என் மலர்
விளையாட்டு
- டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது.
- 11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 7.5 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
விஜ்க் ஆன் ஜீ:
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரின் 11-வது சுற்று நேற்று நடைபெற்றது.
உலக சாம்பியனான சென்னை கிராண்ட்மாஸ்டர் டி குகேஷ் சீனாவைச் சேர்ந்த ஒய் வீவை எதிர்கொண்டார். 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் டிரா ஆனது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் கிடைத்தது. குகேஷின் 6-வது டிரா இதுவாகும்.
மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அமெரிக்காவைச் சேர்ந்த பேபியானோ கருணாவை தோற்கடித்தார். இது அவரது 4-வது வெற்றியாகும். மற்ற இந்திய வீரர்களில் ஹரி கிருஷ்ணா, மென்டோன்கா ஆகியோரும் வெற்றி பெற்றனர். அர்ஜூன் எரிகேசி மோதிய ஆட்டம் டிரா ஆனது.
11 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நோடிர்பெக் அப்துசாட்டோ ரோவ் 7.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். மற்ற இந்திய வீரர்களான ஹரி கிருஷ்ணா 5.5 புள்ளியும், மெண்டோன்கா 4 புள்ளியும் , எரிகேசி 3.5 புள்ளியும் பெற்று உள்ளனர். இன்னும் 2 சுற்றுகள் எஞ்சியுள்ளன.
- விராட் கோலி பார்ம் அவுட்டில் தவித்து வருகிறார்.
- ரஞ்சி கோப்பையில் களமிறங்கிய கோலி 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி. சமீப காலங்களில் ஃபார்ம்-அவுட் ஆகி தவிக்கும் விராட் கோலி கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடர்களில் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இவர் மட்டுமின்றி இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலரும் இதே சூழலில் சிக்கியுள்ளனர்.
இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளை திரும்ப பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயமாக விளையாட வேண்டும் என்று அறிவித்தது. அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில், டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலி 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய விராட் கோலி மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் விராட் கோலிக்கு ஆதரவாக முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "தற்போதைக்கு விராட் கோலி ரஞ்சி போட்டிகளில் விளையாட தேவையில்லை. 81 சர்வதேச சதங்களுக்கும் அவரது நுட்பம் நன்றாகவே இருந்தது. இனிமேலும் அது நன்றாகவே இருக்கும். அவரை யாரும் வற்புறுத்த வேண்டாம். அவருக்கு சிறிது நேரம் தேவை. அவருக்குள் இருக்கும் நெருப்பு தானாகவே எரியும். அவருக்கும் கொஞ்சம் மரியாதை அளியுங்கள், அவரை நம்புங்கள். மிக முக்கியமாக அவரை தனியாக இருக்க விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- துபேவுக்கு பதிலாக மாற்றுவீராக ஹர்ஷித் ராணா களமிறங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- துபேவுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணிக்குள் கொண்டுவரப்பட்டது நியாயமான மாற்று கிடையாது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது.
இதனிடையே ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த சிவம் துபேவின் ஹெல்மெட்டில் பந்து வேகமாக மோதியது. இதனால் இரண்டாவது இன்னிங்சில் துபேவுக்கு பதிலாக மாற்றுவீராக ஹர்ஷித் ராணா களமிறங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்நிலையில், துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மாற்றுவீராக களமிறங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீரருக்கு மாற்றுவீராக களமிறங்குவர் அவரை போன்ற வீரராக இருக்கவேண்டும். அதாவது ஒரு பேட்ஸ்மேனுக்கு பதிலாக இன்னொரு பேட்ஸ்மேனும் ஒரு பவுலருக்கு பதிலாக இன்னொரு பவுலரும் ஒரு ஆல் ரவுண்டருக்கு பதிலாக இன்னொரு ஆல் ரவுண்டரும் தான் களமிறங்க வேண்டும்.
ஆனால் ஆல் ரவுண்டர் சிவம் துபேவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா களமிறங்கியது நியாயம் கிடையாது என்று விமர்சனம் எழுந்தது. குறிப்பாக சிவம் துபேவுக்கு பதிலாக ரமன்தீப் சிங் தான் உள்ளே வந்திருக்க வேண்டும். அவர் தான் சரியான மாற்றுவீரர் என்று போட்டியை வர்ணனை செய்து வந்த ஹர்ஷா போக்ளே தெரிவித்தார்.
