என் மலர்
விளையாட்டு
- இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தத்தில் யார் இடம் பெற வேணடும் என்பதை நான் முடிவு செய்யவில்லை.
- நானும், கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் ஆடக்கூடிய 11 வீரர்களை மட்டுமே தேர்வு செய்வோம்.
தர்மசாலா:
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஷ்ரேயாஸ் அய்யர், இஷான்கிஷன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப் பட்டனர். இருவரும் முதல் தர போட்டியான ரஞ்சி டிராபியில் விளையாட மறுத்ததால் பி.சி.சி.ஐ. இந்த நடவடிக்கையை எடுத்தது.
கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. ஒட்டு மொத்தத்தில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த விவகாரம குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாய் திறந்துள்ளார். பி.சி.சி.ஐ.யின் ஒப்பந்தத்தை நான் முடிவு செய்யவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் டிராவிட் கூறியதாவது:-
இந்திய அணியில் இடம் பெறுவதற்கான பட்டியலில் அவர்கள் (இஷான்கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர்)எப்போதும் இருக்கிறார்கள். யாரும் அணியில் இடம்பெற முடியாது என்பது கிடையாது. உள்ளூர் போட்டிகளில் விளையாடும் அனைவருமே இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி தேர்வு குழுவினர்களின் கவனத்தை பெறவேண்டும்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தத்தில் யார் இடம் பெற வேணடும் என்பதை நான் முடிவு செய்யவில்லை. ஒப்பந்தம் தொடர்பான முடிவுகளை கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழுவினரும் தான் எடுப்பார்கள். இதற்கான அளவுகோல் என்ன என்பது கூட எனக்கு தெரியாது.
நானும், கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் ஆடக்கூடிய 11 வீரர்களை மட்டுமே தேர்வு செய்வோம். ஒரு வீரருக்கு ஒப்பந்தம் உள்ளதா? இல்லையா? அவர் தேர்வு செய்யப்படுவாரா என்பதை நாங்கள் ஒருபோதும் ஆலோசித்தது கிடையாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு 279 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பென் சியர்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 162 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 256 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
94 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்து இருந்தது.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 108.2 ஓவர்களில் 372 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 279 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரச்சின் ரவீந்தரா 82 ரன்னும், டாம்லாதப் 73 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்.
279 ரன் இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 34 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. இதனால் 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் அரையிறுதியில் தோல்வியடைந்தார்.
- முதல் செட்டை லக்ஷ்யா சென் கைப்பற்றினார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை தென் கொரியாவின் சியோ சியுங்-ஜே - காங் மின்-ஹியுக் இணையை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை 21-13, 21-16 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சியோ சியுங்-ஜே - காங் மின்-ஹியுக் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷ்யா சென் மற்றும் தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சாருடன் மோதினர். முதல் செட்டை சென் கைப்பற்றினார். அடுத்த 2 செட்டை அபாரமாக விளையாடிய குன்லவுட் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 22-20, 21-13, 21-11 என்ற கணக்கில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் தோல்வியடைந்தார்.
- டி20யில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
- 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே இலங்கை பவுலராக லசித் மலிங்கா நீடிக்கிறார்.
இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 86 ரன்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 19.4 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. இலங்கை அணி தரப்பில் நுவன் துஷாரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும்.
இதன் மூலம் டி20 போட்டியில் நுவன் துஷாரா புதிய சாதனை படைத்தார். டி20யில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். அதேபோல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 5-வது இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் நுவன் துஷாரா படைத்தார்.
திசாரா பெரேரா, லசித் மலிங்கா மற்றும் தனஞ்ஜெயா முதலிய 3 பவுலர்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் கைப்பற்றிய 4-வது இலங்கை பவுலராக மாறியுள்ளார். இந்த பட்டியலில் 2 முறை ஹாட்-டிரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே இலங்கை பவுலராக லசித் மலிங்கா நீடிக்கிறார்.
டி20-ல் ஹாட்-டிரிக் விக்கெட் வீழ்த்திய இலங்கை பவுலர்கள்:
1. திசாரா பெரேரா - இந்தியா (2015) - ஹர்திக் பாண்டியா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங்
2. லசித் மலிங்கா - வங்கதேசம் (2016) - முஷ்ஃபிகூர் ரஹிம், மொர்டஷா, மெஹிதி ஹாசன்
3. லசித் மலிங்கா - நியூசிலாந்து (2019) - காலின் முன்ரோ,ஹெச்டி ரூதர்ஃபோர்ட், கிராண்ட்ஹோம்
4. அகிலா தனஞ்ஜெயா - வெஸ்ட் இண்டீஸ் (2021) - லெவிஸ், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன்
5. நுவன் துஷாரா - வங்கதேசம் (2024) - ஷாண்டோ, தவ்ஹித், சௌமியா சர்கார்
- இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்று பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இதன்மூலம் 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி, 112 ஆண்டுகளில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றுள்ளது.
