என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், குரோசியாவின் மரின் கிளிக் உடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-4 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெகா 6-4, 6-4 என பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
    • நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகி உள்ளார்.

    9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை (19-ந் தேதி) முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.

    இந்த தொடருக்கு முன்னதாக பல நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் நாளை சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகி உள்ளார். இவர் விலகிய நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில் பெர்குசனுக்கு பதிலாக கைல் ஜேமிசன் அணியில் இடம் பிடித்துள்ளார். ஜேமிசன் கடைசியாக ஒருநாள் போட்டியில் 2023-ம் ஆண்டு செப்டம்பரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் ஆண்கள் இரட்டையரில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, ஸ்பெயினின் டேனியல் மெரிடா-கத்தாரின் முபாரக் அல்-ஹராசி ஜோடியுடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
    • அனைத்து போட்டிகளும் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெறுகின்றன.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்க இருக்கிறது. நாளை (பிப்ரவரி 19) கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. நாளை தொடங்கும் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 20) நடைபெறுகிறது.

    சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பங்கேற்கும் அணிகள்:

    குரூப் ஏ: பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம்

    குரூப் பி: தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து

    முழு அட்டவணை:

    பிப்ரவரி 19: பாகிஸ்தான் v நியூசிலாந்து, கராச்சி (பாக்.)

    பிப்ரவரி 20: வங்கதேசம் v இந்தியா, துபாய்

    பிப்ரவரி 21: ஆப்கானிஸ்தான் v தென் ஆப்பிரிக்கா, கராச்சி (பாக்.)

    பிப்ரவரி 22: ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, லாகூர் (பாக்.)

    பிப்ரவரி 23: பாகிஸ்தான் v இந்தியா, துபாய்

    பிப்ரவரி 24: வங்கதேசம் v நியூசிலாந்து, ராவல்பிண்டி (பாக்.)

    பிப்ரவரி 25: ஆஸ்திரேலியா v தென் ஆப்பிரிக்கா, ராவல்பிண்டி (பாக்.)

    பிப்ரவரி 26: ஆப்கானிஸ்தான் v இங்கிலாந்து, லாகூர் (பாக்.)

    பிப்ரவரி 27: பாகிஸ்தான் v வங்கதேசம், ராவல்பிண்டி (பாக்.)

    பிப்ரவரி 28: ஆப்கானிஸ்தான் v ஆஸ்திரேலியா, லாகூர் (பாக்.)

    மார்ச் 1: தென் ஆப்பிரிக்கா v இங்கிலாந்து, கராச்சி (பாக்.)

    மார்ச் 2: நியூசிலாந்து v இந்தியா, துபாய்

    மார்ச் 4: அரையிறுதி 1, துபாய்

    மார்ச் 5: அரையிறுதி 2, லாகூர், பாகிஸ்தான்

    மார்ச் 9: லாகூர் (இந்தியா தகுதிபெற்றால் துபாயில் நடக்கும்)

    மார்ச் 10: ரிசர்வ் நாள்

    போட்டி நேரம்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் போட்டிகள் அனைத்தும் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெறும். போட்டிக்கான டாஸ் இந்திய நேரப்படி மதியம் 2.00 மணிக்கு போடப்படும். போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும்.

    தொலைகாட்சி மற்றும் வலைதளங்களில் பார்ப்பது எப்படி?

    சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். இதுதவிர ஆன்லைனில் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம். 

    • முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது.
    • இந்திய அணி போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.

    8 அணிகள் மோதும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஜெர்சி அணிந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புகைப்படங்களின் படி இந்திய அணி ஜெர்சியில் "சாம்பியன்ஸ் டிராபி 2025 பாகிஸ்தான்" என்று அச்சிடப்பட்டு இருக்கிறது. இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறாது என கூறப்பட்டது. எனினும், தற்போது பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளதை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. சீருடை சார்ந்த ஐ.சி.சி. விதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதை உணர்த்தியுள்ளது.

