search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 256 ரன்னில் ஆல்அவுட்

    • லபுசேன் 90 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
    • மேட் ஹென்றி ஏழு விக்கெட்கள் வீழ்த்தினார்.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நேற்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி ஹேசில்வுட்டின் (5 விக்கெட்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்னில் சுருண்டது.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 45 ரன்னுடனும், நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய நாதன் லயன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லபுசேன் அரைசதம் அடித்து சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். மறுமுனையில் லயன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த மிட்செல் மார்ஷ் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    மேட் ஹென்றி

    அலேக்ஸ் கேரி 14 ரன்னிலும், ஸ்டார்க் 28 ரன்னிலும், கம்மின்ஸ் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லபுசேன் 90 ரன்கள் எடுத்த நிலையில் சவுத்தி பந்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா 256 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மேட் ஹென்றி ஏழு விக்கெட் சாய்த்தார்.

    முதல் இன்னிங்சில் 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. தேனீர் இடைவேளை வரை அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது. வில் யங் 1 ரன்னில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.

    Next Story
    ×