என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் மெத்வதேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரரான கரன் கச்சனோவ் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 4-6 என இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 7-5, 6-3 என வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் ரூப்லெவ் 6-3, 6-4 என கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • 2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதை இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ் தட்டி சென்றார்.
    • அந்த விருதை வென்ற கமிந்து மெண்டிஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவிடம் இருந்து பெற்று கொண்டார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது.

    அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன், இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ், பாகிஸ்தானின் சைம் அயூப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இதில் 2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதை இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ் தட்டி சென்றார். அந்த விருதை வென்ற கமிந்து மெண்டிஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவிடம் இருந்து பெற்று கொண்டார். 

    இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டதில் இருந்து இலங்கை அணி பல தொடர்களை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32, காஷ்வி கௌதம் 20 ரன்கள் எடுத்தனர்.
    • மும்பை அணி தரப்பில் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டும் அமெலியா கெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத்தின் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32, காஷ்வி கௌதம் 20 ரன்கள் எடுத்தனர். அவர்களை தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை அணி தரப்பில் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டும் அமெலியா கெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
    • பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்கான ஆட்டங்கள் துபாயில் நடக்கிறது.

    லாகூர்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.

    2025-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.சி.சி.யின் பெரிய போட்டியை அந்த நாடு நடத்துகிறது.

    9வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பான நாடு என்பதை உலகம் நம்புகிறது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ரமீஸ் ராஜா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பான நாடு என்பதும், நிர்வாகக் கண்ணோட்டத்தில் அத்தகைய உலகளாவிய நிகழ்வை வழங்குவதற்கு வல்லமை வாய்ந்தது என்பதையும் உலகை ஏற்கவைப்பது தீவிர கடின உழைப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. உலகம் இறுதியில் நமது பார்வையைப் புரிந்து கொண்டது என தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் கடைசியாக 1996-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை இந்தியா, இலங்கையுடன் இணைந்து நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முகமது நபி ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
    • தனது மகனுடன் இணைந்து மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடப் போவதாக முகமது நபி தெரிவித்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது நபி இடம் பெற்றுள்ளார். 40 வயதான அவர் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் 18 வயதான தனது மகன் ஐசாகிள், ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட உள்ளதால் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். தனது மகனுடன் இணைந்து மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடப் போவதாக முகமது நபி தெரிவித்துள்ளார்.

    நபியின் மகன் ஐசாகிள், 2024-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் நான்கு போட்டிகளில் விளையாடி 43 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    • கடைசி ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • அயர்லாந்துக்கு எதிரான தொடரை ஜிம்பாப்வே 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஹராரே:

    அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி பால்பிர்னி (64 ரன்கள்), ஹாரி டெக்டர் (51 ரன்கள்) மற்றும் டக்கர் (62 ரன்கள்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. ஜிம்பாப்வே தரப்பில் ந்கரவா மற்றும் டிரெவர் க்வந்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக பிரையன் பென்னட்- பென் குர்ரான் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரைன் பென்னட் 48 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது.

    இதனை தொடர்ந்து பென் கரண் உடன் கேப்டன் கிரெய்க் எர்வின் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் கரண் சதம் விளாசினார்.

    இறுதியில் ஜிம்பாப்வே அணி 39.3 ஓவரில் 246 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    • வீரர்கள் தங்களது குடும்பத்தினரை ஏதாவது ஒரு போட்டிக்கு மட்டும் அழைத்துச் செல்லலாம்.
    • அந்த ஒரு போட்டியோடு அவர்கள் திரும்பி விட வேண்டும்.

    மும்பை:

    8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை (19-ந் தேதி) முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது.

    முன்னதாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியை தழுவியதால் பெரும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. சில கட்டுப்பாடுகளை விதித்தது.

    அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வகுத்துள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறைப்படி 45 நாட்களுக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது மட்டும் 2 வாரங்கள் குடும்பத்தினரை உடன் வைத்துக் கொள்ள வீரர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி 19 நாட்களில் முடிந்து விடுவதால் வீரர்களுடன் குடும்பத்தினர் செல்ல முடியாது என கூறப்பட்டது.