    இது குறித்து பேட்டியளித்த பி.சி.சி.ஐ. செயலாளர் தேவ்ஜித் சைகா, "சாம்பியன்ஸ் டிராபியில் சீருடை சார்ந்து ஐ.சி.சி. பிறப்பிக்கும் அனைத்து விதிகளையும் பி.சி.சி.ஐ. பின்பற்றும்," என்று தெரிவித்தார்.

    ஐ.சி.சி.-யின் சீருடை விதிகளின் படி ஐ.சி.சி. நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணியும் அந்த தொடரை நடத்தும் நாட்டின் பெயரை தங்களது ஜெர்சியில் இடம்பெற செய்ய வேண்டும். இது தொடர்பான போட்டிகள் தொடரை நடத்தும் நாட்டை தவிர்த்து பொதுவான இடத்தில் நடந்தாலும், இந்த விதிமுறையை பின்பற்றுவது அவசியம் ஆகும்.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கேப்டன்கள் போட்டோஷூட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் செல்ல மாட்டார் என்று கூறப்பட்டது. எனினும், இதர காரணங்களால் அதிகாரப்பூர்வ போட்டோஷூட் அல்லது கேப்டன்கள் போட்டோஷூட் நடத்தப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.



    • சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
    • இந்திய அணி முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகிற 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இந்திய வீரர் கள் துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்திய அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இருக்கிறார். இந்த நிலையில் மோர்னே மோர்கலின் தந்தை உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.

    இதை தொடர்ந்து மோர்கல் உடனடியாக துபாயில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு திரும்பினார். அவர் மீண்டும் எப்போது அணியுடன் இணைவார் என்ற தகவல் வெளியாகவில்லை. முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் இந்தப் போட்டி தொடரில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளார். தற்போது மார்னே மார்கலும் இல்லாதது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    • இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது.
    • எட்டு நாடுகளை சேர்ந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    "மினி உலக கோப்பை" என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1998-ம் ஆண்டு வங்கதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென் ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி நாளை (பிப்ரவரி 19-ம் தேதி) தொடங்கி மார்ச் 9 வரை அங்குள்ள கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    இந்திய அணி பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எட்டு நாடுகளை சேர்ந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து வங்கதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகியவை இந்த தொடருக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

    மார்ச் 2-ம் தேதியுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைகிறது. முதல் அரையிறுதி போட்டி மார்ச் 4-ம் தேதி துபாயிலும், 2-வது அரையிறுதி போட்டி மார்ச் 5-ம் தேதி லாகூரிலும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி மார்ச் 9-ம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டி நடைபெறும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    கராச்சியில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. வெற்றியுடன் கணக்கை தொடங்கப் போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பாகிஸ்தானில் முதல் முறையாக ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது. 29 ஆண்டுகளுக்குப பிறகு பாகிஸ்தானில் தற்போது ஐ.சி.சி. போட்டி நடக்கிறது. கடைசியாக 1996-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி இங்கு நடை பெற்றது.

    இதன் காரணமாக பாகிஸ்தான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் போட்டி மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ளும்.

    போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • 19.3 ஓவர்கள் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    வதோதரா:

    5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்க வீராங்கனைகளான மெக் லானிங் 17 ரன்களிலும், ஷபாலி வர்மா ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறிது நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அவரும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    19.3 ஓவர்கள் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்க உள்ளது.

    இறுதியில் பெங்களூரு அணி 16.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அருந்ததி ரெட்டி மற்றும் ஷிகா பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதன்மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    • ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் இரண்டு மூன்று தொடர்கள் கிடைக்கும் என்று நம்பினேன்.
    • நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வருவேன் என்று நம்புகிறேன்.

    இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து ரகானே மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். மேலும் தேர்வு குழு தலைவர் அகர்கர் பற்றி மறைமுகமாக விமர்சனம் செய்தும் பேசியிருக்கிறார்.

    இது குறித்து ரகானே கூறியதாவது:-

    சில வருடங்களுக்கு முன்பு அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டேன். பின்பு சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். இறுதிப் போட்டியில் நான் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தேன். இருந்த போதும் நான் மீண்டும் ஏன் நீக்கப்பட்டேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் இரண்டு மூன்று தொடர்கள் கிடைக்கும் என்று நம்பினேன். எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. என்னை ஏன் நீக்கி விட்டீர்கள் என்று போய் கேட்கும் நபர் நான் கிடையாது.

