னில் அவுட்டானார்.

    விராட் கோலி 43 ரன்னும், ஜிதேஷ் சர்மா 24 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

    ஐதராபாத் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் பவர்பிளேயில் 71 ரன்கள் குவித்தது.
    • இஷான் கிஷன் 48 பந்தில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பெங்களூருவில் மழை அச்சுறுத்தல் இருப்பதால் போட்டி லக்னோவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

    இன்றைய போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக விளையாடுகிறார். இதனால் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். டாஸ் வென்ற ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தபோதிலும் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. டிராவிஸ் ஹெட் 10 பந்தில் 17 ரன்களும், அபிஷேக் சர்மா 17 பந்தில் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பவர்பிளேயில் 71 ரன்கள் குவித்தது.

    அடுத்து வந்த இஷான் கிஷன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழந்தன. கிளாசன், அனிகெட் வர்மா தலா 24 ரன்களும், நிதிஷ் ரெட்டி 4 ரன்னிகளிலும், அபிநவ் மனோகர் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8.4 ஓவரில் 100 ரன்களையும், 12.3 ஓவரில் 150 ரன்னையும் தொட்டது. இஷான் கிஷன் 28 பந்தில் அரைசதம் அடித்தார்.

    17 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. 18ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அத்துடன் ஐதராபாத் 203 ரன்கள் குவித்தது.

    19ஆவது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஐதராபாத் 216 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரை யாஷ் தயால் வீசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்துள்ளது.

    இஷான் கிஷன் 48 பந்தில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ×