என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 46 வினாடிகளிலேயே போட்டி முடிந்தது. இதனால் கெலிஃப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
    • இத்தாலி வீராங்கனை கரினியால் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி- அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆகியோர் மோதினார்கள்.

    போட்டி தொடங்கியதும் இத்தாலி வீராங்கனை கரினி எதிர்பார்க்காத வகையில் அவரது முகத்தை நோக்கி கெலிஃப் வேகமாக ஒரு பஞ்ச் விட்டார். இதில் இத்தாலி வீராங்கனை நிலைகுலைந்தார். அத்துடன் இனிமேல் எதிர்த்து விளையாட முடியாது என அறிவித்தார். இதனால் 46 வினாடிகளிலேயே போட்டி முடிந்தது.

    இதனால் கெலிஃப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இதை இத்தாலி வீராங்கனை கரினியால் ஜீரணிக்க முடியவில்லை. தனது எதிர்ப்பை தெரிவித்தார்.


    போட்டிக்கு பின்பு பேசிய இத்தாலி வீராங்கனை கரினி, "ஆணுக்கு எதிராக வலுக்கட்டாயமாக சண்டையிட வைத்தது நியாயமற்றது" என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இதனையடுத்து இப்போட்டி பாரீஸ் ஒலிம்பிக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஒலிம்பிக் குத்துச்சண்டை பாலின சர்ச்சைக்கு மத்தியில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீரர் இமானே கெலிப்-க்கு ஆதரவாக பாடகி சின்மயி ஸ்ரீபாடா ஆதரவு தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இமானே கெலிஃப் பெண்ணாக பிறந்தவர், அவர் ஆணல்ல...

    அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடான அல்ஜீரியாவில் அவர்களின் பாலினத்தை மாற்றுவதற்கான உரிமை சட்டவிரோதமானது மற்றும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அவர் கெலிஃப்பின் குழந்தைப் பருவப் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

    கடந்த வருடம் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியின்போது அல்ஜீரிய வீராங்கனை கெலிஃப் மற்றும் 2 முறை உலக சாம்பியனான சீன தைபே வீராங்கனை லின் யு-டிங் ஆகியோர் பாலின தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய சோதனையின் அடிப்படையில் இவர்கள் இருவரும் பெண்கள் தான் என உறுதி செய்யப்பட்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்படும் அளவில் நீச்சல் குளம் உள்ளது.
    • அதிநவீன பயிற்சி மற்றும் விளையாட்டு அறிவியல் வசதிகள் கொண்டவையாக அமைந்துள்ளது.

    பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ள சின்னசாமி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய கிரிக்கெட் அகாடமியை பெங்களூருவில் பிசிசிஐ உருவாக்கி வந்தது. இந்த புதிய அகாடமியின் கட்டுமான வேலைகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இந்த அகாடமி திறக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த அகாடமியில் மூன்று உலத்தரம் வாய்ந்த மைதானங்கள் உள்ளன. அத்துடன் 45 பயிற்சி ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்படும் அளவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன பயிற்சி, காயத்தில் இருந்து மீணடு வருவதற்கான பயிற்சி மற்றும் விளையாட்டு அறிவியல் வசதிகள் கொண்டவையாக அமைந்துள்ளது.

    சிறந்த சூழ்நிலையில் தற்போதைய வீரர்கள் மற்றும் எதிர்கால வீரர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளது.

    தற்போதைய தேசிய கிரிக்கெட் அகாடமி சின்னசாமி மைதான வளாகத்தில் அமைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் தேசிய கிரிக்கெட் அகாடமி தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    • சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.
    • காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியில் சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.

    போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சீன ஜோடி கொரிய ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.

    தங்கப்பதக்கத்தை வென்ற உற்சாகத்தில் இருந்த சீன வீராங்கனை ஹியாங் யா கியாங்யிடம் எதிர்பாராத நேரத்தில் அவருடன் விளையாடும் சக வீரரான லியூ யூசேன் தனது காதலை வெளிப்படுத்தினார்.

    அப்போது, லியூ தனது கையில் வைத்திருந்த வைர மோதிரத்தை காட்டி வீராங்கனை ஹியாங் யா கியாங்க் முன்பு மண்டியிட்டு "என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்று கேட்டார்.

    இதை சற்றும் எதிர்பாராத ஹியாங் ஆனந்த கண்ணீரில் தத்தளித்தார்.

    பின்னர், லியூ யூசேனின் காதலை ஏற்பதாக தலையை அசைத்த ஹியாங் யா கியாங்க் மோதிரத்தை அணிவித்து விடுமாறு தனது விரலை நீட்டினார். லியூ யூசேன் மோதிரத்தை அணிவித்தார்.

    இந்த காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரோபோஸ் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா ஜோடி வென்றது.
    • இங்கிலாந்து ஜோடி தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன்-ஜான் பீர்ஸ் ஜோடி, இங்கிலாந்தின் ராஜீவ் ராம்-ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியுடன் மோதியது.

    இதில் ஆஸ்திரேலியா ஜோடி 6-7 (6-8), 7-6 (7-1), 10-8 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது.

    இதில் மேத்யூ எப்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வில்வித்தையில் மற்றொரு வீராங்கனை பஜன் கவுர் தோல்வி அடைந்தார்.
    • ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கத்தை தவறவிட்டார் மனு பாக்கர்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தையில் காலிறுதி சுற்றில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் தீபிகா குமாரி கலந்துகொண்டார்.