    ஆனால் தற்போது துபாய்க்கு சென்றுள்ள இந்திய அணியில் உள்ள சில மூத்த வீரர்கள் தங்களது குடும்பத்தினர் தங்களுடன் இருக்க வேண்டும் என்றும் அதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதனை பரீசிலித்த பி.சி.சி.ஐ. நிபந்தனையுடன் இந்திய வீரர்களுக்கு சலுகை வழங்கி உள்ளது.

    அதன்படி வீரர்கள் தங்களது குடும்பத்தினரை ஏதாவது ஒரு போட்டிக்கு மட்டும் அழைத்துச் செல்லலாம் என்றும் அந்த ஒரு போட்டியோடு அவர்கள் திரும்பி விட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. அதுமட்டும் இன்றி குடும்ப உறுப்பினர்கள் எந்த போட்டிக்கு முன்பாக வர இருக்கிறார்கள் என்பதை முறையாக தெரிவித்து அனுமதி பெற்ற பிறகே அங்கு செல்ல வேண்டும் என்றும் அப்படி உரிய அனுமதியுடன் சென்றால் ஒருநாள் வீரர்களுடன் இருக்க குடும்பத்தாருக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜப்பானின் உஹிஜிமா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 6-2 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா 6-2, 6-1 என பெல்ஜிய வீராங்கனை எலைஸ் மெர்டன்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.
    • குஜராத்துக்கு எதிராக இதுவரை மோதியுள்ள 4 ஆட்டங்களிலும் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.

    5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத்தின் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. குஜராத்துக்கு எதிராக இதுவரை மோதியுள்ள 4 ஆட்டங்களிலும் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பந்து வீச்சில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 188 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    நாக்பூர்:

    90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, விதர்பா மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

    இதில் நாக்பூரில் நடைபெற்று வரும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் மும்பை - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் மும்பை அணிக்காக இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே களமிறங்கினர். இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

    துருவ் ஷோரே (74 ரன்கள்), டேனிஷ் மாலேவார் (79 ரன்கள்), கருண் நாயர் (45 ரன்கள்) ரத்தோட் (54), ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் விதர்பா முதல் இன்னிங்சில் 383 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ஆயுஷ் மத்ரே 9, சித்தேஷ் லாட் 35, ரகானே 18 என வெளியேறினார். இதனையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஷிவம் துபேவும் டக் அவுட்டில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

    இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 188 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ஆகாஷ் ஆனந்த் 67 ரன்களுடனும் தனுஷ் கோட்யான் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • முத்தரப்பு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரச்சின் ரவீந்திராவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.
    • கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகின்றன.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

    இதில் களம் காணும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு தொடரின் போது முகத்தில் காயமடைந்த நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்டர் ரச்சின் ரவீந்திரா காயத்தில் இருந்து மீண்டுள்ளார். இதன் காரணமாக அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளார். இது நியூசிலாந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது ரச்சின் ரவீந்திராவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயமுற்ற ரச்சின் ரவீந்திரா இரத்த காயத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து அவருக்கு சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்த தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்த விவாதங்களும் சமூகவலைதளத்தில் அதிகளவு நிலவி வருகின்றன.

    இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்த தங்களது கணிப்புகளை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர் கெவின் பீட்டர்சன் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் குறித்து கணித்துள்ளார். அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெறும் என தெரிவித்துள்ளார்.

    இதே போல முன்னாள் இந்திய வீரர்களான முரளி விஜய், அஸ்வின், சஞ்சய் பங்கர், தீப் தாஸ்குப்தா, ஆகாஷ் சோப்ரா ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெறு அணிகள் குறித்து கணித்துள்ளனர்.

    இந்திய வீரர்கள் கணித்துள்ள அணிகள்:-

    முரளி விஜய்- இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா

    ஆகாஷ் சோப்ரா- இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா

    சஞ்சய் பங்கர் - இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா

    தீப் தாஸ்குப்தா- இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து

    அஸ்வின் - இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து 

    ×