    மேலும் இது குறித்து நான் பேச வேண்டும் என்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் பேசுவதற்கு தயாராக இருந்தால்தான் முடியும். அப்படி யாரும் என்னிடம் பேச தயாராக இல்லை. என் கையில் என்ன இருக்கிறதோ அதைப்பற்றி மட்டுமே நான் பார்க்கிறேன். மீண்டும் வருவதற்கு நான் கடுமையாக உழைக்கிறேன்.

    எனக்குள் இன்னும் அந்த பழைய நெருப்பும் ஆர்வமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது நான் ரஞ்சி தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறேன். மும்பை அணிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வருவேன் என்று நம்புகிறேன்.

    என்னுடைய நண்பர்கள் சிலர் என்னை என்னுடைய விளம்பரத்திற்கு பிஆர் வைத்துக்கொள்ள சொன்னார்கள். நான் அடிக்கடி செய்திகளில் இடம் பெற வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கான விளம்பரம் என்னுடைய பேட்டிங் மட்டும்தான். நான் அப்படி யாரையும் என் தனிப்பட்ட விளம்பரத்திற்கு வைத்துக் கொள்ளவில்லை.

    என்று ரகானே கூறினார்.

    • பும்ரா கடந்த 2 வருடம் இந்திய அணிக்கு பங்காற்றிய விதத்தை எல்லோரும் பார்த்திருப்போம்.
    • அவருக்குப் பதிலாக முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளது மிகப்பெரியது.

    இந்திய அணியின் நட்சத்திர வேகபந்து வீச்சாளரான பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாததை வங்கதேசம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என அந்நாட்டு முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.

    இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கடந்த மாதம் சிட்னியில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பந்து வீசும்போது, பும்ராவிற்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை.

    அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவக்குழு அறிவுறுத்தியதால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை வருகிற 20-ந்தேதி சந்திக்கிறது. இந்த போட்டியில் பும்ரா இல்லாததை வங்கதேசம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என வங்கதேச அணியின் முன்னாள் தொடக்க வீரர் இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இம்ருல் கெய்ஸ் கூறியதாவது:-

    தலைசிறந்த பந்து வீச்சு அட்டாக் மற்றும் பேட்டிங் வரிசையில் இந்தியா பலமான அணி. ஆனால், பும்ரா இந்திய அணியில் இல்லை. கடந்த இரண்டு வருடமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் செய்தது நாம் எல்லோருக்கும் தெரியும். அவர் இல்லாததை வங்கதேசம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்.

    முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளது மிகப்பெரியது. தற்போது அவர் உடற்தகுதி விசயம் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் அவருடைய ரிதத்தை பிடித்து விட்டால், வங்கதேச அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.

    சாகிப் அல் ஹசன் சிறந்த வீரர் என்பதால் நான் அவரை தவற விடுகிறேன். எந்த போட்டியிலும் அவருடைய தாக்கம் மிகப்பெரிய அளவிலானது. இந்த தருணத்தில் வங்கதேசம் திணறி வருகிறார். சாகிப் இல்லாததால் வங்கதேசம் திணறிக் கொண்டிருக்கிறது. அவர் இல்லாததால் வங்கதேசம் கூடுதல் ஒரு ஸ்பின்னருடன் களம் இறங்கலாம். இது வங்கதேச அணிக்கு பிரச்சனை.

    லிட்டோன் தாஸ் ஃபார்ம் அணிக்கு மிப்பெரிய கவலையாக இருந்தது. ஆனால் வங்கதேச ப்ரீமியர் லீக்கின் கடைசி சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். எனினும், சவுமியா சர்கார், தன்ஜித் தமிம் சிறப்பாக விளையாடினர். பேட்டிங் துறையில் அணி சிறந்த வடிவத்தை பெற்றுள்ளது.

    இவ்வாறு இம்ருல் இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.

