search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரோகித் சர்மாவுடன் புகைப்படம் எடுத்து கொண்ட இளம் வீரர்கள்- வைரலாகும் புகைப்படம்
    X

    ரோகித் சர்மாவுடன் புகைப்படம் எடுத்து கொண்ட இளம் வீரர்கள்- வைரலாகும் புகைப்படம்

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 இளம் வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர்.
    • சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரல், பட்டிதார், படிக்கல், ஆகாஷ் தீப் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவும், தொடர் நாயகனாக ஜெய்ஸ்வாலும் அறிவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த தொடருக்கான கோப்பை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம், பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய்ஷா வழங்கினார். இதனையடுத்து கோப்பையை இளம் வீரர்களிடம் கொடுத்து அணி வீரர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 இளம் வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர். சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரல், பட்டிதார், படிக்கல், ஆகாஷ் தீப் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். இதில் பட்டிதார் தவிர மற்ற வீரர்கள் தங்களுக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர்.

    மேலும் இந்த தொடரில் இளம் வீரர்களுடன் கேப்டன் ரோகித் சர்மா கிண்டலாக சில விஷயங்களை செய்துள்ளார். குறிப்பாக இளம் வீரர்களான சர்ப்ராஸ் கான், ஜெய்ஸ்வால் ஆகியோரை பீல்டிங் நிற்க ரோகித் கூறியது டிரெண்டானது.

    மேலும் சர்ப்ராஸ் கான் கேட்ச் பிடித்து விட்டு ரிவ்யூ கேட்குமாறு கூறினார். ஆனால் ரோகித் அதை ஏற்றுக் கொள்ளாமல் விட்டு விடுவார். ரீப்ளேவில் அது அவுட் என வந்தது. இதனை பார்த்த ரோகித், சர்ப்ராஸ் கானை கிண்டலாக சைகை காட்டுவார்.

    மேலும் பீல்டிங்கின் போது ஹெல்மேட் அணியாமல் சர்ப்ராஸ் கான் நிற்பார். ஓவரின் கடைசி பந்து தான். அதனால் நின்று கொள்கிறேன் என அவர் கூறுவார். உடனே ரோகித் நீ இங்க ஹீரோவா இருக்க வேண்டாம். உடனே ஹெல்மெட் அணிந்து வா என கூறுவார். இது தொடர்பான வீடியோவும் டிரெண்டானது.

    இப்படி இளம் வீரர்களுடன் அக்கரையுடனும் ஜாலியாகவும் விளையாடிய ரோகித் சர்மாவுடன் இளம் வீரர்கள் அனைவரும் கோப்பையுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    விராட் கோலி, முகமது ஷமி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் ரோகித் தலைமையிலான இந்திய அணி இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×