என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.
    • மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது.

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் எட்டு அணிகள் பங்கேற்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 30-ந் தொடங்கி நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.

    மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 5ம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.

    முதல் அரையிறுதிப் போட்டி அக்டோபர் 29-ம் தேதி குவஹாத்தி அல்லது கொழும்பில் நடைபெறும். 2-வது நாக் அவுட் ஆட்டம் மறுநாள் அக்டோபர் 30-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும். நவம்பர் 2 ஆம் தேதி பெங்களூருவில் இறுதிப் போட்டி நடைபெறும். ஒருவேளை பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், அது கொழும்பில் நடைபெறும்.

    இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகள் விளையாடாது என்று பிசிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது.
    • தகுதிச் சுற்றில் கிரீஸ் வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் ஓபன் டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரெபேகா மசரோவா 7-6 (7-1), 7-5 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 256 ரன்கள் குவித்தது.

    டப்ளின்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரெடியில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்தது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லூயிஸ் மற்றும் ஷாய் ஹோப் ஜோடி அதிரடியாக விளையாடியது.

    முதல் விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்த நிலையில் ஷாய் ஹோப் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட எவின் லூயிஸ் 91 ரன்னில் (44 பந்துகள்) ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கீசி கார்டி 22 பந்தில் 49 ரன்கள் குவித்தார்.

    அயர்லாந்து சார்பில் மேத்யூ ஹம்ப்ரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஸ் அடைர் 48 ரன்னும், ஹாரி டெக்டர் 38 ரன்னும், மார்க் அடைர் 31 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், அயர்லாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், டி20 தொடரை 1-0 என கைப்பற்றியது.

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் அனிசிமோவா, ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய சேலம் அணி 20 ஓவரில் 126 ரன்கள் எடுத்தது.

    சேலம்:

    டிஎன்பிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பார்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் அரை சதம் அடித்து 50 ரன்னில் அவுட்டானார். முகமது 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    நெல்லை சச்சின் ராதி 5 விக்கெட்டும், சோனு யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அஜிதேஷ் குருசாமி 3 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சந்தோஷ்குமார் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து73 ரன்னில் அவுட்டானார்.

    2-வது விக்கெட்டுக்கு சந்தோஷ்குமார்-நிர்மல் குமார் ஜோடி பொறுப்புடன் ஆடி 54 ரன்கள் சேர்த்தது. நிர்மல் குமார் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், நெல்லை அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது. நெல்லை அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    • திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது திருப்பூர் அணி.

    8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது.

    இதில் இன்று தொடங்கிய முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் சுஜய் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 60 ரன்கள் குவித்தார். திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது திருப்பூர் அணி.

    தொடக்க ஆட்டக்காரரான இறங்கிய அமித் சாத்விக் 5 ரன்களிலும், டேரில் பெராரியோ ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.

    இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன துஷார் ரஹேஜா அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தார்.

    வெறும், 36 பந்துகளில் 80 ரன்கள் குவித்த நிலையில் துஷார் ரஹேஜா ஆட்டமிழந்தார்.

    இறுதியாக, பிரதோஷ் ரஞ்சன் பால் 42 ரன்களும், முகமது அலி 25 ரன்களும் அடித்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர்.

    இதில், 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 165 ரன்கள் அடித்து திருப்பூர் அணி வெற்றி பெற்றது.

    • முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீழ்த்தியது.
    • இரவு 7:15 மணிக்கு இரண்டாவது ஆட்டம் தொடங்கியது.

    9-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் கோவையில் ஜூன் 5 ஆம் தேதி தொடங்கியது.

    கோவையில் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது சேலத்தில் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இன்று (ஜூன் 15) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீழ்த்தியது.

    இதையடுத்து, இன்று இரவு 7:15 மணிக்குத் தொடங்கிய இரண்டாவது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

     ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி டாஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.  

    • கிரீன் இறுதிப் போட்டியில் சரியாக விளையாடவில்லை.
    • நம்பர் 3-வது வீரர்களுக்கான இடத்திற்கு அவர் சரியாக வரமாட்டார் என்று நினைக்கின்றேன்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில் கோப்பையை இழந்த ஆஸ்திரேலிய அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய அணியின் பலமே நான்கு வீரர்கள் அடங்கிய பந்துவீச்சு தான். ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் லயன் ஆகியோர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

    இனி எதிர்காலத்தை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யோசிக்க வேண்டும். கடந்த சில காலமாக கம்மின்ஸ் உடல் தகுதி பிரச்சனையில் அவதிப்பட்டு வருகின்றார். அது மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விட்டுவிட்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அவர் சென்றது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