    இந்த சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ஜெர்மனி வீராங்கனை நாம் சு ஹியோனிடம் 4-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    ஏற்கனவே நடந்த வில்வித்தையில் மற்றொரு வீராங்கனை பஜன் கவுர் தோல்வி அடைந்தார். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் நூலிழையில் 3-வது பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது.
    • துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்திய வீரர்கள் தங்குவதற்கு வசதியாக பாரிஸில் ஒலிம்பிக் கிராமம் கொடுக்கப்பட்டுள்ளது.

    சில விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு ஓட்டல்களை தேடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சில விளையாட்டு வீரர்கள் வெப்ப அலைக்கு ஏற்ப தங்களது சொந்த உபகரணங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், பிரான்சில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் கிராமத்திற்கு 40 ஏ.சி.களை வழங்கியுள்ளது.

    இதனால் இந்திய வீரர்கள் வசதியாக தங்குவதற்கும், ஓய்வு நேரத்தை அனுபவிக்கவும் முடியும். ஏ.சி.களுக்கான செலவை விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

    • ஒலிம்பிக்கில் இந்திய அணி இதுவரை 3 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
    • ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்தியர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்றார்.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்திய அணி இதுவரை 3 வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது. மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே ஆகியோர் தனிநபர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் வெண்கலம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், இந்தியாவின் பிரபல ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது சிறந்த வீரர்கள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வெற்றிக்காக சிறப்பானதை பெறுவதற்கு தகுதியானவர்கள் என பதிவிட்டுள்ளார்.

    சஜ்ஜன் ஜிண்டாலின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டாலின் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து மோரிஸ் காரேஜஸ் இண்டியா என்ற நிறுவனம், எம்ஜிவிண்ட்சர் என்ற சொகுசு காரை தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.
    • வில்வித்தையில் மற்றொரு வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியா, இந்தோனேசியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் பஜன் கவுர் கலந்துகொண்டார்.

    இதில் பஜன் கவுர் 5-5 என சமனிலை பெற்றார். இதனால் ஷூட் ஆப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பஜன் கவுர் தோல்வி அடைந்தார்.

    மற்றொரு வீராங்கனையான தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.
    • துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் நூலிழையில் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கின் வில்வித்தையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் தீபிகா குமாரி கலந்துகொண்டார்.

    இந்த சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி ஜெர்மனி வீராங்கனையை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ஏற்கனவே நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் நூலிழையில் 3-வது பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    • இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
    • அதில் ஷூட் ஆப் முறையில் பதக்கத்தை தவறவிட்டார் மனு பாக்கர்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார்.

    இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் மற்றும் ஹங்கேரி வீராங்கனை 28 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தனர்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் ஆப் முறையில் ஹங்கேரி வீராங்கனை வென்று வெண்கலம் வென்றார். தென் கொரியா வீராங்கனை தங்கமும், பிரான்ஸ் வீராங்கனை வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

    இதன்மூலம் மனு பாக்கர் நூலிழையில் 3வது பதக்கத்தைப் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் பதக்கம் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையரில் வெண்கலம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜோகோவிச் முதன்முறையாக ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
    • விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் நேர் செட்களில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் உடன் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் மோதவுள்ளார்.

    அரையிறுதி போட்டியில் கனடா வீரர் பெலிக்ஸ் ஆகரை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று கார்லோஸ் அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டியை 6-4, 6-2, என்ற நேர் செட்களில் வென்று நோவக் ஜோகோவிச் இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    25 க்ராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் முதன்முறையாக ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் அல்கராஸிடம் நேர் செட்களில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் அல்காரஸை வென்று ஜோகோவிச் பழி தீர்ப்பாரா என்று அவரது ரசிகர்கள் இப்போட்டியை ஆர்வத்துடன் உற்று நோக்கியுள்ளனர்.

    வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி மற்றும் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் ஆகியோர் போட்டி போடுகின்றனர்.

    • 1992 ஆம் ஆண்டு பாரிசிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதல்முறையாக பேட்மிண்டன் சேர்க்கப்பட்டது.
    • இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை பேட்மிண்டனில் வென்றுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை எதிர்கொண்டு விளையாடினார்.

    இந்த போட்டியில், 21-19, 21-14 என்ற செட் கணக்கில், சிந்துவை வீழ்த்தி ஜியாவோ வெற்றி பெற்றார். இதற்கு முன் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கமும், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் வென்ற பிவி சிந்து இந்த முறை பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழக்கும் வகையில் வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    போட்டிக்கு பின்னர், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பி.வி.சிந்து, "அடுத்த ஒலிம்பிக்கிற்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன. நான் திரும்பிச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறேன். ஓய்வுக்கு பிறகு அது என்னவென்று பார்ப்பேன்" என்று கூறினார்.

    1992 ஆம் ஆண்டு பாரிசிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதல்முறையாக பேட்மிண்டன் சேர்க்கப்பட்டது. அப்போது முதல் இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை பேட்மிண்டனில் வென்றுள்ளது. இதில் பிவி சிந்து (ரியோ 2016-இல் வெள்ளி, டோக்கியோ 2020-இல் வெண்கலம்) மற்றும் சாய்னா நேவால் (லண்டன் 2012-இல் வெண்கலம்) வென்றுள்ளனர்.

    ×