இந்த வெற்றியை கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று 4-1 என கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இரு தரப்பினரும் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டு இன்னிங்சிலும் அஸ்வினின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோரின் சதங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. நன்றாக முடிந்தது.
என அமீர் கூறினார்.
- நடந்த முடிந்த உலகக் கோப்பை தொடரில் டைம் அவுட் முறையில் மேத்யூஸ் அவுட் ஆனார்.
- அதற்கு ரிவேஞ்ச் கொடுக்கும் விதமாகதான் இலங்கை அணி வீரர்கள் கைகடிகாரத்தை காட்டுவது போன்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
சிலெட்:
இலங்கை அணி 3 வடிவ கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடர் முதலில் தொடங்கியது. முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹூசைன் தலா 2 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி, இலங்கை வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து வெற்றி கோப்பையை இலங்கை அணி வீரர்கள் பெற்றுக் கொண்டனர். அப்போது வங்காளதேச அணியை வெறுப்பேற்றும் விதமாக அனைத்து வீரர்களும் டைம் அவுட் Celebrations கொடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கை வீரர்கள் அப்படி நடந்து கொள்ள இதுவே காரணம். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின. அந்த போட்டியில் இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். அப்போது அவரின் ஹெல்மட்டில் ஏதோ பிரச்சனை வந்தது. இதனால் நேராக க்ரீஸிற்குள் வராமல் மாற்று ஹெல்மட் கொண்டு வருவாறு அணியினருக்கு சிக்னல் கொடுத்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் அடுத்த பந்தை வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணி வீரர்கள் நடுவர்களிடம் டைம் அவுட் முறையீடு செய்தனர்.

எம்சிசி விதியின் படி, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து வெளியேறினால், அடுத்த பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் க்ரீஸில் இருக்க வேண்டும். ஆனால் மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர். இதனால் சோகமடைந்த மேத்யூஸ், உடனடியாக ஷகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்களிடம் முறையீடு செய்தார்.
ஆனால் மேத்யூஸ் விளக்கங்களை ஏற்காத நடுவர்கள் உடனடியாக அவுட் கொடுத்தனர். இதன் மூலம் எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் மேத்யூஸ்.
இதற்கு ரிவேஞ்ச் கொடுக்கும் விதமாகதான் இலங்கை அணி வீரர்கள் கைகடிகாரத்தை காட்டுவது போன்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது.
- இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சிலெட்:
வங்காளதேசம்- இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிலெட் நகரில் நேற்று நடந்தது. இதில் 'டாஸ்' ஜெயித்த வங்காளதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக தொடக்க ஆட்டக்காரர் குசல் மென்டிஸ் 86 ரன்கள் திரட்டினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹூசைன் தலா 2 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி, இலங்கை வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரிஷாத் ஹூசைன் 53 ரன்கள் எடுத்தார்.
இலங்கை அணியில் நுவான் துஷாரா 5 விக்கெட்டும், கேப்டன் ஹசரங்கா 2 விக்கெட்டும் அறுவடை செய்தனர். இலங்கை வீரர்கள் துஷாரா ஆட்டநாயகன் விருதையும், குசல் மென்டிஸ் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது போட்டி வருகிற 13-ந் தேதி சட்டோகிராமில் நடக்கிறது.
- குஜராத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.
- 7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 5-வது வெற்றியை ருசித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.
புதுடெல்லி:
2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த குஜராத் அணியின் தொடக்க வீராங்கனை லாரா வோல்வோர்ட் 13 ரன்னில் ஹீலி மேத்யூஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதைத்தொடர்ந்து தயாளன் ஹேமலதா, மற்றொரு தொடக்க வீராங்கனையான கேப்டன் பெத் மூனியுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று அதிரடியாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பெத் மூனி 66 ரன்னில் (35 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) சஜீவன் சஜனா பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து வந்த போபி லிட்ச்பீல்டு (3 ரன்), ஆஷ்லிக் கார்ட்னெர் (1 ரன்) வந்த வேகத்திலேயே வெளியேறினார்.