இதனிடையே போட்டி முடிவடைந்த பின்பு இந்த விவகாரம் குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர், "காயம் ஏற்பட்ட ஷிவம் துபேவுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணிக்குள் கொண்டுவரப்பட்டது நியாயமான மாற்று கிடையாது. துபேவும் வேகமாக பந்து வீசியதில்லை, ராணாவும் பேட்டிங்கில் பெரியதாக முன்னேறிவிடவில்லை. நாங்கள் பேட்டிங் களமிறங்கும்போது இந்திய அணியில் ஹர்ஷித் உள்ளதை பார்த்து கேட்டதற்கு, துபேவுக்கு மாற்றாக வந்துள்ளார் எனச் சொன்னார்கள். அப்போதே அதை ஏற்க மறுத்தேன். போட்டியின் நடுவர் இந்தியாவின் முடிவை ஏற்றுக்கொண்டதாக கூறியதால், எதுவும் செய்ய முடியவில்லை. இவையெல்லாம் ஆட்டத்தின் ஒரு பகுதிதான்" விரக்தியுடன் தெரிவித்தார்.
- போட்டி நடுவர் இந்த முடிவை எடுத்ததாக நடுவர்கள் என்னிடம் கூறினார்கள்.
- ஆட்டத்தை வெல்ல எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன.
இந்தியா பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் ஷிவம் துபே ஹெல்மட்டில் பவுன்சர் பந்து தாக்கியது. இதனால் இங்கிலாந்து பேட்டிங் செய்ய களத்துக்கு வந்தபோது அவர் ஆடுகளத்துக்குள் வரவில்லை.
பந்து தாக்கியதால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஹர்ஷித் ராணா விதிப்படி அணியில் சேர்க்கப்பட்டார். ஹர்ஷித் ராணா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இதுபோன்ற மாற்றத்தின் போது காயத்தால் விலகிய வீரருக்கு இணையான வீரரை தான் சேர்க்க முடியும். ஷிவம் துபேக்கு மாற்றாக மிகவும் சிறப்பாக செயல்படக் கூடிய பந்து வீச்சாளரை தேர்வு செய்த விவகாரம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் இது தொடர்பாக கடுமையான விமர்சனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மாற்று வீரர் விஷயத்தில் எங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் பட்லர் கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இணையான மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இது போன்ற விஷயங்கள் ஆட்டத்தின் ஒரு பகுதி தான். எப்படி இருந்தாலும் நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். அதே சமயம் இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை. என்னிடம் யாரும் இதைப் பற்றி ஆலோசிக்கவில்லை.
நான் பேட்டிங் செய்ய வந்த போது ஹர்ஷித் ராணா யாருக்கு பதிலாக இங்கே இருக்கிறார் என்று தான் நினைத்தேன். அதன் பின்னர் ராணா மாற்று வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றார்கள். அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. அது இணையான மாற்று வீரர் தேர்வு இல்லை.
போட்டி நடுவர் இந்த முடிவை எடுத்ததாக நடுவர்கள் என்னிடம் கூறினார்கள். எனவே இந்த விஷயத்தில் மறுப்பு சொல்வதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது. நாங்கள் நிச்சயம் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத்திடம் சில கேள்விகளை கேட்போம். இந்த விஷயத்தில் மேலும் அதிக தெளிவை பெற முயற்சிப்போம்.
நாங்கள் போட்டியில் வெற்றி பெறாததற்கு இது முழு காரணமும் அல்ல. ஆட்டத்தை வெல்ல எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.
- எங்களது வீரர்களின் ஒரு சில அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
- களத்தில் நாங்கள் இந்திய வீரர்களுடன் பேசுவது கூட கிடையாது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 53 வயதான மொயீன் கான் அளித்த ஒரு பேட்டியில், 'சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டங்களை பார்க்கும் போது, எங்களது வீரர்களின் ஒரு சில அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திய வீரர்கள் களம் காணும் போது, எங்களது வீரர்கள் அவர்களது பேட்டை வாங்கி பார்க்கிறார்கள். நட்புறவுடன் பேசுகிறார்கள். நாங்கள் விளையாடிய காலத்தில், எங்களது மூத்த வீரர்கள் இதை எல்லாம் அனுமதிக்கவே மாட்டார்கள். களத்தில் நாங்கள் இந்திய வீரர்களுடன் பேசுவது கூட கிடையாது.
