என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ரோகித் 5 ஐ.பி.எல். பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
    • உலகக் கோப்பை தொடரில் அவர் முன்னணியில் இருந்து வழிநடத்தினார் என்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    ரோகித் சர்மாவை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை என்பது முழு வட்டம். 6 மாதத்துக்கு முன் அவர் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகக்கூட இல்லை, அதே மனிதர் இப்போது இந்தியாவை உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அவர் 2 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். அங்கு அவர் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளார். இது அவரது கேப்டன்சி மற்றும் தலைமைத்துவத் தரத்தைப் பற்றி பேசுகிறது.

    நான் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்தபோதும், விராட் இனி இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க விரும்பாதபோதும், அவர் கேப்டனாக ஆனதால் எனக்கு ஆச்சரியமில்லை.

    அவர் கேப்டனாக தயாராக இல்லாததால் அவரை கேப்டனாக்க அதிக நேரம் பிடித்தது. அவரை கேப்டனாக்க அனைவரிடமிருந்தும் நிறைய உந்துதல் தேவைப்பட்டது, அவருக்கு கீழ் இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ரோகித் 5 ஐ.பி.எல். பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை ஆகும். ஐ.பி.எல். வெல்வது சில நேரங்களில் மிகவும் கடினம். சர்வதேச கிரிக்கெட்டை விட ஐ.பி.எல். சிறந்தது என்று நான் கூறவில்லை.

    ஆனால் ஐ.பி.எல்.லில் வெற்றி பெற 16-17 (12-13) போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். உலகக் கோப்பையை வெல்ல 8-9 போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். உலகக் கோப்பையை வெல்வதில்தான் கவுரவம் அதிகம். நாளை ரோகித் அதை வெல்வார் என நம்புகிறேன்.

    உலகக் கோப்பை தொடரில் அவர் முன்னணியில் இருந்து வழிநடத்தினார். அற்புதமாக பேட்டிங் செய்தார். அது நாளை தொடரும் என நம்புகிறேன். இந்தியா மிக சரியாக முடிக்கும் என நம்புகிறேன். அவர்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும்.

    அவர்கள் போட்டியின் சிறந்த பக்கமாக இருந்தனர். நான் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பெரிய போட்டிகளை வெல்வதற்கு அது அவசியம் என்பதால் நாளை அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டார்.

    • ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், கனடா வீராங்கனை

    லைலா ஆன்னி பெர்னாண்டசுடன் மோதினார்.

    இதில் மேடிசன் கீஸ் 3-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இங்கிலாந்து அணிக்கு சுழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாது.
    • இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்தது கிடையாது என்றார் அக்தர்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் கயானாவில் நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

    இந்தியர்களால் சுழலை சமாளிக்க முடியும். ரோகித் சர்மா இங்கிலாந்தின் அதில் ரஷீத்தை சமாளித்தார்.

    ஆனால் இங்கிலாந்து அணியினருக்கு எப்படி சுழலை எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாது.

    இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்தது கிடையாது.

    அங்கே இங்கிலாந்து முதலில் பேட் செய்து 150 ரன்கள் எடுத்து இந்தியாவை அழுத்தத்தில் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 2-வது பேட்டிங் செய்வதாக அடம் பிடித்தனர்.

    மறுபுறம் இந்தியா வெற்றிக்கு தகுதியானவர்கள். இந்த தொடரை அவர்கள் வெல்ல வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.

    கடந்த ஆண்டு வென்றிருக்க வேண்டிய உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் நானும் மனமடைந்தேன். ஏனெனில் அவர்கள் வெல்வதற்கு தகுதியானவர்கள்.

    தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தி கோப்பையை வெல்லவேண்டும் என ரோகித் சர்மா சொல்லி வருகிறார். அதை வெல்வதற்கு அவர் தகுதியானவர்.

    இந்நேரம் அவர் 2 உலகக் கோப்பையை கையில் வைத்திருக்க வேண்டும். இம்முறை அவர்கள் கோப்பையை விடக்கூடாது.

    மிகவும் பெரிய வீரராகவும், சுயநலமற்ற கேப்டனாக தன்னுடைய அணிக்காக விளையாடும் அவர் தனது கேரியரை உச்சமாக முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன. விசாரணையில், அந்தச் சிலை போலி என தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், விராட் கோலியின் உருவச் சிலை டைம்ஸ் சதுக்கத்தில் அமைக்கப்படவில்லை என்ற உண்மை கண்டறியப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நாளை நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி நன்றாக விளையாடக் கோரி சிலை அமைத்துள்ளோம் டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோவில் விராட் கோலியின் நல்ல உறக்கத்துக்கு டுயூரோபிளக்ஸ் மெத்தை என விளம்பரமும் செய்திருந்தது.

    கம்ப்யூட்டர் அனிமேஷன் மூலம் விராட் கோலியின் சிலை உருவாக்கப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனியின் விளம்பர தூதராக கடந்த ஆண்டு விராட் கோலி நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார்.
    • அதில் 'தல' பல்வேறு போஸ்களை கொடுத்துள்ளார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார். அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.


    சமீபத்தில் தந்தையர் தினம் அன்று அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை கூறி டோனி மகளுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து தனது வளர்ப்பு நாய்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் சமூகவலை தளத்தில் தல டோனி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஹார்கட் செய்து புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அதில் 'தல' பல்வேறு போஸ்களை கொடுத்துள்ளார். சிரிப்பது போலும், முறைப்பது போலும் வெவ்வேறு தோற்றங்களில் செம க்யூட்டாக உள்ளார்.

    இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் "MASS" "Vaathi coming" என்று கமெண்டுகள் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இரட்டை சதமடித்தார்.

    சென்னை:

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஆகியோம் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். இந்தியா 292 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிரிதி மந்தனா 161 பந்தில் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் மந்தனா-ஷபாலி வர்மா ஜோடி 90 வருட பெண்கள் கிரிக்கெட்டில் அரிய சாதனையை படைத்துள்ளது.

    இந்நிலையில், ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 205 ரன்னில் ரன் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 411 ஆக இருந்தது.

    • ஸ்மிரி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய இருவரும் சதம் விளாசினர்.
    • இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஆகியோம் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். இந்தியா 292 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிரிதி மந்தனா 161 பந்தில் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதற்கு முன்னதாக பெண்கள் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு 250 ரன்களுக்கு மேல் அடித்தது கிடையாது. தற்போது 292 ரன்கள் விளாசி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி சாதனைப் படைத்துள்ளது. இதன்மூலம் 90 வருட பெண்கள் கிரிக்கெட்டில் அரிய சாதனையை படைத்துள்ளது.

    ஷபாலி வர்மா 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறார். 65 ஓவர் முடிந்த நிலையில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 365 ரன்கள் குவித்துள்ளது. ஷபாலி வர்மா 175 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

    • நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.
    • இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், கிரேடு கிரிக்கெட்டர் போட்காஸ்டில் பங்கேற்ற தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இந்திய அணியின் குல்தீப் யாதவ் பந்துவீச்சுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அப்போது, கடந்த மாதம் தான் வெளியிட்ட பதிவை நினைவுபடுத்தினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி அமர்வுகளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் எனக்கு பந்து வீசமாட்டார்.

    2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் குல்தீப் பந்துவீசாமல் இருப்பது சுழற்பந்து வீச்சாளரின் கவனமான முடிவு.

    டெல்லி அணியுடனான பயிற்சி வலைகளில் குல்தீப்பை எதிர்கொள்ள ஆர்வமாக இருந்தேன்.

    உலகக் கோப்பைக்கான எனது சொந்தத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.
    • இவருக்கு முன் நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அவரது தலைமையில் இந்திய அணி எட்டியுள்ள 3-வது இறுதிப்போட்டி ஆகும்.

    கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்தியா தகுதிபெற்றது. உள்ளூரில் களமிறங்கிய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

    இதேபோல், கடந்த 2021-23-ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.

    இந்நிலையில், ரோகித் சர்மா ஐசிசி நடத்தும் ஒருநாள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 2வது கேப்டன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

    இவருக்கு முன்னதாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2-வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது.
    • மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    பிரிட்ஜ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. 20 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா (குரூப் ஏ) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (பி), ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் (சி), தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (டி) ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசமும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்காவும் இடம் பெற்றன.

    இதன் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. முதல் அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது.

    2-வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது.

    கோப்பைக்கான இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்தியா 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    2014-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோற்றது. இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ள இந்தியா, சாம்பியன் பட்டத்தை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (248 ரன்), சூர்யகுமார் யாதவ் (196 ரன்), ரிஷப் பண்ட் (171 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா (139 ரன், 8 விக்கெட்) அசத்தி வருகிறார். கோலி 7 ஆட் டத்தில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளார். அவர் ரன் குவிக்கும் கட்டாயத்தில் உள்ளார்.

    அதேபோல் ஷிவம் துபே அதிரடியாக விளையாட வேண்டும். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங் (15 விக்கெட்), பும்ரா (13 விக்கெட்), குல்தீப் யாதவ் (10 விக்கெட்), அக்சர் பட்டேல் (8 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

    மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி சாம்பியன் பட்டம் வென்று நீண்ட நாள் உலக கோப்பை தாகத்தை தீர்க்கும் ஆர்வத்தில் உள்ளது.

    பேட்டிங்கில் டி காக் (204 ரன்), டேவிட் மில்லர் (148 ரன்), கிளாசன் (138 ரன்), ஸ்டப்ஸ் (134 ரன்), மார்க்ரம் (119 ரன்), ஹென்ட்ரிக்ஸ் (109 ரன்) ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் நோக்கியா (13 விக்கெட், ரபடா (12 விக்கெட்), ஷம்சி (11 விக் கெட்), மகராஜ் (9 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

    இந்த தொடரில் இரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இந்தியா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்ஆப்பிரிக்கா சில ஆட்டங்களில் போராடியே வெற்றி பெற்றது.

    அதே வேளையில் கோப்பைக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    ஈஸ்ட்போர்ன் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ், சீனாவைச் சேர்ந்த ஷாங் ஜங்செங்குடன் மோதினார்.

    இதில் பிரிட்ஸ் 7-6 (7-5), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று மாலை நடைபெறும் அரையிறுதியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்சாண்டர் வுகியுடன் மோதுகிறார்.

    • டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதுகிறது.
    • இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    டி20 தொடரின் 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    கோப்பைக்கான இறுதிப் போட்டி பிரிட்ஜ்டவுனில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்நிலையில் நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி பார்படாஸ் சென்றடைந்தது.

    இந்தியா 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோற்றது. இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

    ×