என் மலர்
விளையாட்டு
- இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இன்று நடந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் வென்றார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் டேனியல் கொலின்சுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
- இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதற்கடுத்த 3 போட்டிகளில் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெற்று 3- 1 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மார்ச் 7-ம் தேதி தரம்சாலாவில் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து குல்தீப் யாதவ், அஸ்வின் சுழலில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 229 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5, குல்தீப் 2, பும்ரா 1, ஜடேஜா 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதனால் 4- 1 (5) என்ற கணக்கில் இத்தொடரை இந்தியா வென்றது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 வருடங்கள் கழித்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோற்றும் கடைசியில் 4 - 1 என்ற கணக்கில் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற மாபெரும் வரலாற்றை இந்தியா படைத்துள்ளது.
இதற்கு முன் உலக அளவில் 1897/98, 1901/02 ஆகிய வருடங்களில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவும் (2 முறை) 1911/12இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து மட்டுமே முதல் போட்டியில் தோற்றும் கடைசியில் 4 - 1 (5) என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி படைத்துள்ளது.
- கும்ப்ளே சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.
- அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இப்போட்டியின் மூலம் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 212 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் களமிறங்கிய இந்தியா, முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்தனர். இதைத்தொடர்ந்து 259 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 35 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், அஸ்வின் 36 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுக போட்டியிலும் மற்றும் தனது 100-வது டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.
இதன்மூலம் 100-வது டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜாம்பவான்கள் பட்டியலில் அஸ்வின் இணைந்துள்ளார். 2006-ம் ஆண்டு முத்தையா முரளிதரன் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்கு பிறகு அஸ்வின் தான் இந்த சாதனையை படைத்துள்ளார்.
100வது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்
அஸ்வின்இந்தியா 2024 இங்கிலாந்து 9/128 5/77
முத்தையா முரளிதரன் இலங்கை 2006 பங்களாதேஷ் 9/141 6/54
ஷேன் வார்ன் ஆஸ்திரேலியா 2002 தென்னாப்பிரிக்கா 8/231 6/161
அனில் கும்ப்ளே இந்தியா 2005 இலங்கை 7/176 5/89
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- இந்த ஊக்கத்தொகை 2022-2023 சீசனில் இருந்து தொடங்கும் எனவும் ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்றது.
இதில் 'டாஸ்' வென்று இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டு, ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் 259 ரன்கள் இந்திய அணி கூடுதலாக சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்திய அணி தரப்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி ஓர் ஆண்டில் 75% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரருக்கு ஒரு போட்டிக்கு ரூ.45 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது 2022-2023 சீசனில் இருந்து தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிராலி 79 ரன்கள் அடித்து அவுட்டனார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டுக்கும் வீழ்த்தினர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் இந்திய அணி 477 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இப்போட்டியில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்தார்.
259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளும், பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுக்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்திய அணியில் அஸ்வினும், இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவும், இந்த டெஸ்ட் போட்டியில் மூலம் தங்களது 100-வது டெஸ்டில் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இன்று நடந்த 2வது சுற்றில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, ரஷிய வீரர் ஆண்ட்ரூ ரூப்லெவுடன் மோதினார். இதில் ரூப்லெவ் 7-6 (7-3), 6-1 என்ற செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் கரன் கச்சனாவ், பிரேசில் வீரர் தியாகோ செய்போத்துடன் மோதினார். இதில் தியாகோ 6-1, 7-5 என்ற செட்களில் கச்சனாவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ராகுல் டிராவிட் டெஸ்டில் 36 சதமும், ஒரு நாள் போட்டியில் 12 செஞ்சூரியும் (மொத்தம் 48) அடித்துள்ளார்.
- ரோகித் சர்மா டெஸ்டில் 12 சதமும், ஒரு நாள் போட்டியில் 31 மற்றும் 20 ஓவரில் 5 சதமும் அடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 162 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் அவர் 2-வது சதம் அடித்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 131 ரன் எடுத்து இருந்தார்.
59-வது டெஸ்டில் விளையாடி வரும் ரோகித் சர்மா நேற்று தனது 12-வது சதத்தை பதிவு செய்தார். ஒட்டு மொத்த சர்வதேச போட்டிகளில் 48-வது செஞ்சூரியை அடித்தார். இதன் மூலம் அவர் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை சமன் செய்தார்.
36 வயதான ரோகித் சர்மா டெஸ்டில் 12 சதமும், ஒரு நாள் போட்டியில் 31 மற்றும் 20 ஓவரில் 5 என ஆக மொத்தம் 48 சதங்களை பதிவு செய்துள்ளார்.
ராகுல் டிராவிட் டெஸ்டில் 36 சதமும், ஒரு நாள் போட்டியில் 12 செஞ்சூரியும் (மொத்தம் 48) அடித்துள்ளார்.
இருவரும் தற்போது 10-வது இடங்களில் உள்ளனர். தெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்திலும், விராட் கோலி 80 செஞ்சூரியுடன் 2-வது இடத்திலும், ரிக்கி பாண்டிங் 71 சதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 4-வது சதத்தை (14 போட்டி) ரோகித் சர்மா எடுத்தார். இதன் மூலம் அவர் கவாஸ்கர் சாதனையை சமன் செய்தார். கவாஸ்கர் 38 டெஸ்டில் 4 சதம் எடுத்து இருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக ராகுல் டிராவிட், தெண்டுல்கர் தலா 7 செஞ்சூரியும், அசாருதீன் 6 சதமும், வெங்சர்க்கார், விராட் கோலி தலா 5 செஞ்சூரியும் அடித்துள்ளனர்.
- இன்றைய ஆட்டத்தில் இந்தியா 4 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
- இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் சேர்த்திருந்தது.
குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும், பும்ரா 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. குல்தீப் யாதவ் மேலும் 3 ரன்கள் அடித்து 30 ரன்னில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