    இதே போல் போட்டியின் மூன்றாவது நாளில் லயனும் பெரிய அளவில் பந்துவீச்சில் சாதிக்கவில்லை. இந்த நான்கு வீரர்களும் ஆசஸ் தொடர் விளையாடிவிட்டு பின் ஓய்வு பெறுவது என்பது சரியான அணுகுமுறை தானா? இனி நம் எதிர்காலத்தை நோக்கி அணியை கட்டமைக்க வேண்டும். ஸ்டார்க், ஜோஸ் இங்கிலீஷ், ஸ்காட் போலன்ட் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதேபோன்று கிரீன் இறுதிப் போட்டியில் சரியாக விளையாடவில்லை. மொத்தமாகவே 5 பந்துகளை தான் அவர் எதிர்கொண்டு இருக்கிறார். எனவே நம்பர் 3-வது வீரர்களுக்கான இடத்திற்கு அவர் சரியாக வரமாட்டார் என்று நினைக்கின்றேன்.

    இதேபோன்று ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் சரிவுக்கு காரணம் மார்னஸ் சரியாக விளையாடாமல் இருப்பது தான். இதே போன்று ஸ்மித் பேட்டிங் வரிசையில் மாறிக்கொண்டே இருந்து வருகிறார். அவரும் சில போட்டிகளில் தடுமாறி வருகிறார்.

    என்று மிட்செல் ஜான்சன் கூறினார்.

    • அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 60 ரன்கள் குவித்தார்.
    • திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சேலம்:

    8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது.

    இதில் இன்று தொடங்கிய முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் சுஜய் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 60 ரன்கள் குவித்தார். திருப்பூர் அணி தரப்பில் மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • அவர் தனது அணியில் எந்தவொரு நியூசிலாந்து வீரருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை.
    • கேப்டனாக ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி 21ஆம் நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுத்துள்ளார்.

    அவர் தனது அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 4 வீரர்கள், இந்தியாவைச் சேர்ந்த 3 வீரர்கள், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 2 பேர், இலங்கை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா 1 வீரரை இந்த அணியில் சேர்த்துள்ளார். அதேசமயம் அவர் தனது அணியில் எந்தவொரு நியூசிலாந்து வீரருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை.

    அவரது அணியின் தொடக்க வீரர்களாக இந்தியாவின் சேவாக் மற்றும் அஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடனை தேர்தெடுத்துள்ளார்.

    மூன்றாம் வரிசையில் ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்ததுடன் இந்த அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளார்.

    4-ம் வரிசையில் சச்சின் டெண்டுகரையும், 5-ம் வரைசயில் ஸ்டீவ் ஸ்மித், 6-ம் இடத்தில் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோரைத் தேர்வுசெய்துள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனியை தேர்வு செய்துள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளராக டேல் ஸ்டெய்ன், கிளென் மெக்ராத், ஷோயப் அக்தர் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சாளராக முத்தையா முரளிதரனையும் சேர்த்துள்ளார்.

    கேன் வில்லியம்சன் தேர்வு செய்த சிறந்த டெஸ்ட் லெவன்:

    மேத்யூ ஹைடன், வீரேந்தர் சேவாக், ரிக்கி பாண்டிங் (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித், ஏபி டிவில்லியர்ஸ், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), டேல் ஸ்டெயின், ஷோயப் அக்தர், க்ளென் மெக்ராத், முத்தையா முரளிதரன்.

    • 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது.
    • முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

    சேலம்:

    8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.

    இதனையடுத்து இந்த தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி மாலை தொடங்கும் முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

    இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

    • பிபா உலக கோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் இன்று தொடங்கியது.
    • லியோனல் மெஸ்சியின் இண்டர்மியாமி-அல்-அஹ்லி (குரூப் ‘ஏ’) அணிகள் முதல் ஆட்டத்தில் விளையாடினர்.

    பிபா உலக கோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கியது. இதில் 32 கிளப்புகள் பங்கேற்கின்றன.

    நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சியின் இண்டர்மியாமி-அல்-அஹ்லி (குரூப் 'ஏ') அணிகள் முதல் ஆட்டத்தில் விளையாடினர். இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இண்டர்மியாமி வெற்றி முடியாமல் டிரா செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மெஸ்சி உள்ளிட்ட இண்டர்மியாமி வீரர்கள் அடித்த கோல் வாய்ப்பை அல் அஹ்லி கோல்கீப்பர் தடுத்து விட்டார்.

    இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பேயன்-ஆக்லார்ப் சிட்டி அணிகள் மோதுகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பி.எஸ்.ஜி. அட்லெடிகோ மார்ட்ரீட் அணிகளும் அதிகாலை 3.30 மணிக்கு போர்ட்போ-பால்மிராஸ் அணிகளும் காலை 7.30 மணிக்கு பாடோ போர்சோ-சியாட்டில் சவுண்டர்ஸ் அணிகளும் மோதுகின்றன.

    ×