நீங்கள் நட்புறவுடன் பழகும் போது, அதை உங்களது பலவீனத்தின் அறிகுறியாக இந்திய வீரர்கள் எடுத்துக் கொள்வார்கள். இதை எங்களது வீரர்கள் புரிந்து கொள்வதில்லை. நட்புறவுடன் நடந்து கொள்ளும் போது, அது உங்களது போராட்ட குணத்தை குறைத்து விடும். அதனால் தானாகவே நெருக்கடிக்குள்ளாவீர்கள்' என்றார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால், இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான முக்கியமான மோதல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
- கடந்த செப்டம்பர் மாதம் ஸ்டேடியத்தை இடித்துவிட்டு சீரமைப்பு பணி அக்டோபர் மாதம் தொடங்கியது.
- கராச்சி ஸ்டேடியம் பிப்ரவரி 11-ந்தேதி அதிபர் ஆசிப் அலி சர்தாரியால் திறந்து வைக்கப்படும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மொஹ்சின் நக்வி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் ஒன்றான கடாஃபி ஸ்டேடியம் பிப்ரவரி 7-ந்தேதி திறக்கப்படும். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவில் கலந்து கொள்ள அனைத்து கிரிக்கெட் போர்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐசிசி அதிகாரிகள், சேர்மன் ஜெய் ஷா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
7-ந்தேதி பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கடாஃபி மைதானத்தை திறந்து வைக்கிறார். தற்போது இறுதி கட்ட வேலைப்பாடு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 7-ந்தேதிக்குள் முடிவடையும்.
கடந்த செப்டம்பர் மாதம் ஸ்டேடியத்தை இடித்துவிட்டு சீரமைப்பு பணி அக்டோபர் மாதம் தொடங்கியது. ஜனவரி மாதத்திற்குள் தயாராகிவிடும் என உறுதி அளித்தோம். வேலைகள் அனைத்தும் எப்படி முடிந்துள்ளது என்பதை உங்களால் பார்க்கமுடியும்.
கராச்சி ஸ்டேடியம் பிப்ரவரி 11-ந்தேதி அதிபர் ஆசிப் அலி சர்தாரியால் திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு நக்வி தெரிவித்துள்ளார்.
- இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது.
- 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
ராஜ்கோட்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
இறுதியில், இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது.
- மூத்த வீரர் ரஞ்சி டிராபியில் இறுதி வரை விளையாடினால் ரூ.25 லட்சம் சம்பளம் பெறுவார்.
- மற்றவர்கள் 17 முதல் 22 லட்சம் வரை சம்பளம் பெறுவர் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடர் மூலம் கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். எனவே, உள்நாட்டு கிரிக்கெட்டின் நிலையை உயர்த்த முடிவுசெய்துள்ள பிசிசிஐ, ரஞ்சி டிராபி கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியத்தை அதிகரிப்பதில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி வருகிறது.
முதல் தர கிரிக்கெட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வீரர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து பிசிசிஐ பரிந்துரைகளை கேட்டுள்ளது.
இந்நிலையில், ரஞ்சி டிராபியில் விளையாடும் வீரர்களுக்கான சம்பள விவரம்:
41-60 போட்டிகளைக் கொண்ட வீரர்கள்: விளையாடும் நாள் ஒன்றுக்கு ரூ. 60,000, ரிசர்வ் டேயில் ஒரு நாளைக்கு ரூ.30,000
21-40 போட்டிகள் கொண்ட வீரர்கள்: விளையாடும் ஒரு நாளைக்கு ரூ.50,000, ரிசர்வ் டேயில் ஒரு நாளைக்கு ரூ. 25,000
0-20 போட்டிகளைக் கொண்ட வீரர்கள்: விளையாடும் நாள் ஒன்றுக்கு ரூ.40,000, ரிசர்வ் டேயில் ஒரு நாளைக்கு ரூ. 20,000
விளையாடாத அணி உறுப்பினர்கள்: ஒரு நாளைக்கு ரூ.25,000 பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த வீரர் ரஞ்சி டிராபி இறுதிப்போட்டி வரை விளையாடினால் அவர் 25 லட்சம் சம்பளம் பெறுவார். மற்றவர்கள் 17 முதல் 22 லட்சம் வரை சம்பளம் பெறுவர்.
