என் மலர்
நீங்கள் தேடியது "Royal Challengers Bangalore Women"
- காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை.
- பெங்களூரு அணி 2-வது தோல்வியை சந்தித்தது.
பெங்களூரு:
5 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் மோதியது. காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இந்த ஆட்டத்திலும் ஆடவில்லை. அவருக்கு பதிலாக நாட் சிவெர் கேப்டன் பொறுப்பை கவனித்தார்.
'டாஸ்' ஜெயித்த மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 9 ரன்னிலும், அடுத்து வந்த சப்னினி மேக்னா 11 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீராங்கனை சோபி டெவின் 9 ரன்னிலும், ரிச்சா கோஷ் 7 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 42 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
4-வது வீராங்கனையாக களம் கண்ட எலிசி பெர்ரி நிலைத்து நின்று ஆடி அணி கவுரவமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தார். அவருடன் இணைந்த சோபி மொலினிஸ் 12 ரன்னிலும், ஜார்ஜியா வார்ஹம் 27 ரன்னிலும் வெளியேறினர். 20 ஓவரில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. எலிசி பெர்ரி 44 ரன்களுடனும் (38 பந்து, 5 பவுண்டரி), ஸ்ரேயங்கா பட்டீல் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் நாட் சிவெர், பூஜா வஸ்ட்ராகர் தலா 2 விக்கெட்டும், இஸ்சி வோங், சாய்கா இசாக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகள் யாஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ் ஆகியோர் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கம் அளித்தனர். ஸ்கோர் 45 ரன்னை எட்டிய போது (3.5 ஓவரில்) யாஸ்திகா பாட்டியா 31 ரன்னில் (15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) சோபி டெவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ்சிடம் சிக்கினார். அடுத்து ஹீலி மேத்யூஸ் 26 ரன்னிலும் (21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), நாட் சிவெர் 27 ரன்னிலும் (25 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினர்.
15.1 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அமெலி கெர் 40 ரன்களுடனும் (24 பந்து, 7 பவுண்டரி), பூஜா வஸ்ட்ராகர் 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 3-வது வெற்றியை ருசித்ததுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. பெங்களூரு அணி 2-வது தோல்வியை சந்தித்தது. மும்பை வீராங்கனை அமெலி கெர் ஆட்டநாயகி விருது பெற்றார்.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
- இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன.
- பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வதோதரா:
3-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் போதுகின்றன.
இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் அந்த அணி 202 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது. டெல்லி அணி முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த அணி கடைசி பந்தில் இந்த வெற்றியை பெற்றது.
இதனால் பெங்களூர்-டெல்லி அணிகள் மோதும் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளிலும் திறமை வாய்ந்த வீராங்கனைகள் இருக்கிறார்கள்.
- டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.
- 19.3 ஓவர்கள் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
வதோதரா:
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று 4-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு தொடக்க வீராங்கனைகளான மெக் லானிங் 17 ரன்களிலும், ஷபாலி வர்மா ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறிது நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அவரும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
19.3 ஓவர்கள் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 141 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்க உள்ளது.
இறுதியில் பெங்களூரு அணி 16.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அருந்ததி ரெட்டி மற்றும் ஷிகா பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.






