என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி: ஆஸி, வீரர்களை சாடிய ஜான்சன்
- கிரீன் இறுதிப் போட்டியில் சரியாக விளையாடவில்லை.
- நம்பர் 3-வது வீரர்களுக்கான இடத்திற்கு அவர் சரியாக வரமாட்டார் என்று நினைக்கின்றேன்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் கோப்பையை இழந்த ஆஸ்திரேலிய அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலிய அணியின் பலமே நான்கு வீரர்கள் அடங்கிய பந்துவீச்சு தான். ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் லயன் ஆகியோர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இனி எதிர்காலத்தை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யோசிக்க வேண்டும். கடந்த சில காலமாக கம்மின்ஸ் உடல் தகுதி பிரச்சனையில் அவதிப்பட்டு வருகின்றார். அது மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விட்டுவிட்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அவர் சென்றது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
இதே போல் போட்டியின் மூன்றாவது நாளில் லயனும் பெரிய அளவில் பந்துவீச்சில் சாதிக்கவில்லை. இந்த நான்கு வீரர்களும் ஆசஸ் தொடர் விளையாடிவிட்டு பின் ஓய்வு பெறுவது என்பது சரியான அணுகுமுறை தானா? இனி நம் எதிர்காலத்தை நோக்கி அணியை கட்டமைக்க வேண்டும். ஸ்டார்க், ஜோஸ் இங்கிலீஷ், ஸ்காட் போலன்ட் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதேபோன்று கிரீன் இறுதிப் போட்டியில் சரியாக விளையாடவில்லை. மொத்தமாகவே 5 பந்துகளை தான் அவர் எதிர்கொண்டு இருக்கிறார். எனவே நம்பர் 3-வது வீரர்களுக்கான இடத்திற்கு அவர் சரியாக வரமாட்டார் என்று நினைக்கின்றேன்.
இதேபோன்று ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் சரிவுக்கு காரணம் மார்னஸ் சரியாக விளையாடாமல் இருப்பது தான். இதே போன்று ஸ்மித் பேட்டிங் வரிசையில் மாறிக்கொண்டே இருந்து வருகிறார். அவரும் சில போட்டிகளில் தடுமாறி வருகிறார்.
என்று மிட்செல் ஜான்சன் கூறினார்.






