என் மலர்
விளையாட்டு
- மும்பை மற்றும் டிஎன்சிஏ லெவன் அணிகள் மோதி வருகிறது.
- மும்பை அணிக்காக ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடுகிறார்.
புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடர் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா, உள்ளிட்ட 12 அணிகள் மோதுகிறது. இந்த போட்டிகள் திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில் மும்பை மற்றும் டிஎன்சிஏ லெவன் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் மும்பை அணியில் விளையாடும் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீசும் போது சுனில் நரைன் ஸ்டைலில் பந்து வீசி அசத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் சுனில் நரைன் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டான் எவன்ஸ் மற்றும் கச்சனோவ் விளையாடிய ஆட்டம் 5 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்றது.
- அமெரிக்க ஓபனில் மிக நீண்ட போட்டியை விளையாடி டான் எவன்ஸ் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிரிட்டனின் டான் எவன்ஸ் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த கரேன் அப்கரோவிச் கச்சனோவ் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டம் முதல் செட்டில் இருந்தே பரபரப்பாக சென்றது. முதலில் இந்த ஆட்டத்தை பார்க்க குறைந்த அளவு மக்களே இருந்தனர். ஆட்டத்தின் விறுவிறுப்பை தொடர்ந்து இந்த ஆட்டத்தை பார்க்க மக்கள் கூட்டம் அதிகரித்தது. எவன்ஸ் இறுதி செட்டில் 0-4 என்ற நிலையில் இருந்தார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-4 என கடைசி செட்டை கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில் டான் எவன்ஸ் 6-7(6), 7-6(2), 7-6(4), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கரேன் கச்சனோவை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 5 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்றது.
இதன்மூலம் அமெரிக்க ஓபனில் மிக நீண்ட போட்டியை விளையாடி பிரிட்டனின் டான் எவன்ஸ் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 1992-ம் ஆண்டு ஸ்வீடனின் ஸ்டீபன் எட்பெர்க் அரையிறுதியில் அமெரிக்க வீரரான மைக்கேல் சாங்கை தோற்கடித்தார். அந்த ஆட்டம் 5 மணி நேரம் 25 நிமிடம் நடைபெற்றது. இதுவே அமெரிக்க ஓபனில் நீண்ட போட்டியாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனை தகர்க்கப்பட்டது.
எவன்ஸ் அடுத்த சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் மரியானோ நவோனை எதிர்கொள்கிறார்.
- 50 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் பிரமிப்பானவை.
- வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் கோலியே விட சிறந்த பேட்ஸ்மேன் யாரும் இல்லை.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம், வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் (பினிஷர்) கில்லாடி யார் என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், 'இலக்கை விரட்டிப்பிடிப்பதில் (சேசிங்) இந்திய வீரர் விராட் கோலியை விட வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. குறிப்பாக 50 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் பிரமிப்பானவை.
2-வது பேட்டிங்கின் போது அவர் அதிகமான சதங்களை (27 சதம்) அடித்துள்ளார். அத்துடன் அத்தகைய சூழலில் அவரது மனஉறுதியும், தன்னம்பிக்கையும் உயர்வாக இருக்கிறது. 1990-களின் இறுதி மற்றும் 2000-களில் சிறந்த பினிஷராக ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன் திகழ்ந்தார்.
அவர் 6-வது வரிசையில் இறங்கி அந்த பணியை செய்தார். பெரும்பாலும் அவர் 50, 60 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடிப்பார். ஆனால் கோலி 3-வது வரிசையில் களம் கண்டு நீண்ட நேரம் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடித்து அணியை கரைசேர்ப்பார். உண்மையை சொல்வது என்றால் வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் கோலியே விட சிறந்த பேட்ஸ்மேன் யாரும் இல்லை என ஆண்டர்சன் கூறினார்.
- மழைக் காரணமாக ஆட்டம் 13 ஓவராக குறைக்கப்பட்டது.
- தென்ஆப்பிரிக்கா 108 ரன்கள் அடிக்க, 116 இலக்கை வெஸ்ட் இண்டீஸ் 9.2 ஓவரில் அடித்தது.
வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முடிவடைந்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது.
இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்றி நள்ளிரவு 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.
4.3 ஓவர் முடிந்த நிலையில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்டப்ஸ் 15 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்களும், குப்டன் மார்கிராம் 12 பந்தில் 20 ரன்களும், ரிக்கெல்டன் 24 பந்தில 27 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 13 ஓவர் முடிவில 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷெப்பர்டு 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதியின்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 13 ஓவரில் 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்க வீரர் அதான்சா 3 பந்தில் 1 ரன் எடுத்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சிதறடித்தனர்.
நிக்கோலஸ் பூலன் 13 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 35 ரன்கள் விளாசினார். ஷாய் ஹோப் 24 பந்தில் 42 ரன்களும், அடுத்து வந்த ஹெட்மையர் 17 பந்தில் 31 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 9.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டி20 வெஸ்ட் இண்டீஸ் 3-0 எனக் கைப்பற்றி தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-0 எனக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
- 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானார் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருக்கிறார். 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது 4 ஆண்டு காலம் பதவி முடிகிறது.