பும்ரா 20 ரன்னில் ஸ்டம்பிங் ஆக இந்தியா 477 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இன்று மேலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
- 41 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 187-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
- தரம்சாலா டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 698 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 700 என்ற மிகப்பெரிய இலக்கை எட்ட இரண்டு விக்கெட்டுகள் எடுக்க வேண்டியிருந்தது.
நேற்று சுப்மன் கில்லை வீழ்த்தியிருந்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் குல்தீப் யாதவை 30 ரன்னில் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்தார்.
முத்தையா முரளீதரன், ஷேன் வார்னே ஆகியோருக்குப் பிறகு 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முத்தையா முரளீதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். வார்னே 708 விக்கெட்டுகள் கைப்பற்றி 2-வது இடத்தில் உள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 21 வருடங்களுக்கு முன் ஜிம்பாப்வே அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
- லபுசேன் 90 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
- மேட் ஹென்றி ஏழு விக்கெட்கள் வீழ்த்தினார்.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி ஹேசில்வுட்டின் (5 விக்கெட்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 45 ரன்னுடனும், நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய நாதன் லயன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லபுசேன் அரைசதம் அடித்து சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். மறுமுனையில் லயன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த மிட்செல் மார்ஷ் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

மேட் ஹென்றி
அலேக்ஸ் கேரி 14 ரன்னிலும், ஸ்டார்க் 28 ரன்னிலும், கம்மின்ஸ் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லபுசேன் 90 ரன்கள் எடுத்த நிலையில் சவுத்தி பந்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா 256 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மேட் ஹென்றி ஏழு விக்கெட் சாய்த்தார்.
முதல் இன்னிங்சில் 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. தேனீர் இடைவேளை வரை அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது. வில் யங் 1 ரன்னில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
- ஐந்து இன்னிங்சில் மூன்று அரைசதம் அடித்துள்ளார் சர்பராஸ் கான்.
- தேனீர் இடைவேளைக்குப்பின் முதல் பந்திலேயே சர்பராஸ் கான் ஆட்டமிழந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன் குவித்துள்ளது. கில், ரோகித் சர்மா ஆகியோர் சதம் விளாசிய நிலையில் ஜெய்ஸ்வால், தேவ்தத் படிகல், சர்பராஸ் கான் ஆகியோர் அரைசதம் அடித்துள்ளனர்.
சர்பராஸ் கான் தனது ஐந்து இன்னிங்சில் 3 அரைசதம் விளாசியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் மிகப்பெரிய ஸ்கோர்களை எட்டிய அவர் இன்னும் மூன்று இலக்க ரன்னை (100) தொடவில்லை.
நேற்றைய ஆட்டத்தில் சர்பராஸ் கான் தொடக்கத்தில் 30 பந்தில் 9 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின் 55 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி 25 பந்தில் 42 ரன்கள் விளாசினார். மதிய தேனீர் இடைவேளையின்போது அவர் அவர் 59 பந்தில் 56 ரன்கள் எடுத்திருந்தார்.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே சர்பராஸ் கான் ஆட்டம் இழந்தார். சோயிப் பஷீர் வீசிய பந்தை ஆஃப் சைடு கட் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பந்து ஷார்ட் ஆக வீசப்படவில்லை. டாஸ்அஃப் ஆக வீசப்பட்ட பந்து சற்று கூடுதலாக பவுன்ஸ் ஆனது. இதனால் எட்ஜ் ஆகி ஸ்லிப் திசையில் கேட்ச் ஆனார்.
தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்தையே அவர் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எதிர்கொண்ட விதம் சுனில் கவாஸ்கருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.
பொதுவாக டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு பந்தையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். அரைசதம் அடித்து விட்டோம், சதம் அடித்துவிட்டோம் என கவனக்குறைவாக விளையாடினால் விக்கெட்டை இழக்க நேரிடும்.

கவாஸ்கர் டான் பிராட்மேனுடன் உரையாடியபோது, இது தொடர்பாக பிராட்மேன் கூறிய கருத்தை கவாஸ்கர் சர்பராஸ்கானுக்கு நினைவூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கவாஸ்கர் கூறுகையில் "டான் பிராட்மேன் உடன் உரையாடும்போது அவர் என்னிடம் "நான் 200 ரன்கள் அடித்திருந்தாலும் கூட ஒவ்வொரு பந்தையும் நான் எதிர்கொள்ளும்போது, என் மனதில் நான் ஜீரோவில் இருக்கிறேன் என்றுதான் நினைத்துக் கொள்வேன்" என்றார். ஆனால் சர்பராஸ் கான் இங்கு இதுபோன்ற ஷாட்டை செசன் தொடங்கிய முதல் பந்திலேயே அடித்துள்ளார்" என்றார்.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்னில் சுருண்ட நிலையில், இந்தியா 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பும்ரா 19 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதமடித்தார்.
- இது சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் 48-வது சதமாகும்.
தரம்சாலா:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்தார்.
இதற்கிடையே, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆட்டம் அதிரடியாக விளையாடினர்.
ரோகித் சர்மா 154 பந்தில் சதமடித்தார். இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். டெஸ்ட் போட்டிகளில் 12-வது சதமாகும்.
சுப்மன் கில்லும் சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். சுப்மன் கில் 110 ரன்னில் வெளியேறினார்.
இரண்டாம் நாள் இறுதியில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. தற்போது இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா
இந்நிலையில், இன்று சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் 48-வது சதம் இதுவாகும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 31 சதங்களும், டி20 கிரிக்கெட்டில் 5 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்களையும் ரோகித் சர்மா அடித்துள்ளார். இதன்மூலம் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் சாதனையை இவர் சமன் செய்தார்.