சிறப்பாக ஆடிய தயாளன் ஹேமலதா 74 ரன்னில் (40 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்களில் குஜராத் அணி 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. பார்தி புல்மாலி 21 ரன்னுடன் (13 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை தரப்பில் சாய்கா இஷாக் 2 விக்கெட்டும், ஹீலி மேத்யூஸ், ஷப்னிம் இஸ்மாயில், பூஜா வஸ்ட்ராகர், சஜீவன் சஜனா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய மும்பை அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹீலி மேத்யூஸ் 18 ரன்னிலும், நாட் சிவெர் 2 ரன்னிலும், யாஸ்திகா பாட்டியா 49 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 95 ரன்களுடனும் (48 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்), அமெலி கெர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 5-வது வெற்றியை ருசித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.
- 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஜெய்ஸ்வால். அதில், "இந்த தொடர் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.இந்த தொடர் முழுவதுமே என்னுடைய பங்களிப்பை நான் சிறப்பாக வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
நான் ஒரு பவுலரை அடிக்க முடியும் என்று முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக அந்த ஓவரில் அதிரடியாக விளையாட முயற்சிப்பேன். அதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. அதிலிருந்து நான் பின்வாங்கியதே கிடையாது. அதேபோன்று ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டே இருந்தேன்.
இந்திய அணியை வெற்றியை நோக்கி தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாகவும் இருந்தது" என அவர் தெரிவித்துள்ளார்.
- டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் திணறடித்தனர்
- கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "பேட்டிங்கிற்கு சாதகமான தர்மசாலா பிட்சில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் திணறடித்தனர். குறிப்பாக, குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், அஸ்வின் 4 விக்கெட்களையும் கைப்பற்றி, இங்கிலாந்தை சுருட்டினர் என தெரிவித்தார்.
பின்னர், ஓய்வு அறிவிப்பு குறித்து ரோகித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ''எப்போது எனது ஆட்டம் போதுமானதல்ல என்று தோன்றுகிறதோ, அன்றைய நாளில் உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த கிரிக்கெட்டை ஆடி வருவதாக உணர்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த அவர், தற்போது 17ஆவது சீசனில் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாட உள்ளார். டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், ரோகித் தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 இளம் வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர்.
- சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரல், பட்டிதார், படிக்கல், ஆகாஷ் தீப் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவும், தொடர் நாயகனாக ஜெய்ஸ்வாலும் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கான கோப்பை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம், பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய்ஷா வழங்கினார். இதனையடுத்து கோப்பையை இளம் வீரர்களிடம் கொடுத்து அணி வீரர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 இளம் வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர். சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரல், பட்டிதார், படிக்கல், ஆகாஷ் தீப் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். இதில் பட்டிதார் தவிர மற்ற வீரர்கள் தங்களுக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர்.
மேலும் இந்த தொடரில் இளம் வீரர்களுடன் கேப்டன் ரோகித் சர்மா கிண்டலாக சில விஷயங்களை செய்துள்ளார். குறிப்பாக இளம் வீரர்களான சர்ப்ராஸ் கான், ஜெய்ஸ்வால் ஆகியோரை பீல்டிங் நிற்க ரோகித் கூறியது டிரெண்டானது.
மேலும் சர்ப்ராஸ் கான் கேட்ச் பிடித்து விட்டு ரிவ்யூ கேட்குமாறு கூறினார். ஆனால் ரோகித் அதை ஏற்றுக் கொள்ளாமல் விட்டு விடுவார். ரீப்ளேவில் அது அவுட் என வந்தது. இதனை பார்த்த ரோகித், சர்ப்ராஸ் கானை கிண்டலாக சைகை காட்டுவார்.
மேலும் பீல்டிங்கின் போது ஹெல்மேட் அணியாமல் சர்ப்ராஸ் கான் நிற்பார். ஓவரின் கடைசி பந்து தான். அதனால் நின்று கொள்கிறேன் என அவர் கூறுவார். உடனே ரோகித் நீ இங்க ஹீரோவா இருக்க வேண்டாம். உடனே ஹெல்மெட் அணிந்து வா என கூறுவார். இது தொடர்பான வீடியோவும் டிரெண்டானது.
இப்படி இளம் வீரர்களுடன் அக்கரையுடனும் ஜாலியாகவும் விளையாடிய ரோகித் சர்மாவுடன் இளம் வீரர்கள் அனைவரும் கோப்பையுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி, முகமது ஷமி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் ரோகித் தலைமையிலான இந்திய அணி இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இன்று நடந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் வென்றார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் டேனியல் கொலின்சுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.