- பாகிஸ்தான் அணியில் 9 பேட்ஸ்மேன்கள் இடம் பிடித்துள்ளனர்.
- பஹர் சமான் 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது ரிஸ்வான் தலைமையிலான அணியில் அப்ரார் அகமது மட்டுமே பிரத்யேக ஸ்பின்னராக இடம் பிடித்துள்ளார். 9 பேட்ஸ்மேன்கள் இடம் பிடித்துள்ளனர். அப்ரார் அகமது 4 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி பிப்ரவரி 11-ந்தேதி வரைக்கும் அணியில் மாற்றம் செய்ய முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஆல்ரவுண்டர்கள் குஷ்தில் ஷா, பஹீம் அஷ்ரப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர் பஹர் சமான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடம்பிடித்துள்ளார்.
பஹர் சமான் 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக கடைசியாக விளையாடினார். குஷ்தில் ஷா கடைசியாக 2022-ல் விளையாடினார். பஹீம் அஷ்ரப் 2023-ம் ஆண்டு 50 ஓவர் ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுபியன் முகீம், பேட்ஸ்மேன் இர்பான் கான் நியாசி, தொடக்க பேட்ஸ்மேன் அப்துல்லா ஷபிக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
எங்கள் நாட்டில் தொடர் நடைபெற இருப்பதால், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள், சர்வதேச போட்டிகளில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் வகையில் அணியை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தினோம் என ஷபிக் தெரிவித்துள்ளார்.
பஹர் சமான் உடன் பாபர் அசாம் அல்லது ஷகீல் தொடக்க வீரராக களம் இறங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
ஹரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. முகமது ரிஸ்வான், 2. சல்மான அலி ஆகா (துணைக்கேப்டன்), 3. பாபர் அசாம், 4. பஹர் சமான், 5. ஷகீல், 6. கம்ரான் குலாம், 7. குஷ்தில் ஷா, 8. தய்யப் தாஹிர், 9. உஸ்மான் கான், 10. பஹீம் அஷ்ரப், 11. ஷாஹீன் ஷா அப்ரிடி, 12. நசீம் ஷா, 13. முகமது ஹஸ்னைன், 14. அப்ரார் அகமது.
பிப்ரவரி 8 முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு போட்டியில் இந்த அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19-ந்தேதி கராச்சி மைதானத்தில் தொடங்குகிறது.
- முதலில் ஆடிய இந்தியா 181 ரன்களைக் குவித்தது.
- ஷிவம் துபே, பாண்ட்யா அதிரடியில் மிரட்டினர்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஆட்டத்தின் 2-வது ஓவரில் சாகிப் மகமூது ரன் எதுவும் கொடுக்காமல் 3 விக்கெட்டை கைப்பற்றினார்.
4-வது விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மாவுடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 29 ரன்னில் அவுட்டானார். ரிங்கு சிங் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஷிவம் துபேவுடன், ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்தார். இந்த ஜோடி ஆரம்பம் முதலே வீறு கொண்டு எழுந்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
6-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில் பாண்ட்யா 53 ரன்னில் வெளியேறினார். ஷிவம் துபே 53 ரன் எடுத்துள்ளார்.
இறுதியில், இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 181 ரன்களைக் குவித்துள்ளது.
இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமூது 3 விக்கெட்டும், ஓவர்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடுகிறது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- ஒரே ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் இந்தியாவின் 3 விக்கெட் கைப்பற்றினார்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது ஓவரை சாகிப் மகமூது வீசினார். முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ஒரு ரன்னில் அவுட்டானார். அடுத்த பந்தில் திலக் வர்மா கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். ஹாட்ரிக் முயற்சியை தடுத்த சூர்யகுமார் யாதவ், 6-வது பந்தில் ஆட்டமிழந்தார்.
இப்படி ஒரே ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் இந்தியாவின் முன்னணி வீரர்களை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் சாகிப் மகமூது.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- இரு அணிகள் மோதும் 4வது டி20 போட்டி மகாராஷ்டிராவின் புனேவில் இன்று தொடங்கியது.
மும்பை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷமி, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரல் ஆகியோருக்கு பதிலாக ரிங்கு சிங், சிவம் துபே, அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணி விவரம் வருமாறு:
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி
இங்கிலாந்து அணி விவரம் வருமாறு:
பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷீத், , சாகிப் மகமூது, பிரைடன் கார்ஸ்.