    • கோலி போன்ற பிரபல வீரர்கள் தங்களுக்கு என தனியாக சமையல் கலைஞர்களை அழைத்து வருவார்கள்.
    • உணவுக்கு என தனி சமையல் கலைஞர்களை அழைத்து வரக்கூடாது என பிசிசிஐ தெரிவித்தது.

    துபாய் :

    பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது அடுத்து பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில் முக்கிய கட்டுப்பாடுகள் வீரர்கள் வெளிநாட்டு தொடரில் குடும்பத்தினருடன் அதிக நாட்கள் செலவிடக்கூடாது. அதிக உடைமைகளை வீரர்கள் எடுத்து வரக்கூடாது மற்றும் உணவுக்கு என தனி சமையல் கலைஞர்களை அழைத்து வரக்கூடாது என பல விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.

    பொதுவாக வீரர்கள் தங்கும் ஹோட்டலில் இந்திய வீரர்களுக்கு என உணவு கலைஞர்கள் இருப்பார்கள். இல்லையெனில் ஹோட்டலில் இருக்கும் உணவு கலைஞர்கள் தயாரித்து பிரத்தியேக உணவுகளை இந்திய அணியினருக்கு வழங்குவார்கள்.

    ஆனால் விராட் கோலி போன்ற பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு என தனியாக சமையல் கலைஞர்களை அழைத்து வந்து தங்க வைத்திருந்தார்கள். தற்போது இதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்து தமக்கு எந்த மாதிரி உணவு வேண்டும் என்பதை விராட் கோலி துபாயில் உள்ள பிரபல ஹோட்டலை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்.

    இதனை அடுத்து அந்த ஹோட்டல் சமையல் கலைஞர்கள் விராட் கோலிக்கு என தனி உணவுகளை சமைத்து அவருக்கு டெலிவரி செய்து இருக்கிறார்கள். இதனால் விராட் கோலி பயிற்சிக்கு வரும்போது கூடவே உணவு பொட்டணங்களையும் எடுத்து வந்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் பயிற்சிக்கு பிறகு விராட் கோலி தனது உணவை எடுத்து சாப்பிட்டு இருக்கிறார். உணவுக் கலைஞர்களுக்கு பிசிசிஐ தடை விதித்ததை அடுத்து விராட் கோலி இந்த முறையில் பின்பற்றுகிறார்.

    • சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா 22-ந்தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
    • ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டத்தில் விளையாடாமல் நேரடியாக தொடரில் களம் இறங்குகிறது.

    8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி (நாளைமறுதினம்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் தொடங்குகிறது. இந்தியா மோதும் போட்டிகளில் மட்டும் துபாயில் நடைபெறும். மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.

    8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ளன.

    தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை வருகிற 22-ந்தேதி எதிர்கொள்கிறது

    இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி இன்று பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. இரணடு குழுக்களாக ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது.

    இலங்கைக்கு எதிரான தொடரை முடித்துக் கொண்டு கேப்டன் ஸ்மித் பயிற்சியாளர்கள், உதவி பயற்சியாளர்கள் கொழும்பில் இருந்து துபாய் வழியாக முதற்கட்டமாக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளனர்.

    15 பேர் கொண்ட மற்றொரு குழு ஆஸ்திரேலியாவில் இருந்து துபாய் வழியாக பாகிஸ்தான் சென்றடைந்துள்ளனர். இதில் கூடுதலாக இரண்டு துணை பயிற்சியாளர்கள் (support staff) அடங்குவர்.

    ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் வருகிற 22-ந்தேதிதான் விளையாட இருக்கிறது. இடையில் 4 நாட்கள் உள்ள போதிலும் பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியா அணி கடந்த வாரம்தான் இலங்கை அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியிருந்தது. இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்திருந்தது.

    22-ந்தேதி தென்ஆப்பிரிக்காவையும் (ராவல்பிண்டி), ஆப்கானிஸ்தானை 228-ந்தேதியும் (கடாபி) எதிர்கொள்கிறது. ஒவ்வாரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும்.

    ஆஸ்திரேலியா அணி விவரம்:-

    ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் துவார்சுயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் பிராசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபவுசேன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், ஆடம் ஜம்பா

    ×