3 முறை அந்த பதவியில் இருந்த அவர் மேலும் அதில் நீடிக்க விரும்பவில்லை. ஐ.சி.சி. சேர்மன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால் மியா, சரத் பவார். என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் போன்றவர்கள் ஐ.சி.சி. தலைமை பதவி வகித்தனர். அந்த வரிசையில் ஜெய்ஷாவும் இணைந்துள்ளார். 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
- ஜடேஜா ஆகஸ்ட் 25 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
- இந்த பதிவு எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகஸ்ட் 25 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், ஜடேஜா எடுத்த செல்பியில் டோனி இருப்பதைப் போல எடிட் செய்த புகைப்படத்தை பகிர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில், "தல தளபதி வயலில் இருந்தால் எப்படி இருக்கும், சும்மா ஒரு கற்பனைக்கு" என்று சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பதிவு எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
- தென் கொரியாவின் சியோலில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
சியோல்:
தென் கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ருதுபர்னா-ஸ்வேதாபர்னா ஜோடி, சீன-தைபேவின் ஹை பெய் ஷா-ஹங் என் சு ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 18-21, 5-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்தப் போட்டி சுமார் 37 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
நாளை நடைபெற உள்ள பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், மால்விகா பன்சோத் மற்றும் அஷ்மிதா சாலிஹா விளையாட உள்ளனர்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் கோகோ காப் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும்.
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், பிரான்ஸ் வீராங்கனை வர்வரா கிரசேவா உடன் மோதினார்.
இதில் கோகோ காப் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, உக்ரைன் வீராங்கனை யூலியா ஸ்டாரோட்ப்சேவாவை 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய அணி வீரர்கள் துலீப் டிராபியில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தல்.
- சுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக செயல்படுகின்றனர்.
இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய நான்கு அணிகளுக்கு இடையில் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. தொடக்க சுற்று போட்டி செப்டம்பர் 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் இந்திய சீனியர் அணியில் விளையாடும் வீரர்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியது. ரோகித் சர்மா, பும்ரா, விராட் கோலி ஆகியோருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் உடல்நலம் சரியில்லாத காரணத்தில் முகமுது சிராஜ் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உம்ரான் மாலிக்கும் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா "பி" அணியில் இடம் பிடித்திருந்த ஜடேஜாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஜடேஜா தேசிய அணிக்காக விளையாடவில்லை. இலங்கை தொடரின்போதும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
ரஞ்சி டிராபியில் விளையாடி 41 விக்கெட்டுகள் கைப்பற்றிய யாதவ் இடம் பிடித்துள்ளார். இவர் பாண்டிச்சேரி அணிக்காக விளையாடினார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்தார்.
இந்தியா "ஏ" அணிக்கு சுப்மன் கில்லும், "பி" அணிக்கு அபிமன்யு ஈஸ்வரனும், இந்தியா "சி" அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட்டும், "டி" அணிக்கு ஷ்ரேயாஸ் அய்யரும் கேப்டனாக பணியாற்ற உள்ளனர்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் டென்மார்க் வீரர் ரூனே தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யு.எஸ். ஓபன் தொடராகும்.
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா உடன் மோதினார்.
இதில் ரூனே 2-6, 1-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- கடந்த வருடங்களில் இந்திய அணி சிறந்து விளங்குவதற்கு பிசிசிஐ முக்கிய காரணமாகிறது.
- பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் தான் இந்திய கிரிக்கெட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.
ஐசிசி-யின் அடுத்த தலைவராக பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த பொறுப்பில் அவர் இந்திய கிரிக்கெட்டில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்தது, முழுமையான மகளிர் ஐபிஎல் தொடரை துவக்கியது, ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களின் பரிசுத்தொகையை அதிகரித்தது போன்ற நடவடிக்கைகளை எடுத்து அதிரடி காட்டினார்.
இந்நிலையில் ஐசிசி-யின் தலைவராக நியூசிலாந்து நாட்டின் கிரேக் பார்க்லே இருந்து வருகிறார். 2020-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மீண்டும் 2022-ல் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே தற்போது 3-வது முறையாக தலைவர் பதவியில் இருக்க விரும்பாத அவர் தாமாக விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
ஆனால் ஐசிசி தலைவர் பதவியை அடைவதற்காக கிரேக் பார்க்லேவை ஜெய் ஷா வலுக்கட்டாயமாக பதவி விலகச் செய்ததாக சில இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஜெய்ஷா குறித்த விமர்சனங்களுக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-
ஜெய் ஷா அடுத்த தலைவராக வருவதற்கு வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட்டை போலவே ஐசிசி அமைப்பிலும் அவர் தலைவரானால் உலக அளவில் உள்ள ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு பெரிய பயனை கிடைக்கும்.
கிரேக் பார்க்லே 3-வது முறையாக தலைவர் பதவியை விரும்பாததால் விலகுவதாக சொன்னார். ஆனால் ஜெய் ஷா கட்டாயத்தில் அவர் விலகுவதாக பழைய சக்தி நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பார்க்லே மூன்றாவது முறையாக பதவி ஏற்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டால் ஐசிசி அமைப்பில் உள்ள பழைய சக்திகளின் பிரதிநிதிகள் மீட்டிங்கில் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) என்ன செய்தார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் இனிமேலும் நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற ஆதங்கத்தாலேயே அவர்கள் இப்படி குறை சொல்வதற்காக விரல் நீட்டுகிறார்கள். கடந்த வருடங்களில் இந்திய அணி சிறந்து விளங்குவதற்கு பிசிசிஐ முக்கிய காரணமாகிறது. இருப்பினும் அணி வெல்லவில்லையெனில் ஸ்பான்சர்கள் வெளியேறி விடுவார்கள். எனவே பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் தான் இந்திய கிரிக்கெட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
- ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்தியா இடம் பிடித்துள்ள பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஹேமலதா அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த அணி விவரம் வருமாறு:-
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டி (விக்கெட் கீப்பர். உடற்தகுதியை நிரூபிப்பதை சார்ந்தது), பூஜா வாஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேனுகா சிங் தாகூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டீல் (உடற்தகுதியை நிரூபிப்பதை சார்ந்தது). சஜனா சஜீவன்.
குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன.






